Print Version|Feedback
India’s election and the revolutionary program to oppose austerity, war and communal reaction
இந்தியாவின் தேர்தலும் சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் வகுப்புவாத பிற்போக்கை எதிர்ப்பதற்கான புரட்சிகர வேலைத்திட்டமும்
By Keith Jones,
8 May 2019
மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கும் இந்தியாவின் பல கட்ட தேசிய தேர்தலுக்கான, பிரச்சாரமானது ஒரு இழிந்த காட்சியாக மாறிவருகிறது.
மோசமான வகுப்புவாத விண்ணப்பங்கள், போர் வெறி அச்சுறுத்தல்கள், மற்றும் போலியான ஜனரஞ்சக வாக்குறுதிகள் ஆகியவற்றினால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இந்த பிரச்சாரத்துக்கு 7 பில்லியனுக்கும் மேற்பட்ட பணம் செலவிடப்பட்டுள்ளது. அதாவது, 1.37 பில்லியன் மக்களுக்கு ஒரு வருடத்திற்கு செலவிடப்படும் மருத்துவத்துக்கான செலவில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமான அளவுக்கு அது ஈடானது.
தொடக்கத்திலிருந்தே பிரச்சாரத்திற்கான தொனியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்து மேலாதிக்கவாத பிஜேபி ஆகியவை உருவாக்கி இருந்தன.
பிப்ரவரி 14 அன்று இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மிரில் நடந்த தீவிரவாத தாக்குதலை, பிஜேபி அரசாங்கம் பயன்படுத்தி, பாகிஸ்தானுக்குள்ளே ஊடுருவி வான்வழி தாக்குதல் நடத்தி போர் நெருக்கடியை அதிகரித்தது.
அவ்வாறு செய்யும்போது வெளிப்படையாகவே, அது மோடியை “வலிமையான” தலைவராக வெளிச்சம் போட்டு காட்டும் நோக்கோடும் பரந்த வேலையில்லா திண்டாட்டம் மற்றும் இந்தியாவின் நீடித்த விவசாய நெருக்கடி குறித்த சமூக கோபத்தை நசுக்கவும் மற்றும் இந்துத்துவாத ஆர்வலர்களை அணி திரட்டுவதற்குமாக செய்யப்பட்டது.
இந்தியா பாகிஸ்தானை விரும்பும் சமயத்தில் தண்டிக்கும், என்று மோடி தம்பட்டம் அடிக்கையில், பரம எதிரியிடம் இருந்து அச்சுறுத்தல் எந்நேரத்திலும் வரலாம் என்று கூறி தனது பொருளாதார சலுகைகள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கான கோரிக்கைகளையும் நியாயப்படுத்தும் பாகிஸ்தான் இராணுவம் பதிலடி கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
பிப்ரவரி மாத இறுதியில், 1971 இந்திய பாகிஸ்தான் போருக்கு பின்னர், தெற்காசியாவின் இரு போட்டியான அணுஆயுத சக்திகள், போரின் விளிம்புக்கு வந்தன.
போர் நெருக்கடி கட்டவிழ்ந்து வருகையில், இராணுவத்தை பாராட்டுவதில் யார் மிக அதிகமாக புகழ்பாடுபவர்கள் என்ற போட்டியில், ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை மோடிக்கு நிகராக போட்டி போட்டனர்.
மோடி தனது “துல்லிய தாக்குதல்களை” விளம்பரப்படுத்துவது மற்றும் தன் அரசியல் எதிராளிகளை பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுப்பவர்கள் மற்றும் இராணுவத்தை பலவீனப்படுத்துபவர்கள் என்றும் விடாப்பிடியாக கூறி வந்ததை அடுத்து எதிர்கட்சியினர் வான்வழி தாக்குதலை அரசியல்மயப்படுத்துவதாக பிஜேபி அரசாங்கத்தை விமர்சித்தனர்.
ஆனால் யாருமே, மோடி அரசாங்கம், பொறுப்பற்ற முறையில், இந்தியாவை போரின் விளிம்புக்கு கொண்டு வருவது பற்றி வாய் திறந்து விமர்சிக்கவில்லை.
