Print Version|Feedback
French-Italian proxy war in Libya
லிபியாவில் பிரெஞ்சு-இத்தாலிய நிழல் யுத்தம்
By Marianne Arens
26 February 2019
பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையேயான கடுமையான பதட்டங்களுக்குப் பின்னே ஸ்தூலமான பொருளாயத நலன்கள் உள்ளன, அது பெப்ரவரியில் பிரான்ஸ், ரோமில் உள்ள தனது தூதரை தனது நாட்டிற்கு திரும்ப அழைப்பதற்கு இட்டுச்சென்றது. 2011 நேட்டோ போருக்குப் பின்னர் பல டசின் கணக்கான ஆயுதக் குழுக்கள் மேலாதிக்கத்திற்காக போராடுகின்ற லிபியாவில், இரண்டு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களும் ஆபிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ஒரு நிழல் போரை நடத்தி வருகின்றனர்.
ஜேர்மனி மற்றும் ஐ.நா. ஆதரவளிக்கும் திரிப்போலியிலுள்ள (Tripoli) ஃபெய்ஸ் அல்-சரஜ்ஜின் (Fayez al-Sarraj) தேசிய உடன்படிக்கை (GNA) அரசாங்கத்தை இத்தாலி ஆதரிக்கின்ற அதே வேளையில், பிரான்ஸ், டோப்ருக்கில் (Tobruk) அதன் இராணுவத் தலைவராக உள்ள மார்ஷல் கலீஃபா ஹஃப்டரின் (Marshal Khalifa Haftar) லிபிய தேசிய இராணுவத்துடன் (LNA) இணைந்துள்ளது. எகிப்தும் ரஷ்யாவும் கூட ஹஃப்டாரை ஆதரிக்கின்றன.
இந்த யுத்தம் எண்ணெய் நலன்களைப் பற்றியதும் ஆபிரிக்காவில் மூலோபாய செல்வாக்கு பற்றியதும் என்பது ஒரு வெளிப்படையான இரகசியம் ஆகும்.
தலைநகருக்கு வெளியே சிறிய செல்வாக்கைக் கொண்டுள்ள ஃபெய்ஸ் அல்-சரஜ்ஜின் இன் "தேசிய உடன்படிக்கை அரசாங்கம்", லிபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனத்தை (NOC) கட்டுப்படுத்துகிறது. லிபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனத்தில் இத்தாலிய சக்தி குழு ENI அரை நூற்றாண்டாக ஈடுபட்டு வந்திருக்கிறது. இத்தாலி திரிப்போலியில் தனது தூதரகத்தை மீண்டும் திறந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து GNA லிபிய கடலோரக் காவற்படைக்கு நிதியளித்து, ஐரோப்பாவில் குடியேறுபவர்களை வெளியேற்றும் ஐரோப்பாவின் எல்லைப் பாதுகாப்புப் படை போல செயற்படுத்துகிறது.
ஹஃப்டார் இன் லிபிய தேசிய இராணுவம் ஏற்கனவே கடந்த கோடைகாலத்தில் நாட்டின் கிழக்கில் பெங்காசியைச் சுற்றியிருக்கும் எண்ணெய் வளங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. பெப்ரவரி தொடக்கத்தில், நாட்டின் மிகப்பெரியதாக கருதப்படும் எல் ஷராரா (El Sharara) எண்ணெய் வயல் உட்பட, நாட்டின் தென்மேற்கே உள்ள எண்ணெய் வயல்களின் கட்டுப்பாட்டையும் தனதாக்கியது.
திரிப்போலி நகரில் ஐக்கிய அரசாங்கத்திற்கு எதிராக அதிக ஊதியங்கள் மற்றும் எண்ணெய் வருவாயில் போதுமான பிராந்திய பங்கைக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் கடந்த ஆண்டு இறுதியில் எல் ஷராரா எண்ணெய் வயல்களை ஆக்கிரமித்தனர். இது பல சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் 1994 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது, இதில் ஆஸ்திரிய OMV யோடு கூட, பிரான்சின் டோட்டலும் பங்கேற்கிறது.
