ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As protests grow, Algerian army arrests Workers Party leader

ஆர்ப்பாட்டங்கள் பெருகி வருகின்ற நிலையில், அல்ஜீரியா இராணுவம் தொழிற் கட்சியின் தலைவியை கைது செய்கிறது

By Will Morrow 
11 May 2019

வியாழக்கிழமை மதியம், தளபதி அஹ்மெட் கய்ட் சலாஹ் கட்டுப்பாட்டில் உள்ள அல்ஜீரிய அரசாங்கம், தொழிலாளர்கள் கட்சியின் (PT) பொதுச் செயலர் லூயிசா ஹனூனை கைது செய்து, இராணுவ நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது. "இராணுவத்தின் அதிகாரத்தை கண்டனம் செய்கிறது" என்றும், "அரசின் அதிகாரத்திற்கு எதிரான சதி" என்றும் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சோசலிச சமத்துவக் கட்சி, ஹனூன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டிக்கின்றது, இது ஆதாரமற்றதும், இராணுவம் இதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. ஹனூனைப் போன்ற ஆட்சிக்கு நெருக்கமான நபர்களைக் கூட கைது செய்வதன் மூலம் இராணுவம் யாரையும் இரக்கமின்றி நடத்த முடியும் என்பதற்கான சமிக்ஞையை தெரிவிப்பதுடன், இராணுவத்தின் நோக்கம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையேயான பரந்த எதிர்ப்பை அச்சுறுத்துவதாகும். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், ஆட்சியின் வீழ்ச்சியை கோரி ஒவ்வொரு வாரமும் தெருக்களுக்கு கொண்டு வந்துள்ள கண்டன ஆர்ப்பாட்டங்கள் மீது சலாஹ் முட்டுக்கட்டை தயாரிப்பது ஒரு எச்சரிக்கையாகும்.

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளபோது, முன்னாள் நீண்டகால ஜனாதிபதியான அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவின் சகோதரர் சாயிட் புட்டஃபிளிக்காவின் விசாரணையில் ஒரு சாட்சியாக இராணுவ நீதிமன்றத்திற்கு முன்பாக சாட்சியம் அளிப்பதற்கு ஹனூன் அழைக்கப்பட்டிருந்தார். சமூக சமத்துவமின்மை மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் மீதான சீற்றத்தால் உந்தப்பட்ட பெப்ரவரி 22 அன்று தொடங்கிய எதிர்ப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தோல்வியுற்ற முயற்சியில், சலாஹ்வின் உத்தரவின் பேரில் மார்ச் மாதம் அப்தலசீஸ் புட்டஃபிளிக்கா  நீக்கப்பட்டார்.

கடந்த இரண்டு வாரங்களாக புட்டஃபிளிக்கா ஆட்சி மற்றும் புலனாய்வு சேவைகளில் உள்ள உயர்மட்ட நபர்களின் தொடர் கைதுகளைத் தொடர்ந்து சாயிட் விசாரணை இடம்பெறுகிறது. திங்களன்று, 25 ஆண்டுகளாக புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறை தலைவராக இருந்த டூஃபிக் என அறியப்படும் தளபதி மொஹமட் மெடின்; மற்றும் முன்னாள் துணைத் தலைவரும் அடுத்த படியில் உள்ளவருமான, "பஷீர்" என்று அழைக்கப்படும் தளபதி ஆத்மேன் டார்டாக்கும், சாயிட் உடன் விசாரணையை எதிர்நோக்குகின்றனர்.

ஒரு வாரம் முன்பு, நாட்டின் மிகப்பெரிய செல்வந்தரான (புளூம்பேர்க் கருத்துப்படி ஆபிரிக்காவில் ஒன்பதாவது பணக்கார்) மற்றும் அல்ஜீரியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான Cevital  இன் நிறுவனர் மற்றும் தலைவரான இஸாத் ரெப்ரா உட்பட புட்டஃபிளிக்கா உடன் நெருங்கிய தொடர்புடைய ஐந்து பில்லியனர்கள் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கைது செய்யப்பட்டனர். இந்த கைதுகள் ஆட்சியின் போட்டி, பிற்போக்குத்தனமான பிரிவுகள் ஆகியவற்றிற்கு இடையேயான கணக்குகளை தீர்ப்பதையும் மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்தின் தவறான ஒரு பிம்பத்தை முன்வைத்தலையும் நோக்காகக் கொண்டிருந்தன.

