ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump escalates his pro-Brexit agenda during UK state visit

இங்கிலாந்து விஜயத்தின்போது ட்ரம்ப் அவரது பிரெக்ஸிட் சார்பு திட்டநிரலை தீவிரப்படுத்தினார்

By Robert Stevens 
5 June 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இங்கிலாந்திற்கு மேற்கொண்ட அரசு பயணத்தின் இரண்டாம் நாளன்று ஐரோப்பிய ஒன்றியத்துடனும் (EU) மற்றும் பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கினர் மத்தியிலும் பதட்டங்களை அதிகரிக்கச் செய்தார்.

திங்களன்று இராணியுடன் ட்ரம்ப் அவரது பார்வையாளர்களைச் சந்தித்து பின்னர், செவ்வாயன்று பிரதமர் தெரசா மே மற்றும் ஏனைய மூத்த அரசியல் பிரமுகர்களையும் அவர் சந்தித்தது குறித்து அந்நாட்டின் தலைநகரிலும் மற்றும் பிற நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


ஜூன் 4, 2019, செவ்வாயன்று, லண்டனில் எண். 10, டவுனிங் தெருவில் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே உடன் ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் பங்கேற்கிறார் (ஷீலா கிரெய்க்ஹெட் ஆல் எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வெள்ளை மாளிகை புகைப்படம்)

மதிப்பீட்டின் படி, ட்ரம்பின் இங்கிலாந்து விஜயத்தின்போது செவ்வாயன்று மட்டும் இலண்டனின் தெருக்களில் 3,200 பொலிசார்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன் சேர்த்து, ஒட்டுமொத்த மூன்று நாட்களுக்கான பாதுகாப்பிற்கு 6,000 க்கு அதிகமான பொலிஸ் அதிகாரிகள் அங்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த அரசுமுறை பயணத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பொது நிதியிலிருந்து 40 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது என்ற நிலையில், இது பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகஅதிக செலவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகிறது.

Trafalgar  சதுக்கத்தில் இருந்து Whitehal இற்கான பாதையில் அரைவாசி தொலைவிற்கு மட்டுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்ற நிலையில், டவுனிங் தெருவிலுள்ள பிரதமர் இல்லத்திற்கு –அங்கு தான் தெரசா மே மற்றும் மூத்த அமைச்சரவை உறுப்பினர்களை ட்ரம்ப் சந்தித்தார்– அருகே சென்றுவிடாமல் அவர்கள் தடுக்கப்பட்டனர். Whitehall இன் கீழ் தளத்தின் பாதிப் பகுதியை பொலிசார் தடுத்து வைத்திருந்ததுடன், பாராளுமன்ற சதுக்கத்தில் ஒரு பேரணியை நடத்துவதற்கு சுற்றுவழியில் செல்லும் படி ஆர்ப்பாட்டக்காரர்களை நிர்ப்பந்தித்தனர்.

திங்கட்கிழமை மாலை, இராணி அளித்த அரசு விருந்தில் ட்ரம்ப் தனது நன்னடத்தையை காண்பிக்கும் விதமாகத் தோன்றினார். ஆனால் விழாக் கொண்டாட்டங்கள் நிறைபெற்றவுடனேயே, அவரது பயணத்தின் முக்கிய நோக்கம் என்னவாக இருந்ததோ அது பற்றி பேசலானார். அது, பிரெக்ஸிட் இற்கு உதவுவதன் அடிப்படையிலான ஒரு ஐரோப்பிய ஒன்றிய (EU) எதிர்ப்பு தாக்குதலைத் தொடுப்பது மற்றும் பிரிட்டனுக்கும் ஐரோப்பியாவிற்கும் இடையே, மற்றும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு ஆழ்ந்த பிளவை முடுக்கிவிடுவது போன்றவையாகும்.

