ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Bipartisan panel: US must prepare for “horrendous,” “devastating” war with Russia and China

இருகட்சி குழு: ரஷ்யா மற்றும் சீனாவுடனான “பயங்கரமான,” “பேரழிவுகரமான” போருக்கு அமெரிக்கா தயாரிப்பு செய்தாக வேண்டும்

By Andre Damon
16 November 2018

ரஷ்யாவிற்கு, சீனாவிற்கு அல்லது இரு நாடுகளுக்கும் எதிராக ஒரு “பெரும் வல்லரசு” போருக்கு தயார் செய்வதற்கு பென்டகனின் திட்டங்களின் ஆதரவுடன், காங்கிரஸால் நியமிக்கப்பட்ட இருகட்சி ஆணையம் செவ்வாயன்று வெளியிட்ட ஒரு நீண்ட அறிக்கை, ட்ரம்ப் நிர்வாகத்தின் போர்வெறிக் கொள்கைகளை ஜனநாயகக் கட்சி பகிர்ந்து கொள்வதைத் தெளிவுபடுத்துகிறது.

அதன் கண்டுபிடிப்புகள் வெகுஜன ஊடகங்களால் ஒருபோதும் தீவிரமாக அறிவிக்கப்படமாட்டாது என்பது நன்கு அறிந்ததே என்ற நிலையில், இந்த அறிக்கையின் ஆசிரியர்கள், அத்தகைய போரின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது பற்றிய விபரத்தை நறுக்குத் தெறித்தாற்போல் தெளிவாகக் கூறவில்லை. அறிக்கையை பொறுத்தவரை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் வெடிக்கவிருக்கும் ஒரு போர், “பயங்கரமான” மற்றும் “பேரழிவுகரமான” ஒன்றாக இருக்கும். இராணுவம் “தசாப்தங்களில் எந்த நேரத்திலும் நிகழ்ந்ததைக் காட்டிலுமான பேரிழப்புக்களை எதிர் கொள்ளும்.” அத்தகைய போர் “துரிதகரமான அணுசக்தி வெடிப்பிற்கு,” வழிவகுக்கும் என்பதுடன், அமெரிக்க குடிமக்கள் தாக்கப்படுவார்கள் மற்றும் கொல்லப்படலாம்.


அமெரிக்க பி-52 ஸ்ட்ராட்ஃபோர்ட்ரெஸ் விமானம் [அமெரிக்க தேசிய விமான பாதுகாப்பு படைக்கு நன்றி]

ஒரு அடிப்படை யதார்த்தத்தை அங்கீகரிக்காமல், அமெரிக்க அரசியலில் எதையும் புரிந்து கொள்வது என்பது சாத்தியமற்றதாகும்: அதாவது, மாலை செய்திகள், தலைப்புச் செய்திகள் மற்றும் சமூக ஊடக அறிவிப்புகள் என அனைத்திற்கும் தீனி போடும் அரசியல் பேச்சுக்களில் ஆதிக்கம் செலுத்தும் சம்பவங்களும் ஊழல்களும், உண்மையிலேயே தீர்மானம் செய்யும் நபர்களின் கருத்தாய்வுகளுடன் சற்று ஒத்துப்போவது மதிப்புமிக்கது. ஊடகங்களில் பேசும் தலைவர்கள், மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வரம்புகளுக்குள் விவாதிக்கப்படுவதான தலைப்புக்களை குறைக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தும், தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாத்திரங்களில் அவர்கள் விளையாடுகிறார்கள்.

உண்மையில் கொள்கையை வகுப்பவர்கள் —காங்கிரஸின் உயர் தகுதிபெற்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குறிப்பிட்ட குழு, பென்டகன் அதிகாரிகள், மற்றும் சிந்தனைக் குழாம் ஊழியர்கள், அத்துடன் வெள்ளை மாளிகை உதவியாளர்கள் போன்றவர்கள்— முற்றிலும் வேறுபட்ட ஒரு மொழியில் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள், மேலும் வெளியீடுகளைப் பொறுத்தவரை பொதுமக்கள் அவற்றை வாசிக்க மாட்டார்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள், அதிலும் ஊடகங்களோ இதைப் பற்றி அவ்வளவு தீவிரமாக அறிவிக்காது என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.

