Print Version|Feedback
Spanish government falls amid Catalan crisis
கட்டலான் நெருக்கடிக்கு மத்தியில் ஸ்பானிய அரசாங்கம் வீழ்ச்சி அடைகிறது
By Alejandro López
16 February 2019
வெள்ளியன்று, சான்சேஸின் வரவு-செலவுத் திட்டம் காங்கிரஸ் இல் தோல்வியடைந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) பிரதமர் பெட்ரோ சான்சேஸ், ஏப்ரல் 28 இல் ஒரு புதிய பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். 1978 இல் பாசிசத்தில் இருந்து பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி மாற்றத்தின் பின்னர், சான்சேஸின் அரசாங்கமே மிகவும் குறுகிய காலம் ஆட்சியிலிருந்தது. அக்டோபர் 1, 2017, சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்திருந்த அல்லது ஆதரவளித்த கட்டலான் அரசியல் கைதிகளின் மீதான அரசாங்க வழக்கினால் வீழ்ச்சி அடைகிறது. வாக்கெடுப்பு நடக்கும் போது வன்முறைகளை தூண்டிவிட்டனர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
கட்டலான் தேசியவாத கைதிகளுடனான அவரின் அணுகுமுறைக்கு பதிலடியாக, சான்சேஸின் வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்த கட்டலான் தேசியவாத பாராளுமன்ற உறுப்பினர்களை சான்சேஸ் விமர்சித்தார். "சில கட்சிகள் முடிவுகள் எடுப்பதை தடுக்கும்போது, புதிய தேர்தல்களை அழைத்தல் அவசியம்," என்றார் அவர். “சில பாராளுமன்ற தோல்விகள் சமூக வெற்றிகளாக உள்ளன" அவர் மேலும் PSOE ஆல் கைவிடப்படுகின்ற வரவு-செலவு திட்டத்தில் கூறப்பட்ட முற்போக்கான நடவடிக்கைளில், "நாட்டிற்கு நாங்கள் விரும்பியது என்ன என்பதை குடிமக்கள் பார்த்துள்ளனர்" என்று கூறினார்.
மற்ற PSOE அதிகாரிகள், கட்டலான் தேசியவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, வரவு-செலவுத் திட்டத்தை கைவிடுவவதில் கவனம் செலுத்துவதையிட்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தனர். "வரவு-செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது, ஆனால் அதனூடாக நாம் இப்போது ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டை வைத்திருக்கிறோம். பிரிவினைவாதிகளுடன் உடன்பாடு இருப்பதாக வலதுசாரிகள் இப்போது குற்றம்சாட்ட முடியாது. அது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், எமது வாக்காளர்களின் மத்தியில் உறுதியற்ற தன்மையை தூண்டிவிட்டது," என்று ஒரு முன்னணி PSOE மேயர் El Pais பத்திரிகைக்கு தெரிவித்தார்.
1978 இற்கு பின்னர் ஒரு வலதுசாரி தேர்தல் பிரச்சாரத்திற்கு PSOE கதவை திறந்துவிட்டுள்ளது. இதில் கட்டலான் பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடுவது என்ற பெயரில் சிக்கன நடவடிக்கை மற்றும் பொலிஸ்-அரச ஆட்சி திணிக்கப்படவுள்ளது. PSOE, வலதுசாரி மக்கள் கட்சி (PP), Citizens (CS), மற்றும் பொடேமோஸ் ஆகியவற்றுக்கு இடையே வாக்குகள் பிளவுபட்டதால் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு தேர்தல்கள் பெரும்பான்மையற்ற பாராளுமன்றங்களை உருவாகின. இப்போது PSOE, கட்டலான் தேசியவாதிகளை கண்டனம் செய்கையில், கட்டலான் எதிர்ப்புக் கூட்டணியின் அடிப்படையில் CS மற்றும் புதிய பாசிச-ஆதரவு VOX கட்சியுடன் ஒரு குறுகிய வலதுசாரி பெரும்பான்மையை உருவாக்குவதற்கு PP கட்சி இலக்கு கொண்டுள்ளது.