முறையான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் எதுவுமின்றி, டவுனிங் தெருவில் ஒரு குறுகிய கால அளவிற்கே பிரதமர் தெரசா மே ஐ ட்ரம்ப் சந்தித்தார். மே, அவரது கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற உந்துதலளித்து வந்ததன் பின்னர் டோரி தலைவராக தனது பதவியை இராஜிநாமா செய்யவிருக்கும் அவர் ஒரு இறந்துபோன வாத்து போல இருக்கிறார் என்ற நிலையில், பெரும்பாலும் ஒரு சர்ச்சைக்குரிய பிரமுகராக இருக்கும் ட்ரம்பை சந்திக்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டார்.

பல மாதங்களுக்கு முன்பாகவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் அவர் ஒப்புக்கொண்டுள்ள விலகுதல் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அவர் தவறியதால் அவரது விதி மாறிப்போனது. டோரி தலைமைக்கான போட்டி ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஜூலை இறுதிக்குள் பிரதமர் பதவியிலிருந்து மே பிரதியீடு செய்யப்படுவார்.

டவுனிங் தெருவில் மே உடன் முறைப்படியான பத்திரிகையாளர் மாநாட்டை ட்ரம்ப் நடத்தியிருந்தாலும் கூட, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இடையே, அதாவது “தற்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதைப்போல இரண்டு ஏன் மூன்று முறை கூட” மேற்கொள்ளும் வகையிலான ஒரு “தனித்துவமான” சுதந்திர வர்த்தக உடன்படிக்கையைப் பற்றி பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்க, பிரெக்ஸிட் விரைவில் தீர்த்துக்கட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தை கண்டனம் செய்வதை அவர் தொடர்ந்ததுடன், “[ஐரோப்பிய ஒன்றியம் உடனான] தளைகளை இங்கிலாந்து ஒழித்துக்கட்டினால் தான் அதனுடனான ஒரு பெரும் வர்த்தக உடன்படிக்கைக்கு சாத்தியம் உள்ளது. ஏற்கனவே அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுவிட்டது” என்று டவீட் செய்தார். செயிண்ட் ஜேம்ஸ் மாளிகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் வணிக நிர்வாகிகளை அவரும் மே உம் சந்தித்ததை ட்ரம்ப் உறுதி செய்தார்.

அக்டோபர் 31 அன்று பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு EU ஒரு காலக்கெடுவை நிர்ணயித்த நிலையில், ட்ரம்ப், “அது நடக்கும், அது அநேகமாக நடக்க வேண்டும், மேலும் [பிரிட்டன்] அதன் சொந்த அடையாளத்தை விரும்புகிறது, அதற்கான சொந்த எல்லைகளை அது விரும்புகிறது, அதன் சொந்த விவகாரங்களை அதுவே கையாளுவதற்கு விரும்புகிறது…” என்று ஊடகத்திற்கு தெரிவித்தார். மேலும் பதட்டங்களை அதிகரிக்கும் விதத்தில், ட்ரம்ப், “[EU] மீது நான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும், என்றாலும் அதுவும் சரி தான்” என்று கூறினார்.

அமெரிக்காவின் போட்டியாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக வர்த்தகப் போர் நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகின்ற நிலையில், இங்கிலாந்து உடனான எந்தவொரு வர்த்தக உடன்படிக்கையும் அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு முற்றிலும் சாதகமானதாக இருக்கும் என்று ட்ரம்ப் ஊகிக்கிறார். மேலும், பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் “முழு [பிரிட்டிஷ்] பொருளாதாரம்” என்பது விவாதத்திற்குரிய முதன்மை திட்டநிரலாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார். மேலும், “NHS (அரசு நிதியுதவி பெற்ற தேசிய சுகாதார சேவை) அல்லது ஏதோவொன்று, அல்லது அதைவிட பெரியளவிலானது என மேஜையில் இருக்கும் அனைத்தையும் நீங்கள் வர்த்தகமாக கையாளுகிறீர்கள் என்பதால், அனைத்தும் முழுமையாக மேஜையில்  இருக்கும்” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

