Print Version|Feedback
UK government prepares for social unrest following no-deal Brexit
உடன்பாடு இல்லாத பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான சமூக அமைதியின்மைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தயாராகிறது
By Robert Stevens
21 August 2019
பிரதமர் போரிஸ் ஜோன்சன் அதிபர் அங்கேலா மேர்க்கெலுடன் பேச்சுவார்த்தைக்காக இன்று ஜேர்மனிக்கு விஜயம் செய்கிறார். நாளை அவர் பாரிஸில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை சந்திப்பார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக மற்றும் சுங்க (இறக்குமதி) வரி ஒப்பந்தங்களுடன் அல்லது எந்த ஒப்பந்தமும் இல்லாமல் அக்டோபர் 31 ம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தை வெளியேற்றுவதாக ஜோன்சன் உறுதியளித்துள்ளார். அவரது பயணத்திற்கு முன்னரே பதட்டங்கள் மீண்டும் எழுந்திருப்பது, ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவது பெருகிய முறையில் சாத்தியமென்பதை காட்டுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் ஐரிஷ் குடியரசிற்கும் இடையிலான கடினமான எல்லையை தடுக்கும் நோக்கில் “பின்பக்க அடைப்பு” இனை ஐரிஷ் குடியரசு கட்டாயம் கைவிட வேண்டும் அல்லது ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதாக இருக்கும் என்ற ஜோன்சனின் கோரிக்கையை ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான டொனால்ட் டுஸ்க் மற்றும் ஐரிஸ் பிரதமர் லியோ வரட்கர் கைமீறிய ஒன்று என நிராகரித்தனர். “பின்பக்க அடைப்பு” ஜனநாயக விரோதமானது மற்றும் "ஜக்கிய இராச்சியத்தின் இறையாண்மைக்கு" முரணானது என ஜோன்சன் விபரித்தார்.
பிரெக்ஸிட் மீதான ஆளூம் உயரடுக்கின் நெருக்கடி இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிகவும் மோசமானதாக உள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜோன்சனின் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு அரசாங்கம் “பிரிட்டனை ஆட்சிசெய்” (பிரிட்டன் முதல்) என்ற அதன் நிகழ்ச்சி நிரலை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு தயார் செய்கிறது.
இந்த வார சண்டே டைம்ஸ் yellowhammer என்ற பெயரிலான நடவடிக்கை குறித்த புதிய விபரங்களை வெளியிட்டது, பிரெக்ஸிட்டிற்குப் பின்னர் "நாட்டின் உள்கட்டமைப்பின் பேரழிவு தரும் வீழ்ச்சியைத் தடுக்க அரசாங்கத்தின் இரகசியத் திட்டத்தை" இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகிறது.
இந்த மாதம் அமைச்சரவை அலுவலகத்தால் yellowhammer ஆவணங்கள் தொகுக்கப்பட்டன என்பதை சண்டே டைம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னாள் நிதி மந்திரி பிலிப் ஹாமொண்ட் மற்றும் டேவிட் கோவ்கே தலைமையிலான குழுவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய இணைப்பை ஆதரிக்கும் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான, ஒரு மூத்த டோரி நபரால் “மிகவும் எளிதில் தூண்டக்கூடிது” என குறிக்கப்பட்ட ஆவணங்கள் கசிந்ததாக விளங்கிக்கொள்ளப்படுகிறது.
"[Yellowhammer] இன் ஆவணங்கள் ... மோசமான சூழ்நிலைகளைக் காட்டிலும் உடன்பாடு இல்லாத ஒரு பிரெக்ஸிட்டிற்கு பின்னரான அதிர்வுகளுக்கு தயார் செய்கிறது..." என்று அந்த செய்தித்தாள் வலியுறுத்துகிறது.
“குழப்ப நடவடிக்கை” (“Operation Chaos”), என்ற தலைப்பில் முதல் பக்க கட்டுரையில் சண்டே டைம்ஸ் எச்சரித்தது, “ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறும் நிகழ்வு, எரிபொருள், உணவு, மருந்து பற்றாக்குறைகளையும் மற்றும் சமூக பராமரிப்பில் அதிகரிக்கும் செலவுகள், அதன் துறைமுகங்களில் மூன்று மாத கால சரிவு, அயர்லாந்துடனான அதன் எல்லையில் சுங்கக் கட்டுப்பாடுகள் ஆகிய பிரச்சனைகளை பிரிட்டன் எதிர்கொள்ளும்…”.
