Print Version|Feedback
Socialist Equality Party holds rally in Berlin to demand freedom for Assange and Manning
அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலையைக் கோரி சோசலிச சமத்துவக் கட்சி பேர்லினில் பேரணி நடத்துகிறது
By our reporters
20 May 2019
ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) சனிக்கிழமையன்று, பத்திரிகையாளர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சி மானிங் ஆகியோரை விடுவிக்கக் கோரி மத்திய பேர்லினில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அருகே ஒரு பேரணியை நடாத்தியது.
மே 12 அன்று 150 பேர் பங்கேற்புடன் லண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி (UK) நடத்திய ஒரு பொதுக் கூட்டம், மற்றும் மே 11 அன்று தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டம் உட்பட, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளால் அசான்ஜ் மற்றும் மானிங்கின் பாதுகாப்பிற்கு என ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களின் தொடர்ச்சியாக இந்த சமீபத்திய பேரணியும் இருந்தது.
பேர்லின் பேரணியின் ஒரு பகுதி
தொழிலாளர்கள், நகரின் பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்கள், மற்றும் ஜேர்மனியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட கையால் தயாரிக்கப்பட்ட பதாகைகளை (கொண்டு வந்த) கையிலேந்தியிருந்த அசான்ஜின் ஆதரவாளர்கள் பலரும் உட்பட பேர்லினில் நடந்த SGP பேரணியில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு ஐரோப்பிய தேர்தல்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததுடன், அன்று மதியம் தொடர்ந்து நடந்ததான இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பங்கேற்ற பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் ஒரு சர்வதேச நிகழ்வாக இருந்தது. SGP இன் உதவி தேசிய செயலர் கிறிஸ்தோப் வாண்ட்ரேயரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சி (ஐக்கிய இராச்சியம்) இன் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் மற்றும் SGP தேசிய செயலர் உலி ரிப்பேர்ட் ஆகியோர் உரையாற்றினர், பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் SEP பிரிவுகளால் அனுப்பப்பட்ட வாழ்த்துக்கள் வாசிக்கப்பட்டன. அத்துடன், ஐரோப்பிய தேர்தல்களில் போட்டியிடும் SGP வேட்பாளரான பிலிப் டெண்டர், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அணியின் சார்பில் பேரணியில் உரையாற்றினார்.
பேரணியில் ஒரு பகுதி
அமெரிக்காவிற்கு அசான்ஜை சட்டவிரோதமாக நாடுகடத்தும் நடவடிக்கை மற்றும் அமெரிக்க போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை வெளியிட்டமைக்காக அவரை உளவுச் சட்டத்தின் கீழ் கைது செய்தல் போன்றவற்றிற்கு பிரிட்டன் மற்றும் ஜேர்மனி அரசாங்கங்களின் ஆதரவை அனைத்து பேச்சாளர்களும் கண்டனம் செய்ததுடன் ஈரானுக்கு எதிராக அமெரிக்கத் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்த் தயாரிப்புகளையும் அவர்கள் எதிர்த்தனர். அசான்ஜை ஒரு வர்க்கப் போர் கைதி என்று அவர்கள் குறிப்பிட்டதுடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி, போர், போலிஸ் அரசு ஒடுக்குமுறை, சமூக சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், ஒரு சோசலிச முன்னோக்கு கொண்ட தொழிலாளர்களையும் இளைஞர்களையும் களமிறக்கி அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலையை பாதுகாப்பதற்கு உறுதிபூண்டனர்.
வரும் நாட்களில் உலக சோசலிச வலைத் தளம், பேரணியின் காணொளியுடன் கூட உரைகளையும் வாழ்த்துக்களையும் பிரசுரிக்கும்.
உலக சோசலிச வலைத் தள நிருபர்களும் SGP உறுப்பினர்களும் பேரணியில் கலந்துகொண்ட பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசினர். அனைவரும் அசான்ஜிற்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தியதோடு முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களின் குற்றவியல் அரசியலை கண்டனம் செய்தனர்.
கெர்ஸ்டின்
கெர்ஸ்டின் முதல் நாள் ஒரு மின்கம்பத்தில் "ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்" சுவரொட்டியை பார்த்த பின்னர் பேரணிக்கு வர முடிவு செய்தார். இவர் தொழிலாள வர்க்க மாவட்டமான பேர்லின்-ஹெல்லெர்ஸ்டார்ஃப் இல் வாழ்ந்து வருவதுடன் ஸ்பானிஷ், போர்த்துகீசி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுகிறார்.
