ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As Democrats give Trump billions more for border war
Image of drowned father and daughter sparks global outrage against US anti-immigrant rampage

எல்லைப் போருக்காக பில்லியன்களுக்கு அதிகமான நிதியை ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சியினர் வாரி வழங்கும் நிலையில்

நீரில் மூழ்கி இறந்து போன தந்தை மற்றும் மகளின் புகைப்படம் அமெரிக்க புலம்பெயர்வு எதிர்ப்பு வெறியாட்டத்திற்கு எதிரான உலகளாவிய சீற்றத்தைத் தூண்டுகிறது 

By Barry Grey 
27 June 2019

ரியோ கிராண்டே நதியில் கரைஒதுங்கிய ஒரு இளம் சால்வடோர் தொழிலாளி மற்றும் அவரது 23 மாத மகளின் சடலங்கள் அடங்கிய புகைப்படம் சமூக வலைத் தளங்களில் பரவியதுடன், ஜனநாயகக் கட்சியின் முழு ஆதரவுடன் புலம்பெயர்வோர் மீது ட்ரம்ப் நிகழ்த்திவரும் வக்கிரமான தாக்குதலுக்கு எதிராக உலகளவிலான சீற்றத்தைத் தூண்டிவிட்டுள்ளது.

திங்களன்று ஊடகவியலாளர் ஜூலியா லு டுக் மூலம் எடுக்கப்பட்டதான ஒஸ்கார் ஆல்பெர்ட்டோ மார்ட்டினெஸ் ரமிரேஸ் மற்றும் அவரது மகள் ஆன்ஜி வலேரியா ஆகியோரின் புகைப்படம், ட்ரம்ப் நிர்வாகத்தால் பின்பற்றப்படும் பாசிச மற்றும் சர்வாதிகாரக் கொள்கைகளினால் பலியாகும் மனித எண்ணிக்கையை மேலும் கூட்டுகிறது. டெக்சாஸ் மாகாண மத்தாமோரொஸ், மெக்சிக்கோ மற்றும் பிரவுண்வில் நகரங்களுக்கு இடையிலான சட்டபூர்வமான துறைமுக நுழைவு வழியாக, ஒஸ்கார் தனது மனைவி டனியா வனீசா அவலோஸூடன் சேர்ந்து தஞ்சம் கோருவதற்கு விண்ணப்பித்து ஒரு நாளுக்குப் பின்னர், இந்த இரண்டு பாதிக்கப்பட்டவர்களும் நிரம்பியோடிய நதியின் சக்திவாய்ந்த நீர்சுழற்சிகளில் சிக்கி பலியாகியுள்ளனர்.


ரியோ கிராண்டே நதியில் கரைஒதுங்கி கிடக்கும் ஒஸ்கார் ஆல்பெர்ட்டோ மார்ட்டினெஸ் ரமிரேஸ் மற்றும் வலேரியா (ஜூலியா லு டுக் இற்கு நன்றி)

ஒரு நூற்றாண்டு காலம் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்திய நாசவேலை மற்றும் சுரண்டல் மரபினால், தங்களது தாய் நாடுகளில் நிலவும் வன்முறை மற்றும் வறுமையில் இருந்து தப்பியோடும் பல்லாயிரக்கணக்கான மத்திய அமெரிக்க தொழிலாளர்களுக்குள் இந்த தந்தையும் மகளும் அடங்குவர். புலம்பெயர்வோரை, பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் வரையிலும் கூட மெக்சிக்கோவில் உள்ள கேவலமான, சிறையையொத்த தடுப்பு முகாம்களில் காத்திருக்கும்படி நிர்ப்பந்திப்பதன் மூலம் சர்வதேச அளவில் உத்தரவாதமளிக்கப்பட்ட அவர்களது தஞ்சம் கோரும் உரிமைகளை அவர்களிடமிருந்து பறிப்பதான ட்ரம்பின் “அளவீட்டு” கொள்கையின் விளைவாக இந்த இளம் குடும்பம் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியாமல் தடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த குடும்பம் ஆபத்தான ஆற்றைக் கடக்கும் அபாயத்தை கையிலெடுக்க முடிவு செய்தது. இந்நிலையில், தனது கணவரும் மகளும் ஆற்றில் மூழ்கி இறந்து போன நிலையில், மெக்சிக்கன் தரப்பில் இருந்து உதவியற்ற திகிலுடன் வனீசா அவலோஸால் அதை பார்க்க மட்டுமே முடிந்தது.