அதற்கு காரணம், எதிர் கட்சியினர் அனைவருமே, பாகிஸ்தானுடனான அதன் பிற்போக்கான மூலோபாய போட்டி உட்பட இந்திய ஆளும் வர்க்கம் ஒரு கொள்ளைக்கார வல்லரசாக விரும்பும் அபிலாசைகளுக்கு ஆதரவளிக்கின்றன - இது மற்றவர்களை விட எவ்விதத்திலும் குறைவில்லாதபடி ஸ்ராலினிஸ்டுகளை பொறுத்த வரையிலும் உண்மை தான்.
உலகத்தில் நான்காவது பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை கொண்ட இந்தியா மிகப்பெரிய இராணுவ சக்தியாக உருவெடுக்க அனைவரும் ஆதரித்து உள்ளனர், மேலும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய முன்தாக்குதலில் இந்தியாவை ஒரு முன்னிலை நாடாக மாற்றுவதில், அடுத்தடுத்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி தலைமையிலான அரசாங்கங்கள் ஈடுபடுகையில் அவை அனைத்தும் அதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றன.
ஐந்தாண்டுகளுக்கு முன், வேலைகள் வழங்குவதாக வாக்குறுதி மற்றும் வளர்ச்சி ஆகிய ஆழமாக வேரூன்றிய சமூக பிரச்சனைகள் குறித்து வாய் சவடால் பேசி பிரச்சாரம் செய்து பிஜேபி ஆட்சிக்கு வந்தது. 2002 இல் குஜராத்தில் முஸ்லிம் விரோத கலவரத்துக்கு துணைநின்றதன் மூலம் தேசிய வெளிச்சத்துக்கு மோடி வந்த போதிலும் அவரை பிரதம மந்திரி வேட்பாளராக அறிவித்தது.
இந்த தேர்தலில் மோடி மற்றும் பிஜேபி, இந்து வகுப்புவாத பிரச்சாரத்தை மேலும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்தி உள்ளனர்.
மோடி, குற்றம் சாட்டப்பட்ட ஒரு இந்து மேலாதிக்கவாத தீவிரவாதியை “நட்சத்திர” வேட்பாளராக அறிவிப்பது அல்லது பிஜேபி தலைவர் அமித் ஷா வங்க தேசத்தில் இருந்து வரும் முஸ்லிம் அகதிகளை ”கரப்பான் பூச்சிகள்” என்று கூறுவது மற்றும் அவர்களை வங்க வளைகுடாவில் தூக்கி வீசப்போவதாக சவால் விடுவது என்று எல்லா நாட்களும் எதாவது ஒன்றை தூண்டி விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இராணுவ-உளவு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் பெரும் வணிக நிறுவன அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து கிடைக்கும் ஆதரவினால் பிஜேபி, குதூகலித்து தைரியமாகி உள்ளது.
உழைக்கும் மக்கள் விரும்பாத நவீன பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் தங்கள் நலனகளை உலக அரங்கில் ஆக்ரோஷமாக நிலைநிறுத்த அழுத்தமாக முன் தள்ளி செல்ல தேவையான ”பலமான” அரசாங்கத்தை பிஜேபி இனால் தான் வழங்க முடியும் என்று இந்தியாவின் பெரும் வணிக நிறுவன அமைப்புகள் பொதுவாக கருதுகின்றன.
எதிர் கட்சிகளின் முதுகெலும்பற்ற தன்மை மற்றும் மெத்தன போக்குதான் இதற்கு மேலும் வலுசேர்த்து உள்ளது.
பெரு வணிக ஊடகங்கள், மென்மையான இந்துத்துவா பிரச்சாரம் என்று சொல்லும் அளவுக்கு, காங்கிரஸ் கட்சியும் அதன் வாரிசு தலைவர் ராகுல் காந்தியும் அதே வகுப்புவாத குறியீடுகளை தான் பயன்படுத்து வருகின்றனர்.
