Print Version|Feedback
Socialist Equality Party stands candidates in UK general election
சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டன் பொது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறது
By our reporter
18 November 2019
சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டனின் பொது தேர்தலில் மூன்று வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கை பின்வரும் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறது:
- பிரெக்ஸிட் வேண்டாம்! ஐரோப்பிய ஒன்றியம் வேண்டாம்! ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக!
- போர் வேண்டாம்! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்! ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!
- சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டமைப்போம்!
கிறிஸ் மார்ஸ்டன்
கிறிஸ் மார்ஸ்டன் ஷெஃபீல்ட் மத்திய தொகுதியில் நிற்கிறார். மார்ஸ்டன், 58 வயது, சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஆவார். 1983 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்த அவர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளில் முக்கிய பாத்திரம் வகித்துள்ளதுடன், உலக சோசலிச வலைத் தளத்தின் தொடர்ச்சியான எழுத்தாளராவர்.
தோமஸ் ஸ்க்ரிப்ஸ்
தோமஸ் ஸ்க்ரிப்ஸ் இலண்டனின் ஹோல்பர்ன் & செயிண்ட் பான்க்ரஸ் தொகுதியில் நிற்கிறார். ஸ்க்ரிப்ஸ், 24 வயது, நவீன வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி. 15 வயதில் இருந்து ஒரு சோசலிஸ்டாக இருந்து வரும் அவர், 2011 இல் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்தார். சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் முன்னணி உறுப்பினரான அவர், உலக சோசலிச வலைத் தளத்திற்காக வழமையாக எழுதும் ஒரு எழுத்தாளராவார்.
டென்னிஸ் லீச்
டென்னிஸ் லீச் மான்செஸ்டர் மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். லீச், 61 வயது, மனநல சேவை அறக்கட்டளைக்கான ஓர் ஆலோசகராக உள்ளார். மூன்று தசாப்தங்களாக சோசலிச அரசியலில் செயலூக்கத்துடன் உள்ள அவர், சமூக பிரச்சினைகள் சம்பந்தமாக உலக சோசலிச வலைத் தளத்தில் எழுதுகிறார்.
இந்த மூன்று தொகுதிகளுமே, தசாப்த காலமாக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளின் வெட்டுக்களால் மோசமாக்கப்பட்டு, சமூக பற்றாக்குறையால் பேரழிவிற்குள்ளான பெரும் தொழிலாள வர்க்க பகுதிகளை உள்ளடக்கி உள்ளன.
சனிக்கிழமை, சோசலிச சமத்துவக் கட்சியின் குழு மத்திய இலண்டனின் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் ஜூலியன் அசான்ஜின் சுதந்திரத்திற்கான ஒரு போராட்டத்தில் பங்கெடுத்தது. ஜூலியன் அசான்ஜ் பாதுகாப்பு குழு ஒழுங்கமைத்திருந்த அந்த உயிரோட்டமான ஆர்ப்பாட்டத்தில் 100 அதிகமானவர்கள் கலந்து கொண்டதுடன், கணிசமான அளவுக்கு நடைபாதையாளர்களிடையே கவனத்தை ஈர்த்தது. “சித்திரவதையை நிறுத்து, அசான்ஜை இப்போதே விடுதலை செய்!” “விக்கிலீக்ஸ் உயிர்களைக் காப்பாற்றியது" “ஐ.நா. சபையின் சித்திரவதை அறிக்கை: ஜூலியன் அசான்ஜ் பெல்மார்ஷ் சிறையில் உயிரிழக்கக்கூடும்!” “ஜூலியன் அசான்ஜ்: குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி பெல்மார்ஷில் அடைக்கப்பட்டிருப்பது சர்வதேச விதி மீறலாகும்" “பிரசுரிப்பது ஒரு குற்றமல்ல!” என்று அறிவித்த பதாகைகளைப் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். “ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!” “செல்சியா மானிங்கை விடுதலை செய்!” “ஒரேயொரு முடிவு தான், நாடுகடத்தல் கூடாது!” என்று அவர்கள் கோஷமிட்டார்கள்.
