Print Version|Feedback
May offers Corbyn “national unity” Brexit agreement talks
"தேசிய ஐக்கியத்திற்கான” பிரெக்ஸிட் உடன்பாடு தொடர்பாக கோர்பின் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு மே அழைப்புவிடுகிறார்
By Chris Marsden
3 April 2019
ஏழு மணி நேர மோதல்கள் நிறைந்த பிரிட்டிஷ் பழமைவாத அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தெரேசா மே, தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பினுடன் கூட்டு பிரெக்ஸிட் உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கு முன்னொருபோதுமில்லாதவாறான அழைப்பை விடுத்துள்ளார். இதனை அவர்கள் இருவருமாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கலாம் என்று பரிந்துரைத்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், பின்னர் அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்.
அதாவது, ஒற்றை ஐரோப்பிய சந்தைக்கான அணுகலையும் மற்றும் ஒரு சுங்க ஒன்றியத்தினை ஏற்றுக்கொள்வதனாடான ஒரு "மென்மையான பிரெக்ஸிட்" (soft Brexit) க்கு ஒப்புக் கொண்டால், பாராளுமன்ற பழமைவாதக் கட்சியின் அரைவாசியளவு உறுப்பினர்களால் உடன்பாடற்ற வெளியேற்றத்துக்கு (no-deal exit) ஆதரவாக கூட்டாக கையெழுத்திட்ட ஒரு கடிதத்துடன் சேர்ந்து அவரது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 20 அமைச்சரவை உறுப்பினர்களின் அச்சுறுத்தலை மே எதிர்கொள்கிறார்.
ஆயினும், இறுதியாக அவர் "தேசிய நலன்களை பாதுகாக்க தேசிய ஐக்கியம்" என்று கோர்பினுக்கு அழைப்பு விடுக்க தனது அமைச்சரவையின் உடன்பாட்டை பெற்றுள்ளார்.
ஏப்ரல் 10 ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர கூட்டத்தில், சட்டவிதி 50 இன் கீழ் தற்போது திட்டமிடப்பட்டுள்ள ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு அப்பால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான தேதியை நீட்டிப்பதற்கான தனக்கு கையளிக்கப்பட்டுள்ள எந்தவொரு உடன்பாட்டையும் பயன்படுத்துவேன் என்று மே கூறினார். ஆரம்பத்திலிருந்த 14-10 என எதிராக இருந்த வாக்குகளிலிருந்து சில சக உறுப்பினர்களை பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் மைக்கேல் கோவ் மாற்றிய பின்னரே இது அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. “நாம் சரியான நேரத்தில் ஒழுங்கான முறையில் வெளியேறுவதை உறுதிப்படுத்துவதற்கே அத்தகைய நீட்டிப்பு என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய வெளியேறும் ஒப்பந்தத்தை பின்வாங்குதல் மற்றும் "விரைவாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட முடியாது" என்ற முன் நிபந்தனை அடிப்படையிலும், கோர்பின் உடனான பேச்சுவார்த்தைகள் பிரெக்ஸிட்டின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால உறவுகளைப் பற்றியதாக இருக்கும்.
"இருவரும் கூட்டான உடன்பாட்டை" பாராளுமன்றத்தில் முன்வைப்பது சாத்தியமில்லை என்றால், கோர்பின் உடன் உடன்பட்டுள்ள பல்வேறு விருப்பங்களுக்கான மற்றொரு சுற்று வாக்கெடுப்பை பாராளுமன்றத்தில் மே முன்வைக்கலாம். இந்த நேரத்தில், தற்போது அடுத்த திங்களன்று திட்டமிடப்பட்ட வாக்குகள் வெறுமனே "பரிந்துரை" அல்ல. “ஒரு பெரும்பான்மையைப் பெற்ற முன்மொழியப்பட்ட உடன்பாட்டை, தொழிற் கட்சியும் அதையே செய்யுமானால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதை முன்வைப்பதற்கு அரசாங்கம் உடன்பட வேண்டும்.
தொழிற் கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் அவருடையதைவிட ஒரு மெதுமையான பிரெக்ஸிட் இற்கு வழிவகுக்கலாம் என்பதால் தனது பழைமைவாத கட்சியில் ஒரு பெரும் பிரிவினரை தனக்கு எதிராக கொண்டுவரும் அபாயத்திற்கு மே பொறுப்பேற்கின்றார், இது ஒரு பெரும்பான்மைக்காக மே தங்கியுள்ள 10 DUP பாராளுமன்ற உறுப்பினர்களாலும் மற்றும் தம்மை “Spartans,” என அழைத்துக்கொள்ளும் முக்கிய பழைமைவாதிகளின் கடுமையான பிரெக்ஸிட்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்பது ஏற்கெனவே நீரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.
