Print Version|Feedback
Report reveals that armed troops were mobilized to force through US aid provocation on Venezuelan border
வெனிசுவேலா எல்லையில் அமெரிக்க ஆத்திரமூட்டல் உதவிகளை பலவந்தமாக நடைமுறைப்படுத்தவதற்காக ஆயுதமேந்திய துருப்புக்கள் அணிதிரட்டப்பட்டிருப்பதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது
By Bill Van Auken
7 March 2019
ஜனாதிபதி நிகோலாஸ் மதுரோவுக்கு எதிரான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைத் தூண்டுதல் மற்றும் தென் அமெரிக்க நாட்டில் சாத்தியமான உள்நாட்டு போரை தூண்டுதல் போன்ற நோக்கங்களைக் கொண்ட வாஷிங்டனின், படையினர்களை மறைத்து கொண்டு சென்ற குதிரைப் பொம்மைகளுக்கு (Trojan horse) நிகரான வாஷிங்டனால் ஏற்பாடு செய்யப்பட்ட "மனிதாபிமான உதவி" வாகனத் தொடரணியை பலவந்தமாக உள்ளே அனுப்புவதற்கு கடந்த மாதம் ஆயுதம் ஏந்திய 200 வெனிசுவேலா இராணுவத்திலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் கூலிப்படைகள் கொலம்பிய, வெனிசுவேலிய எல்லையில் ஒன்று திரட்டப்பட்டனர்.
புளூம்பேர்க் செய்திகளின் படி, இந்த ஆயுதமேந்திய ஆத்திரமூட்டல் வெனிசுவேலாவுடனான அதன் எல்லையில் ஏற்படும் வன்முறை மோதல் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இராணுவ மோதலாக விரிவடையக் கூடும் என்று கொலம்பியா அஞ்சியமையால் கொலம்பிய அரசாங்கத்தால் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது.
கொலம்பிய மண்ணில் கூடியிருந்த ஆயுதமேந்திய குழுக்கள் ஓய்வுபெற்ற ஜெனரலின் தலைமையில் இருந்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. கிளிவர் அல்கலா (Cliver Alcala) எனும் சந்தேகத்திற்குரிய நபர், மதுரோ அரசாங்கத்தை கண்டனம் செய்தமையால் நாட்டை விட்டு வெளியேறி கொலம்பியாவில் தஞ்சம் புகுந்தார். வெனிசுவேலாவில் மறைந்த ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸின் (Hugo Chavez) நம்பிக்கைக்குரியவரான அல்கலா 1992 இல் தோல்விகண்ட அவரது இராணுவ ஆட்சி கவிழ்ப்பில் பங்கெடுத்தவராவார். 2011 ல் அமெரிக்க அரசாங்கத்தால் தண்டனைக்குட்பட்ட முதலாவது மூத்த வெனிசுவேலா இராணுவ அதிகாரிகளில் அல்கலா ஒருவராவார். கொலம்பிய FARC (கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்படைகள்) கெரில்லாக்களுடன் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களில் வர்த்தகத்தை ஒழுங்குசெய்ததற்காக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஜனவரி 23 ம் தேதி வெனிசுவேலாவின் "இடைக்கால ஜனாதிபதியாக" தன்னை அறிவித்த, வாஷிங்டனால் நாட்டின் "சட்டபூர்வமான" தலைவராக உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோவைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல், மதுரோவிற்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு அழைப்பு விடுத்து கடந்த மாதம் அல்கலா வெனிசுவேலிய இராணுவத்திற்கு பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அல்கலா தலைமையிலான தலையீட்டு படைகளை அணிதிரட்டுவதில் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் என்ன துல்லியமான பங்கு வகித்தன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த நடவடிக்கையானது 1954 இல் குவாதமாலாவில் Jacobo ءrbenz இன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கிவீச முயன்றது மற்றும் கியூபாவில் Bay of Pigs இல் தோல்வியடைந்த தலையீடு போன்ற CIA தன்கையிருப்பில் வைத்திருக்கும் இராணுவத்தலையீடு மற்றும் ஆத்திரமூட்டல்கள் அனைத்திற்குமான அடையாளங்களை கொண்டிருந்ததுடன், பாரிய மோதல்களுக்கும் மற்றும் ஒரு முழு அளவிலான யுத்தத்திற்குமான சாத்தியப்பாடுகளை கொண்டிருந்தது.
