ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

අගමැති වික්‍රමසිංහ රුදුරු ප්‍රති-ත්‍රස්තවාදී පනත වහාම සම්මත කරදෙන ලෙස ඉල්ලයි

இலங்கை பிரதமர் விக்கிரமசிங்க கொடூரமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்துகிறார்

By W.A. Sunil
4 May 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஞாயிறன்று விடுத்த விசேட அறிக்கையில், பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து “பயங்கரவாதத்தை” தோற்கடிக்க துரிதமாக செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். "பயங்கரவாதத்தை" ஒடுக்கும் போது நாட்டில் தற்போது இருக்கின்ற சட்டத்தில் உள்ள "இடைவெளிகளை" நிரப்புவதன் பேரில், பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

பயங்கரவாத-எதிர்ப்பு சட்டம் உருவாக்கப்பட்டது 2018 ஆம் ஆண்டில் என்றாலும், அதை நிறைவேற்றுவது தாமதமாகி வருவது பற்றி விக்கிரமசிங்க கவலை தெரிவித்தார். ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் ஏற்பட்ட துன்பம் மற்றும் அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த மசோதாவை நிறைவேற்றி அதன் ஒடுக்குமுறை சட்டங்களை செயல்படுத்துவதற்கே அவர் பதுங்கி இருந்து குறிவைக்கின்றார்.

இந்த மசோதா நிறைவேற்றப்படாதமையினால் இந்த நபர்களை சட்டத்தின் வழியில் பிடித்துக்கொள்ள முடியாமல் போனது என்று கூறிய அவர், "நாங்கள் இந்த வாய்ப்பை இழக்க முடியாது" என்றார். பரந்தளவில் மக்கள் எதிர்ப்பு நிலவியதாலேயே இந்த மசோதாவை நிறைவேற்றுவது தாமதமாகியது. பயங்கரவாத-எதிர்ப்பு மசோதாவானது, சர்வதேச அளவில் "பயங்கரவாதத்தை" அடக்குதல் என்ற பெயில், புதிய சட்டங்களை நிறைவேற்றுவதன் ஒரு பகுதியாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், பயங்கரவாத தாக்குதல் நடந்து மறுநாள், அவசரகால சட்டத்தை அறிவித்து, நச்சுத்தனமான அதிகாரங்களை போலீஸ் மற்றும் இராணுவத்திற்கு வழங்கி, அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதற்கு அப்பால் சென்று பொலிஸ் அரச நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவதற்கு சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் இலக்கு வைத்துள்ளனர்.

அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தாலும், அது போதாது என்று கூறிய பிரதமர், 1979 ஆம் ஆண்டு இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், பின்னர் இந்தியாவிற்கு தப்பி ஓடி முகாம்களில் அடைபட்டுள்ள மக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவாறு மாற்றப்பட்டிருந்தாலும், அது தற்போது போதுமானதல்ல, எனக் கூறினார். ஆனாலும் பயங்கரவாத-எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், இலங்கையின் அல்லது வெளிநாட்டு அரசின் நலன்களுக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

சட்டத்தின் 3 வது பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு சமூகத்தை அச்சுறுத்துவதை இலக்காக கொண்டு; ஒரு நடவடிக்கையை எடுக்குமாறு அல்லது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தை அல்லது வேறு எந்த அரசாங்கத்தையேனும் அல்லது ஒரு சர்வதேச அமைப்பை பொய்யாக அல்லது சட்டவிரோதமாக தூண்டிவிடுவதை இலக்காகக் கொண்ட; அத்தகை ஒரு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் நோக்குடனான ஒரு செயலைச் செய்பவர், பயங்கரவாத குற்றத்திற்கு குற்றவாளியாவார்.

இந்த வரைவிலக்கணப்படுத்தப்படாத பிரிவின் கீழ், இலங்கையின் இறைமைக்கு நாட்டின் பிளவுபடா தன்மைக்கு மற்றும் அதன் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதப்படும், இலங்கையில் அல்லது அதற்கு வெளியில் செயற்படும் [இலங்கையிலான] எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைத் தடை செய்ய முடியும். இது, விக்கிரமசிங்க நிறைவேற்றிக்கொள்ள முண்டியடிக்கும் அடிப்படையில் பிற்போக்கு சட்டமாகும்.