பழமைவாதக் கட்சியில் ஒரு நிரந்தரமான பிளவு ஏற்படும் அபாயத்தை மே ஏற்றுக்கொள்ள தயாராவது உண்மையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆளும் வர்க்கம் எதிர்நோக்கும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியை உறுதிப்படுத்துகிறது. பிரெக்ஸிட் "முட்டுக்கட்டை" மற்றும் தொடர்ச்சியான பின்னடிப்பானது "நமது அரசியலுக்கு சேதத்தை விளைவிக்கின்றன" என்று மே வெளிப்படையாக எச்சரித்தார்.
கோர்பின் உடனான ஒரு உடன்பாடுதான் முன்னோக்கி செல்வதற்கான வழி என அவர் கருதிக்கொள்வதானது பழைமைவாதக் கட்சி தன்னை துண்டுகளாக உடைத்துக்கொள்ளும் நிலையில் கடந்த மாதங்களில் தொழிற் கட்சி தலைவர் வகிக்கும் பாத்திரத்தின் ஒரு அரசியல் வறுமையை எடுத்துக்காட்டுகின்றது.
"பிரதமரை" சந்திப்பதற்கு அவர் "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்" என்று Press Association இடம் மே இன் அழைப்பிற்கு ஒரு மணி நேரத்திற்குள் கோர்பின் பதிலளித்தார். "அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், கடந்த தேர்தலில் தொழிற் கட்சியை ஆதரித்தவர்கள் மற்றும் அதை ஆதரிக்காதவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான எனது பொறுப்பை உணர்ந்துகொள்வதுடன், அவர்கள் எதிர்காலத்தில் உறுதியையும் பாதுகாப்பையும் விரும்புகின்றனர். இந்த அடிப்படையில் நாம் அவரை சந்தித்து இந்த விடயங்களைக் கலந்துரையாடுவோம்" என்று தொடர்ந்து கூறினார்.
பிளேயர், பிரவுண், கேமரூன் மற்றும் மே ஆகியோரின் முதலாளித்துவ சார்பு சிக்கன கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விடுத்த அழைப்புக்கு ஆதரவளித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டுவதை விட்டுவிட்டு, அதன் கொள்கைகளை ஏற்று, தனது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து வேட்டையாடப்படுவதற்கு அனுமதித்த தொழிற் கட்சியின் வலதுசாரி பிரிவினருடன் கோர்பின் சமாதானமாகியுள்ளார். அவர் மற்றும் அவரது நிழல் சான்ஸலர் ஜோன் மெக்டொனல்லும் பெரு வர்த்தக மற்றும் லண்டன் நகரத்துடனான பேச்சுவார்த்தைகளில் மே "மேற்கோளிட்ட" தேசிய நலன் "நிலைப்பாட்டிற்கு உறுதியளிக்க பல மாதங்கள் செலவிட்டனர்.
மே உடன் கூட்டு சேர்வது என்பது இந்த அரசியல் காட்டிக்கொடுப்பின் தர்க்கரீதியான விளைவு ஆகும். கடந்த வாரம், துணை தொழிற் கட்சித் தலைவர் டொம் வாட்சன், "தேசிய ஐக்கியத்திற்காக" கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசாங்கத்திற்காக ஐரோப்பிய ஒன்றிய சார்பு பழமைவாதிகளுடன் சேர்ந்து பணியாற்றத் தயாராக உள்ளார் என்று பிளேயர்வாத சிந்தனைக்குழாமான Prospect இற்கு கூறினார். கோர்பின் இன் செய்தித் தொடர்பாளர், "இந்த நாட்டில் பெரும்பான்மையான வாக்காளர்களின் கருத்து கேட்கப்படுவதைத் தடுக்க" "ஸ்தாபனத்தின் ஒரு ஒட்டுவேலையே" ஒரு தேசிய அரசாங்கம் என விபரித்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, அவர் மற்றும் பிரதமர் ஆகியோர் தனிப்பட்ட கலந்துரையாடல்களில் தங்களை ஒன்றாக இணைத்துக் கொண்டனர்.
தற்போது மே இற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யவில்லையா என்று கேட்டதற்கு, கோர்பின் அதை "இருப்பில்" வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த சமீபத்திய சூழ்ச்சி வெற்றி பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் விருப்பத்தைக் கொண்ட சில கடுமையான பிரெக்ஸிட் பழமைவாத பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிரந்தரமாக மே இழந்து விட்டார். இவர்கள் தமக்கு விருப்பமான ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்பாடில்லாமல் வெளியேறுவதற்கான வழிகளை தேடுவார்கள். அடுத்த தேர்தலில் தலைமைக்கு போட்டியிடக்கூடிய போரிஸ் ஜோன்சன், "பிரெக்ஸிட் மீதான இறுதிக் கையாளலை ஜெர்மி கோர்பின் மற்றும் தொழிற் கட்சியிடம் ஒப்படைக்க அமைச்சரவை முடிவெடுத்தது மிகவும் ஏமாற்றமாக உள்ளது" என்றும் மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு சுங்க ஒன்றியம் ஒன்றுக்கு அவர் உடன்படமாட்டார் என்றும் கூறினார்.
