ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Anti-Brexit “Put it to the People” march mobilises hundreds of thousands

பிரெக்ஸிட் எதிர்ப்பு "மக்கள் வாக்கை கோரும்" அணிவகுப்பு நூறாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டுகிறது

By Robert Stevens
25 March 2019

நூறாயிரக்கணக்கான மக்கள் இன்னொரு பிரெக்ஸிட் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரி சனிக்கிழமை லண்டன் தெருக்களில் அணிதிரண்டனர்.

அரசியல்வாதிகள் மற்றும் பசுமைக் கட்சியிலிருந்து தாராளவாத ஜனநாயகவாதிகள் வரை மற்றும் தொழிற் கட்சியின் பிளேயர் பிரிவிலுள்ள ஒன்றியத்துடன் இருக்கவேண்டும் என்ற பழைமைவாதிகள் வரை விரிவடைந்த ஒன்றியத்துடன் இருக்கவேண்டும் என்ற அமைப்புக்களின் கூட்டணியான மக்கள் வாக்கெடுப்பு இயக்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அணிவகுப்பு, பாராளுமன்ற சதுக்கத்தில் ஒரு பேரணியுடன் முடிவடைந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னைய நாட்களில், பிரெக்ஸிட் ஐ அங்கீகரிக்கும் சட்டவிதி 50 சட்டத்தை இரத்து செய்வதற்கு அழைப்பு விடுத்து, மில்லியன் கணக்கான மக்கள் கையெழுத்திட்ட ஒரு இணையவழி மனுவில் இப்போது 5 மில்லியன் மக்களுக்கும் மேலாக கையெழுத்திட்டிருக்கிறார்கள்.


பாராளுமன்ற சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி

ஆர்ப்பாட்டம் மற்றும் மனு என்பன, ஒன்றியத்துடன் இருக்கவேண்டும் என்ற பிரச்சாரத்தால் இப்போது மக்களிடையே பெரும்பான்மையான கருத்து என்னவாக உள்ளது என்பதைக் காட்டுகின்ற ஒரு காட்சி நிகழ்வாக இருந்தது. அணிவகுப்புக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஒரு YouGov கருத்துக்கணிப்பு 57 சதவிகிதத்தினர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், அதற்கு எதிராக 43 சதவிகிதத்தினர் வெளியேறுவதற்கு விரும்புகின்றனர் என்று தெரிவிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இருக்க ஆதரவளிக்கும் ஒரு திருப்பம் வந்துள்ளது என்பது ஆச்சரியமளிக்கவில்லை. ஏனெனில் ஜூன் 2016 வாக்கெடுப்பில் இருந்து கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கான முழு செயல்முறையுமே ஒரு அப்பட்டமான பேரழிவாகும்.

இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு செல்ல திட்டமிடப்படப்பட்டிருந்ததற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் சனிக்கிழமை அணிவகுப்பு நடைபெற்றது. இருப்பினும், நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் முடிவெடுத்த ஒப்பந்தத்தில் தெரேசா மே அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால், இந்த வாரம் பாராளுமன்றத்தில் அவர் தனது ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றால் மட்டுமே, மே மாதம் 22 அன்று பிரெக்ஸிட்டின் தாமதத்தை அனுமதித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மே இற்கு மேலதிக காலத்தை கொடுத்தனர். இல்லையெனில், மே, ஏப்ரல் 22 வரை ஒரு தீர்வை முன்மொழிய வேண்டும்.

பிரித்தானியாவின் பூகோளமூலோபாய நலன்களை ஒரு சுதந்திர வர்த்தகமாக மாற்றுவதன் மூலம் பாதுகாக்கலாம் மற்றும், அமெரிக்காவுடன் இணைந்து வலுவான கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்தியா மற்றும் சீனா உட்பட புதிய உலகளாவிய சந்தைகளில் ஊடுருவ முடியும் என்ற நோக்கத்தால் பிரெக்ஸிட்டிற்கு முதலாளித்துவத்தின் ஒரு பிரிவின் ஆதரவு இருந்தது.