"கூட்டுக் கொலை" வீடியோ மற்றும் விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட போர் குற்றங்கள் ஆகியவை முக்கிய உலகளாவிய வெளியீடுகளால் விநியோகிக்கப்பட்டன. இவை அனைத்தும் சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கான தெளிவான பிரச்சனைகளாகும். இந்தக் காரணத்திற்காக, அசான்ஜ் மற்றும் மானிங் மீது வழக்குத் தொடரப்படக்கூடாது."
இந்த பேரணி குறிப்பாக தற்போது முக்கியமானது என்று கெர்ஸ்டின் மேலும் தெரிவித்தார். "அசான்ஜ் மற்றும் மானிங்கை இப்பொழுது நடத்துகின்ற கொடூரமான விதம்" என்பது இதுவரையில் "பனிப் பாறையின் முனை" மட்டுமே வெளிப்படுத்தப்பட்டிருப்பதற்கான தெளிவான அறிகுறியாகும். முன்பை விட மிக மோசமான போர் குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதால் தான், ஆட்சியாளர்கள் அவர்களை மௌனமாக்க முயல்கின்றனர்."
ஈவா
ஈவா ஒரு கணக்காளராக இருப்பதுடன் பேர்லினில் வேலை செய்கிறார். அவர் "ஜூலியன் அசான்ஜின் கைது, நம்பமுடியாத அளவிற்கு மோசமானது" என விபரித்ததுடன் இவ்வாறு விளக்கினார்: "இது சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு நடவடிக்கையாகும். அமெரிக்காவின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியதைத் தவிர அவர் வேறொன்றும் செய்யவில்லை, அது சட்டபூர்வமானது மற்றும் முக்கியமானது. ஒரு பத்திரிகையாளராக அவர் செயல்பட்ட விதம் வீரமிக்க நடவடிக்கையாக இருந்தது. குறிப்பாக "கூட்டுக் கொலை" வீடியோ உட்பட அவர் அம்பலப்படுத்திய அனைத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது."
மேலும் அவர், “ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டது மூலம் பத்திரிகை சுதந்திரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது. அதே விடயம் செல்சி மானிங்கிற்கும் பொருந்தும். நான் நேற்று அவருடைய வீடியோவைப் பார்த்தேன். அவரும் வீரம் மிக்கவர் தான். அவரை அச்சுறுத்துவது எது என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்ற நிலையில், இன்னும் அவர் இந்த அநீதிக்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அவர் தளர்ந்து விடக் கூடாது. அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்" என்று சேர்த்துக் கூறினார்.
ஈரானிற்கு எதிரான அமெரிக்கப் போர் திட்டங்களை ஈவா குறிப்பிட்டு, இவ்வாறு எச்சரித்தார்: "ஜேர்மனிய அரசாங்கம் தொடர்ந்து அமெரிக்காவிற்கு அடிபணிந்து கிடக்கிறது. ஈரானுக்கு எதிரான யுத்தம் நாளை தொடங்கிவிட்டால் கூட, ஆயுதங்களை வழங்குவதன் மூலமாக மட்டுமாவது ஜேர்மன் அரசாங்கமும் யுத்தத்தில் பங்கேற்கும்.” அசான்ஜை நடத்தும் விதம் பற்றி இந்த சூழலில் பார்க்கப்பட வேண்டும் என்றும், "ஜூலியன் அசான்ஜ் துன்புறுத்தப்படுவது உண்மையைச் சொல்லும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் தான் நான் இங்கே இருக்கிறேன்" என்றும் கூறினார்.
சோயிப்
பாகிஸ்தானிலிருந்து பேர்லினுக்கு சென்றிருந்த 24 வயதான பொறியியல் மாணவர் சோயிப், ஒரு பயணிக்கும் விமானத்தைப் (flyer) பெற்றுக் கொண்ட பின்னர் பேரணியில் கலந்து கொண்டார். "நான் அதை பார்த்தபோது இங்கு வர வேண்டும் என்று நினைத்தேன்," என்று அவர் கூறினார். மேலும், அசான்ஜ் மக்களுக்கு உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகின் நடவடிக்கையாளர்களும் குழப்பவாதிகளும் அவரை கைப்பற்றியுள்ளனர். ஆனால், அவர்கள் அதை அழிக்க முடியாது என நமக்கு அவர் ஒரு யோசனையை அளித்தார். மேலும், உண்மையை மறைக்க முடியாது என்பதுடன், அது உடனடியாகவோ அல்லது பின்னரோ வெளிப்பட்டே தீரும்” என்று அவர் கூறினார்.
