ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump delivers fascist tirade at United Nations

ஐக்கிய நாடுகள் சபையில் ட்ரம்ப் பாசிச வசைப்பேச்சுக்களை வழங்குகிறார்

By Andre Damon
25 September 2019

2017 இல் பதவியேற்றது முதல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் அவர் ஆற்றிவரும் வருடாந்திர உரையில், சோசலிசத்தை கண்டிக்கவும், தேசியவாதத்தையும், வெளிநாட்டவர் மீதான வெறியை ஊக்குவிக்கவும், மேலும் உலகம் முழுவதிலுமான நாடுகளை கொடுமைப்படுத்தவும் மற்றும் அச்சுறுத்தவும் பயன்படுத்தி வருகிறார்.

ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் தனது மூன்றாவது உரையில், அதிகரித்தளவில் அவரது பாசிச வாய்சவடால்களை பிரயோகித்தார். “பூகோளமயமாதல்வாதிகள்” தேசிய அடையாளத்தை “மாற்றீடு” செய்ய விரும்புகின்றனர் என்று அறிவித்து நவ-நாஜி வலதுசாரிகளின் உருவக கதைகளை அவர் பகிரங்கமாக எதிரொலித்தார், அதேவேளை “சோசலிசமும் கம்யூனிசமும்” நாஜி ஜேர்மனியால் கொல்லப்பட்டவர்களை காட்டிலும் அதிகமாக 100 மில்லியன் மக்களை கொன்றதில் சென்று முடிந்தது என்றும் பொய்யாக அறிவித்தார்.


செப்டம்பர் 24, 2019 செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74வது அமர்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார் (ஏபி ஃபோட்டோ / ரிச்சார்ட் ட்ரூ)

அதே நேரத்தில், ட்ரம்ப், சீனாவுடன் அவரது வர்த்தகப் போரை அதிகரிக்கவும், ஈரான் மற்றும் வெனிசுவேலாவிற்கு எதிராக அமெரிக்க பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தவும் உறுதிபூண்டு, ஐ.நா.வில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஒவ்வொரு நாட்டையும் அவர் கொடுமைப்படுத்தினார், பொய்புகழ்ச்சி செய்து ஏமாற்றினார் மேலும் அச்சுறுத்தினார், அதேவேளை அமெரிக்காவின் “நட்புநாடுகள்” இராணுவ பாதுகாப்பிற்கு அதிக பங்களிப்பு செய்ய வேண்டுமென்றும் கோருகிறார்.

ஜனநாயகக் கட்சியின் முன்னணி பிரமுகர் ஜோ பைடென் மற்றும் அவரது மகன் சம்பந்தப்பட்ட ஊழல்கள் குறித்து உக்ரேனை விசாரணை செய்ய வேண்டுமென்ற ஜனநாயகக் கட்சி அவை சபாநாயகர் நான்சி பெலோசியின் கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு எதிராக ஒரு முறையான அரசியல் குற்றச்சாட்டு விசாரணைக்கு அறிவித்ததற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ட்ரம்ப் அவரது பாசிச முறையீடுகளை விடுத்தார். இக் குற்றச்சாட்டு உந்துதலுக்கு பின்னால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்த பொய்யாக கொந்தளிக்கும் கன்னை வேறுபாடுகள் உள்ளன.

ஆழமடைந்து வரும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், இராணுவம் மற்றும் பொலிஸ் படைகள் சார்ந்த “மொத்த இராணுவத்தின்” கணிசமான பிரிவுகள் உட்பட, அவரது பாசிச தளத்திற்கு வலுவூட்ட ட்ரம்ப் தனது முறையீட்டை அதிகரித்து வருகிறார்.

அதற்காக, தனது நிர்வாகத்தால் இராணுவத்திற்கு மாற்றப்பட்ட பரந்த வளங்கள் பற்றி பெருமை பேசி ட்ரம்ப் தனது உரையை தொடங்கினார். “எங்களது பெரிய இராணுவத்தை முற்றிலுமாக மீள கட்டமைக்க எனது தேர்தலுக்குப் பின்னர் இரண்டரை டிரில்லியன் டாலர்களுக்கு அதிகமாக செலவிடப்பட்டதைத் தொடர்ந்து” “அமெரிக்கா,” “இதுவரை உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக” உள்ளது என்று ட்ரம்ப் ஆர்ப்பரித்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், நட்பு நாடுகள் மற்றும் எதிரி நாடுகள் அனைத்தையும் உலகின் மிகப்பெரிய அணுவாயுதங்களுடன் ட்ரம்ப் மிரட்டினார், உதாரணமாக ஈரானை ஒரு “எச்சரிக்கை கதையாக” மாற்றுவதற்கு அச்சுறுத்தினார்.