அவர்கள் எப்பொழுதாவது மாலை செய்திகளை தயாரித்தால், இவர்கள் அனைவரும் வெளிப்படையான, சுய சான்றான உண்மை, அறிக்கைகள் என ஏற்றுக்கொள்வன “சதி கோட்பாடுகள்” என நிராகரிக்கப்பட்டுவிடும்.

இதுபோன்ற வெளிப்படைப் பேச்சுக்கான சமீபத்திய உதாரணமாக, பென்டகனின் புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை (National Security Strategy) மதிப்பிடுவதற்காக காங்கிரஸால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பான தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆணையம் (National Defense Strategy Commission) வெளியிட்டதான புதிய அறிக்கை வடிவில் வெளிவந்தது, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அவ்வறிக்கை, அமெரிக்க இராணுவத்தின் “பெரும்-வல்லரசு போட்டிதான் —பயங்கரவாதம் அல்ல— தற்போதைய பிரதான இலக்காகும்” என்று அறிவித்தது.

இந்த குழுவின் கண்டுபிடிப்புகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: ரஷ்யா மற்றும் சீனா உடனான போருக்கு தயார் செய்வதற்கு அமெரிக்க இராணுவம் முற்றிலும் சரியானதாகும். ஆனால், பென்டகன், அடுத்த எட்டு மிகப்பெரிய இராணுவப் படைகள் ஒன்றிணைந்ததை காட்டிலுமாக ஒவ்வொரு வருடமும் அதிகளவு செலவிடுவதுடன், இராணுவ செலவினங்களில் ஒரு பாரிய விரிவாக்கமும் அதற்கு தேவைப்படுகிறது என்ற நிலையில், அச்செலவினங்களுக்காக, மருத்துவ பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற சமூக திட்டங்களை குறைப்பதற்கான வெட்டுக்களை அதற்கு ஈடாக கொடுக்க வேண்டும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த அறிக்கை, பெரும் இருகட்சி ஆதரவுடன், பனிப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்ட அதிகரிப்பாக, இந்த ஆண்டு காங்கிரஸ் நிறைவேற்றிய ஒப்பந்த பத்திரங்களில் பிரயோகித்திருந்ததையொத்த வார்த்தைகளை பிரயோகித்து, ட்ரம்ப் நிர்வாகத்தின் இராணுவ கட்டமைப்பு மீதான ஒரு காங்கிரஸ் சார்பு ஒத்தூதலாக உள்ளது.

ஆனால், அமெரிக்க மக்கள் மீதான “பேரழிவுகர” தாக்கங்களுடனான ஒரு உடனடி, “ஒட்டுமொத்த சமுதாய” போருக்கு அமெரிக்கா தயார் செய்ய வேண்டும் என்ற அங்கீகாரத்தைத் தாண்டி, மற்றொரு அடிப்படை யதார்த்தத்தின் ஒரு வலுவான எச்சரிக்கையாகவும் இந்த ஆவணம் உள்ளது: அத்தகையதொரு போரில் அமெரிக்கா பெரும் தோல்வியடையக்கூடும் என்ற நிலையில், உலகின் மக்கள் தொகையில் வெறும் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான மக்கள்தொகையை கொண்ட ஒரு நாடாக, ஒட்டுமொத்த உலகத்தையும் இராணுவ ரீதியில் வெற்றி கொள்வது தான் நடைமுறையளவில் அதற்கு தேவைப்படுகிறது.