VOX தலைவர் சந்தியாகோ அபஸ்கால் தன்னுடைய ஆதரவாளர்களை குறிப்பிட்டு அழைக்கும் "உயிர்வாழும் ஸ்பெயின்", "இறுதியாக ஒரு மதிப்பிழந்த சட்டமன்றத்தை தோற்கடித்ததுள்ளதாக" அறிவித்தார். கட்டலான் சுதந்திர வாக்கெடுப்பு மீது வன்முறையாக தகர்த்தெறியத் தவறியதற்காக, மரியானோ ரஹோய் (Mariano Rajoy) இன் முந்தைய PP அரசாங்கத்தை "திறமையற்ற மற்றும் கோழைத்தனமானது" என்று கண்டனம் செய்தார்.
அபஸ்கால் இன் இந்த கருத்து, ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின் போது பிரான்சிஸ்கோ பிராங்கோவின் பாசிச இராணுவத்தின் இனப்படுகொலைப் வரலாற்றை பாதுகாத்து, மக்களை இராணுவ அடக்குமுறைக்கு திட்டமிடும் முதலாளித்துவத்தின் பிரிவுகளின் சார்பாக VOX பேசுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ரஹோயின் கீழ், கட்டலான் சுதந்திர சர்வஜன வாக்கெடுப்பில் வாக்காளர்களை வன்முறையுடன் அடக்க மாட்ரிட் 16,000 போலீசாரை அனுப்பியது. இதில் முதியவர்கள் உட்பட 1,000 பேர் காயமடைந்தனர். அது பின்னர், 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 155 வது பிரிவை பயன்படுத்தி, மாட்ரிட் இனால் பெயரிடப்பட்ட ஒரு அரசாங்கத்தை நியமித்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டலான் அரசாங்கத்தையும் கலைத்து, கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகளை முன் விசாரணைக் காவலில் வைத்தது. நெருக்கடியின் உச்சத்தில், PP கட்டலோனியாவில் நேரடி இராணுவ தலையீட்டை அச்சுறுத்தியது. ஆயினும்கூட, அபஸ்கால் இந்த மூர்க்கத்தனத்தை போதாது என தாக்குகின்றார்.
PP கட்சி தலைவர் பப்லோ காஸாடோ தனது கட்சியை "அமைதியான மிதவாத சக்தியாக" அழைக்கும்போதும், அவர் பெரும்பான்மை பெற Citizens மற்றும் VOX உடன் கூடிவேலை செய்வார் என்று வலியுறுத்தினார். அன்டலூசியா பிராந்தியத்தில் ஒரு பிராந்திய கூட்டு அரசாங்கத்தில் ஆட்சியிலிருக்கும் “அன்டலூசியா உடன்படிக்கையை” குறிப்பிட்டு அவர் VOX இன் பிராங்கோ சார்பான நிலைப்பாட்டிலிருந்து தம்மை விலத்திக்கொள்ள PP “தொற்றுநோய்களை தடுக்கும்” முறை ஒன்றை கட்டமைக்காது என்று வலியுறுத்தினார். பிராங்கோவின் ஆட்சி சதியானாலும் உள்நாட்டு யுத்தத்தாலும் பதவியிறக்கப்பட்ட “மக்கள் முன்னணி” போன்ற அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதாக காஸாடோ தெரிவித்தார்.
சமீப வாரங்களில், காஸாடோ சான்சேஸுக்கு எதிராக வெறித்தனமான அவதூறுகளை ஒரு கட்டத்தில் கட்டவிழ்த்து விட்டார். அவரை ஒரு "மோசடிக்காரர்", "கட்டாய பொய்யர்", "சட்டவிரோதமானவர்", "வீடுகளை ஆக்கிரமித்தவர்", "அதிதுரோகி" என்று அழைத்தார்.