முடிவில், பெப்ரவரி 23 ம் தேதி, ஒரு சிறிய அளவு உணவு மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லும் டிரக்குகளை பலவந்தமாக உட்தள்ளும் முயற்சிகள் தோல்வி அடைந்தன.
"மனிதாபிமான உதவி" திட்டம் வெனிசுவேலாவின் பெருமளவு மக்களிடையே USAID இன் பொருள் வழங்கல்களுக்கு வரவேற்பைப் பெறும் அத்துடன் இராணுவத்தை கட்டாயப்படுத்தி உத்தரவை மீறி, மதுரோ அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வைக்கும் என்று குவைடோவும் வலதுசாரி எதிர்க்கட்சியும் கூறியுள்ளனர். இறுதியில், எல்லையில் கள்ளக் கடத்தலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குற்றம் சார்ந்த கும்பல்களால் ஆதரவளிக்கப்படும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான வலதுசாரி நடவடிக்கையாளர்கள் மட்டும்தான் கிளர்ந்தெழுந்தனர். இது தமது அணிகளை கைவிட்டுவராத இராணுவத்தால் எளிதில் முறியடிக்கப்பட்டது.
வாஷிங்டன் மற்றும் மேற்கத்திய செய்தி ஊடகம் தொடர்ச்சியான படிப்படியாக அதிகரிக்கும் விளம்பரப்படுத்தும் பிரச்சாரம் செய்த போதிலும், ஒரு அற்ப உதவியை வழங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இழிந்த போலி நடிப்பை மறைக்க முடியாது. மொத்தமாக 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக உத்தரவாதமளிக்கப்பட்டது. வெனிசுவேலா நிதி, வர்த்தகம் மற்றும் எண்ணெய் தடைகளால் நாட்டின் பொருளாதாரத்துக்கு 35 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு திட்டமிட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முதல் முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், வாஷிங்டன் மற்றும் அதன் வெனிசுவேலா கைக்கூலிகள் புதிய ஆத்திரமூட்டல் முயற்சிகளைத் தயாரித்து வருகின்றன. அதேநேரத்தில் ஒரு யுத்தகால அரசுக்கு சமமான ஒரு தண்டனைக்குரிய தடைகளை விதிக்கின்றது.
இராணுவத் தலையீட்டிற்கான ஆதரவைக் கோரி இலத்தீன் அமெரிக்காவிற்கு 11 நாட்கள் சுற்றுப்பயணத்திற்குப் பின்னர் குவைடோ திங்களன்று நாடு திரும்பினார். ஒரு குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளும் அதேவேளை நாட்டை விட்டு வெளியேற முடியாத ஒரு நீதிமன்ற உத்தரவை வெனிசூலா அதிகாரிகள் நடைமுறைப்படுத்தியிருந்தால், அமெரிக்க நடவடிக்கையின் நேரடி அச்சுறுத்தல்களுக்கு ஆளாவார்கள். மதுரோ அரசாங்கம், அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதர்கள் புடைசூழ பாதுகாப்புடன் குவைடோவை நாட்டினுள் நுழைய அனுமதித்ததன் மூலம் இந்த ஆத்திரமூட்டலை தவிர்ப்பதற்கு தெளிவாகத் தீர்மானித்தது.
ஒரு இலத்தீன் அமெரிக்க இராஜதந்திரி குறிப்பிடுகிறார் "மதுரோ விலகிச் செல்வார் என்ற எதிர்பார்ப்பில், அமெரிக்க மூலோபாயம் வெனிசுவேலாவில் உறுதியற்ற தன்மையைத் தூண்டுவதாகத் தெரிகிறது, அது இன்னும் ஆக்கிரோஷமான அமெரிக்க நடவடிக்கைக்கு கட்டளையிட முடியும்" என்று ப்ளூம்பேர்க் செய்தி மேற்கோளிட்டுள்ளது.