அடித்தளத்தில் மாற்றம் எற்படுவதை, மோடி மற்றும் இந்து வலதுசாரிகள் உணர்கிறார்கள், பெருகிவரும் சமூக எதிர்ப்பை கண்டு அவர்கள் அஞ்சுவதாலேயே பிஜேபி, வகுப்புவாத பிற்போக்குப் பக்கம் திரும்பியதற்கான காரணம் அனைத்துக்கும் மேலாக வளர்ச்சி கண்டு வரும் சமூக எதிர்ப்பு குறித்த அதன் பயத்தினால் தூண்டப்பட்டதாக உள்ளது, தங்களுக்கு அடியிலுள்ள மண் அசைய தொடங்கி விட்டதாக அவர்கள் உணர்கிறார்கள்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக போராட்ட குணமிக்க தொழிலாளர்களினால் தலைமை தாங்கப்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன, அவை பெருமளவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உழைப்பாளர்களையும் அரவணைக்கின்றன, பிஜேபி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் முதலீட்டாளர் சார்பு கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் கடந்த ஜனவரியில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
2017 இல் இருந்து வெடித்துவரும், தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் விவசாய ஆர்பாட்டங்கள், பிஜேபி எதிர்ப்பு என்ற வட்டத்தை தாண்டி வெடித்து வருகின்றன.
அவை, 1991 முதல் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வரும் சந்தை சார்ப்பு, முதலீட்டாளர் சார்பு கொள்கைகளுக்கான எதிர்ப்பாகும், இந்திய முதலாளித்துவத்தின் சுதந்திரத்திற்கு பிந்தைய அரசு முன்னெடுத்த முதலாளித்துவ வளர்ச்சி கவிழ்ந்த பின்னர் அது இந்தியாவை பூகோள மூலதனத்துக்கான ஒரு மலிவு உழைப்பு தளமாக மாற்றும் அடிப்படையில் ஏகாதிபத்தியதுடன் ஒரு புதிய பங்காண்மையை உருவாக்கிக் கொண்டது.
தீங்கு விளைவிக்கும் சமூக ஒழுங்கு
மோடி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு எந்தளவுக்கு இந்த தேர்தலில் அதன் வெளிப்பாட்டை காண்பிக்கும் என்பது தெளிவற்றதாகவே இருக்கிறது.
பிஜேபியை எதிர்க்கும் அனைவரும் மிகவும் மதிப்பிழந்த நிலையில் இருக்கின்றனர் அவர்கள் தாமாகவே முதலீட்டாளர்களுக்கு சார்பான கொள்கைகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு ஆற்றி இருக்கின்றனர், மற்றும் நீடித்த வறுமையை திணித்திருக்கின்றனர், மேலும் சமூக சமத்துவமின்மை மிக மோசமாக வளர்ச்சியடையவதை மேற்பார்வை செய்துள்ளனர்.
சமீபகாலம் வரை முதலாளித்துவ வர்க்கத்தினரின் விருப்பத்தேர்வான அரசாங்க கட்சியாக காங்கிரஸ் இருந்து வந்துள்ளது, ஆனால் இனி மேலும் அது வட இந்தியாவின் பரவலான இடங்களில் தேர்தல்ரீதியாக ஒரு போட்டியான கட்சியாக இல்லை. தேர்தலில் உற்சாகத்தை உருவாக்குவதற்கு ஒரு தீவிர முயற்சியாகவும், “புதிய இளம் இரத்தத்தை” உட்புகுத்துவதற்காகவும், காங்கிரஸ் அதன் புதிய நட்சத்திர விளம்பரதாரராக பிரகடனப்படுத்தியது வேறு யாருமல்ல, அவர் தான் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா வர்தா, அவருடைய தாய், தந்தை, தந்தையின் தாய் மற்றும் பாட்டன் அனைவரும் முன்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள். (குறிப்பிட்ட கடைசி மூன்று நபர்களும் இந்திய பிரதமர்களாக சேவையாற்றியவர்காளவர்)
இரண்டு தேசிய பெரு வணிக கட்சிகளுக்கு எதிரான மக்களின் கோபத்தினை நம்பிக்கையுடன் சுரண்டிக்கொள்வதற்காக ஒரு பெருந்திரளாக பிராந்திய மற்றும் சாதியடிப்படையிலான கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) மற்றும் பிஜேபியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தேஜகூ) இவற்றிலிருந்து பிரிந்து தேர்தல்களில் தனியாக போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த கட்சிகள் அனைத்தும் முன்னர் வலதுசாரி காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசாங்கங்களில் அங்கம் வகித்தவையாகும். நேர்மையற்ற முறையில் பணத்தினை சம்பாதிப்பதற்க்காகவும் மற்றும் அதிகாரத்திற்காவும் பல்வேறு முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ அணிகளுக்காவும் மற்றும் அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தினை பிரிப்பதற்கும் திசைதிருப்புவதற்கும் இவர்கள் இழிவான முறையில் சிறுஇனக்குழு-பேரினவாதத்தினையும் சாதிய விண்ணப்பங்களையும் பயன்படுத்துகிறார்கள்.