இதேபோல், Citizens தலைவர் ஆல்பர்ட் ரிவேரா, "அனைத்து வேட்பாளர்களும் கட்டலான் பிரச்சினையில் தங்களை நிலைப்பாட்டை எடுங்கள்" என்று கோரினர். அவர் மேலும், தேர்ந்தெடுக்கப்பட்டால், "ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்களுக்கு அதாவது, தண்டிக்கப்பட்ட கட்டலான் தலைவர்களுக்கு மன்னிப்பளிக்க மாட்டேன்" என்றார். ஸ்பெயினின் பொருளாதாரத்தின் பொறுப்பாளரான துணை பிரதமராகவும் பொடேமோஸ் தலைவர் பப்லோ இக்லெசியாஸுடன் இணைந்து மற்றும் பிரிவினைவாதிகள் எனது நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் ஒரு புதிய "ஃபிராங்கன்ஸ்டைன் அரசாங்கம்" அமையக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த சூழ்நிலையில் முக்கிய ஆபத்து என்பது போலீஸ் மற்றும் இராணுவ ஆட்சியின் அச்சுறுத்தலை தொழிலாள வர்க்கம் முழுமையாக அறிந்திருக்காது என்பதேயாகும். பிராங்கோயிசத்தை நியாயப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. ஸ்பெயினின் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளான எதிர்ப்பை பொறுத்தவரை அது வலதுசாரிக் கொள்கைகளின் திறந்த ஆதரவாளர்களுக்கும், அரசியல் அலட்சியத்துக்கும் இடையில் பிளவுபட்டுள்ளது.
புதனன்று, சாஞ்செஸ், முன்னாள் பழமைவாத அரசாங்கத்திற்கு அவர் காட்டிய அதே "விசுவாசத்தை", Citizens மற்றும் PP தற்போது காட்ட தவறியதாக குற்றம் சாட்டினார்: "PP அரசாங்கம் சோசலிஸ்டுகளின் நிறுவன நம்பகத்தன்மை கொண்டது. ஆனால் அவர்கள் எங்களுக்கு மட்டுமல்ல, ஸ்பெயினுக்கும் விசுவாசமாக இல்லை." அவர் "நாங்கள் வித்தியாசமாக சிந்திக்கின்றவர்களுடன் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறோம். நாம் ஐரோப்பாவிற்கு ஆதரவானவர்கள், முற்போக்கானவர்கள், இடது சார்பானவர்கள், மற்றும் எந்தவொரு தனியொரு பொருளாதார ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பில் உள்ள நாட்டிலும் பார்க்க நாம் கூடுதலான பெண் அமைச்சர்களை கொண்டுள்ளோம் " என்றார்.
அரசாங்கத்தில், PSOE கிட்டத்தட்ட PP இல் இருந்து பிரித்தறிய முடியாதவாறு இருக்கின்றது. அதன் அடிப்படை நிகழ்ச்சி நிரலானது தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் கூடுதலான சிக்கன நடவடிக்கையாக இருந்தது. ஸ்பெயினின் புவிசார் மூலோபாய குறிக்கோள்களுக்கு சேவைசெய்ய இராணுவவாதத்தை அதிகரித்து, கட்டலான் சுதந்திர நெருக்கடியின் பின்னர் அரசை மீண்டும் ஸ்திரப்படுத்துவதாகும்.
ஜனநாயக உரிமைகள் மீது, PP இன் ஒடுக்குமுறை தொடர்கிறது. ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை "உடனடியாக திருப்பி அனுப்பு" என அழைக்கப்படுவதனை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், சியூடா மற்றும் மெலில்லாவின் தெற்கு எல்லைகளில் குடிவரவு சட்டங்களை புறக்கணித்து உடனடியாக திருப்பி அனுப்புவதையும், மேலும் "காக் சட்டம்" (gag law) புனைபெயரால் நன்கு அறியப்பட்ட ஜனநாயக விரோத பொது பாதுகாப்பு சட்டத்தையும் பாதுகாக்கின்றது. கட்டலானிய வழக்கு தொடர்பாக சான்செஸ் அரசாங்கம், சிறையில் அடைக்கப்பட்ட தேசியவாதிகள் மீது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொண்ட பிரிவினைவாத குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடர அரசு வழக்கறிஞர்களிடம் கூறியுள்ளது.
