Print Version|Feedback
UK: “Operation Yellowhammer” details savage austerity and confirms plans for state repression post-Brexit
ஐக்கிய இராச்சியம்: “Yellowhammer நடவடிக்கை” காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளை விவரிப்பதுடன் பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய அரச அடக்குமுறைக்கான திட்டங்களை உறுதிப்படுத்துகிறது
By Thomas Scripps
13 September 2019
புதன்கிழமை மாலை, போரிஸ் ஜோன்சனின் அரசாங்கம், “Yellowhammer நடவடிக்கை” என்ற குறியீட்டு பெயரில் தீட்டப்பட்டுள்ள ஒரு உடன்படிக்கை இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவது பற்றிய முன்கணிப்பினை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இந்த ஆறு பக்க ஆவணம் உடன்படிக்கை இல்லாமல் பிரிட்டன் வெளியேறினால் சமூக மற்றும் பொருளாதார பேரழிவுகள் அச்சுறுத்துவதை உறுதி செய்வதுடன், அங்கு சர்வாதிகார ஆட்சியின் ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
Yellowhammer இல் கோடிட்டுக்காட்டப்பட்ட நிலவரங்கள் “மோசமான நிலைமை ஏற்பட்டால் எடுக்கவேண்டிய நியாயமான ஊகங்களை” எடுத்துக்காட்டுவதாக அரசாங்கம் வலியுறுத்துகையில், அதே நாளில் இருந்து ஆவணத்தின் பரவலாக பகிரப்பட்ட பதிப்பு, இது மோசமான நிலவரம் என்றல்லாது “அடிப்படை நிலவரம்” (base scenario) என்ற சொற்றொடரை உபயோகிக்கிறது.
Yellowhammer விவரங்களை கடந்த கோடையில் முதலில் டைம்ஸ் கசிய விடப்பட்டபொழுது அது, பழமைவாத பிரதம மந்திரியாக மே இருந்த காலத்தில் விட்டுச்சென்ற காலாவதியாகிப்போன முன்கணிப்பாக இருந்தது என அரசாங்கத்தால் கூறப்பட்டது. ஜோன்சன் பிரதமராகப் பதவியேற்று 10 நாட்களுக்குப்பின்னர் இந்த ஆவணமானது திகதியிடப்பட்டுள்ளமையானது, உடன்படிக்கை இல்லாமல் பிரிட்டன் வெளியேறும்பட்சத்தில் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை Yellowhammer முன்வைக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது.
பிரிட்டனின் துறைமுகங்களிலும் மற்றும் இங்கிலாந்து கால்வாய் சுரங்கப்பாதைகளிலும் சரக்குப் போக்குவரத்தை காத்திருக்கவேண்டியிருக்கும் என்பது ஆரம்பநிலை பிரச்சனையாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. பிரிட்டன் வெளியேறுவதைத் தொடர்ந்து மூன்று மாதகாலத்திற்கு HGVs (heavy goods vehicles) கனரக பொருட்களின் வாகனங்களின் ஓட்டத்தின் விகிதம் அதன் தற்போதைய அளவில் இருந்து 40-60 சதவிகிதத்திற்கு வீழ்ச்சி ஏற்படலாம். தற்போதுள்ள நிலைக்கு 50-70 சதவீதம் “மேம்பாடடைவதிற்கு” முன்னர் சரக்குகளுடன் கனரக வாகனங்கள் இரண்டரை நாட்களுக்கு மேல் தடைபட்டு இருக்கும்.
தொடர்ச்சியான இடையூறுகளின் அளவானது "கணிசமானளவு நீண்ட காலம்" நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விநியோகச் சங்கிலிகளின் முறிவு "மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்", மருத்துவ பொருட்களுக்கு காலாவாதியாகும் தேதி மிக குறுகியதென்பதால் "குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன." கால்நடைகளுக்கான மருந்து விநியோகங்களில் குறைவானது" சுற்றுச்சூழலுக்கு மிக துன்பரகரமான தாக்கங்களை உண்டாக்கும், கால்நடை நோய் வெடிப்பதைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் திறனைக் குறைக்கும். இது மேலும் பரந்த உணவு பாதுகாப்பு / அது கிடைக்கும் தன்மைக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதுடன், மனித ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்க கூடிய கால்நடை நோய்களுக்கும் காரணமாகலாம்."
பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் இந்த விடயங்களை “அபாயகரமானது” என்று விவரித்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கை இல்லாமல் வெளியேறுமாயின் மருத்துவ விநியோகத்தில் பற்றாக்குறை அச்சுறுத்தல் ஏற்படும் என்ற எச்சரிக்கைகளை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உணவுப் வினியோகங்களைப் பொறுத்தவரை, உடன்படிக்கை இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவது “பொருட்கள் கிடைக்கும்படியாக இருப்பதும் மற்றும் தேர்ந்தெடுக்கும் அளவை குறைந்த நிலைக்குச் செல்லும் மற்றும் அது மேலும் விலையை அதிகரிக்கச்செய்யும்.” இந்த பிரச்சனைகளால், “பதட்டத்தில் வாங்கிக் குவிக்கும் அபாயத்தை தூண்டுவதாகவும் அல்லது தீவிரமடையச் செய்யும்” என்று ஆவணம் சேர்த்துக் கூறியது.
பிரிட்டிஷ் சில்லறை வணிக கூட்டமைப்பின் ஹெலன் டிக்கின்சன் கருத்து தெரிவித்தபோது, “புதிய உணவு கிடைப்பதிலும், நுகர்வோர் தேர்விலும் பாரிய வீழ்ச்சி ஏற்படப்போவதுடன், விலைகள் அதிகரிக்கும்.” என கூறினார்.
உடன்படிக்கை இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவது “தென் கிழக்குப் பகுதிகள் மற்றும் இலண்டனில் எரிபொருள் வினியோகத்தை சீர்குலைக்கும்” மற்றும் “வாடிக்கையாளர்கள் நடந்துகொள்ளும் விதம் நாட்டின் பிற பகுதிகளில் உள்ளூர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்” என்று அச்சுறுத்துகிறது. கூடுதலாக “பரந்த பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களுடன் தொடர்புடைய” குறிப்பிடத்தக்க “மின்சார விலை அதிகரிப்புகள்” எதிர்பார்க்கப்படுகிறது. “ஐரோப்பிய ஒன்றியத்துடனான வெளியேற்றத்தை தொடர்ந்து பணவீக்கத்தின் அதிகரிப்பானது வயது வந்தோருக்கான சமூக பாதுகாப்பு வழங்குபவர்களை கணிசமாக பாதிக்கும் மேலும் இது அவர்களின் வங்குரோத்திற்கும் வழிவகுக்கும்,”
மிக அதிகமாக விபரிக்கப்படும் மேற்கோள்கள் ஒன்றில், இவைகளின் விளைவுகள் “இலகுவில் பாதிப்படைய கூடியவர்கள்,” “குறைந்த வருமானம்” கொண்ட குழுக்களை கடுமையாக தாக்கும், “இது பொது அமைதியின்மைக்கும் மற்றும் சமூக பதட்டங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும்” என்று இந்த ஆவணம் முடிவு செய்கிறது.
இவை அனைத்தும் பிரிட்டன் வெளியேறியதற்கு பிந்தைய பிரிட்டனுக்கான அரசாங்கத்தின் சொந்த பொருளாதார திட்டங்களின் தாக்கத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. பெருநிறுவனங்களுக்கான மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கான வரி வெட்டுக்கள், பல தொழிலாளர் வேலை பாதுகாப்பு நிதிகளை அகற்றுதல், கடுமையான சமூக செலவின வெட்டுக்கள் மற்றும் பெரும் தொழிலாளர் பிரிவுகளின் கடும் சுரண்டல்களை செயல்படுத்த “சுதந்திர வலையங்களை” அமைத்தல் ஆகியவை இதில் உள்ளடங்கும். இந்த நடவடிக்கைகள் அதிக பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரங்களை மொத்தமாக அழிப்பதை அதிகப்படுத்தும்.
பிரிட்டன் உடன்படிக்கை இல்லாமல் வெளியேறும் சூழ்நிலை உடனடியாக சர்வதேச பதட்டங்களுக்கான வெடிப்புப் புள்ளிகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மீனவர்களுக்கு இடையிலான மீன்பிடி உரிமைகள் குறித்த குழப்பமும் சண்டையும் “வன்முறையான குழப்பங்கள் அல்லது துறைமுகங்களை முற்றுகையிட்டுவது” ஆகியவை இடம்பெறும் சாத்தியம் இருப்பதாக கருதப்படுகிறது.
வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடையில் ஒரு கட்டுப்படுத்தப்படும் எல்லையை உருவாக்காது என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியை இந்த ஆவணம் விவரிக்கும் பொழுது இதனை செயற்படுத்தமுடியாது என குறிப்பிடுகின்றது. ஏனெனில் “முக்கிய பொருளாதார, சட்ட மற்றும் உயிரியியல் பாதுகாப்பு அபாயங்களை ஒருதலைப்பட்சமாக குறைப்பதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை.”