அமெரிக்கா, “சீனா அல்லது ரஷ்யாவிற்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்குப் போராடும், அல்லது ஒருவேளை இழக்கும்,” என்று இது தெரிவிக்கிறது. இந்த போர்கள் வெறுமனே வெளிநாடுகளுடன் மோதுவதாக மட்டும் இருக்காது, மாறாக அமெரிக்க மக்களை இலக்கு வைப்பதாகவும் இருக்கும்: அதாவது, “நமது இராணுவத்தை தோற்கடிக்க வெளிநாடுகளில் எதிரிகள் முனைகின்ற அதேவேளையில், இயக்கம் சார்ந்த, இணைய வழியிலான, அல்லது வீடுகளில் புகுந்து அமெரிக்கர்களுக்கு எதிரான வேறுமாதிரியான தாக்குதல்களை  தொடுக்க அவர்கள் முயற்சிப்பார்கள் என்பதை எதிர்பார்க்கத் தேவையில்லை என்பது விவேகமற்றதாகவும் பொறுப்பற்றதாகவும் இருக்கும்.”

மேலும் இது, “போர் நிகழ்ந்தால், பல தசாப்தங்களில் எந்தவொரு நேரத்தையும் விட கடுமையான மோதல்களையும் பெரும் இழப்புக்களையும் அமெரிக்க படையினர் எதிர் கொள்வார்கள். ஃபால்க்லேண்ட் போரின் (Falklands War) போது நிகழ்ந்ததை இப்போது நினைவுகூருவது பயனுள்ளதாக இருக்கும், ஒரு தீர்மானகரமான குறைதகுதி பெற்ற எதிரி —ஆர்ஜென்டினா— ஒரு வழிகாட்டுதல் ஏவுகணை மூலம் அதை தாக்கி முடக்கியதுடன், ஒரு பெரிய பிரிட்டிஷ் போர் கப்பலையே மூழ்கடித்தது. இந்நிலையில், ஒரு பெரிய அரசு எதிரி, அமெரிக்கப் படைகளின் மீது திணிக்கும் அழிவின் அளவு என்பது மிகப்பெரிய அளவிலான கட்டளைகளாக இருக்கலாம்” என்றும் சேர்த்துக் கூறியது.

உள்நாட்டை உந்தும் பல காட்சிகளை அவ்வறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது. சீனாவிற்கான பதிலடியை தூண்டுவதாக, 2022 இல் சீனாவிடமிருந்து சுதந்திரமடைந்துவிட்டதாக தைவான் அறிவிப்பதற்கு முதல் முயற்சி எடுக்கும். “தேசத்தின் முழு வல்லமையும் ஒன்றுதிரட்டப்படுமானால், ஒரு நீண்ட போரில் அநேகமாக அமெரிக்கா சீனாவை தோற்கடிக்கும் என்று ஜனாதிபதிக்கு பென்டகன் தெரிவிக்கிறது. இந்த முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான கப்பல்கள் மற்றும் விமானங்களை, அத்துடன் ஆயிரக்கணக்கான உயிர்களையும் அது இழக்க நேரிடும், கூடுதலாக கடுமையான பொருளாதார சிக்கல்கள்களினாலும் பாதிப்படையும் — தைவான் வரம்பு மீறுவதற்கு முன்பாக, தீர்க்கமான தாக்கத்தை கொண்டிருப்பதற்கான எந்தவித உத்திரவாதமும் இல்லை. ஆனால், விளைவுகளை தவிர்ப்பதற்கு தற்போது பயங்கரமான இழப்புக்கள் தேவைப்படும்.”

செலவினங்களில் பல ஆண்டுகளுக்கான அதிகரிப்புகளைக் கொண்ட, நிலையான நிதியுதவியுடனான, மிகப்பெரிய இராணுவம் ஒன்றுதான் இதற்கான தீர்வு என அறிக்கை நிறைவடைகிறது. “தேசிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்வதில் அசாதாரணமான அவசரத்துக்கான தேவை உள்ளது,” என்றும் குறிப்பிடுகிறது.