Sky செய்திகள், “ஒவ்வொரு முறையும் அமெரிக்கா ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது, அது அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு முடிந்தவரை சாதகமானதாக இருக்கின்றது என்பதை வலியுறுத்துவதற்கு முனைந்துள்ளது. அதாவது விவசாயமும் அதில் அடங்கும் என்பது அதன் அர்த்தம்; அதாவது, அமெரிக்காவின் பங்கேற்புக்கு இலாபகர சந்தைகள் திறந்தே இருக்கின்றன என்பதாகும். மேலும், ஒருசில இங்கிலாந்து சந்தைகள் NHS [120 பில்லியன் பவுண்ட்களுக்கு அதிகமான ஒரு வருடாந்திர வரவு-செலவு திட்டத்தைக் கொண்டதான] ஐ காட்டிலும் பெரியளவிலான அல்லது அதிக நிர்ப்பந்தத்திற்கு உள்ளானவையாக அவை இருக்கின்றன. மேலும், அத்தகைய வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய அடிப்படை உண்மை இது தான்” என்று குறிப்பிட்டது.

ஆயினும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ள பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் ஐரோப்பிய சார்பு பிரிவுகளை மேலாதிக்கம் செய்வதற்கு எதிரான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ட்ரம்ப் கோருகிறார், இது இங்கிலாந்து வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை உள்ளடக்கியது என்பதுடன், அமெரிக்கா உடனான வர்த்தகத்தைக் காட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் இங்கிலாந்தின் மொத்த வர்த்தகத்தில் 15 சதவிகிதத்திற்கும் குறைவாகவே அமெரிக்கா உடனானதாக உள்ளது.

மே உடன் கலந்துகொண்ட கூட்டு பத்திரிகையாளர்கள் மாநாட்டில், EU விரோத பானையை மேலும் ட்ரம்ப் கலக்கினார். ஒப்பந்தம் எதுவுமின்றி EU ஐ விட்டுவெளியேறுவதற்கு சாதகமானவரான போரிஸ் ஜோன்சனை அவர் சந்திப்பாரா என்று கேட்கப்பட்டதற்கு, “எனக்கு போரிஸை தெரியும், நான் அவரை நேசிக்கிறேன், அவரை வெகு காலமாக எனக்கு பிடிக்கும்… அவர் ஒரு மிகச்சிறந்த பணியை செய்வார் என்று நான் கருதுகிறேன் [பிரதமராக]” என்று கூறினார்.

மே உடனான ட்ரம்பின் சம்பிரதாயமான சந்திப்புக்கள் நடைமுறைக்கு புறம்பாக இருந்தன, அதனைத் தொடர்ந்து பல முன்னணி பிரெக்ஸிட் சார்பு பிரமுகர்களுடன் அவர் பேசினார். ஜோன்சன் உடன் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார், இது “நட்புரீதியான மற்றும் செயலாக்கம்” தொடர்பான உரையாடல் என விவரிக்கப்பட்டது. தற்போதைய வெளியுறவு செயலர் ஜேர்மி ஹண்ட் ஐ அமெரிக்க ஜனாதிபதி சந்தித்ததுடன், பிரெக்ஸிட் சார்பு மிக்கேல் கோவ் ஐயும் சந்திக்கவிருந்தார், இவர்கள் இருவரும் டோரியின் தலைமைக்கு போட்டியிடுபவர்களாவர்.