இந்தப் படம் உலகம் முழுவதிலுமான செய்தியிதழ்களில் வெளிவந்த நிலையில், அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட, ட்ரம்ப் அரசாங்கம் மீதான பரந்த வெறுப்பை அது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் (United Nations High Commissioner for Refugees - UNHCR) ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டித்ததுடன், அந்த புகைப்படத்தை 2015 இல் மத்திய தரைக்கடலில் மூழ்கி துருக்கி கடற்கரையில் கரையொதுங்கிக் கிடந்த ஐலான் குர்தி என்ற மூன்று வயது அகதி குழந்தையின் படத்துடன் ஒப்பீடு செய்தார். இந்த ஒப்பீடு, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகள் எங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் புலம்பெயர்வோர் மீது தொடுக்கும் தாக்குதலின் சர்வதேச தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது. இது, மெக்சிக்கன் எல்லைப்புறப் பகுதியில் புலம்பெயர்வு எதிர்ப்பு செயற்பாட்டாளர்களாக பணியாற்ற மெக்சிக்கன் ஜனாதிபதி லோப்பேஸ் ஒபரடோர் 20,000 தேசிய காவல் படையை அணிதிரட்டிய மெக்சிக்கோவையும் உள்ளடக்கியது.

ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி, “ஒஸ்கார் மற்றும் வலேரியாவின் மரணம், வன்முறை மற்றும் விரக்தியை நிவர்த்தி செய்யத் தவறிய நிலையில், பாதுகாப்பான மற்றும் கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பைத் தேடி ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதற்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதையே ஒஸ்கார் மற்றும் வலேரியாவின் மரணம் பரிந்துரைக்கிறது” என்று கூறினார்.

மேலும் சென்ற வார இறுதியில் கூட, பிரவுண்வில்லுக்கு மேற்கே அண்மித்து 55 மைல்கள் தொலைவில், ரியோ கிராண்டே நதியுடன் சேர்த்து டெக்சாஸின் ரியோ கிராண்டே பள்ளத்தாக்கு பகுதிகளில் அமெரிக்க எல்லைப்புற ரோந்து படையினர் நான்கு சடலங்களை கண்டெடுத்தனர், இதில் ஒரு குறுநடை போடும் குழந்தையும், இரண்டு கைக்குழந்தைகளும் மற்றும் ஒரு 20 வயது பெண்மணியும் அடங்குவர்.

மிக சமீபத்திய நிதியாண்டில், அமெரிக்க தெற்கு எல்லைப் பகுதி எங்கிலுமாக 283 இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு இதுவரை தெற்கு எல்லையில் 664,000 பேரை அமெரிக்க எல்லைப்புற ரோந்து படையினர் கைது செய்துள்ளனர், அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் 144 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், சுமார் 14,000 ஆதரவற்ற புலம்பெயர்ந்த குழந்தைகள் அமெரிக்க சித்திரவதை முகாம்களில் இன்னமும் விடப்பட்டுள்ளார்கள்.