டோரி பிரெக்ஸிட்டின் மூலோபாயத் திட்டமிடலின் இருப்பு கடந்த செப்டம்பர் மாதம் முதல் தடவையாக வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது ஒரு புகைப்பட நிருபர் சில “ஒப்பந்தம் இல்லாத” திட்டங்களையும் குறியீட்டு பெயரையும் வெளிப்படுத்தும் ஒரு ஆவணத்தை படம் எடுத்திருந்தார். அதன் பொது உள்ளடக்கங்களின் விவரங்கள் கடந்த ஆண்டில் வெளிவந்தன.
ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் விளைவையொட்டி வரும் நிச்சியமற்ற நிகழ்வுகளுக்கான திட்டமான Yellowhammer இன் “ஆணையிடு மற்றும் அடக்கு” கடந்த மார்ச் மாதம் முதல் தடவையாக நடைமுறைப்படுத்த தயாராக இருந்தது. அது முன்னாள் பிரதமர் தெரேசா மே மற்றும் புருஸ்ஸல்ஸ் ஆலும் அக்டோபர் வரை நீட்டிக்கப்படுவதற்கு முன்னர் இங்கிலாந்தின் வெளியேற்றத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட முந்தய காலக்கெடுவாகும். அதன் விதிகளின் கீழ், பொதுவாக தேசிய அவசரகால நிலைமைகளின் கீழ் மட்டுமே கூட்டப்படும் அரசாங்கத்தின் கோப்ரா குழுவுக்கு குறைந்தபட்சம் 3500 துருப்புகளை எதற்கும் தயாராக காத்திருப்புடன் வைத்திருப்பதற்கும் உடன்படிக்கை அல்லாத அனைத்து ஏற்பாடுகளையும் பொறுப்பேற்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டது.
Yellowhammer இன் விதிகள் பேரழிவுகரமான சமுக தாக்கங்களை கொண்டுள்ளன, ஏனெனில் அவைகள் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்பாட்டங்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் ஜனநாயக உரிமைகளை அடியோடு நீக்குவது குறித்து முன்வைக்கப்படுகின்றன. டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Civil Contingencies Act 2004 இல் பொதிந்துள்ள பாரிய போலிஸ்-அரசு அதிகாரங்களை பயன்படுத்துவதும் இதில் உள்ளடக்கும்.
இராணுவச் சட்ட காட்சிகள் பரிசீலிக்கப்பட்டு வந்ததாகவும் மற்றும் அவை, “ஊரடங்கு உத்தரவு, பயணத்தடை, சொத்துக்களை பறிமுதல் செய்தல், கலவரத்தை அடக்க ஆயுதப்படைகளை அனுப்புவது ஆகியவை அமைச்சர்களுக்கு கிடைக்கக்கூடிய நடவடிக்கைகளில் அடங்குகிறது” என ஜனவரி மாதம் டைம்ஸ் வெளிப்படுத்தியது.
சமீபத்திய ஆவணங்கள், ஒரு சிறிய தீவு நாட்டில் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் சிதைந்துவிடும் என்பதைக் காட்டுகின்றன, இது அடிப்படை உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகள் உட்பட அன்றாட வாழ்க்கையின் கிட்டத்தட்ட அனைத்து தேவைகளுக்கும் இறக்குமதியைச் சார்ந்துள்ளது.
தற்போதைய மதிப்பீட்டின்படி 50 முதல் 70 சதவிகிதமாக இருக்கும் “மேம்படும்” என்று கூறப்படும் கப்பல் போக்குவரத்தின் ஓட்டம் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் குறிப்பிடத்தக்க இடையூறுகளை துறைமுகங்களில் ஏற்படுத்தும். சில வகையான புதிய உணவு வழங்கலில் குறைப்பினையும், இது “பதட்டங்களுடன் பொருட்களை வாங்க நிர்ப்பந்தித்து உணவு விநியோகத்தை சீர்குலைக்கும் அபாயத்தையும் உண்டாக்கும்” என்று Yellowhammer எச்சரித்தது.