ட்ரம்ப் தொடர்ந்து சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அதிவலது பிரெக்ஸிட் கட்சியின் தலைவர் நைஜெல் ஃபெராஜை அமெரிக்க தூதரின் இல்லத்தில் சந்தித்தார், இவர் கடந்த மாதம் பிரிட்டனில் ஐரோப்பியத் தேர்தல்களில் ஜெயித்து கன்சர்வேட்டிவ் கட்சியை ஐந்தாவது இடத்திற்கு தள்ளியவர். சந்திப்புக்குப் பின்னர், ஃபெராஜ், ட்ரம்புக்கு “பிரெக்ஸிட் மீது முழுமையான நம்பிக்கையுள்ளது, நாட்டிற்காக இதைச் செய்வது சரியென அவர் கருதுகிறார்… மேலும், இதற்கு நீண்ட காலம் எடுப்பது பற்றி அவர் வெளிப்படையாக கவலை கொண்டார்” என்று தெரிவித்தார்.

EU அங்கத்துவம் குறித்த இரண்டாம் முறை வாக்கெடுப்பிற்கு ஆதரவளிக்கும்  தொழிற் கட்சி சார்ந்த நிழல் வெளியுறவு செயலர் எமிலி தோர்ன்பெர்ரி  ட்ரம்பை “ஒரு பாலியல் சூறையாடுபவர்” என்றும் “ஒரு இன வெறியாளர்” என்றும் விவரித்தார். மேலும், தொழிற் கட்சி சார்ந்த லண்டன் மேயர் சாதிக் கான், ட்ரம்பை ஒரு “20 ம் நூற்றாண்டு பாசிசவாதி” உடன் ஒப்பீடு செய்தார் என்பதுடன், அதிவலது சக்திகளிடமிருந்து “வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தலின் மிகுந்த அதிர்ச்சியூட்டும் உதாரணங்களில் ஒன்றாக” அரசாங்கம் அவருக்கு “சிவப்பு கம்பள வரவேற்பு” வழங்கக் கூடாது என்று கூறினார். பெரும் ஆதரவு கொண்ட EU சார்பு தொழிற் கட்சி அதிகாரத்துவம், ஐரோப்பியா உடனான உறவுகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் அமெரிக்கா உடனான கூட்டணியை நிராகரிப்பதில் இவ்வளவு வெளிப்படையாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதுடன், பிரெக்ஸிட்டை ஆவேசத்துடன் எதிர்க்கும் ஆளும் உயர்மட்ட கன்னை குறித்த பெரும் கவலைகளை உரக்க கூச்சலிட்டு காண்பித்தது, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு கூட்டணி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பூகோள மூலோபாய நோக்கங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அது கருதுகிறது.

ஒரு வர்க்க அடிப்படையிலான பேரணியில் கலந்து கொள்வதற்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்ட எந்தவித முயற்சியும் செய்யப்படவில்லை. மாறாக, தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரிவுகள், தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பசுமைக் கட்சியினர் ஆகியோர் பல்வேறு போலி இடது அமைப்புக்களின் ஆதரவுடன் “ட்ரம்ப் நிறுத்து” மற்றும் “இனவெறியை எதிர்ப்போம்” ஒழுங்கமைப்பாளர்கள், கருக்கலைப்பு உரிமைகள் மகளிர் முகாம், ட்ரம்புக்கு எதிரான பணிப்பெண்கள், ட்ரம்புக்கு எதிரான தொழிற்கட்சியினர், காலநிலை கூட்டு, ட்ரம்ப் மற்றும் அதிவலது குழுவிற்கு எதிரானது போன்ற எண்ணற்ற ட்ரம்ப் விரோத குழுக்களில் கலந்து கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்தினர்.