சோசலிச சமத்துவக் கட்சி அதன் தேர்தல் அறிக்கை நகல்களை வினியோகித்தது, அது விவரித்தது, “மற்றவர்களை வாய்மூடச் செய்வதற்கான ஓர் எச்சரிக்கையாக, அசான்ஜ், போர் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்டு வருகிறார். இருப்பினும் கோர்பினின் தொழிற் கட்சியோ அல்லது ஒரேயொரு தொழிற்சங்கமோ கூட அவரைப் பாதுகாப்பதில் சுண்டுவிரலைக் கூட உயர்த்தவில்லை. பிரிட்டனின் எந்தவொரு போலி-இடது குழுக்களும் தான்.
“இந்த கீழ்தரமான சதியைத் தோற்கடிக்க தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அணித்திரட்டுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி அதன் சக்தியில் தொடர்ந்து அனைத்து செய்யும்.”
தோமஸ் ஸ்க்ரிப்ஸ் ட்ரஃபல்கர் சதுக்க போராட்டத்தில் உரையாற்றுகிறார்
தோமஸ் ஸ்க்ரிப்ஸ் அக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் கூறினார், “இந்த பிரச்சாரம் கடந்த சில மாதங்களில் மிகப்பெரிய பாய்ச்சலை எடுத்துள்ளது என்றாலும், ஜூலியன் அசான்ஜின் உடல்நிலை அபாயகரமாக மோசமடைந்து வரும் நிலையில் ஒரு கண்துடைப்பு விசாரணையுடன் அமெரிக்காவிடம் ஒப்படைப்பது அருகில் நெருங்கி வருவதால் அடுத்துவரும் நாட்களில் இன்னும் மிகப்பெரிய பாய்ச்சலை இது எடுக்க வேண்டும் என்று நான் கூறும் போது நான் இங்கே உள்ள ஒவ்வொருவருக்காகவும் பேசுவதாக நினைக்கிறேன் …
“நாம் இப்போது ஒரு பொது தேர்தலின் மத்தியில் இருக்கிறோம், இதில் பிரதான கட்சிகள் ஒவ்வொன்றும் அசான்ஜ் பிரச்சினையைத் தவிர்க்க அவற்றால் ஆன அனைத்தும் செய்யும், ஏனென்றால் அவர்களில் முடிவெடுப்பவர்கள் அனைவரும் அடிப்படையில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கும் மற்றும் இந்த தைரியமான இரகசிய ஆவண வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாசிரியரை ஓர் எடுத்துக்காட்டாக ஆக்கவும் உடன்படுகின்றனர்.
“இதை எதிர்க்க, சோசலிச சமத்துவக் கட்சி மான்செஸ்டர், ஷெஃபீல்டில் வேட்பாளர்களை நிறுத்துகிறது, நான் இங்கே இலண்டனில் நிற்கிறேன், இவ்விடங்களில் நமது பிரச்சாரத்தின் மையத்தில் அசான்ஜை விடுவிக்கும் போராட்டத்தை நாம் முன்வைக்கிறோம். இந்த கோரிக்கை பாரிய மக்களைச் செவிமடுக்க செய்யும் என்பதில் எங்களுக்கு மிகப்பெரும் நம்பிக்கை உள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான், 200,000 பேர் அசான்ஜ் கையாளப்படும் விதத்தை எதிர்த்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒரு மனு அளித்தனர்.
“இங்கே கூடியிருக்கும் ஒவ்வொருவரும் அவர்களின் ஆதரவை வழங்க வேண்டும் என்றும், இது நாள் வரையில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக வாழ்த்துக்களை தெரிவிக்கவும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.”
கடந்த வெள்ளிக்கிழமை, ஸ்க்ரிப்ஸ் மற்றும் SEP உறுப்பினர்கள் "110,000 ராயல் மெயில் தபால்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு பிரிட்டன் உயர்நீதிமன்றம் தடை விதிக்கிறது,” என்ற WSWS கட்டுரையுடன் இலண்டனின் யூஸ்டன் ராயல் மெயில் நிலையத்துக்கு வெளியே பிரச்சாரம் செய்தனர். ராயல் மெயிலால் உரிமைகள் பறிக்கப்படுவதையும், அது நீதிமன்றத்தால் ஆதரிக்கப்படுவதையும் எதிர்ப்பதில் தபால்துறை தொழிலாளர்கள், வினியோக துறை எங்கிலுமான மற்றும் மற்ற தொழில்துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களை நோக்கி திரும்பி, தொழிற்சங்கத் தலைமையின் கட்டுப்பாடு இல்லாமல் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்க, தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் சங்கத்திலிருந்து சுயாதீனமாக, அவரவர்களின் வேலையிடங்களில் சாமானிய நடவடிக்கை குழுக்களை உருவாக்க தபால்துறை தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு விளங்கப்படுத்தினர்.