மேலதிக தடுப்புக் காவல் மையங்களை கட்டமைக்கவும், எல்லையில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்கவும், இல்லையெனில் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (Customs and Border Protection-CBP) மற்றும் புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கம் (Immigration and Customs Enforcement-ICE) போன்ற கெஸ்டாபோ பாணியிலான புலம்பெயர்வு எதிர்ப்பு முகாம்களை வலுப்படுத்தவும் என மற்றுமொரு 4.5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டிற்கு ட்ரம்ப் அனுமதி வழங்கும் வகையில் பெருமளவில் வாக்களித்து புலம்பெயர்ந்தோர் மீதான போரை அதிகரிப்பதற்கு ஜனநாயகக் கட்சி பதிலளித்துள்ளது.

ஒஸ்கார் ஆல்பேர்ட்டோ மார்ட்டினேஸ் ரமிரேஸ் மற்றும் அவரது மகளின் புகைப்படம் வெளியான அதே நாளில், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை, புகலிடம் கோரும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை தடுத்து வைப்பதற்கு புதிய CBP க்கு இடங்களை கட்டமைக்க 788 மில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்யும் வகையிலான 4.5 பில்லியன் டாலர் நிதி மசோதாவை நிறைவேற்றியது. இது, சுகாதார மற்றும் மனித சேவைகள் (Health and Human Services-HHS) திணைக்களம் நடத்தி வரும் வசதிகளுக்காக 866 மில்லியன் டாலர்களை வழங்குகிறது, CBP சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஆதரவற்ற குழந்தைகள் இங்குதான் அனுப்பி வைக்கப்படுவர். மேலும் இது, ICE க்கான 128 மில்லியன் டாலரையும் உள்ளடக்கியது.

சபை மசோதா மீதான வாக்கெடுப்பில், நான்கு ஜனநாயகக் கட்சியினர் தவிர அனைவரும் “ஆம்” என்று வாக்களித்தனர். அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ கோர்டெஸ், இல்ஹான் ஒமர், அயன்னா பிரஸ்லீ மற்றும் ரஷிதா த்லாய்ப் போன்ற “இல்லை” என்று வாக்களித்த நால்வரும் “முற்போக்குவாதிகள்” என்று கூறப்படுகிறார்கள். வாக்களிப்பதன் மூலம் சபை வாக்கெடுப்பிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைக்கான வழியை உறுதி செய்த பின்னரே அவ்வாறு செய்தனர். மேலும் வாக்களிக்காத நான்கு சபை உறுப்பினர்களில் மூன்று பேர் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாவர் – துல்சி கப்பார்ட் (ஹவாய்), எரிக் ஸ்வால்வெல் (கலிபோர்னியா) மற்றும் டிம் ரியான் (ஒஹியோ) – இவர்கள் தேவையற்ற தேர்தல் காரணங்களுக்காக வாக்களிக்காமல் இருந்தனர்.

இதேபோல் செனட்டிலும், புதன்கிழமை அன்று எட்டு செனட்டர்கள் வாக்களிக்காத நிலையில், 8 க்கு 84 என்ற இரு கட்சி வாக்களிப்பின் மூலம் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிகரித்தளவிலான ஆதரவை ஜனநாயகக் கட்சியினர் வழங்கி அதன் 4.59 பில்லியன் டாலர் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. வெறும் ஆறு ஜனநாயகக் கட்சியினர் மட்டுமே மசோதாவிற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

வாக்களிக்காத எட்டு பேரில், பேர்ணி சாண்டர்ஸ், எலிசபெத் வாரன், கமலா ஹாரிஸ், கோரி புக்கர், மிக்கேல் பான்னெட், அமி க்ளோபச்சர் மற்றும் கிறிஸ்டின் ஜில்லிபிராண்ட் ஆகிய ஏழு பேர் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாவர். நாஜிகளினது போன்ற வழிமுறைகளை அமெரிக்காவில் ஒருபோதும் காணமுடியாது என்று கருதிய மற்றும் இரு கட்சிகளின் பெருவணிக அரசியல்வாதிகள் போலல்லாமல் ஜனநாயக உரிமைகள் குறித்த ஆழமான அர்ப்பணிப்பை கொண்ட மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களையும் தவிர, இந்த நடைமுறைகளுக்கு எதிராக தமது எதிர்ப்பை காட்ட ஒருவரும் தயாராக இல்லை.