2018 ல் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் பாதுகாப்பதாக உறுதியளித்த 1998 புனித வெள்ளி ஒப்பந்தத்தை மீறும் என்ற நிலைமையின் கீழ் உடன்படிக்கை இல்லாமல் பிரிட்டன் வெளியேறும் சட்டபூர்வமான தன்மை பற்றி அரசாங்கத்துக்கு எதிராக சட்ட வழக்கு நடந்து வருகிறது. வியாழக்கிழமை அன்று இந்த விவாதம் (Belfast) பெல்ஃபாஸ்ட் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. வழக்கின் முக்கிய அம்சங்கள் “இயல்பாகவும் தெளிவாகவும் அரசியல் சார்ந்தவை” என்று நீதிபதி கூறியுள்ளார் . ஆனால் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யமுடியும். இந்த வழக்கைக் கொண்டுவந்த வடக்கு அயர்லாந்து சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு ஆதரவாளரான ரேய்மோண்ட் மக்கோர்ட், அதை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.
எந்தவொரு ஜனநாயக வடிவங்களினூடாகவும் ஆட்சிசெய்ய முடியாது என்ற நிலைமை இருப்பதாக Yellowhammer நடவடிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஆர்பாட்டங்களைக் கையாள்வதற்குத் தேவையான “குறிப்பிடத்தக்க அளவு பொலிஸின் ஆதாரவளங்கள்” குறித்து ஆவணத்தின் மேற்கோள்களில் ஊடகங்கள் கவனம் செலுத்திய போதும், ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அடக்குமுறைக்கான பரந்த திட்டங்களைப் பற்றி அவை எதுவும் கூறவில்லை.
“உள்நாட்டில் சமூககொந்தளிப்பு இருக்கும் பட்சத்தில், பிரிட்டனின் விமான நிலையங்கள் வழமையாக இயங்க உதவவும் மற்றும் எரிபொருள், மருத்துவ பொருட்களின் வினியோகத்திற்கு உத்தரவாதம்மளிக்கவும்” 50.000 ஆயிரம் நிரந்தர மற்றும் கையிருப்பில் உள்ள இராணுவ துருப்புகள் எதற்கும் தயார் நிலையில் இருக்கும் என்பது அறியப்பட்டிருந்தது. 10.000 க்கும் மேற்பட்ட கலவரப் பிரிவு காவல்துறை அதிகாரிகள் இராணுவத்திற்கு பக்கபலமாக ஆதரவு வழங்குவார்கள், 24 மணி நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் நிலை நிறுத்துதலுக்கு தயாராக இருப்பார்கள் மற்றும் வடக்கு அயர்லாந்தின் காவல்துறை சேவையை பலப்படுத்த பிரிட்டனில் இருந்து கூடுதலாக 1000 பொலிஸ் அனுப்பப்படுவார்கள்.
டோனி பிளேயரின் தொழிற் கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Civil Contingencies Act 2004 உட்பட, ”போர் மற்றும் பயங்கரவாதம் நடவடிக்கைகள் போன்ற தேசிய அவசரநிலைகளைக் கையாள” வழக்கமாக ஒதுக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவது குறித்து மூத்த அரசு ஊழியர்கள் மத்தியில் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. சண்டே டைம்ஸ் கருத்துப்படி, “ஊரடங்கு உத்தரவு, பயணத்தை தடை செய்தல், சொத்துக்களை பறிமுதல் செய்தல் மற்றும் மிகவும் வன்மையாக, கலவரத்தை அடக்க ஆயுதப்படைகளை நிலைநிறுத்துவது, ஆகியவை இந்த அதிகாரங்களில் உள்ளடங்கும். அமைச்சர்கள் “மனித உரிமைகள் சட்டத்தைத் தவிர்த்து, பாராளுமன்றத்தின் எந்தவொரு சட்டத்தையும் அதிகபட்சம் 21 நாட்களுக்குள் திருத்தம் செய்ய முடியும்.