தொழிலாளர்கள் இந்த பிரச்சினையை விவாதிக்க ஆர்வமுடன் இருந்தனர். ஒருவர் நமது செய்தியாளர்களுக்கு கூறுகையில், “ஒரு மேலாளர் சில புகைப்படங்களை அனுப்பினார் என்பதற்காக ஆயிரக் கணக்கானவர்களின் வேலைநிறுத்தத்தை நீங்கள் நிறுத்த முடியாது. ஒவ்வொருவரும் சீற்றத்துடன் இருக்கிறோம்.
“உண்மையிலேயே நான் எனது கவலைப்படுகிறேன்,” என்றொரு தொழிலாளி கூறினார். “நான் 20 ஆண்டுகளாக பணம் செலுத்தி வருகிறேன், இறுதியில் அதை எடுத்துக்காட்டுவதற்காக நான் ஏதோவொன்றை விரும்புகிறேன். என்ன நடந்தாலும், பங்குதாரர்கள் அவர்களின் பையை நிறைத்தவாறு நடக்க முடியுமென உங்களால் உத்தரவாதம் கொடுக்க முடிகிறது.”
நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்க மறுத்த CWU சங்கம், பேச்சுவார்த்தைகளுக்கு வருமாறு அந்நிறுவனத்திற்கு மீண்டும் முறையிட்டுள்ளது. அந்த தொழிலாளர் கூறினார், “தொழிற்சங்கத்தைக் குறித்து, தங்க கைகுலுக்கல்களைக் கண்டு ஆச்சரியமடைவீர்கள். [CWU பொதுச் செயலாளர்] டேவ் வார்டுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது?”
ஷெஃபீல்ட் நகர மையத்தில், அமந்தா கூறுகையில், அவர் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி குறித்து மிகவும் கவலை கொண்டிருப்பதாகவும், குறிப்பாக இராணுவவாதம் மற்றும் போரை எதிர்க்க வேண்டிய அவசியமிருப்பதுடன் அவர் உடன்படுவதாகவும் தெரிவித்தார்.
சுவீடனில் இருந்து சமீபத்தில் பிரிட்டனுக்குத் திரும்பி இருந்த கொர்ரின் அதிவலது சுவீடன் ஜனநாயக கட்சியினரின் வளர்ச்சியாலும், இவர்கள் ஐரோப்பா எங்கிலுமான அவர்களின் சமதரப்பினரைப் போலவே முதலாளித்துவ பிரச்சினைகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களைப் பலிக்கடா ஆக்குவதைக் கண்டும் தொந்தரவுக்குள்ளாகி இருந்தார்.
விண்வெளித்துறை பயிலும் மாணவர் வில்லியம் அதிநவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை கோடீஸ்வரர்களின் ஒரு சிறிய அடுக்கு செல்வ செழிப்பாக ஆவதற்காக அல்லாது, அனைவரினது நலனுக்காகப் பயன்படுத்துவது அவசியமென கருதினார்.
இந்திய மூலத்தைக் கொண்ட அன்விஷ் கூறுகையில், அவரும் அவருடன் உள்ள 15 இந்திய மற்றும் பாகிஸ்தானிய மாணவர்களின் ஒரு குழுவும் வெகுஜன வாக்கெடுப்பில் வெளியேறுவதற்கு (பிரெக்ஸிட்) வாக்களிக்க முடிவெடுத்திருந்ததாகவும், அதற்காக அவர் வருத்தப்படுவதாகவும் கூறினார். பிரச்சாரகர்கள், ஐரோப்பிய ஒன்றிய வெகுஜன வாக்கெடுப்பைச் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்ததையும், அது சர்வதேசவாத முன்னோக்கை அடிப்படையாக கொண்டிருப்பதையும் குறித்து விவரித்தனர். அன்விஷ் பதிலுரைத்தார், “நீங்கள் கூறுவதைப் போன்ற சுயாதீனமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியுமென எனக்கு ஒருபோதும் தோன்றியதே இல்லை,” என்றார்.