புலம்பெயர்ந்தோர் மீதான மிருகத்தனத்தின் மீதான வெறும் போலி கட்டுப்பாடுகளையும் மற்றும் அமெரிக்க எல்லைகளுக்குள் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ட்ரம்பின் சட்டவிரோத மற்றும் காலவரையற்ற செயலூக்கமிக்க கடமைப் படையினரை நிலைநிறுத்துவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் வகையில், எல்லையில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்காக 145 மில்லியன் டாலர்கள் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டது உள்ளிட்டதான சபையின் சட்டத்தை காட்டிலும் இந்த செனட் மசோதா மிக வெளிப்படையான அடக்குமுறையாக  உள்ளது.

ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை தவிர்ப்பதற்காக சபையில் உள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் செனட் மசோதா ஒதுக்கீடுகள் அனைத்தையும் இல்லையென்றாலும், பெரும்பாலானவற்றை ஏற்க தயாராகவுள்ளனர் என்பதை அவருக்கு உறுதி செய்வதற்கு சபாநாயகர் நான்சி பெலோசி புதனன்று ட்ரம்புடன் தொலைபேசியில் பேசினார். வியாழக்கிழமை தொடங்கி ஜூலை நான்காம் தேதிக்கு முன்னர் ஒரு ஒப்பந்தத்தை பெறுவதற்கான ஆர்வத்துடன் ஜனநாயகக் கட்சியினர் உள்ளனர்.

செனட் அதன் இரு கட்சி கருத்தாக்கத்தை நிறைவேற்றிய நிலையில், “சமரசம் செய்ய முடியும் என்று நாங்கள் கருதும் சில மேம்பாடுகள் உள்ளன” என்று செய்தியாளர்களுக்கு பெலோசி தெரிவித்தார். ஜனநாயகக் கட்சி செனட் சிறுபான்மைத் தலைவர் சார்லஸ் ஷூமர், “அந்த நான்கு மாற்றங்களைப் பற்றி பேசுவதற்கும், மசோதாக்களில் அவற்றை கொண்டு வந்து இதை விரைவாக முடிப்பதற்கும் என நாங்கள் விரைவில் ஒரு மாநாட்டை நடத்த முடியும், மேலும் அதுதான் நடக்கும் என்றும் நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

அவரது புலம்பெயர்வு எதிர்ப்பு பிரச்சாரத்தில் சிக்கியுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவும் ஒரு “மனிதாபிமான” முயற்சி தான் இந்த நடவடிக்கை என்ற அபத்தமான சாக்குப்போக்கின் கீழ் ஜனநாயகக் கட்சியினர் இரத்தம் சிந்துவதற்காக நிதியை அவருக்கு கொடுப்பதற்கு விரைந்து கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் 2,000 புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அவர்களை நாடுகடத்தும் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவரது திட்டத்தை தாமதப்படுத்துமாறு அவரிடம் மன்றாடுவதற்காக, பெலோசி ஞாயிறன்று ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சபையில் எல்லை நிதி மசோதா நிறைவேற்றப்படுவதற்கு அவர் அழுத்தம் கொடுப்பார் என உறுதியளித்தார்.

நியூயோர்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிற நகரங்களில் நடத்தப்படும் இத்தகைய இராணுவ பாணியிலான திடீர் சோதனை நடவடிக்கைகள், கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடிய பாரிய ஆர்ப்பட்டங்களையும் எதிர்ப்பையும் தூண்டும் வாய்ப்பு உள்ளது குறித்து அவரும் மீதமுள்ள ஜனநாயகக் கட்சியினரும் அச்சத்தில் உள்ளனர்.