ஒழுங்கமைப்பாளர்களைப் பொறுத்த வரை, ஆளும் உயரடுக்கினால் உந்துதலளிக்கப்பட்ட கட்சிகளின் பின்னணியில் ட்ரம்பின் பாசிசவாத கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் சிதறடிப்பது தான் பேரணியின் நோக்கமாக இருந்தது. அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சியின் சாண்டர்ஸ்/ஒகாசியோ-கோர்டெஸ் பிரிவினை நம்பும்படி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில், ட்ரம்பை எதிர்ப்பவர்கள் தொழிற் கட்சியின் ஐரோப்பிய ஒன்றிய சார்பு கன்னைக்குப் பின்னால் அணிதிரளும் படியும், மேலும் தொடர்ந்து ஆதரவளிப்பவர்கள் தாராளவாத ஜனநாயகக் கட்சியினர், பசுமைக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்களின் பின்னால் அணிதிரளும் படியும் கூறப்பட்டது. தொழிற் கட்சித் தலைவர் ஜேர்மி கோர்பின் மற்றும் நிழல் உள்துறை செயலர் டயானே அபோட் உட்பட, “இன்று நிழல் அமைச்சரவையின் 80 சதவிகிதம் பேர் இங்கு கூடியிருக்கிறீர்கள்” என்று பேரணி ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரது அறிவிப்புடன், தொழிற் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதை மையப்படுத்துவதாக இது இருந்தது.

ட்ரம்ப் விஜயத்திற்கு முன்பு, செவ்வாயன்று மாலை இராணி ட்ரம்புக்கு வழங்கும் அரசு விருந்தில் கலந்துகொள்வதற்கு கோர்பின் மறுப்பதற்கு நிறைய முயற்சி செய்யப்பட்டிருந்தது. இதுவும், பேரணியில் உரையாற்றுவதற்கான கோர்பினின் கடைசி நிமிட முடிவும், ட்ரம்ப் மற்றும் அவரது முதலாளித்துவ சார்பு கொள்கைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்துபட்ட அடுக்குகளின் மத்தியிலான பரந்தளவிலான எதிர்ப்புக்கு - இதை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கும் உத்தியோகபூர்வ அரசியல் அமைப்பிற்கு உட்பட்டதாக வைத்திருப்பதற்கும் - முறையிட வேண்டிய அவசியத்தை அவர் அனுமதித்ததன் அடிப்படையாக இருந்தது.

என்றாலும், இதுவும் பொதுமக்களின் பார்வைக்கான நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்தது. செவ்வாயன்று அல்லது இன்று ட்ரம்பை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு “மூத்த அரசியல்வாதியான” கோர்பின் முயற்சித்தது வெளிப்பட்டது. மே உடனான பத்திரிகையாளர்கள் மாநாட்டின்போது, கோர்பின் உடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையை அவர் ஏற்படுத்திக் கொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, ட்ரம்ப், “ஜெர்மி கோர்பினை எனக்குத் தெரியாது. அவரை ஒருபோதும் நான் சந்தித்ததில்லை. அவருடன் பேசியதில்லை. இன்று அல்லது நாளை என்னை சந்திக்க அவர் விரும்பினார் என்றாலும் நான் அதை செய்யக் கூடாதென தீர்மானித்துள்ளேன். எங்கிருந்து நான் வந்திருக்கிறேன், ஏதோவொரு எதிர்மறை சக்தியில் இருந்து அவர் உருவெடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.”

தோர்ன்பெர்ரி, கான் மற்றும் பலரின் வாய்ச் சவடால் கருத்துக்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, ட்ரம்பை சந்திக்க கோர்பின் விரும்பியதை கோர்பின் அலுவலகம் பின்னர் ஏற்றுக் கொண்டதுடன், “காலநிலை அவசரம், சமாதானத்திற்கான அச்சுறுத்தல்கள் மற்றும் அகதிகள் நெருக்கடி உட்பட, பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஜெர்மி தயாராகவுள்ளார்,” என்று தெரிவித்தது.

இது ஒரு கிளர்ச்சியை அதன் முழங்கால் அளவிற்கு கூட எழுச்சியடைய விடாது. கோர்பினும் தொழிற் கட்சி தலைமையும் ட்ரம்பை அவரது வல்லமைக்கு ஏற்ப அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டபோதும், இராணியின் மதிப்பை பாதுகாக்க ஒரு அரசு முறை பயணத்தை பெரும் ஆரவாரத்துடன் அவர் மேற்கொண்டதை எதிர்த்தனர்.