கிறிஸ் மார்ஸ்டன் இந்திய வரலாற்றைச் சம்பந்தப்படுத்தி கட்சியின் வேலைத்திட்டத்தை விவரித்தார். “இந்திய விடுதலை இயக்கம் ஆரம்பத்தில் ஓர் ஒருங்கிணைந்த இயக்கமாக தான் அபிவிருத்தி அடைந்தது, பின்னர் அது மதரீதியிலும், இனரீதியிலும், ஜாதிய முறைகளிலும் பிளவுபடுத்தப்பட்டது.
“ஆகவே உழைக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் என்ன? சிக்கன நடவடிக்கைகள், அவர்களின் வாழ்க்கை தரங்கள் இடைவிடாது அழிக்கப்படுவது, அத்தியாவசிய சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்படுவது, புலம்பெயர்ந்தோர்-விரோத நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போர். நாங்கள் தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் நடவடிக்கையாளராக அணிதிரட்டவும் மற்றும் இப்போதிருக்கும் தேசிய எல்லைகளைக் கடந்து அதை ஐக்கியப்படுத்தவும் முயன்று வருகிறோம்.”
சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று வினவிய போது, அன்விஷ், “இந்த யோசனையை விரும்புகிறேன்,” என்று பதிலளித்தார்.
சனிக்கிழமை SEP பிரச்சாரக் குழு மான்செஸ்டர் மத்திய நூலகத்திற்கு வெளியே செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இருந்தது.
அந்த தொகுதியில் வாழும் ஃபில் அவர் டென்னிஸ் லீச்சுக்கு வாக்களிக்க இருப்பதாக தெரிவித்தார். “அவர் போட்டியிடும் களத்தை நான் நம்புகிறேன்,” என்று கூறிய அவர், “என் நண்பர்கள் சிலரால் எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளவாறு, நான் தந்திரோபாயரீதியில் வாக்களிக்கப் போவதில்லை, ஏனென்றால் யார் அரசாங்கம் அமைக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களோ, அவர்களுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும், யார் அரசாங்கம் அமைக்க கூடாது என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று நான் மனதார நம்புகிறேன்.
டென்னிஸ் லீச் (இடது) மற்றும் ஃபில்
“உண்மையாகவே சோசலிசத்திற்காக நிற்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுந்தான் என்று நம்புகிறேன். வேறெந்த கட்சியும் இதை செய்யவில்லை என்று நினைக்கிறேன். வாக்காளர்கள் மத்தியில் தங்கள் நிலையை உயர்த்துவதற்காக அவர்கள் தங்களைத் தாங்களே அலங்கரிப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் இதை அவர்களே நம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இதுவரையில் அவர்கள் செய்திருக்கும் ஒவ்வொன்றும், அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை மட்டுமே நிரூபித்துள்ளது, ஏனென்றால் ஒருவர் கூறுவதை அவர் செய்வார் என்று நம்பி விட முடியாது. அவர்களை நம்பக்கூடாது என்பதை இப்படிப்பட்டவர்கள் நிரூபித்துள்ளனர்.”
சில காலமாக அவர் WSWS படித்து வருவதாக கூறிய ஃபில், அனைத்து இன்றியமையா பிரச்சினைகள் மீதான அதன் மதிப்பீட்டிலும் அது சரியாக இருப்பதை கட்சி நிரூபித்துள்ளதாக தெரிவித்தார். “கிரீஸைக் கவனியுங்கள். இடது கட்சி என்றழைக்கப்படும் மற்ற ஒவ்வொன்றும், நீங்களே பெயரிட்டு கொள்ளுங்கள்—அவை அனைத்தும் கிரீஸில் [சிரிசா தலைவர் அலெக்சிஸ்] சிப்ராஸை ஆதரிக்குமாறு கூறியிருந்தன. ஆனால் SEP அவ்வாறு கூறவில்லை. அவர் என்ன செய்வார் என்பதையும், அவர் காட்டிக் கொடுப்பார் என்பதையும் அவர்கள் கூறினார்கள், நீங்கள் சரியாகவே கூறினீர்கள்.”
எங்கள் பிரச்சாரத்தில் இணையவும் ஆதரிக்கவும் பின்வரும் முகவரிகளைப் பார்வையிடலாம்:
https://socialequality.org.uk
https://www.facebook.com/sepbritain/
https://twitter.com/SEP_Britain
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:
சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டிஷ் பொது தேர்தலில் போட்டியிடுகின்றது:
சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போர் வேண்டாம்!
ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!
வர்க்க போராட்டத்திற்காக மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்திற்காக!