பெலோசியும் ஷூமரும் காங்கிரஸில் அவரது பேரத்தை நிறைவேற்றும்வரை இரண்டு வாரங்களுக்கு காத்திருக்க ட்ரம்ப் ஒத்துக்கொண்டார். ஞாயிறு தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, “காங்கிரஸின் உறுப்பினர்களாகவும் மற்றும் அமெரிக்கர்களாகவும், நலிவுற்ற குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் மனித உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாப்பதற்கு நமக்கென்று ஒரு புனிதமான தார்மீக பொறுப்பு உள்ளது” என்று பெலோசி கூறினார். மேலும், அவரது மசோதா “வலுவான எல்லை பாதுகாப்பை” வழங்கியது என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

பாதுகாப்பற்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் மீதான கெஸ்டாபோ தாக்குதல்களை நியாயப்படுத்தும் “மனித உரிமைகள்” எனும் இந்த வஞ்சகத்தனம், மத்திய கிழக்கிலும் மற்றும் ஆபிரிக்காவிலும் ஒன்றையடுத்து மற்றொன்று என நடத்தப்பட்ட நவ-காலனித்துவ போர்களை ஆதரிக்கப் பயன்படுத்தப்பட்ட நியாயங்களை பிரதிபலிக்கிறது, இப் போர்கள் ஒட்டுமொத்த நாடுகளையும் அழித்துவிட்டன, மில்லியன் கணக்கானோரை கொன்றுவிட்டது, மேலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு மாபெரும் அகதிகள் பெருக்க நிலைமைகளையும் உருவாக்கியுள்ளன.

இது, மனித உரிமைகளை பாதுகாப்பது பற்றிய பொய்யான சாக்குப்போக்குகளை சிதைப்பதில் ட்ரம்ப் நேரத்தை வீண்டிக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு  ஏற்கனவே அவர்: புலம்பெயர்ந்தோரை மிருகத்தனமாக நடத்துவதை குறைத்துக்கொள்ள காங்கிரஸ் ஒதுக்கீடு செய்த பணத்தில் இருந்து ஒரு சதத்தையும் பயன்படுத்துவதற்குக் கூட அவருக்கு எந்தவித எண்ணமும் கிடையாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். மாறாக, தனது மறுதேர்தல் பிரச்சாரத்தின் மையக் கூறாகவும், தனது பாசிச தளத்தை அணிதிரட்டுவதற்கான முயற்சிகளாகவும் இந்த தாக்குதலை தீவிரப்படுத்த அவர் விரும்புகிறார்.

வியாழனன்று, CBP, டெக்சாஸில் கிளின்ட் நகரில் உள்ள மையத்திற்கு 100 குழந்தைகளை அது திருப்பியனுப்பியுள்ளதாக அறிவித்தது, மோசமான நிலைமைகள் மற்றும் பரவலான நோய்கள் பற்றிய அறிக்கைகள் பரந்த கோபத்தைத் தூண்டிய பின்னர் முந்தைய நாளில் அது அவர்களை வெளியேற்றியது.

அதே நாளில், நிர்வாகத்தின் எல்லை போர் நிதிக்காக வாக்களிப்பதற்கு சபையில் இருந்த ஜனநாயகக் கட்சியினர் தயாராகிக் கொண்டிருந்த அதே வேளையில், தற்காலிக CBP ஆணையர் ஜோன் சாண்டர்ஸ் அவரது பதவியை இராஜினாமா செய்தார் என்ற நிலையில், அவருக்கு பதிலாக ICE இயக்குநர் மார்க் மோர்கனை வெள்ளை மாளிகை தேர்வு செய்துவிட்டதை ட்ரம்ப் அதிகாரிகள் தெரிந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஒபாமாவின் கீழ் CBP இன் துணை ஆணையராக இருந்த மோர்கன், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மீதான தனது வெறுப்பையும் அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான விருப்பத்தையும் மறைக்கவில்லை. ICE இன் தற்போதைய தலைவராக, மோர்கன் அமெரிக்க நகரங்களில் வெகுஜனங்கள் மீதான திடீர் சோதனைகளுக்கான திட்டத்தின் ஆசிரியராக இருந்தார் என்று ட்ரம்ப் தெரிவித்தார். ட்ரம்பை சோதனைகளை தாமதப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டபோது, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயல் தலைவரான கெவின் மெக்லீனன் உடன் அவர் மோதியதாகக் கூறப்படுகிறது.

