ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ICFI supporters in India to hold picket to free Assange

அசான்ஜை விடுதலை செய்யக் கோரி, ICFI இன் இந்திய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர்

9 May 2019

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் குற்றங்களையும் இராஜதந்திர சூழ்ச்சிகளையும் தைரியமாக அம்பலப்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஜூலியன் அசான்ஜை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கின்றனர். வட சென்னை, அம்பத்தூரில் மே 11, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் அசான்ஜை பாதுகாக்க ICFI சர்வதேச ரீதியாக நடத்திவரும் பரப்புரையின் ஒரு பகுதியாகும்.

வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ், ஈக்வடோரிய அரசாங்கம் இலண்டனிலுள்ள அதன் தூதரகத்தில் அசான்ஜிற்கு வழங்கப்பட்ட அரசியல் அடைக்கலத்தை சட்ட விரோதமாக இரத்து செய்த பின்னர், போலியான பிணை குற்றச்சாட்டுகளின் பேரில் அசான்ஜை பிரிட்டிஷ் காவல்துறை கைது செய்தது.

பிரிட்டிஷ் நீதிமன்றம் தற்போது அவருக்கு 50 மாத கடுங்காவல் தண்டனை வழங்கி இழிபுகழ் பெற்ற பெல்மார்ஷ் சிறையில் அடைத்துள்ளது. அவர் அங்கே solitary confinement இல் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கே தேசத் துரோக குற்றச்சாட்டுகளுக்காக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.

அசான்ஜிற்கு எதிரான சர்வதேச வேட்டை, உலக முழுவதும் பேச்சு சுதந்திரம் உட்பட அடிப்படையான ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.

நாட்டுக்கு பின் நாடு இணையம் மற்றும் சமூக ஊடகத்தின் வாயிலாக தகவல் மற்றும் விவாதங்கள் சுதந்திரமாக நடைபெறுவதை தடுக்க முயற்சிக்கின்றன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளின் வேண்டுதலின் பேரில், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் இதர இடது சாரி மற்றும் போர் எதிர்ப்பு வலைத் தளங்களை, கூகிள் மற்றும் முகநூல் தணிக்கை செய்துள்ளது.

இந்தியாவில், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் கூட “வெறுப்பு பேச்சு” மற்றும் “தேசிய பாதுகாப்பை” காக்கும் சாக்கில் இணையம் மீதான தணிக்கையை முடுக்கி விட்டுள்ளது. அது முகநூல், டுவிட்டர் மற்றும் யுடியூப்புடன் நெருக்கமாக வேலைசெய்து குறிப்பட்ட வலைத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் கணக்குகளை மூட முயற்சிக்கிறது.

ஜூலியன் அசான்ஜை பாதுகாக்கும் போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்துடன் முழுமையாக பிணைந்துள்ளது.

இந்த பிரச்சார இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் படியும் நமது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும்படியும், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

 இடம்: அம்பத்தூர் TI சைக்கிள் எதிரில், அம்பத்தூர் உழவர் சந்தை அருகில்

தேதி மற்றும் நேரம்: சனிக்கிழமை, மே 11, மாலை 3.30 – 5.30 மணி