"ஐரோப்பிய ஒன்றிய தேசபற்றை" விதைத்தல் மற்றும் வளர்ந்து வரும் ஏகாதிபத்திய வர்த்தக மற்றும் இராணுவ முரண்பாடான நிலைமைகளின் கீழ், இங்கிலாந்தின் சொந்த தேசிய நலன்கள் உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பிணைந்துள்ளது என்ற வலியுறுத்தல் என்பனவே ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவான பிரச்சாரத்தின் ஒரு மைய அம்சமாகும்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் முகங்களில் ஐரோப்பிய ஒன்றிய நட்சத்திரங்களை நீல வண்ணத்தில் சாயம் பூசி, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை மேலாடையாக அணிந்து கொண்டு வருவதிலிருந்து இதன் தாக்கத்தை புரிந்துகொள்ள முடியும். எவ்வாறாயினும், பரந்தளவிலான பெரும்பான்மையினர் ஒரு முற்போக்கான தன்மை கொண்ட பரந்த கவலைகளின் அடிப்படையிலேயே கலந்துகொண்டனர். அவர்கள் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு மற்றும் தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சி பற்றி கவலை கொண்டுள்ளனர்.

பொருளாதாரம் மற்றும் அவர்களது வேலைகள் மற்றும் அடுத்த தலைமுறைக்கான குறைந்து வரும் வாய்ப்புகள் ஆகியவற்றின் மீது பிரெக்ஸிட் தாக்கத்தை பற்றியும்  குறிப்பாக பல இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக தங்கியிருக்கும் பிரெக்ஸிட் உடன் சேர்ந்துவரும் சுதந்திர நகர்வு முடிவடைவதால் மில்லியன் கணக்கானவர்கள் அஞ்சுகின்றனர்.

பசுமைக் கட்சியின் ஒரே பாராளுமனற உறுப்பினர் கரோலின் லூகாஸ், ஸ்கொட்லாண்ட் தேசிய கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகத்தினர் உட்பட ஒன்றியத்துடன் இருக்க வேண்டும் என்ற கூட்டணியின் முன்னணி அரசியல் பிற்போக்குவாதிகளால் இந்த உணர்வுகள் தமக்கு சாதகமாக சுரண்டப்படுகின்றன.

பழமைவாதிகளில் உரையாற்றியவர்கள் மத்தியில், டொமினிக் கிரீவ் மற்றும் தாட்செரிஸ ஆதரவாளராக "மூத்த அரசியல்வாதியான" பாத்திரத்தை வகிக்க நியமிக்கப்பட்ட மைக்கல் ஹேசெல்டின் ஆகியோர் இருந்தனர். பழமைவாதிகளிடமிருந்து பிரிந்து கடந்த மாதம் வேறு இரண்டு பழமைவாத பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏழு பிளேயர்வாத குழுக்களுடன் இணைந்த சுயேட்சைக் குழு என்னும் ஒரு புதிய பாராளுமன்ற குழுவொன்றை அமைத்த அன்னா சௌப்ரியும் உரையாற்றினார். லண்டன் மேயர் சாதிக் கான், டேவிட் லம்மி மற்றும் ஜெஸ் பிலிப்ஸ், ஒன்றியத்துடன் இருக்க வேண்டும் என்ற "இடது" சார்பை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றொரு தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் க்ளைவ் லூயிஸ் ஆகியோர் மக்கள்  கூட்டத்தில்  உரையாற்றினார்கள்.

பாராளுமன்ற சதுக்க பேச்சாளரில் தொழிற் கட்சி துணைத் தலைவரான டொம் வாட்சன் கட்சியில் தலைமை வகிப்பதற்கான தனது முயற்சிகளை ஊக்குவிக்க வாய்ப்பைப் பயன்படுத்தினார். தொழிற் கட்சி உத்தியோகபூர்வமாக ஆர்ப்பாட்டத்திற்கு பின்னால் நிற்பதில்லை மற்றும் ஆதரவளிப்பதில்லை என்ற கட்சியின் தலைவரான ஜெர்மி கோர்பின் முடிவிற்கு வாட்சன் உடன்படாததுடன் உடனடி இரண்டாம் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். அவர் இல்லாததைக் குறிப்பிட்டு, கூட்டத்தின் சில பகுதிகள் "ஜெர்மி கோர்பின் எங்கே?" என்று குரலெழுப்பினார்கள்.

