ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Striking Tamil Nadu teachers denounce state and central governments

வேலைநிறுத்தம் செய்யும் தமிழ்நாடு ஆசிரியர்கள் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களை கண்டனம் செய்கின்றனர்

By Sasi Kumar and Nanda Kumar
25 January 2019

தமிழக ஆசிரியர்கள் இந்த வாரம் தங்கள் மாநில அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தின் போது ​​மாநில தலைநகரான சென்னையில் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களுடன் பேசினர். செவ்வாயன்று 700 வேலைநிறுத்தக்காரர்கள் எழிலகம் கட்டிடத்திலுள்ள அரசு அலுவலகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். மூன்றாவது நாள் வியாழக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கிட்டத்தட்ட 3,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


நெல்சன்

நெல்சன், 55, மாநில கல்வி அமைச்சரின் கூற்றை நிராகரித்தார், அதாவது நிதி பற்றாக்குறை என்று அழைக்கப்படுவதின் காரணமாக அரசாங்கம் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை வழங்க முடியாது இருக்கிறது.

."ஆனால் நீதிபதிகள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் [இந்திய அரச சேவை மற்றும் பொலிஸ்] அதிகாரிகளுக்கு, ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைகள் வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். நெல்சன் இந்தியாவின் பெரும் அரசியல் கட்சிகளை கண்டனம் செய்தார். "காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டுமே ஒரே பொருளாதார கொள்கைகளைத்தான் தொடர்கின்றன" என்றார் அவர். "மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் தொழிலாளர் விரோத கொள்கைகளை அமுல்படுத்த கடினமாக முயற்சிக்கிறது...

"சிபிஎம் தலைமையிலான மாநில அரசாங்கங்களும் அதே பொருளாதார சீர்திருத்தங்களை செல்வந்தர்களுக்கு ஆதரவாக பின்பற்றின. முதலீட்டாளர்களுக்கு தங்கள் நிலத்தை தர மறுத்த நந்திகிராமில் உள்ள விவசாயிகளை, மேற்கு வங்க 'இடது' அரசாங்கம், படுகொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளது. மேற்கு வங்கத்தில் அந்த அரசாங்கம் அதன் தொழிலாளர் விரோத நிலைப்பாடு காரணமாக அதிகாரத்தை இழந்தது.


தமிழ்

தமிழ், 53, மற்றொரு ஆசிரியர், ஆசிரியர் கூறுகையில் ஆசிரியர்களின் வாழ்க்கை நிலைமைகள் ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருவதாக கூறினார். "என் குடும்பத்தின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது," என்றார். மேலும் "என் குழந்தைகளை சிறந்த தரமான தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு என்னால் முடியாது, அதனால் அவர்கள் பொதுப் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். நான் உடல்நிலை சரியில்லாத போது தனியார் மருத்துவமனைக்கு செல்ல முயற்சிக்கிறேன், ஆனால் நிறைய பணம் செலவாகும், ஒரு பெரிய வியாதி இருந்தால், நான் அரசாங்க மருத்துவமனைக்கு செல்கிறேன். "

அமெரிக்க ஆசிரியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கை பற்றி கருத்துத் தெரிவித்த அவர், "அமெரிக்க ஆசிரியர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன், அவர்கள் தொழிற்சங்கத்தின் பிடியை முறித்து சுதந்திரமாக வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைத்து போராட முயற்சிக்கின்றனர். நான் இதை வரவேற்கிறேன்." என்றார்.

இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை, தமிழ் கண்டனம் செய்தார். "அவர்கள் உழைக்கும் மக்களுக்காக இல்லை. உங்கள் வேலைத்திட்டத்தையும், சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன்."

42 வயதான, பாஸ்கர், வணிக வரி இளைய உதவியாளர். அவர்,மாதத்திற்கு 21,000 ரூபாய் (அமெரிக்க டாலர் 295) சம்பாதிக்கிறார். சமீபத்திய தேசிய இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில் பங்குபெற்ற அவர் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் ஐக்கியப்பட்ட தொழில்துறை நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார். 13, மாருதி சுசுகி கார் தொழிலாளர்கள் ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதைப் பற்றி WSWS நிருபர்கள் அவரிடம் கூறிய போது, அவர் தொழிற்சங்க தலைமையையும் ஸ்ராலினிச தலைமையிலான கூட்டணிகளையும் கண்டனம் செய்தார்.