வலதுசாரி பிரச்சாரத்திற்கு கடுமையான எதிர்ப்பைத் தூண்டிவிடப்போவதில்லை என்று பொடேமோஸ் தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக, பொடேமோஸ் ஆதரவிலான PSOE அரசாங்கம் ஒரு வெற்றி என்று மோசடியாகக் கூறிவருகிறது. போடமோஸ் பாராளுமன்ற செய்தித் தொடர்பாளர் Irene Montero, "வரலாற்றில் மிக சமூக முற்போக்கான வரவு-செலவுத் திட்டங்கள்" என்றும் அரசாங்கத்தின் பிரதான சாதனை என்றும் மேற்கோளிட்டுள்ளார். ஆனால் கூடுதலாக குறைந்தபட்ச ஊதியத்திற்கான திட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் பொலிஸ் அடக்குமுறையை அவர்கள் பதிவுசெய்வதை தடுக்கும் "காக் சட்டத்தை" முடிவிற்கு கொண்டுவருதல், தோல்வியுற்ற வரவு-செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள வயதான வேலையில்லாதவர்களுக்கான மானியங்கள் போன்ற பல இந்த வார வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்குப் பின்னர் நிறைவேற்ற முடியாது.
பொடேமோஸ் மற்றும் PSOE "எட்டு மாதங்களில் ... மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவிக்கும் காரியங்களைச் செய்ய வேலை செய்துள்ளன" என்று அவர் கூறினார். "உண்மையில், PSOE மற்றும் பொடேமோஸ் க்கான வாக்குகள் ஸ்பெயினில் அன்டலூசியாவின் மிக அதிக மக்கள்தொகை நிறைந்த பகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் சரிந்துவிட்டன. ஏனெனில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த கட்சிகளை ஆதரிப்பதற்கு மறுத்துவிட்டனர், அதற்கு பதிலாக வாக்களிக்காமலே விட்டுவிட்டனர்.
இருப்பினும், மோன்டரோவின் கருத்துப்படி, சான்சேஸின் மிகப்பெரிய தவறு அவருடைய அரசாங்கத்தில் பொடேமோஸை ஒருங்கிணைக்கவில்லை என்பதாகும். இது ஒரு "உறுதியான, திடமான அரசாங்கத்தை ஐரோப்பாவில் முன்வைக்க வேண்டும்." PSOE அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமைக்காக கட்டலான் தேசியவாதிகளை தாக்கினார். "சான்சேஸ் கட்டலோனியாவுடன் நேர்மையான மற்றும் விவேகமான பேச்சுவார்த்தைக்கான சிறந்த உத்தரவாதம்" என்று இழிந்த முறையில் கூறினார்.
சாத்தியமான பிந்தைய தேர்தல் ஒப்பந்தங்களைப் பற்றி கேட்கப்பட்டபோது, Montero கூறுகையில், "அனைத்து கட்சிகளுடனும் கூட்டுக்கான கதவை திறந்து" வைத்திருப்பதுடன் பொடேமோஸ் "குடிமக்களின் அனைத்து சட்டபூர்வமான பிரதிநிதிகளுடன் பேசும்" என்று கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சின் பிரதான வேட்பாளரான அவரின் துணைவர் இக்லேசியாஸ் குழந்தை பராமரிப்பு விடுமுறையில் இருப்பார் என்று மொன்டேரோ அறிவித்ததன் மூலம் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆபத்துகள் பற்றிய பொடேமோஸ் இன் அமைதியான மற்றும் அலட்சியமான அணுகுமுறையே வேறொன்றும் இன்னும் தெளிவாக அம்பலப்படுத்தாது. அதில் அவர். "நாங்கள் விரும்பும் ஸ்பெயினின் வகை என்ன" என்பதைக் காட்டும் ஒரு வழி இது என்று அவர் சொன்னார்; அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். உண்மையில், அது தீவிரமாக போராட விரும்பாத ஸ்பெயினில் பொலிஸ்-அரச ஆட்சிக்கான உந்துதலை பற்றி பொடேமோஸ் பெரிதும் அக்கறையற்று இருப்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.