"குறைந்த வருமானக் குழுக்கள்" மற்றும் "பாதிக்கப்படக்கூடிய குழுக்கள்" இவர்கள் “உணவு மற்றும் எரிபொருளின் எந்தவொரு விலை உயர்வாலும் அளவுக்கு அதிகமாக பாதிப்படைவார்கள்”. இந்த நிலைமைகளின் கீழ், உணவை பங்கிட்டு கொடுப்பதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன.
"பரந்த பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளுடன், மின்சார வாடிக்கையாளர்களுக்கு கணிசமான விலை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது" என்று Yellowhammer குறிப்பிடுகின்றது.
இங்கிலாந்தின் முக்கால்வாசி மருந்துகள் பிரதான ஆங்கில கால்வாய் வழியாக நாட்டிற்குள் வருவதால் மருத்துவ பொருட்கள் விநியோகங்கள் “கடுமையான நீடிக்கப்பட்ட தாமதங்களுக்கு” உட்பட்டு பாதிப்படையக்கூடும் என்று முன் கணிக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கும் இரசாயன விநியோகச் சங்கலியில் முறிவு ஏற்படும் பட்சத்தில், மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது கூட அச்சுறுத்தப்படுகிறது. இது “100,000 க்கும் மேலான மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்”.
எதிர்பார்க்கப்படும் பரந்த சமுக கொந்தளிப்பைக் கையாளும் பிரிவுகள் Yellowhammer அறிக்கையில் மிகவும் விரிவாக உள்ளன. உணவு, மருந்து மற்றும் வாகன எரிபொருள் பற்றாக்குறையின் விளைவாக உருவாகும் “ஆர்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்” இல் பொலிஸ் வளங்களை பயன்படுத்துவதோடு மற்றும் இது “பொதுஜன அமைதியின்மை மற்றும் சமூகத்தில் பதட்டம் அதிகரிப்பதற்கு" வழிவகுக்கும் என்று அது கூறுகிறது.
வடக்கு அயர்லாந்தின் நெருக்கடியின் தாக்கம், தற்போதைய சுமூகமான எல்லை ஜோன்சனின் விருப்பத்திற்குரிய கடினமான பிரெக்ஸிட்டின் கீழ் நீடிக்க முடியாது என்று ஆவணம் அங்கீகரிப்பதுடன், இதன் விளைவாக, “முக்கிய துறைகளுள் பிளவுகள் மற்றும் வேலை இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதானது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நேரடி சாலைமறிப்பு முற்றுகைகளுக்கு வழிவகுக்கும்.”
தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கு அரசு எந்திரத்தைப் பயன்படுத்துவது டோரிக்களின் திட்டத்தின் மையமாக உள்ளது. பெட்ரோல் இறக்குமதி கட்டணங்களை பூஜ்ஜிய சதவீதமாக நிர்ணயிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவின் தாக்கங்களைக் கையாளும் பிரிவில் இது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்த “அசட்டைத்தனமானது” எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு “குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கு” வழிவகுக்குமென்றும், பிரிட்டனின் ஆறு முக்கிய பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களில் இரண்டு மூடப்படும் என்றும், இது 2,000 வேலை இழப்புக்களை ஏற்படுத்துவதோடு, “இதன் விளைவாக வேலைநிறுத்த தொடர் நடவடிக்கை” மற்றும் எரிபொருள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும் அது எச்சரித்தது.
இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கையில், “Civil contingencies Act” இன் கீழ் அரசாங்கத்தின் அதிகாரங்கள் சர்வாதிகாரமாக மற்றும் கிட்டத்தட்ட வரம்பற்றவையாக இருக்கிறது. எரிபொருள் அல்லது எரிசக்தி, நீர், உணவு, பணம் ஆகியவைக்கான வழங்கல்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் மற்றும் ஆரோக்கியமாகவும் பத்திரமாகவும் மனித வாழ்க்கையை பாதுகாப்பதற்கும் "விதிமுறைகளை உருவாக்கும் நபரால் பொருத்தமானதாகக் கருதப்படும் எந்தவொரு ஏற்பாட்டையும்" சட்டம் அனுமதிக்கிறது.