"சிஐடியு [சிபிஎம் தலைமையிலான இந்திய தொழிற்சங்கங்களின் மையம்] மற்றும் ஏஐடியுசி [சிபிஐ-இணைந்த அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸும்] கம்யூனிச தொழிற்சங்கங்கள் ஆகும். அவர்களது பொது வேலைநிறுத்தக் கோரிக்கையில், 13 மாருதி சுசுகி தொழிலாளர்களின் விடுதலை குறித்த கோரிக்கையை ஏன் சேர்க்கப்படவில்லை? "என்றார். அவர் மேலும் கூறினார்:" மோடிக்கு மாற்றாக, காங்கிரஸ் அரசாங்கத்திற்கு நான் ஆதரவாக இல்லை, ஆனால் நீங்கள் சொல்வது போல, நமக்கு ஒரு தொழிலாளர் அரசாங்கம் தான் தேவை."


ஷங்கர்

மற்றொரு ஆசிரியர் ஷங்கர் கூறினார்: "சிக்கன நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்துவதற்கு தான் மோடி வந்தார். அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், சுமார் 2 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று மோடி உறுதியளித்தார், ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. "

"விவசாயிகளின் நெருக்கடி ஒருபோதும் தீர்க்கப்படவில்லை மற்றும் விவசாயிகள் தினசரி தற்கொலை செய்துகொள்கிறார்கள்" என்று அவர் கூறினார். மேலும், "தமிழ்நாடு மாநில அரசு, ரேசன் (ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்களின் பொது விநியோகம்) வழங்குவதை கூட நிறுத்த முயற்சிக்கிறது "

மற்றொரு வேலைநிறுத்தக்காரர், ஜெபா கூறுகையில், "நான் சோசலிச கருத்துக்கு ஆதரவு தருகிறேன். மக்கள் ஒரு உண்மையான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர், ஆனால் அரசாங்கங்கள் எதுவுமே இதை கவனிக்கவில்லை. அது ஒரு கிளர்ச்சிக்கு வழிவகுக்கும். வறுமை மற்றும் விவசாயிகளின் தற்கொலைகள் உள்ளிட்ட முக்கிய சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, நமக்காக ஒரு தொழிலாளர் அரசாங்கம் வேண்டும் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஒரு தொழிலாளர் கட்சியின் வளர்ச்சியை நான் வரவேற்கிறேன்.

மோடிக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை. அவரது அரசாங்கம், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இடதுசாரி மக்களை தாக்குகிறது. காங்கிரஸ் ஒரு முதலாளித்துவ கட்சியாகும். 1991ல், நவ-தாராளவாத கொள்கையை ஆரம்பித்தது காங்கிரஸ் அரசாங்கம்தான். "பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஆசிரியர் கூறுகையில்: "நம் எதிர்கால பொருளாதார பாதுகாப்பு குறித்து நம்மில் பெரும்பாலானோர் கவலைப்படுகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசாங்கம் மறுபடி அமுல்படுத்தவில்லை என்றால், நமது பொருளாதார எதிர்காலம் நிச்சயமற்றது.

"2003 ல், AIADMK [அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்] அரசாங்கம், வேலைநிறுத்தம் செய்த மாநில அரசாங்க ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது. அதே அரசாங்கம் தான் எங்களை மீண்டும் தாக்குகிறது, ஆனால் எங்கள் போராட்டம் தொடரும்.

"எதிர்க்கட்சியான DMK [திராவிட முன்னேற்றக் கழகம்] கூட ஒரு முதலாளித்துவ கட்சியாகும். இது முன்னர் பா.ஜ.க.வுடன் இணைந்திருந்தது, ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சியுடன் ஒரு கூட்டு ஏற்படுத்தியுள்ளது."

எந்த ஒரு அரசியல் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லை என்று அந்த ஆசிரியர் கூறினார். மேலும் “நான் இப்போது தான் ட்ரொட்ஸ்கிச கட்சியைப் பற்றி கேள்விப்படுகிறேன், ஆனால் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்ட போராட்டத்தில் மட்டும் தான் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நான் ஏற்றுக் கொண்டேன். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். "

மற்றொரு ஆசிரியர், இந்தியாவின் மேலாதிக்க நாடாளுமன்ற கட்சிகளை கண்டனம் செய்தார். "கடந்த 70 ஆண்டுகளில் இந்த நாட்டை ஆட்சி செய்த பெரும்பாலான கட்சிகள் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை

“கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்பாலும், காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணிகளை அமைத்துள்ளன. நான், கம்யூனிஸ்ட் கட்சியை வெறுப்புடன் பார்க்கிறேன். அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகள் நீங்கள் பார்த்தால் அவை – ஏனைய மாநிலங்களில் மக்கள் முகம் கொடுப்பவற்றில் இருந்து வேறுபட்டதாக இல்லை.”