“ஜனநாயகத்தைப் பாதுகாத்தல்” மற்றும் “குடியரசைப் பாதுகாத்தல்” என்ற பெயரில், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் அவர்களின் இடது முன்னணி பிஜேபிக்கு மாற்றாக வலதுசாரி அரசாங்கத்தினை அமர்த்துவதற்கு பெரும்பாலும் காங்கிஸ் தலைமையிலான முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவை முன்தள்ளி வெட்கமற்றமுறையில் ஆதரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் “பிஜேபி தவிர யாரேனும்” எனும் பிரச்சாரத்தை பரப்பிவருகிறார்கள். குறிப்பிட்ட மாநிலத்தில் BJP/NDA வைத் தோற்கடிப்பதற்கு எந்தக் கட்சி அல்லது தேர்தல் கூட்டணி சிறந்த நிலையிலிருந்தால் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று உழைக்கும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தினர். அதே சமயம், 1989 க்கும் 2008 க்குமிடையில் அடுத்தடுத்து வந்த “பிஜேபி அல்லாத அரசாங்கங்களை” ஒன்றிணைத்து அமைக்கவும் அவற்றை தாங்கி பிடிப்பதிலும் அவர்கள் பங்காற்றியிருப்பது குறித்து எக்காள முழக்கம் போட்டனர்.
இப்படியான அனைத்து அரசாங்கங்களும், ஆனால் குறிப்பாக நரசிம்ம ராவ் (1991-96) மற்றும் மன்மோகன் சிங் (2004-14) காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் மோடி அரசாங்கத்திற்கான பாதைக்கு வலுவான நிலையை உருவாக்கியவர்களாவர். முந்தைய ஆட்சியாளர்கள், முதலீட்டாளர் சார்பு கொள்கைகளின் ஒரு பெரு வெடிப்பான முதல் அலையினை அமுல்படுத்தினர், பின்னைய அரசாங்கம் தனியார்மயமாக்கல், நெறிமுறைகளைத் தளர்த்தல் மற்றும் சந்தைமயமாக்கல் போன்றவற்றை முன்நகர்த்திய நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு “பூகோள மூலோபாயக் கூட்டு” னை உருவாக்கினர்.
தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மற்றும் இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தின் சேர்க்கை எதுவாக இருந்தாலும் சரி– அது பிஜேபி, காங்கிரஸ் அல்லது சிறிய கட்சிகளின் ஒரு “கூட்டாட்சிக்கான கூட்டணி” என்று எதுவாக இருப்பினும் அது சிக்கன நடவடிக்கை மற்றும் பிற்போக்கான அரசாங்கமாக இருக்கும். முதலாளித்துவத்தின் செயற்பட்டியலை அண்மைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் தலையங்கம் சுருக்கமாக மேற்கோள் காட்டியது. "வாக்களித்த பின்னர்; பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நண்பர்களை வளர்ப்பது இந்தியாவின் மூலோபாய திருப்பத்திற்கு முக்கியமானது" என்ற தலைப்பில், "உறுதியான சீர்திருத்தங்கள்" மற்றும் "இந்திய-அமெரிக்க கூட்டணியை" பலப்படுத்துவதற்காக நேட்டோ பாணியிலான சீன-எதிர்ப்பு கூட்டணியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகியவை உட்பட “நான்கு தரப்பை இயங்க” வைக்க வேண்டும்.