மோர்கன், கடற்படை பிரிவில் 11 ஆண்டுகளும் மேலும் FBI இல் 20 ஆண்டுகளும் பணியாற்றியவர். ட்ரம்ப் சார்பு Washington Examiner வார இதழுக்கு ஒரு அரசாங்க வட்டாரம் இவ்வாறு தெரிவித்தது: “இறுதியில், அது ட்ரம்பின் முடிவாக இருந்தது. கடைசி போராட்டத்தில் மெக்லீனன் வென்றார், மேலும் இப்போது அதுபோல் [ஸ்டீபன்] மில்லர் இந்த போராட்டத்தை வெல்லப் போகிறார் எனத் தெரிகிறது.” புலம்பெயர்வு எதிர்ப்பு வெறியரும் மற்றும் பாசிசவாதியுமான மில்லர் வெள்ளை மாளிகையில் புலம்பெயர்வு கொள்கையை இயக்குகிறார்.

அரசாங்கத்திற்கு வெளியே இருந்தாலும், ஃபாக்ஸ் செய்திகளில் மோர்கன் தவறாமல் தோன்றி வந்தார். ஒருமுறை தோன்றியபோது, குழந்தை சிறைவாசம் பற்றி அவர் கூறினார், “அவை கூண்டுகள் அல்ல. அவை உண்மையில் நல்ல வசதியான மையங்களாக உள்ளன.”

மேலும், எல்லையில் உள்ள விழிப்புணர்வு போராளி குழுக்கள் குறித்து அவர் இவ்வாறு கூறினார்: “ஏன் அவர்கள் அதை செய்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்பதுடன், எங்களில் எஞ்சியவர்கள் தென்மேற்கு எல்லை மீறப்பட்டு வருவதை கண்காணித்துக் கொண்டிருப்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள். எல்லை ரோந்துப் படையினர் மற்றும் பிற சட்ட அமலாக்க அமைப்புக்களும் அங்கு மிகஅதிகமாக உள்ளனர், என்றாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் உணர்கிறார்கள்.”

தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் கண்களைப் பார்ப்பதாக பெருமையடித்துக் கொண்டதுடன், அவர்கள் “விரைவில் MS-13 கும்பலின் உறுப்பினர்களாக இருக்கப்போவதைக்” காண்பீர்கள் என்றும் கூறினார்.

நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ள தீவிர வலது எல்லை கண்காணிப்பாளர்களை மோர்கன் பாதுகாப்பது என்பது ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அரசு பிரிவுகளின் ஆதரவுடனான ஒரு நிழல் புலம்பெயர்ந்த பொலிஸ் எந்திரத்தின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறது.

ICE இன் முன்னாள் அமலாக்க இயக்குநர் தோமஸ் ஹோமன், இவர் ட்ரம்பின் “புலம்பெயர்தல் சக்கரவர்த்தி” என பரவலாக கூறப்பட்டு வந்தார், ஆனால் 2018 ஜூன் முதல் அரசாங்கத்திற்கு வெளியே இருந்து வருகிறார், சமீபத்தில் தனது வீட்டின் அடித்தளத்தில் இருந்து “Fox & Friends” க்கு ஒரு பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது உள்நாட்டு பாதுகாப்பு செயலர் மெக்லீனன் ட்ரம்பிற்கு விசுவாசமானவராக இல்லை என்று கண்டித்தார். ஒரு அரசாங்க அதிகாரி போன்ற தோற்றத்தை வழங்குவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் முத்திரையின் முன் அமர்ந்தபடி பேசினார்.