ஆனால், “மீக நீண்ட காலமாக கடுமையாக சேவையாற்றும் வெள்ளை மாளிகை ஆலோசகர் மற்றும் உரை எழுத்தாளருமான, ஸ்டீபன் மில்லரின் அடையாளங்கள்” பற்றி கார்டியன் பத்திரிகை சரியாக குறிப்பிட்டது போல, அவரது உரையின் மையக்கருத்து வெளிப்படையாக பாசிச பாதையை தாங்கியிருந்தது.

நவ-நாஜி வலதுசாரி உருவக கருத்துக்களை எதிரொலிக்கும் விதமாக, “சுதந்திர உலகம் அதன் தேசிய அடித்தளங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது அவற்றை அழிக்கவோ அல்லது மாற்றவோ முயற்சிக்கக் கூடாது,” என்று ட்ரம்ப் அறிவித்தார்.

வேர்ஜீனியாவில், சார்லோட்டஸ்வில் வீதிகளில் அணிவகுத்துச் சென்றபோது, “நீங்கள் எங்களை பிரதியீடுசெய்ய மாட்டீர்கள்” என்றும் “யூதர்கள் எங்களை பிரதியீடுசெய்ய மாட்டார்கள்” என்றும் பாசிஸ்டுகளின் ஒரு கும்பல் கோஷமிட்டபோது, “பிரதியீடு” என்ற சொற்றொடர் 2017 இல் பரவலான புகழைப் பெற்றது. தன்னை சுயமாக அடையாளம் காட்டிய வெள்ளை மேலாதிக்க ஜேம்ஸ் அலெக்ஸ் ஃபீல்ட்ஸ் ஜூனியர் மறுநாள் ஒரு பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரரை கொலை செய்த பின்னர், “இரு தரப்பிலும் மிகச் சிறந்த மனிதர்கள்” இருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.

“யூதர்களால் கட்டுபடுத்தப்பட்டு கையாளப்பட்டதாகக் கூறப்படும் ‘உயரும் வண்ண அலை’ மூலமாக வெள்ளை இனம் அழிந்து போக விதிக்கப்பட்டுள்ளது என்பதாக வெள்ளை மேலாதிக்க உலகம் கருதுகிறது…” என்ற அவதூறு எதிர்ப்பு கழகத்தின் (Anti-Defamation League) கூற்றுப்படி, “நீங்கள் எங்களை பிரதியீடுசெய்ய மாட்டீர்கள்” என்ற வெளிப்பாடு பிரதிபலிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் பிறந்த ப்ரெண்டன் டாரண்ட், மார்ச் 15 அன்று, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் 51 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்கொள்கையில், அவரது அறிக்கைக்கு “பாரிய இடம்பெயர்வு” (The Great Replacement) என்று பெயரிட்டார். அதில், வெள்ளையர் அல்லாதவர்கள் ஐரோப்பியர்களை “மாற்ற” முயல்கிறார்கள் என்ற பாசிச சதி கோட்பாட்டை டாரண்ட் வாதிட்டார், இது அவரது பெரும் கொலை நடவடிக்கைக்காக போராடுவதற்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.

“எதிர்காலம் தேசபக்தர்களுக்கு சொந்தமானது,” “அதனால்தான் அமெரிக்காவில் தேசத்தை புதுப்பிப்பது தொடர்பான ஒரு அற்புதமான திட்டத்தில் நாங்கள் இறங்கியுள்ளோம்” என்று ஹிட்லர் அல்லது முசோலினி போன்றவர்கள் உச்சரிக்கக்கூடிய மொழியில் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த அறிக்கைகள், இதுவரை இந்த அல்லது வேறு எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியாலும் கூறப்படாத சோசலிசம் குறித்த மிகவும் ஆவேசமான மற்றும் அவதூறான கண்டனங்களாக இருந்தன.

“சோசலிசத்தின் ஆவியுரு” என்பது “எங்கள் நாடுகள் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான சவால்களில் ஒன்றாகும்” என்று ட்ரம்ப் அறிவித்தார்.

“உள்நாட்டில் நான் தெரிவித்தது போல இன்று உலகிற்கு ஒரு செய்தியை நான் மீண்டும் தெரிவிக்கிறேன்: அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோசலிச நாடாக இருக்காது,” என்று ட்ரம்ப் கூறினார். மேலும், “கடந்த தசாப்தத்தில் சோசலிசமும் கம்யூனிசமும் 100 மில்லியன் மக்களை கொன்றுள்ளன” என்றும் சேர்த்துக் கூறினார்.