உழைக்கும் மக்களின் ஆரம்ப எழுச்சிக்கும், பல தசாப்த கால முதலீட்டாளர் சார்பு நவீன- தாராளமய சீர்திருத்தத்தின் அழிவுகரமான தாக்கம் மற்றும் இந்தியாவின் அடுத்த அரசாங்கத்திற்கு இடையே ஒரு நீடித்த மோதல் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
இதற்காக தயாரிப்பதற்கு, பெரும்பாலான வர்க்க நனவான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை எடுக்க வேண்டும்; ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கு போராட்டத்தில் அதன் பின்னால் கிராமப்புற உழைக்கும் மக்களையும், ஒடுக்கப்பட்ட அனைவரையும் அணிதிரட்ட வேண்டும்.
"சுதந்திரமான" இந்தியாவின் ஏழு தசாப்த காலத்திற்கும் மேலான வரலாறு, முதலாளித்துவத்தின் மீது குற்றம் காண்பதாகவும், 1917 ரஷ்யப் புரட்சிக்கு உயிரோட்டமாக இருந்த திட்டத்தை எதிர்மறையாக உறுதி செய்வதாகவும் இருந்தது, அது எப்போதுமே லியோன் ட்ரொட்ஸ்கி என்ற பெயருடனும் -நிரந்தரப் புரட்சியுடனும் ஒன்றாக அடையாளம் காணப்படும் .ஏகாதிபத்தியத்தால் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுகளில், ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைப் பணிகளை தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியின் மூலமாகவும் மற்றும் உலக சோசலிச புரட்சியின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மட்டுமே தீர்க்க முடியும்.
தற்கால முதலாளித்துவ இந்தியா ஒரு முற்றிலும் சீரழிந்த சமுதாயமாக உள்ளது. இதில் சாதி வாதம், நிலசுவாந்தர் வாதம், கொத்தடிமைத் தனம், மற்றும் பிற எஞ்சிய நிலப்பிரபுத்துவ மிச்ச மீதங்கள் ஆகியவை பூகோள ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவ சுரண்டலின் மிக முன்னேறிய சக்திகளுடன் பிணைந்துள்ளன. சமுதாயத்தின் உச்சத்தில், குற்றவியல் நடவடிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவின் புதிதாக உருவெடுத்த நூற்றுக்கணக்கான பில்லியனர்களும் (பெரும் கோடீஸ்வரர்களும்), மீதமுள்ள முதலாளித்துவ உயரடுக்குகளும் மிக ஆடம்பரமாக செல்வத்தின் மீது நின்று குதூகலிக்கின்றனர் அதே சமயம் அனைத்து சமூக எதிர்ப்பையும் நசுக்குவதற்காக முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ மேலாதிக்கவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட அரசு வன்முறை மற்றும் பிரித்தாளும் சாதி மற்றும் வகுப்புவாத அரசியலைப் பயன்படுத்துகின்றனர்.
இன்றைய இந்தியாவின் சமூக சமத்துவமின்மை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நிலையுடன் போட்டியிடுகிறது. இந்தியாவின் செல்வத்தில் 71 சதவிகிதம், உச்சத்தில் இருக்கும் ஒரு சதவிகிதத்தின் ஏகபோகமாக உள்ளது, அதே நேரத்தில் கோடிக்கணக்கானவர்கள் நாள் ஒன்றுக்கு 2 டாலர்களுக்கு (140 ரூபா) குறைவான வருமானத்தில் தான் வாழ்கின்றனர், இந்தியாவில் ஊதியங்கள் சீனாவை விட நான்கில் ஒன்று தான் என்று உலக அரங்கில் மோடி தம்பட்டம் அடித்து முதலீடுகளை கவர முயற்சிக்கின்றார்.
உலக முதலாளித்துவ நிலைமுறிவு, வர்த்தக யுத்தம் மற்றும் அதிகரிக்கும் புவிசார் அரசியல் அழுத்தங்கள் ஆகிய நிலைமைகளின் கீழ், இந்தியாவின் ஆளும் உயரடுக்கு குறிப்பாக ஒரு கொடூரமான மற்றும் தீங்குவிளைவிக்கும் பாத்திரத்தை வகிக்கிறது. வாஷிங்டனுடன் இராஜதந்திர ரீதியாகவும், இராணுவரீதியாகவும் இன்னும் கூடுதலான இணைவதன் மூலமாக அது சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலுக்கு ஊக்கமளிக்கிறது. அதே நேரத்தில், வாஷிங்டன் புது டெல்லிக்கு வழங்கும் எந்தவொரு மூலோபாய உதவிகளையும் நெம்புகோலாக பயன்படுத்தி தனது சொந்த ஆக்கிரமிப்பு, சதி மற்றும் போர் பிரச்சாரங்களை முன்னெடுத்து, ஒரு பிராந்திய மேலாதிக்க சக்தியாக தன்னை தானே உருவாக்குகிறது.