வெனிசூலா நோக்கி அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் தொடர்ச்சியான ஒரு போராட்டத்தில், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க காங்கிரசிற்கு வெனிசுவேலாவின் மீது "தேசிய அவசரகால" அறிவிப்பை விரிவுபடுத்தும் ஒரு உத்தரவை வெளியிட்டது. இது நாட்டை "அசாதாரண மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அசாதாரண அச்சுறுத்தல்" என்று விவரிக்கிறது.
வெனிசுவேலாவிற்கு எதிராக வாஷிங்டன் காலவரையற்ற ஆக்கிரமிப்பை நடத்திய சூழ்நிலையில், "தேசிய அவசரகால" உத்தரவு உண்மையான வாழ்க்கை முறையை தலைகீழாக மாற்றுகிறது. எப்பொழுதும் அதிகரித்துவரும் நாட்டிற்கு எதிரான பொருளாதார தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு சட்ட அடித்தளத்தை அமைப்பதற்காக, ட்ரம்பின் ஜனநாயக முன்னோடி பாரக் ஒபாமாவால் மார்ச் 2015 இல் முதல் முறையாக தேசிய அவசரகால" உத்தரவு செயல்படுத்தப்பட்டது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பார்வையில், வெனிசுவேலாவால் முன்வைக்கப்படும் "அசாதாரண அச்சுறுத்தல்", பூமியில் இருப்பதிலேயே மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்கள் அமெரிக்க சக்தி பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை மற்றும் கரக்காஸ் ஆனது பீஜிங் மற்றும் மாஸ்கோவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை உருவாக்கியுள்ளது என்பவற்றின் காரணங்களாலேயே ஆகும். இதை தலைகீழாக மாற்றுவதே "இடைக்கால ஜனாதிபதியாக" குவான் குவைடோவின் சுய பிரகடனத்தை மையமாகக் கொண்ட விரிவடைந்து கொண்டுவரும் சதி ஆகும்.
வெனிசுவேலா அரசாங்கம் அவ் உத்தரவுக்கு பின்வருமாறு பதிலளித்தது, "உலகின் மிகப்பெரிய பெரும்பாலான நாடுகளில், பூமியிலேயே நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய இராணுவ சக்தி கொண்டுள்ள, இது சர்வதேச சட்டத்தை மீறுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இழக்காததுடன், மேலும் அதன் சொந்த நலன்களுக்காக அதனது பலத்தை திட்டமிட்டு பயன்படுத்துவதுடன், வெனிசுவேலாவை ஒரு ‘அச்சுறுத்தலாக’ விவரிக்க முயற்சிக்கிறது."
வெனிசுவேலா மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கும் இரண்டு அமெரிக்க அதிகாரிகளான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் மற்றும் வெனிசுவேலாவில் வாஷிங்டனின் சிறப்பு பிரதிநிதி, எலியட் ஆப்ராம்ஸ், இருவரும் நாட்டிற்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த அச்சுறுத்துகின்றனர்.
வாஷிங்டன், "வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வெனிசுவேலா அரசாங்கத்துடன் கையாளுமானால் அவையும் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அறிவித்திருப்பதாக" போல்டன் அறிவித்தார்.
இதேபோல், செவ்வாயன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில் ஆப்ராம்ஸ், வெனிசூலாவுடன் வர்த்தகத்தை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு எதிராக இரண்டாம்தர தடைகள் "தெளிவாக ஒரு சாத்தியம்" என்று கூறினார்.
வெனிசுவேலாவில் இராணுவத் தலையீட்டிற்கு வாஷிங்டனிடம் திட்டம் உள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, "எங்களிடம் நிறைய திட்டங்கள் உள்ளன; நாம் எடுக்கக் கூடிய பல நடவடிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம்" என்று அப்ராம்ஸ் பதிலளித்தார்.