உடன்பாட்டிற்கு தொழிற் கட்சி முழுபெரும்பான்மையின் ஒப்புதலுக்கு உத்தரவாதமளிக்கும் நிலையிலும் கோர்பின் இல்லை. முன்னணி பிளேயரிச பாராளுமன்ற உறுப்பினர் யுவெற் கூப்பர் திங்களன்று ஒரு உடன்படிக்கை இல்லாமல் வெளியேறும் எந்த சாத்தியத்தையும் தடுக்க மற்றும் சட்டவிதி 50 ஐ நீட்டிக்க ஒரு கோரிக்கையை முன்வைத்தார். இன்று கீழ்ச்சபையில் சிறப்பு சட்ட முன்மொழிவை முன்வைத்து அது ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திற்கு முன்பு மேற்சபையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னாள் பழமைவாத அமைச்சர் சேர் ஒலிவர் லெட்வினுடனும் மற்றும் கட்சி கடந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவுடன் கூப்பர் இணைந்து இயங்கி வருகிறார்.
ஹிலாரி பென் போன்ற மற்ற பிளேயரிசவாதிகள், திங்களன்று வாக்களிக்கவுள்ள எந்தவொரு மாற்றீட்டு பிரெக்ஸிட் திட்டத்தையும் ஒரு "இரண்டாவது வாக்கெடுப்புடன்" இணைத்துவிட முனைகின்றனர். இந்த வாக்கெடுப்பானது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இருப்பது மற்றும் மாற்றீடான திட்டத்தின் மீதானதாகவும் இருக்கும்.
விஷயங்கள் தவறாக சென்றால், ஒரு உடன்பாடு இல்லா ப்ரெக்ஸிட் இற்கு ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. ஏப்ரல் 10 ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்ற பெரும்பான்மைக்கு ஆதரவளிக்கும் ஒரு "நம்பகமான" திட்டம் மட்டுமே இதை தடுக்கக் கூடும் என்று ஐரிஷ் பிரதமர் லியோ வரட்கருடனான சந்திப்பில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்தார். "ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் இங்கிலாந்தின் அரசியல் நெருக்கடிக்கு ஒரு பிணைக்கைதியாக இருக்க முடியாது" என்று அவர் கூறினார்.
தொழிற் கட்சி தலைமையாக கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கி செல்ல ஒருவழியாகும் என்ற கூற்று இப்பொழுது கட்டவிழும் நிகழ்வுகளால் சிதறடிக்கப்படுகின்றது. வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதும், அரசியல்ரீதியாக தொழிலாள வர்க்கத்தை பலமிழக்கசெய்வதுமே பதவிக்கு வந்ததிலிருந்து அவருடைய பங்கு ஆகும்.
கடந்த வாரத்தில் அவருடைய தனித்துவமான கவனமானது அவரது சொந்த கட்சிக்குள் இருக்கும் ஒன்றியத்துடன் இருக்க வேண்டும் மற்றும் பிரெக்ஸிட்டிற்கு சார்பான பிரிவுகளுக்கு இடையே ஒரு பாதையை தேடுவதாகவே இருந்தது. இது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஸ்திரமற்றதாக்கும் ஆளும் வட்டாரங்களுக்குள் முறிவைத் தடுப்பதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தினால் ஒரு புரட்சிகர சமூக மற்றும் அரசியல் தாக்குதல் தூண்டிவிடப்படுவதை தடுக்கும் மிகமுக்கிய கடமைமைக்கும் தயாரிப்பதாகும்.
தொழிலாளர்களும் இளைஞர்களும் முன்னோக்கி செல்லும் ஒரே வழி, தொழிற் கட்சியிலிருந்து உடைத்துக்கொண்டு சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவதும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடித்தளமாக கொண்ட வர்க்கப் போராட்டத்தின் முன்னோக்கிற்காக போராடுவதுமாகும். முடிவில்லாத சிக்கன நடவடிக்கை, இராணுவவாதம் மற்றும் பிரெக்ஸிட் மோதல்களில் அனைத்துப் பிரிவினரினதும் சர்வாதிகாரக் நடவடிக்கைகளும் பதில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய உடன்பாடோ அல்லது தொடர்ச்சியான அங்கத்துவமோ அல்ல. மாறாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தை உருவாக்குவதே ஆகும்.