இதற்கு முன்பு ஏற்கனவே, அவர் விக்கிலீக்ஸை நிறுவியதைப் பற்றியும், ஈராக்கில் போர் குற்றங்கள் பற்றி அவர் வெளியிட்டதையும், மற்றும் டோனி பிளேயர் என்ன செய்தார், போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதையும் உறுதி செய்கின்ற Chilcott அறிக்கையில் பின்னர் ஆவணப்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் பங்கு பற்றியும் நான் அறிந்திருக்கிறேன். நான் பாகிஸ்தானில் வளர்ந்தபோது, அது அமைதிக்குரிய காலம் அல்ல, மக்கள் எப்படி பயத்துடன் வாழ முடியும் என்பது எனக்கு தெரியும். நீங்கள், 40 வயதில் ஈராக்கில் உள்ள ஒரு நபரை எடுத்துக் கொண்டால், அவர் தனது வாழ்நாள் முழுவதுமாக போரைப் பார்த்திருப்பார். அத்தகைய போர்களாவன, ஈரான்-ஈராக் போர், பின்னர் 1990 களில் மற்றும் 2003 ல் அமெரிக்காவின் தாக்குதல்கள், அத்துடன் தற்போது ISIS உடனான போர் போன்றவையாகும். இவ்வாறாக, அங்கு மக்களின் முழு வாழ்நாளும் அழிக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் குறிப்பிட்ட நாட்டின் பலம் மற்றும் யார் அதை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தது."
"உத்தியோகபூர்வ ஊடகத்தில் நீங்கள் பார்த்தால், அவர்கள் உண்மையில் சுதந்திரமானவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இருக்க மாட்டார்கள். அவர்கள் அசான்ஜிற்காக வெளியே வந்து அவருக்காக குரல் கொடுக்க வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள் என்ற நிலையில், மக்களுக்கு மிகவும் தீமை பயக்கும் சில விடயங்களைப் பற்றி விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. விரைவில் அல்லது அதற்குப் பின்னர், உத்தியோகபூர்வ ஊடகங்களுக்கு அரசாங்கமும் திரும்புவது நல்லது" என்று அவர் கூறினார். மேலும், “இன்றே அசான்ஜ் பாதுகாக்கப்பட வேண்டும், ஏனெனில் "முந்தைய தலைமுறைகளின் செயற்பாட்டின் விளைவாகவே இன்றைய நமது சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது, எனவே, அந்தப் போராட்டத்தை நாம் மேலும் தொடரவில்லையானால், தற்போது நாம் கொண்டிருக்கும் அனைத்தையும் இழக்க நேரிடும்” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.
"உங்கள் கருத்து உண்மை மற்றும் மதிப்பு அடிப்படையிலான ஏதோவொரு கருத்தாக இருக்குமானால், அது உடனடியாகவோ அல்லது பின்னரோ அதற்குரிய நேரத்தில் வெளிப்பட்டே தீரும்,” என்று அவர் கூறினார். மேலும், "இப்போது நான் SGP பற்றி தெரிந்து கொண்டேன். இந்த கட்சியைப் பற்றி முன்னர் எனக்குத் தெரியாது, என்றாலும், அதற்கு என்னை தற்போது அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். நான் ஒரு வருட காலமாக இங்கு வசிக்கிறேன், என்றாலும், இது மாதிரியான எந்த நடவடிக்கையிலும் நான் பங்குபற்றவில்லை" என்றும் அவர் கூறினார்.
பேச்சாளர்கள் "முதலாளித்துவத்தையும் செல்வந்தர்களையும் ஏழைகளையும் பற்றி பேசினர்" என்று அவர் கூறினார். "சோவியத் ஒன்றிய பொறிவுக்குப் பின்னர் உலகின் ஒரே ஒழுங்காக 40 ஆண்டுகளாக முதலாளித்துவம் நிலை பெற்றுள்ளது. இது நமது முழு பொருளாதார வரலாற்றில் ஒரு சதவீதமாகும். எனவே, முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்று இல்லை என்று நான் நம்பவில்லை. கண்டிப்பாக அதற்கு ஒரு மாற்று இருக்கிறது, அது தான் சோசலிசம்."