அவர் கூறினார், அமெரிக்க கொள்கையானது, பொருளாதார மற்றும் நிதி அழுத்தத்தை பின்தொடர்ந்து மதுரோ அரசாங்கத்தை "அமைதியான மாற்றம்” மூலம் வீழ்த்துகிறது. ஆனால் "அனைத்து விருப்பங்களும் மேஜையில் உள்ளன" என்று மீண்டும் வலியுறுத்தினார்.
நிக்காரகுவாவுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட "கொன்டுரா" பயங்கரவாத இராணுவத்தை நிதி மற்றும் ஆயுதமளித்த சட்டவிரோதமான நடவடிக்கையைப் பற்றி 1986 இல் காங்கிரஸ் இற்கு பொய்கூறியதற்காக ஆப்ராம்ஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார். வெனிசுவேலாவில் ட்ரம்ப் நிர்வாகத்தின் சிறப்பு பிரதிநிதி என்ற முறையில் அவரது நியமனம் அந்த நாட்டிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றவியல் ஆக்கிரமிப்புக்கு ஒரு தெளிவான அடையாளம் ஆகும்.
செவ்வாயன்று குவைடோ பொதுத்துறை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க ஊழியர்கள் குழுவொன்றை சந்தித்தார், அதன் பின்னர் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களை தொடரும் என்று கூறினார். அவரோ அல்லது அதிகாரிகளோ இந்த வேலைநிறுத்தங்களின் திகதியையோ அல்லது எந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பர் என்று எந்தவொரு தகவலையோ அறிவிக்கவில்லை. அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சி மாற்றத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்ட, வெனிசுவேலாவில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரிவுகள் குவைடோவிற்கு பின்னால் அணிதிரண்டுள்ளன.
வெனிசுவேலா தொழிலாளர்கள், பணவீக்கம், விலை அதிகரிப்பு, அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை ஒடுக்குதல் ஆகியவற்றின் கீழ் தங்கள் வாழ்க்கைத் தரங்களின் சிதைவை எதிர்கொள்கின்றனர். ஒரு நாட்டில் முதலாளித்துவ நலன்களை காக்கும்போது, நாட்டின் பொருளாதார நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் மதுரோ அரசாங்கம் சுமத்தியுள்ளது. எனவே “பொலிவாரிய சோசலிசம்” பற்றிய` அதன் வார்த்தையாடல்களுக்கு மத்தியில், பொருளாதாரத்தில் தனியார் கட்டுப்பாடு உண்மையில் வளர்ந்துள்ளது மற்றும் நிதித்துறையினரின் இலாபம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க தலையீட்டின் உதவியுடன் குவைடோவினதும் வெனிசுவேலாவின் தன்னலக்குழுவினது தீவிர வலதுசாரி பிரதிநிதிகளும் அதிகாரத்திற்கு வருவதற்கான எழுச்சியானது, வெனிசுவேலிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு இரத்தக்களரியை ஒழுங்கமைக்கும் தேவைக்காக வங்கிகளினதும், பெருமுதலாளித்துவத்தினதும், வெளிநாட்டு மூலதனத்திற்கும் வழிகாட்டியாகவும் இருக்கும்.
வெனிசுவேலாவை பீடித்துள்ள வெகு ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு முதலாளித்துவ சொத்துடமைகளை பறிமுதல் செய்து மற்றும் வெனிசுவேலாவின் பரந்த எண்ணெய் வளத்தை வெகுஜனக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு போராடுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தலையீட்டை தவிர எந்த முற்போக்கான வழியும் இல்லை. அத்துடன் அமெரிக்கா முழுவதுமுள்ள தொழிலாளர்களினதும் ஒடுக்கப்பட்டோரதும் ஆதரவிற்கு அழைப்புவிட வேண்டும்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய தலையீட்டை முற்றுமுழுதாக எதிர்க்க வேண்டும். பொது எதிரியான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக வெனிசுவேலா மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தினது போராட்டத்துடன் தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்தவேண்டும்.