இராணுவத்திற்கு “அதிக கவசம், தொலைதூர பீரங்கிகள், பொறியியல், மற்றும் விமான பாதுகாப்பு அலகுகள்” தேவைப்படுகிறது. மேலும், விமானப் படைக்கு, “ஓசையில்லா தொலைமட்ட போர் விமானங்கள் மற்றும் குண்டு வீசிகள், டாங்கிகள், தூக்கு வலிமை, மற்றும் உளவுத்துறை, கண்காணிப்பு, மற்றும் உளவுத் தளங்கள்” தேவைப்படுகிறது. அணுவாயுத படைகளுக்கு இன்னும் கூடுதலாக ஏவுகணைகள் தேவைப்படுகின்றன. அதனால், மேலும் முன்னும் பின்னுமாக தேவைகள் உள்ளன.

இவை அனைத்திற்கும் செலவிட, சமூக சேவைகள் வெட்டப்பட வேண்டும். “கட்டாய உரிமைத் திட்டங்கள் செலவின அதிகரிப்பை உந்துகிறது,” என்று அறிக்கை புகார் செய்கிறது, மருத்துவ பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு போன்றவை உள்ளிட்ட இந்த திட்டங்களைப் பற்றி காங்கிரஸ் விவாதிக்க வேண்டும் என்று கோருகிறது. “இத்தகைய சீர்படுத்துகைகள் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றிலும் வேதனையாக இருக்கும்” என்றும் இது எச்சரிக்கிறது.

முடிவாக, இந்த போர் முயற்சிக்குப் பின்னால் ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்றுதிரட்டப்பட வேண்டும். வர்த்தக கொள்கை; விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கல்வி” என அனைத்திலுமான, ஒரு “முழு தேசிய” அணுகுமுறை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அனைத்தும் தனியார் நிறுவனங்களில் இருந்து கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்படுவதை தாங்கிக் கொள்ள வேண்டும்.

ரஷ்யா அல்லது சீனா உடனான ஒரு போரில் அமெரிக்கா மோதுவதற்கும் வெற்றி பெறுவதற்குமான பல்வேறு சவால்களை பட்டியலிடுவதில், குழுவின் சிறப்பான உறுப்பினர்கள் எவரும் வெளித்தோற்றத்தில் வெளிப்படையான முடிவு எதையும் எட்டவில்லை: அமெரிக்கா அத்தகையதொரு போரில் ஈடுபடக் கூடாது என்பதாகக் கூட இருக்கலாம்.

ஆனால், அமெரிக்க கொள்கை வட்டாரங்களில், மிகப்பெரிய ஒருமித்த கருத்துக்களை இது முன்னிலைப்படுத்துகிறது. அடோல்ஃப் ஹிட்லர், அவரது கடைசி நாட்களில், இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் நாடு வெற்றி பெறாவிட்டால், அது இருக்கவே முடியாது என்று திரும்பத் திரும்ப அறிவித்தார். இது உலக மக்களின் பெரும்பான்மையினரின் அழிவை மட்டும் அச்சுறுத்தவில்லை, மாறாக அமெரிக்க மக்களையும் சேர்த்தே அச்சுறுத்துவதான ஒரு நடவடிக்கைக்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளது.

மேலும், இது, தனிநபர்களின் பைத்தியக்காரத்தனம் அல்ல, ஒரு பின்தங்கிய திவாலான சமூக ஒழுங்கை, முதலாளித்துவத்தை, மற்றும் ஒரு சமமான பின்தங்கிய அரசியல் கட்டமைப்பை, தேசிய அரசு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சமூக வர்க்கத்தின் பைத்தியக்காரத்தனமாக உள்ளது. மேலும், மற்றொரு சமூக சக்தியால் மட்டுமே இதை எதிர்க்க முடியும்: அந்த சக்திதான் உலக தொழிலாள வர்க்கம், அதன் சமூக நலன்கள் என்பவை சர்வதேசியளவிலானவை மற்றும் முற்போக்கானவை, மேலும், அமெரிக்க முதலாளித்துவத்தின் பெரும்தொகையான யுத்த இலக்குகளை எதிர்த்து நிற்பதில்தான் அவர்களது இருப்பே சார்ந்திருக்கிறது.