இருப்பினும், "நான் பாராளுமன்றத்தில் உங்கள் ஒப்பந்தத்தை ஆதரிக்கிறேன், அல்லது எனது கட்சியுடன் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டால் திருத்தப்பட்ட உடன்படிக்கையை நான் ஆதரிக்கிறேன். ஆனால், மக்களை அதற்கு வாக்களிக்க அனுமதித்தால் மட்டுமே உங்கள் ஒப்பந்தத்தை நான் அனுமதிக்கிறேன்" என்று மே  இற்கு கூறியமையால் வாட்சன் கூட்டத்திலிருந்த ஒரு பிரிவினரின் கூக்குரலிற்கு உள்ளனார்.



தொழிற் கட்சியின் துணைத் தலைவர் டொம் வாட்சன் பேரணியில் உரையாற்றுகிறார்

முந்தைய நாளில், போலி-இடது குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு ஐரோப்பா சாத்தியம் பிரச்சாத்தின் துணை ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்தனர். மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் கண்டத்தை "எல்லைக் கட்டுப்பாடு" என்று மாற்றுவதன் மூலம் ஆயிரக்கணக்கான அகதிகளை படுகொலை செய்வதன் மூலமும் மில்லியன் கணக்கான மக்களுக்கு வறுமை மற்றும் துயரத்தை சுமத்திய, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக மோசமான "அதிகப்படியான" நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் கூட்டுச்சதி செய்தனர். ஆனால் இது அனைத்துமே தெளிவற்ற கோஷம், "உள்ளுக்குள் இருப்போம் மாற்றுவோம்" முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியம் என்றால் என்ன மற்றும் ஐரோப்பிய கோட்டை எதுவாக மற்றும் யாரால் மாற்றப்படும் என்பது  பற்றி எங்குமே அவர்கள் எதனையும் விளக்கவில்லை.

பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி அரசியல் சக்திகளின் தலைமையில் சில ஐரோப்பிய ஒன்றிய சார்பு இயக்கத்தின் யதார்த்தத்தை எதிர்கொண்டு, நான்காம் அகிலத்தின் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் பிரித்தானிய பிரிவான சோசலிச எதிர்ப்பு, "தொழிற் கட்சி மற்றும் பழமைவாதிகளை கொண்ட அதன் முக்கிய அமைப்பாளர்களை கோர்பின் தலைமைத்துவத்தின் கடும் எதிரிகள் என்று கருதுவது பொருத்தமற்றது. நூறாயிரக்கணக்கான மக்கள் வீதிகளுக்கு இறங்கும் போது, நிகழ்வுகள் பீட்டர் மண்டேல்சன் மற்றும் அலிஸ்டியர் காம்பெல் [டோனி பிளேயரின் முன்னாள் ஆலோசகர்கள்] போன்றவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை ஆகிவிடும்." என குறிப்பிட்டது.

"ஒரு வித்தியாசமான தலைமையின் கீழ் லண்டன் ஆர்ப்பாட்டமானது பழமைவாத அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை பிரெக்ஸிட்டிற்க்கு எதிரான பிரச்சாரத்துடன் ஐக்கியப்படுத்தியிருக்கலாம்" என்ற உண்மையை சோசலிச எதிர்ப்பு மறுக்கிறது. ஆனால், "அமைப்பாளர்களின் நோக்கங்கள் என்னவென்றாலும்" இந்த ஆர்ப்பாட்டங்கள் பழமைவாதிகளை பலவீனப்படுத்துகின்றன, "தொழிற் கட்சிக்கு அந்த நன்மையைக் கொடுக்க வேண்டும்" என்றார்.