எகிப்திய ஜெனரல் அப்தெல் பத்தா அல் சிசியால் எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு எதிராக 2013 ல் தொடங்கப்பட்டதைப்போல் ஒரு இரத்தக்களரி ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்து, சலாஹ் மற்றும் இராணுவத்தை பற்றி விமர்சனங்கள் செய்தமையால் ஹனூன் கைது செய்யப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை, இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் அவரது தலைமையிலான மோசடியான "மாற்றத்திற்கு" மக்களை ஆதரவளிக்குமாறு சலாஹ் கேட்டுக்கொண்ட பின்னர், "எகிப்திய நிலைமை" பற்றி ஹனூன் எச்சரித்தார். "[எகிப்திய சர்வாதிகாரி அப்தல்] அல்-சிசி அதிகாரத்தில் இருந்த சமயத்தில், ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மத்தியில் உள்ள அவரை ஆதரித்த மற்றும் இராணுவம் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்கும் என்று நம்பிய அப்பாவி மக்களைக் கூட சிறையில் அடைக்க உத்தரவிட்டார்" என்று அவர் குறிப்பிட்டார்.

ஹனூன் கைது தொடர்பான சோசலிச சமத்துவக் கட்சியின் எதிர்ப்பானது எந்த விதத்திலும் ஹனூனுக்கும் தொழிலாளர் கட்சிக்கும் நமது கொள்கைரீதியான அரசியல் எதிர்ப்பை மாற்றிவிடப்போவதில்லை. பிப்ரவரி மாதம் எதிர்ப்புக்கள் தொடங்கிய போது PT நீண்டகாலமாக தேசிய விடுதலை முன்னணியை (FLN) ஆதரித்ததோடு, ஹனூன் அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவை பாதுகாத்தார். ஆட்சியுடனான இந்த நீண்ட அரசியல் ஒத்துழைப்பு அல்ஜீரியாவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே PT ஐ இழிவுபடுத்தியுள்ளது.

அல்ஜீரிய அரசியலமைப்பை மாற்றியமைக்கும் ஒரு அரசியல் சட்டமன்றத்தை கோரும் ஹனூனின் முன்னோக்கு, ஆட்சி, ஜனநாயக சுய-சீர்திருத்தத்தை  முன்னெடுக்கும் திறன்கொண்டது என்ற மாயையை ஊக்குவிக்கிறது. இந்த முன்னோக்கை ஊக்குவிப்பது, அரச அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் உண்மையான சோசலிச போராட்டத்தின் திசையில் வளர்ந்து வரும் எதிர்ப்புக்களை தடுக்கும் நோக்கம் கொண்டது.

"எகிப்திய தீர்வு வேண்டாம்", "சலாஹ், வெளியேறு!" மற்றும் "அல்ஜீரியாவில் ஒரு சிசி உள்ளது" உட்பட கடந்த மூன்று வாரங்களாக ஊடகவியல் அறிக்கைகள், இராணுவத்திற்கும் சலாஹ்வுக்கும் எதிரான கோஷங்களில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதை காட்டுகின்றது.


மே 3 அன்று தலைநகரான அல்ஜியர்ஸில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அல்ஜீரிய எதிர்ப்பாளர்கள்

புட்டஃபிளிக்காவை நீக்கியதில் இருந்து ஆட்சிக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நேற்று, அல்ஜீயர்ஸ், ஆரான், செடிஃப், கான்ஸ்டன்டைன் மற்றும் நாட்டிலுள்ள பிற முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தின் பன்னிரண்டாவது வெற்றி வாரத்தை முன்னிட்டும், ரமழான் மாதத்தில் முதன் முறையாகவும் அணிவகுத்துச் சென்றனர்.

"நாங்கள் கைவிட மாட்டோம். எதிர்ப்பு தொடரும்" என அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அணிவகுத்துச் சென்ற, 37 வயதான பாடசாலை ஆசிரியர் ராய்ட்டருக்கு தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான இயக்கத்தை மட்டும் தீவிரப்படுத்தும் என அஞ்சி இதுவரை, இராணுவம் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இரத்தம் தோய்ந்த அடக்குமுறையைத் நடத்த பின்நின்றுள்ளது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி இராணுவ தலைமையால் விவாதிக்கப்பட்டு தயார் செய்யப்படுகின்றன.

புதனன்று, இராணுவத்தின் உத்தியோகபூர்வ ஊடகமான El-Djeich , அரசாங்கத்திற்கு எதிரான ஒரு "நயவஞ்சக திட்டம்" மற்றும் ஒரு "பயனற்ற சதி" என்று அது அழைத்ததற்கு எதிரான ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது.