ஹஃப்டார் இராணுவ ரீதியாக பிரான்சால் ஆதரவளிக்கப்படுகிறார். அரசாங்கம் தொடர்பான ஜேர்மனிய விஞ்ஞான மற்றும் அரசியலுக்கான அறக்கட்டளை (SWP) கூறுகிறது: பிரான்ஸ் "தெற்கில் ஹஃப்டாரின் செயல்பாட்டிற்கு அரசியல் மற்றும் இதர பிற வடிவங்களில் ஆதரவு கொடுத்ததுடன், அதன் மேற்கத்திய பங்காளிகள் இந்த பிரச்சினை பற்றிய கூட்டு அறிக்கைகளை வெளியிடுவதையும் தடுத்தது."
சாஹேல் மண்டலத்தில் இஸ்லாமிய குடிப்படைகளுக்கு எதிரான போராட்டத்துடன் அதிகாரபூர்வமாக, பாரிஸ் ஹஃப்டாருக்கு அதன் ஆதரவை வழங்குகிறது. பாற்க்கானே (Barkhane) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் பல ஆண்டுகளாக, 4,000 க்கும் அதிகமான துருப்புக்களுடன், மௌரிடானியா, மாலி, நைஜர், புர்கினா பாசோ மற்றும் சாட் ஆகிய ஐந்து சாஹேல் நாடுகளிலும் தலையிட்டு வருகிறது. இந்த நடவடிக்கையை பிரிட்டனும் எஸ்தோனியாவும் ஆதரிக்கின்றன, மேலும் மாலியில் ஜேர்மன் இராணுவப் படைகளுடன் இணைந்து செயல்படுகிறது.
ஒரு பிரெஞ்சு அரசாங்க ஆலோசகர் முன்னர் இராணுவ நடவடிக்கைகளுக்கான அதிக செலவு பற்றி புகார் செய்தார் மற்றும் லிபியாவை ஸ்திரப்படுத்துவதுதான் இதனை இறுதி முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி என்று கூறினார். அதனால்தான் பிரெஞ்சு அரசாங்கம் ஹஃப்டாரை தேர்ந்தெடுத்தது.
சுவிஸ் தினசரியான ட்ரிப்யூன் டு ஜெனீவ் இன் படி, ஃபீல்ட் மார்ஷல் ஹஃப்டார் இன் ஒரு இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பொதுவான நலன் எங்களுக்கு இருந்தது. சாட், மாலி மற்றும் நைஜர் போன்ற தெற்கில் உள்ள எங்கள் அண்டை நாடுகளில் பயங்கரவாத குழுக்களை பிரான்ஸ் பின்தொடர விரும்பியது, அங்கு இந்த குழுக்கள் பெரிதும் பரவியிருந்தன.”
"ஆயினும், பல அவதானிப்பாளர்கள் பிரான்ஸ் முக்கியமாக எண்ணெய் நலன்களுடன் அக்கறை கொண்டுள்ளது என்று நம்புகின்றனர், மற்றும் இத்தாலி மற்றும் பிரான்சிற்கு இடையிலான எண்ணெய் போட்டியே லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போருக்கு முக்கிய காரணம் ஆகும்.
2014 ல் இருந்து 2018 வரை டோப்ருக் பாராளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த முகம்மது அல்-டயரி (Mohammed al-Diari), ட்ரிப்யூன் டி ஜெனீவிற்கான ஒரு நேர்காணலில் விளக்குகையில், லிபியாவில் உள்ள வட்டாரங்களில் ஆயுதப் போராட்டத்தை "இத்தாலிய குழு ENI மற்றும் டோட்டல் இடையேயான போட்டிகள்" என்று கூறினார். பொதுவாக "எண்ணெய் வளங்கள் பற்றிய பிரச்சினையானது மிகவும் உணர்திறன் வாய்ந்தது." 2011 ல் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினரான அப்துல் ஹஃபிஸ் கோகோ (Abdul Hafiz Ghoga) பத்திரிகையிடம்: "சர்வதேச சமூகம் ஒருமித்த கருத்தை அடையாவிட்டால் லிபியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இருக்காது" என்று கூறினார்.