இவை ஆபத்தான அரசியல் பொய்களாகும். பிரெக்ஸிட் தொடர்பான ஒரு முன்னோடியில்லாத நெருக்கடி மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நிலைக்கு பெருகும் அச்சுறுத்தல் ஆகியவற்றின் மத்தியில், மக்களுடைய பரந்த அடுக்குகளை பாதிக்கும் பெரும் சமூக மற்றும் அரசியல் அதிருப்தி நிலவுகிறது.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளும் அதன் இருப்பிற்கே ஆபத்தான  நெருக்கடியானது அடுத்த சில நாட்களில் மற்றும் வாரங்களில், மே ஐ அகற்றுவது, கடுமையான பிரெக்ஸிட்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறல், சட்டவிதி 50 ஐ இரத்து செய்தல், இரண்டாவது வாக்கெடுப்பு மற்றும் இரண்டாவது இடைபொதுத் தேர்தல் உட்பட மேலதிக சீர்குலைக்கும் நிகழ்வுகளுக்கு இட்டுச்செல்லலாம். ஆனால் தொழிலாள வர்க்கம் ஒரு தலைமையின்கீழ் தலையிட்டு, அதன் சுயாதீன நலன்களை வெளிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தலையிடாது விட்டால், பிரெக்ஸிட் பிளவின் இரண்டு பக்கங்களிலும் உள்ள வலதுசாரி சக்திகள் அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்தும் கட்டுப்படுத்தும்.

தொழிற் கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இதுதான் நிலைமை.

கோர்பின் தனது தலைமையின் கீழ் ஒரு அரசாங்கம் பெருவணிகத்தின் நம்பகமான பங்காளியாக செயற்பட, வாட்சன் மற்றும் பிளேயர்கள் ஆணையிடும் ஒரு திட்டத்தை செயல்படுத்த இருப்பதையும் உறுதிசெய்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக செலவிட்டார். தனது பதவியிலிருந்து கூட, லண்டனில் நடந்த கூட்டத்தில் வாட்சனின் கூறியதற்கு எதிராக அவர் எதுவும் கூறவில்லை.

பிளேயரின் முன்னாள் தொடர்பாடல் இயக்குநரும் மற்றும் குற்றஞ்சாட்டப்படாத போர் குற்றவாளியான அலஸ்டெய்ர் காம்பெல் ஐ அவர் எவ்வாறு விஷயங்களை சமரசம் செய்ய முற்பட்டார் என்று நிழல் அதிபர் ஜோன் மெக்டோனல், வெள்ளிக்கிழமை சனல் 4 செய்திக்குத் தெரிவித்திருந்தார்.

பிரித்தானிய அரசியலில் இருந்து அவரது வழக்கமான தோற்றத்தை ஏற்றுக்கொண்ட அவர் கூறினார், "நான் பேரணியில் கலந்து கொள்ளப் போகிறேனா என்று அலஸ்டெய்ர் காம்பெல் என்னிடம் கேட்டார். அங்கேதான் போய்க் கொண்டிருக்கிறேன், அங்கு நான் பிரெக்ஸிட் இற்கு ஆதரவான பலம்வாய்ந்த சிலரை தனிமைப்படுத்த விரும்புகிறேன்" என்று நான் மிகவும் நேர்மையாக கூறினேன்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான முன்னோக்கை முன்னெடுத்த பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியே ஒரே அரசியல் கட்சியாக இருந்தது. அதன் கருத்து, ஐரோப்பா முழுவதும் சோசலிசத்திற்கான போராட்டத்துடமே பிரெக்ஸிட் பதிலாகும்! அது எச்சரித்தது:

"தொழிலாள வர்க்கத்தினுள் ஆழமான பிளவை ஏற்படுத்துவதற்கும், வலதுசாரி முதலாளித்துவ பிரிவுகளை எதிர்ப்பதற்கு தொழிலாளர்களை அடிபணிய வைப்பதற்கும் மற்றும் பொது வர்க்க எதிரிக்கு எதிராக தேவையான ஐக்கியப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்கும், ஆளும் வர்க்கம் மற்றும் அதன் செய்தி ஊடகம் பிரெக்ஸிட் ஐ வேண்டுமென்றே பயன்படுத்துகிறது என்பதுதான் மிகப் பெரிய அரசியல் ஆபத்து ஆகும்.

"சோசலிச சமத்துவக் கட்சி (SEP) நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிரித்தாளும் தந்திரத்தை முறியடிக்க ஒரு நனவான அரசியல் நிராகரிப்புக்கு அழைப்பு விடுகிறது. ஆனால் முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு முன்னோக்கையும் நிராகரித்து சோசலிசத்திற்கான போராட்டத்தை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் மட்டுமே அது அடையப்பட முடியும்."