அது அவ்வாறு இல்லாதபோதும் ட்ரம்பின் புள்ளிவிபரங்கள் உண்மையானவை என்றால் –அது இல்லை– அதன் அர்த்தம் என்னவென்றால், மனித வரலாற்றில் மிக மோசமான மோதலான இரண்டாம் உலகப் போரில் மொத்தம் இறந்தவர்களை காட்டிலும், மேலும் நாஜி ஜேர்மனியின் கீழ் கொல்லப்பட்டவர்களை காட்டிலும் மிக அதிகமாக சோசலிசத்தால் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதாகும். இதில், நாஜி ஜேர்மனியைக் காட்டிலும் அதிகமான இறப்புக்களுக்கு சோவியத் யூனியன் தான் காரணம் என்ற பாசிச வலதின் மற்றொரு உருவக கதை பற்றி ட்ரம்ப் மீண்டும் குறிப்பிடுகிறார் – இது நாஜி காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தும் மற்றும் படுகொலைகளை அற்பமாக்கும் முயற்சியேயன்றி வேறொன்றுமில்லை.

இந்த கண்டனத்தைத் தொடர்ந்து, சீனா, ஈரான் மற்றும் வெனிசுவேலாவை அச்சுறுத்துவதற்கு ட்ரம்ப் முனைந்தார். சீனாவுடன் ஒத்துழைப்பை நாடியுள்ள “உலகமயமாக்கல்வாதிகளின்” முட்டாள்தனம் குறித்து அவர் புலம்பினார். “ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்த நாட்கள் முடிந்துவிட்டன,” என்று ட்ரம்ப் உளறினார். மேலும், “இந்த நியாயமற்ற நடைமுறைகளை எதிர்கொள்ள, 500 பில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்புள்ள சீனத் தயாரிப்பு பொருட்களுக்கு பெரும் சுங்க வரிகளை நான் விதித்துள்ளேன். ஏற்கனவே, இந்த சுங்க வரிகளின் விளைவாக, விநியோகச் சங்கிலிகள் அமெரிக்காவிற்கும் பிறநாடுகளுக்கும் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதுடன், பில்லியன் கணக்கில் டாலர்கள் செலுத்தப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், “இறப்புகள் மற்றும் அழிவுகளின் அளவு பற்றி நாம் அனைவரும் அறிந்ததே” என ஈரானை கண்டிக்க முனைந்தார். தொடர்ந்து, “ஈரானின் மத்திய வங்கி மீது அதிகூடிய பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது” பற்றி ட்ரம்ப் தற்பெருமை பேசினார். “அனைத்து நாடுகளுக்கும் செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது. எந்தவொரு பொறுப்புள்ள அரசாங்கமும் ஈரானின் இரத்த வேட்கைக்கு மானியம் வழங்கக்கூடாது” என்றவர் முடித்தார். அத்துடன், தனது நிர்வாகத்தால் சுமத்தப்பட்ட வெனிசுவேலாவுக்கு எதிரான முடக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் பற்றியும் அவர் பெருமை பீற்றினார்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் கசப்பான கொள்கைப் பிளவுகள் எவ்வளவு இருந்தாலும், ட்ரம்பின் வெறித்தனமான வெறுப்பு மற்றும் சோசலிசம் மீதான பயம், மேலும் வர்த்தகப் போர் மற்றும் இராணுவ வன்முறையை அவர் ஊக்குவிப்பது, மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அவரது வெளிப்படையான தாக்குதல் ஆகியவை பற்றி அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவினராலும் பகிரப்படுகிறது.

அமெரிக்காவின் குற்றவியல் மற்றும் கொலைவெறி மிக்க வெளியுறவுக் கொள்கை குறித்த வேறுபாடுகளை மையமாக கொண்டு, வாஷிங்டனில் அரசியல் போர் சூடுபிடித்து வரும் நிலையில், தொழிலாள வர்க்கம் வெள்ளை மாளிகையில் பாசிசத்தை எதிர்ப்பதற்கு, அரசியல் ரீதியாக சுயாதீனமான அடிப்படையில் அணிதிரள வேண்டும். அதாவது, ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதில், தொழிலாளர்களுக்கு போர், வறுமை மற்றும் பிற்போக்குத்தனத்தை தவிர வேறெதையும் வழங்கியிராத முதலாளித்துவ அமைப்பின் மிக மோசமான திடீர் எழுச்சியுருவாக மட்டுமே ட்ரம்ப் இருக்கிறார் என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.