பிற்போக்குத்தனமான இந்திய-பாகிஸ்தான் மற்றும் சீன-இந்திய மோதல்களும் அமெரிக்க-சீனா இடையிலான மூலோபாய மோதகளும் ஒன்றுடன் ஒன்று கலப்பது ஆசியா மற்றும் உலகின் உழைக்கும் மக்களுக்கு மிகப்பிரமாண்டமான அச்சுறுத்தலை பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த அபாயம் ஏற்கனவே மூன்று போர் நெருக்கடிகளால் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது –அதில் இரண்டு பாகிஸ்தானுடன் மற்றும் 2017 ம் ஆண்டு கோடைகாலத்தில் இமாலய பீடபூமி மீதான கட்டுப்பாடு குறித்து சீனப் படைகளுடன் பத்து வார கால இராணுவ பதட்ட நிலை- இதில் இந்தியா செப்டம்பர் 2016 ல் இருந்து சிக்கியிருந்தது.
ஸ்ராலினிசமும் இந்து வலதின் எழுச்சியும்
தொழிலாள வர்க்கத்தை சர்வதேச சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் அரசியல் ரீதியாக பலப்படுத்துவதற்கான போராட்டத்திற்கு தேவைப்படுவது, ஸ்ராலினிசத்துடன் ஒரு கணக்கு தீர்ப்பதாகும்.
முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஒருங்கிணைந்த ஒரு அங்கமாக CPM, CPI மற்றும் அதன் தொழிற்சங்ககங்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன.
இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வின் மையத்தில் உள்ள கொழுந்து விட்டெரியும் முரண்பாடுகளுக்கு அவர்களே பிரதான காரணம்.
கடந்த மூன்று தசாப்த கால முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாக தொழிலாள வர்க்கத்தின் அளவு மற்றும் சமூக சக்தி ஆகியவற்றில் பிரமாண்டமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அரசியல் ரீதியாக முழுமையாக நிராயுதபாணியாக்கபட்ட தொழிலாளர்களினால் உருவாக்கப்பட்ட செல்வத்தின் மிகப்பெரும் பங்கை முதலாளிகளினால் சுரண்டிக்கொள்ள முடிந்திருக்கிறது.
இதற்கு காரணம்,ஆளும் வர்க்கத்தின் தாக்குதல் சவால் செய்யப்படாமல் போனது என்பதனால் அல்ல. ஆனால் ஸ்ராலினிஸ்டுகள் வர்க்க போரட்டத்தை திட்டமிட்டு தடுத்து அடக்கியது மட்டும் அல்லாது, முதலாளித்துவ நவ-தாராளவாத கொள்கையை திணித்தது தான்.
இதில் உட்படுவது, பிஜேபியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கிறோம் என்று கூறி ஒரு தொடரான வலதுசாரி தேசிய அரசாங்களுக்க ஆதரவளிப்பது மற்றும் தாங்கள் ஆட்சி செலுத்தி வந்த, மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் முதலீட்டாளர் சார்பு கொள்கைகள் என்று அவர்களே கூறும் கொள்கைகளை அமுல்படுத்துவது ஆகியவையாகும்.
இதன் விளைவாக முதலாளித்துவமானது அதன் சமூக ரீதியில் பின்னோக்கிய கொள்கைகளை நடைமுறைபடுத்த முடிந்தது.
ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக முடக்கி, சமூக நெருக்கடிக்கு, தொழிலாள வர்க்கம், அதன் சொந்த சுயாதீன சோசலிச வேலை திட்டத்தை முன்னெடுக்க விடாமல் தடுத்து, மற்றும் வலதுசாரி நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது வலதுசாரி இந்துக்கள் வெகுஜன சமூக கோபத்தையும், ஆழமான பொருளாதார பாதுகாப்பின்மை குறித்த பயத்தையும் பயன்படுத்தி கொண்டனர்.