ஆவணத்தில் ஒரு பத்தி, எண் 15, திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஆலோசனை சபையில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்களை இரகசியமாக வைத்திருப்பதாக சத்திய பிரமாணம் செய்பவர்கள் மட்டுமே அந்தரங்க ஆலோசனை சபையின் உறுப்பினர்கள் உரையைப் படிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
“பொருளாதார முக்கியத்துவத்தின் அடிப்படையில்” பத்தியை தணிக்கை செய்ததாக அரசாங்கம் கூறுகின்றது. ஆகஸ்டில் டைம்ஸால் கசியவிடப்பட்ட இந்த பத்தி ஐக்கிய இராச்சிய எரிபொருள் தொழில் துறைக்கான மற்றும் அதன் அரசியல் விளைவுகளை பற்றியது என்பதை வெளிப்படுத்தியது. அது எழுதியதானது: “ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கவரிவிதிப்பை எதிர்கொள்ளும்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான எரிபொருள் ஏற்றுமதியை போட்டியில்லாததாக செய்கிறது. இதனால் உற்பத்தி தொகை மற்றும் அதிலிருந்து பெறும் இலாபத்தை குறைப்பதற்கு தொழில்துறை திட்டமிட்டது, ஆனால் எரிபொருள் இறக்குமதிக்கான சுங்கவரி சுங்கவரியை 0 சதவீதமாக நிர்ணயிக்கும் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் கொள்கை கவனக்குறைவாக இந்த திட்டங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இது குறிப்பிடத்தக்க நிதி இழப்புகள் மற்றும் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்படுவதை அறிவித்தல் (மற்றும் இறக்குமதி முனையங்களை மாற்றுதல்) மற்றும் சுமார் 2,000 நேரடி வேலை இழப்புகள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.
சுத்திகரிப்பு நிலையங்களில் வேலைநிறுத்த நடவடிக்கையின் விளைவாக சுத்திகரிப்பு நிலையங்களால் நேரடியாக வினியோகிக்கப்படும் பிராந்தியங்களுக்கு 1-2 வாரங்களுக்கு எரிபொருள் கிடைப்பதில் இடையூறு ஏற்படும்.
இந்த தகவலானது ஏற்கனவே வெளிப்படையாகி விட்டதால், புதுப்பிக்கப்பட்ட, மிக மோசமான மதிப்பீட்டை அரசாங்கம் மறைக்க முயற்சிப்பது மிகவும் சாத்தியமாக இருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஆவணத்தில் தணிக்கை செய்யப்பட்ட ஒரேயொரு பத்தி வேலை நிறுத்தங்களின் அச்சுறுத்தலை பற்றியே உள்ளது.
எல்லை பிரச்சினைகள் மற்றும் அவற்றின் பொருளாதார விளைவுகள் தொடர்பாக வடக்கு அயர்லாந்தில் “ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதற்கான மற்றும் வெளியேறுவதற்கான ஆதரவாளர்கள் இடையே “ஆர்பாட்டங்கள் மற்றும் எதிப்பு ஆர்ப்பாட்டங்கள்” வரக்கூடும் மற்றும் அதேநேரத்தில் “ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நேரடி சாலை மறிப்பு நடவடிக்கைகள் நேரிடக்கூடும் என்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. ஆனால் 2000க்கும் அதிகமான சுத்தகரிப்பு தொழிலாளர்கள் ஈடுபடக்கூடிய தொழிற்துறை நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக இந்த அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக, பிரெக்ஸிட் நெருக்கடியில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக தலையிடுவதிலிருந்து ஆளும் வர்க்கத்தால் தடுக்கமுடிந்த்தற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் வகித்த துரோக பாத்திரமே காரணமாகும். 2018 ஆம் ஆண்டு போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை (39,000 ஆகும்) இது 1893 க்குப் பின்பு இரண்டாவது தடவையாக மிக குறைந்த எண்ணிக்கையாகும். 1893 இல் இருந்து 2017 ல் தான் மிக குறைந்த எண்ணிக்கையாக இருந்த சுமார் 33,000 தொழிலாளர்கள் ஈடுபட்ட தொழில் துறை நடவடிக்கையாக இருக்கிறது.
இதற்கிடையில், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஆளும் உயரடுக்கின் ஐரோப்பிய ஒன்றிய சார்பு அல்லது பிரெக்ஸிட் சார்பு போன்ற ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு கன்னைகளுடன் தொழிலாளர்களை கட்டிவைக்க முயன்றுள்ளன.
பிரெக்ஸிட்டின் போதும் அல்லது அதன் பின்னர் ஏற்பட இருக்கும் பாரிய வேலைநிறுத்தங்களின் வளர்ச்சி தொழிலாள வர்க்கத்தை மீண்டும் அரசியல் கணக்குதீர்க்க கொண்டுவருவதற்கு அச்சுறுத்துவதுடன், அதனூடாக அது தனது சொந்த நலன்களை வலியுறுத்தத் தொடங்கலாம். இந்த சாத்தியமான இயக்கத்திற்கு எதிராகத்தான், Yellowhammer நடவடிக்கை மூலம் கட்டமைக்கப்படும் பாரிய அடக்குமுறை சக்திகள் பயன்படுத்தப்படும்.
உடன்பாடு இல்லாத பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான சமூக அமைதியின்மைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தயாராகிறது
By Robert Stevens
21 August 2019