Yellowhammer இல் சமுக கொந்தளிப்பை எதிர்கொள்வதற்கான திட்டம் குறித்த அறிக்கை தொடர்பாக, “ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் சம்பவத்தில் நாட்டினுடைய எல்லைகள் மற்றும் துறைமுகங்களில் பாரிய உள்நாட்டு கலவரங்களை சமாளிக்க காவல்துறை தலைவர்கள் வரும் நிகழ்வுகளைக் தடுக்கும் திட்டங்களை வகுக்க பல மாதங்களை செலவழித்தனர்.” என்ற உண்மையில் சண்டே டைம்ஸ் கவனத்தை ஈர்த்தது. கடந்த ஆண்டு தேசிய காவல்துறை ஒருங்கிணைப்பு மையத்தால் (National Police Coordination Centre - NPCC) தயாரிக்கப்பட்ட ஆவணத்தையும் செய்தித்தாளுக்கு கசியவிடப்பட்டதாக Yellowhammer குறிப்பிட்டது. “காவல்துறைக்கு முதன்மையான அக்கறையாக இருப்பது, உணவு மற்றும் பொருட்களுக்கான பற்றாக்குறையாகும் மேலும் தேசிய சுகாதார சேவையும் (NHS) இதில் உள்ளடங்கும், “உள்நாட்டு அமைதியின்மை பாரிய சமுக கொந்தளிப்புகளுக்கு வழிவகுக்கும்" என்பதே பொலிஸின் "பிரதான" கவலை என்று NPCC கூறியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டனின் வெளியேறியதை ஒட்டிய வாரங்களில் “இராணுவ உதவியைக் கோருவது உண்மையான சாத்தியம்” என்று அது எச்சரித்தது.
கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் பிரிட்டனின் திட்டமிடல் கூட்டத்தில், மே இன் அரசாங்க அமைச்சர்களுக்கு, 30,000 நிரந்தரமான இராணுவ துருப்புகளும் 20,000 இருப்புநிலை துருப்புகளும் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தருணத்தில் இராணுவ விரிவாக்கத்திற்கு தயாராக நிறுத்தப்படும் என்று இளம் பாதுகாப்பு மந்திரி ரோபியஸ் எல்வூட் (Tobias Elwood) ஆல் கூறப்பட்டது. “உள்நாட்டின் சமுக கொந்தளிப்பான சமயங்களிலும், பிரிட்டனின் விமான நிலையங்களை ஈடுபாட்டில் வைக்கவும் மற்றும் எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்கும்" இராணுவம் அந்தந்த இடங்களில் நிறுத்தபடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
சித்திரை மாதத்தில், 10,000 க்கும் மேற்பட்ட கலகப் பிரிவு போலீசார் இராணுவத்தினருக்கு பக்க பலமாக ஆதரவு வழங்குவார்கள் என தெரியவந்துள்ளது. எந்த நிலைமையின் கீழும் 24 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை அதிகாரிகள் அணிதிரள்வுக்கு தயாராக இருப்பார்கள். 1000 கலவரப் பிரிவு போலீசாரின் முதல் அணி, ஒரு மணி நேரத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் அணிதிரட்டலுக்கு உபயோகப்படும் நிலைமையில் வைக்கப்படுவார்கள்.
இங்கிலாந்து ஏற்கனவே மந்தநிலையில் உள்ளது, மேலும் வர்த்தக மற்றும் இராணுவ மோதல்கள் அதிகரித்து வரும் பின்னணியில் சர்வதேச பொருளாதார, சமூகப் பதட்டங்கள் தீவிரமடைந்து வருகையில், எந்தவொரு சம்பவமும் ஒரு பெரிம் பேரழிவாக வெடிக்கக்கூடும்.
பிரிட்டன் வெளியேறும் அதே நாளில், “282 அதிகமான ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய பொருளாதார பகுதி நாடுகளின் மீன்பிடி இயந்திரங்கள் இங்கிலாந்து கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையலாம் அல்லது மீன்பிடித்துக் கொண்டிருப்பார்கள். இது பிரிட்டிஷ் மீன்பிடி பகுதிகளில் கோபத்தையும் விரக்தியையும் தூண்டக்கூடும், இது மீன்பிடி இயந்திர படகுகளுக்கும் மிக அதிகரித்த அளவில் இணங்க மறுக்கும் உள்நாட்டு கடற்படைக்கும் இடையில் பாரிய மோதல்களுக்கு வழிவகுக்கக்கூடும்” என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.