இரண்டு பக்கம் வெட்டுகின்ற இந்த சட்டம், சர்வதேச ரீதியில் செயற்படும் சோசலிச கட்சி ஒன்றிற்கோ, தொழிலாளர்கள் அல்லது இளைஞர்களின் அமைப்பிற்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்கும் எதிராகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த உப பிரிவின் கீழ் அர்த்தப்படுத்தப்படும் "பயங்கரவாத" செயலுக்கு குற்றவாளியாக்கப்படும் நபருக்கு 20 ஆண்டுகால சிறைத் தண்டனை அல்லது 20 மில்லியன் ரூபா தண்டப்பணமோ விதிக்கப்பட முடியும். கொலை குற்றத்திற்கு குற்றவாளியாக்கப்படும் ஒரு நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

86-பக்க மசோதாவில் உள்ள ஏனைய நச்சுத்தனமான சட்டங்களுக்கு இடையில், பின்வரும் உட்பிரிவுகளும் அடங்கும்:

* ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் அல்லது விநியோகங்களுக்கு தடை ஏற்படுத்துவது அல்லது சேதம் ஏற்படுத்துவது பயங்கரவாத செயலாக கருதப்படுகிறது. அதன்படி, வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது உட்பட்ட வர்க்க நடவடிக்கைகளை தடை செய்ய முடியும் மற்றும் பயங்கரவாத நடவடிக்கையாக கருதி தண்டனை விதிக்க முடியும்.

* இந்த சட்டத்தின் கீழ், பிழை செய்தவராக கருதப்படும் ஒரு நபருக்கு தகவல் வழங்கும் நோக்கில் "இரகசியமாக தகவல் சேகரித்தல்” பிரிவு 10 இன் கீழ் ஒரு பயங்கரவாத செயல் ஆகும்.

* மேலும், "பயங்கரவாத" குற்றம் அல்லது வேறு குற்றத்தை செய்ய முயற்சிக்கும் இலக்குடன், மற்றும் அந்த குற்றத்தை இழைக்கும் எண்ணத்துடன் பயமுறுத்தும் நோக்கத்துடன் சில தகவல்களை மக்கள் மத்தியில் "வேண்டுமென்றே மற்றும் சட்டபூர்வமற்ற முறையில்" விநியோகிப்பது அல்லது வேறு முறையில் கிடைக்கச் செய்வது, சட்டத்தின் பிரிவு 11 இன் அடிப்படையில், பயங்கரவாதத்திற்கு அனுமதியளிப்பதாகும். இங்கே குறிப்பிடப்படும் வரையறுப்பற்ற "வேறு குற்றங்களையும்" கூட அதிகாரிகளுக்கு வேண்டிய விதத்தில் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

இந்த சட்டங்கள் மூலம், பிரசுரித்தல் மற்றும் பேச்சு சுதந்திரம் உட்பட ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு அரசுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகின்றது.

பொலிஸ் மட்டுமன்றி, ஆயுதம் ஏந்திய இராணுவ அதிகாரிகளும் நபர்களை கைது செய்ய முடியும். அவசியம் என முடிவெடுக்கும்போது, பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு, சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது. வழக்கு தாக்கல் செய்யாமலேயே ஆறு மாத காலத்துக்கு மட்டுமே ஒரு சந்தேக நபரை தடுத்து வைத்திருக்க முடியும் என்பதோடு, அதை அடிக்கடி நீட்டிக்கொள்ளவும் முடியும். அத்துடன் இரண்டு வார விளக்கமறியல் உத்தரவையும் அடிக்கடி நீட்டிக்கொள்ள முடியும். தடுத்து வைத்திருக்கும் இடத்தை நீதி மற்றும் சமாதான அமைச்சரே தீர்மானிப்பார். ஒரு நிறுவனத்தை தடைசெய்வதற்கும் அமைப்புகள் அல்லது தனி நபர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் உண்டு.

ஒட்டுமொத்தமாக இந்த சட்டங்கள், ஒரு பொலிஸ் அரசின் கட்டமைப்பாகும். இலங்கையில் அரசியல் நெருக்கடியை உக்கிரமாக்கி, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள பொருளாதார சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களின் எதிர்ப்பு வளர்ந்து வரும் நிலைமையின் கீழ், அவற்றை நசுக்கி பொலிஸ் அரசை நோக்கி முன்நகர்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் என விக்கிரமசிங்க ஆளும் வர்க்கத்திற்கு சுட்டிக் காட்டியுள்ளார்.

சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தினால், "முழு நாடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்," என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த இராஜபக்ஷ, ஏப்பிரல் 29 அன்று மத தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது புலம்பியுள்ளார். தனது ஆட்சிக் காலத்தில், கொடூரமான போர் குற்றங்களுக்கு இடம் கொடுத்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டத்தை இரத்தக் களரியில் அடக்குவதற்கு செயற்பட்ட அவர், அரசாங்கத்தின் அவசரகால சட்ட ஒடுக்குமுறைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்துக்கொண்டே, ஒரு ஜனநாயகவாதியாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். முன்னாள் இராணுவத் தளபதிகள் புடைசூழ, இராணுவத்துக்கு அழைப்பு விடுத்துக்கொண்டு, சிங்கள பேரினவாத கும்பல்களையும் அணிதிரட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்து, பொலிஸ்-ஆட்சி ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்கு இராஜபக்ஷ தன் பக்கத்தில் தயாராகி வருகின்றார்.

தற்போதைய நெருக்கடியின் புறநிலையான சூழ்நிலைகளில், முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தக் கன்னையாலும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவோ அல்லது ஜனநாயக ஆட்சியை முன்னெடுக்கவோ முடியாது என்பதே உண்மை.