2011 இன் நேட்டோ குண்டுவீச்சு பிரச்சாரம் முக்கியமாக மனித உரிமைகள் பற்றி அல்லாமல் எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றி, ஆபிரிக்காவிற்கு அணுகல் மற்றும் வட ஆபிரிக்காவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் ஆகிய பிரான்சின் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது. ஏகாதிபத்திய ஆதரவாளர்களால் ஆயுதங்களும், நிதியும் அளிக்கப்பட்ட போட்டியாளர்களின் குற்றவியல் ஆயுதக் குழுப்படைகளுக்கு இடையே நடைபெறும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இவற்றிற்கு இரத்தம் தோய்ந்த விலையை லிபியாவின் மக்கள் இன்னமும் செலுத்துகின்றனர்.
2018 ஆகஸ்ட் இறுதியில் திரிப்போலி மீது நடைபெற்ற இரத்தம் தோய்ந்த மோதலில், உத்தியோகபூர்வ தகவல்களின்படி முழு அண்டை நாடுகளின் அழிவுகளால் 115 பேர் உயிரிழந்ததுடன் 25,000 பேர் வீடற்றவர்களாகினர்.
இந்த பிராந்தியத்தில் பிரான்சும் இத்தாலியும் மட்டுமே ஒரே நவீன காலனித்துவ வினையாளர்கள் அல்ல. ஜேர்மனி, அமெரிக்கா, பிரித்தானியாவும் கூட தங்கள் நலன்களைப் பாதுகாக்கவும் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தவும் முயற்சிக்கின்றன.
முன்னர் ஸ்ருட்கார்ட்டை (Stuttgart) தளமாகக் கொண்ட AFRICOM மையத்தை லிபியாவிற்கு நகர்த்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்கிறது. வாஷிங்டன் முக்கியமாக ஆபிரிக்காவில் சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தை நிறுத்த முற்படுகிறது. ஈரானின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா நட்பு அரபு நாடுகளுடன் அதன் கூட்டணியை ஒருங்கிணைக்க விரும்புகிறது. சிசிலியிலிருந்து பறக்கும், அமெரிக்கப் படைகள் பலமுறை ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது அல் கொய்தாவின் நிலைகளை அழிப்பதற்கு என்று கூறி லிபிய நகரங்களுக்கு எதிரான குண்டுவீச்சு தாக்குதல்களை முன்னெடுக்கின்றன.
ஜேர்மன் அரசாங்கம் லிபியப் போரில் பங்கேற்காத நிலையில், அதன் 2011 வெளியுறவுக் கொள்கையின் "தவறுகளை" நிவர்த்தி செய்ய, ஆபிரிக்காவில் அதன் செல்வாக்கை செலுத்த விரும்புகிறது. ஏற்கனவே லிபியாவைச் சுற்றியுள்ள மாலி, மொரோக்கோ, துனிசியா, சூடான், தெற்கு சூடான் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகியவற்றில் ஜேர்மனி இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
தூதரக பாசாங்கு மொழியில், விஞ்ஞானத்திற்கும் அரசியலுக்குமான ஜேர்மன் அறக்கட்ளையால் ஏற்கனவே மேற்கோளிடப்பட்ட ஆய்வானது, பேர்லின் எச்சரிக்கையுடன் அல்-ஷாராஜ் இடமிருந்து தன்னைத் தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் ஹஃப்டார் அதிகரித்த அளவில் செல்வாக்கைப் பெற்று வருகிறார். “பிந்தையது ஹஃப்டாரோடு வெறித்தனமான போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டால், மேற்கத்திய அரசுகள் கூட GNA க்கு அவர்களின் ஆதரவைத் திரும்பப் பார்க்க வேண்டும்.”
அத்தகைய சுற்றித் திரும்புதலைப் பற்றிய பேச்சுவார்த்தையில் உள்ள ஒரு மைய சவால், லிபியாவில் உள்ள மேற்கத்திய அரசாங்கங்களின் ஒன்றுமையின்மையாகும். லிபியா மற்றும் பிரான்சுக்கு இடையிலான இராஜதந்திர வார்த்தை மோதல்களின் வெளிச்சத்தில், லிபியா ஒரு அரங்கில் இருக்கிறது; மற்றும் ஒருதலைப்பட்சமான பிரெஞ்சு ஆதரவு ஹஃப்டாரின் தெற்கு நடவடிக்கைக்கானதாக இருக்கிறது.