“மக்களுக்கும் அதன் இராணுவத்திற்கும் இடையில் உள்ள ஒற்றுமையை உடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டம் உட்பட, சதிகாரர்களால் திட்டமிடப்பட்ட திட்டங்கள் தவிர்க்க முடியாமல் தோல்வியடைந்தன" என்று அந்த அறிக்கை கூறுகிறது. "மக்கள் இயக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதோடு மக்களின் செய்தித் தொடர்பாளர்களாக தங்களை அறிவித்து," “தங்கள் சொந்த நலன்களை சம்பாதிக்க", சிறு குழுக்களை "குழப்பத்தை விதைக்கின்றன" என்று கண்டனம் செய்கின்றது.

திங்களன்று, அன்று மதியம் Canal Algérie இல் பிற்பகல் ஒளிபரப்பு செய்யப்படவுள்ள ஒரு நிகழ்ச்சி, இராணுவ ஆதரவு "மாற்றத்தை" விமர்சித்துள்ளதாக கூறப்பட்டு பொது ஒளிபரப்பாளரால் தணிக்கை செய்யப்பட்டது.

வளர்ந்து வரும் அடக்குமுறைகள், பிரான்சில் இருந்தோ அல்லது ஐரோப்பாவிலுள்ள மற்றைய பிரதான ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்தோ அல்லது அமெரிக்காவில் இருந்தோ விமர்சனத்தை தூண்டிவிடவில்லை, அவை அனைத்தும் ஆட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. சிக்கன நடவடிக்கை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக பிரெஞ்சு தொழிலாளர்களின் பெருகிய போராட்டங்களின் மத்தியில், அல்ஜீரிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கம், மில்லியன் கணக்கான அல்ஜீரிய புலம்பெயர்ந்தோரின் நாடாக இருக்கும் பிரான்சிற்கும் பரவிவிடும் என்று மக்ரோன் அரசாங்கம் அஞ்சுகின்றது.

தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இராணுவத்திற்கான பெருகிய எதிர்ப்பும், ஒரு "எகிப்திய தீர்வு" பற்றிய கண்டனங்களும், 2011 புரட்சியைத் தொடர்ந்து ஹொஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து தூக்கியெறிந்த எகிப்திய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அனுபவம், சர்வதேச அளவில் பிரபலமான நனவில் நுழைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. எவ்வாறெனினும், இந்த அனுபவத்திலிருந்து அவசியமான அரசியல் முடிவுகளை எடுப்பதே பணியாகும்.

முபாரக்கை அகற்றுவதற்கான ஒரு வீரமிக்க போராட்டத்தை நடத்திய போதிலும், தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ளுவதிலிருந்து தடுக்கப்பட்டதுடன் பல்வேறு முதலாளித்துவ கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக அடிபணிந்திருந்தது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பங்கு, புரட்சியின் மூலமான அனைத்து அரசியல் விளைவுகளையும் முதலாளித்துவத்தின் ஒன்று அல்லது மற்ற பிரிவின் பின்னால் தொழிலாள வர்க்கத்தை பிற்போக்குத்தனமாக கட்டிவைத்ததாகும், முதலாவதாக, இராணுவ தலைமையிலான இடைமருவு அரசாங்க மாற்றம், பின்னர், முஸ்லீம் சகோதரத்துவம், பின்னர் 2013 இல், ஆட்சிக்கவிழ்ப்பைத் தயாரித்த சிசி போன்ற இராணுவத்தின் முதலாளித்துவ கூட்டாளிகள் ஆகும்.

முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் உள்ள ஏகாதிபத்தியத்துடன் கட்டுண்டுள்ள முதலாளித்துவ வர்க்கம், ஒரு ஜனநாயக ஆட்சியை நிறுவுவதற்கு இலாயக்கற்றது என்பதை விளக்கும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை எகிப்திய அனுபவம் எதிர்மறையாக உறுதிப்படுத்தியுள்ளது. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது, சோசலிசத்திற்கான போராட்டத்தில், ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களை தன் பின்னால் அணிதிரட்டி சோசலிசத்திற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தின் மீதே விழுகிறது.

இந்த முன்னோக்கிற்காக போராடும் ட்ரொட்ஸ்கிச முன்னணிப்படை கட்சியை கட்டியெழுப்புவதே அல்ஜீரியாவில் உள்ள முக்கிய பணியாகும்.