மூன்று தசாப்த காலமாக, CPM மற்றும் CPI யின் முக்கிய இலக்கு பிஜேபியை தோற்கடிப்பது தான் என்று கூறி வந்த நிலையில் இந்து மேலாதிக்க வாதிகளின் ஆதிக்கம் முன்னென்றும் கண்டிராதபடி அதிகரித்து வருகிறது.
இன்று, இந்தியாவில் ஆழமாக வளர்ந்து வரும் வர்க்க போராட்டம் மற்றும் உலக முழுவதும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு மீளெழுச்சி கண்டு வருகையில், ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கம், அதன் கட்சிகள் மற்றும் அதன் அரசுடன் கட்டிப்போடும் முயற்சிகளை இருமடங்காக்க முயற்சி செய்து வருகின்றனர்.
வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க போராட்டத்தின் மீதான ஸ்ராலினிஸ்டுகளின் அணுகுமுறை, போலியான குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 மாருதி சுசுகி தொழிலாளர்கள் தொடர்பாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் போராட்டம் குறித்த அவர்களின் மூர்க்கமான எதிர்ப்பில் வெளிப்படுத்திக் காட்டப்படுகிறது, அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வறுமை நிலை ஊதியம் மற்றும் கொடூரமான பணிச்சூழல் ஆகியவற்றை எதிர்த்தற்காக போலியான குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.
CPM மற்றும் CPI மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களான Centre of Indian Trade Unions (CITU), All India Trade Union Congress (AITUC) ஆகியவை மாருதி சுசுகி தொழிலாளர்கள் பற்றி வாய் மூடி இருப்பதற்க்கு காரணம், அது காங்கிரஸ் கட்சி உடனான அவர்களின் நெருக்கமான உறவை பாதிக்கும் என்பதால் தான். காங்கிரஸ் கட்சிதான் மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான ஜோடனை வழக்கை, ஆலை அதிபர்களுடன் சேர்ந்து தொடங்கியது.
மேலும், இது, அவர்களின் கூற்றுக்களை பொய்யாக்கும், அதாவது இந்திய அரசு ஜனநாயகத்தின் ஒரு பாதுகாப்பு தூண், உழைக்கும் மக்கள் அதன் மீது தங்கி நின்று வகுப்பு வாத பிற்போக்கை வீழ்த்த முடியும் என்ற பொய்.
ஒரு புரட்சிகர தலைமையின் கீழ் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் மற்றும் சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை, இந்திய தொழிலாளர்கள், இளைஞர்கள் சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகள் முன்னெடுக்க வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது.
1947-1948 காலகட்டங்களில் வெளியேறும் பிரிட்டிஷ் காலனித்துவ வாதிகள் மற்றும் போட்டி தேசிய முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட பிற்போக்கு சிறு இனக்குழு வகுப்புவாத அடிப்படையிலான எல்லைகோடுகளை கடந்து தென் ஆசியாவில் உள்ள மக்களை போர், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிராகவும் அதேசமயம் தென்னாசியாவில் ஐக்கிய சோசலிச குடியரசுகளை அமைக்கவும் அணிதிரட்டுவதுதான் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது.
இந்த நிரந்தர புரட்சி என்ற மூலோபாயம், சோசலிச புரட்சியின் உலக கட்சியான நான்காம் அகிலத்தில் உள்ளடங்கி இருக்கிறது, மற்றும் அதன் அரசியல் வேலையின் உயிரோட்டமாக இருக்கிறது.
இது 1917 ரஷ்ய புரட்சியை ஸ்ராலினிசவாதிகள் காட்டி கொடுத்ததற்க்கு எதிராக, லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938 இல் உருவாக்கபட்டது, மேலும் 1953 ஆம் ஆண்டு முதல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வழிநடத்தப்படுகிறது. இதை நிறைவேற்றுவதற்கு ICFI இன் இந்திய பகுதியை கட்டுவது தான் அவசரமாக செய்ய வேண்டிய பணியாக உள்ளது.