ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Striking Tamil Nadu auto workers face dismissal

வேலைநிறுத்தம் செய்யும் 800 தமிழ்நாடு வாகன தொழிலாளர்கள்  எதிர்கொள்ளும் வேலை நீக்கம்

By Moses Rajkumar and Nanda Kumar 
17 October 2018

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வேலைநிறுத்தம் செய்யும் சுமார் 800 யமஹா மோட்டார் இந்தியா தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தினால் வேலை நீக்கம் செய்யப்படக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

இது சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) சமர்ப்பித்த மனு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டது. அந்த மனு வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக "நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளை" எடுக்க விடாமல் யமஹா நிறுவனத்தை "கட்டுப்படுத்த" மாநில அரசாங்க தொழிலாளர் துறை கட்டளையிடும்படி சென்னை உயர் நீதிமன்ற தலையீடு தேவை என்று மன்றாடுகிறது.

சென்னை தலைநகரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் தொழிற்துறை மண்டலத்தில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான வாகன ஊழியர்களில் யமஹா தொழிலாளர்களும் உள்ளனர். வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள மற்ற தொழிலாளர்கள் ராயல் என்ஃபீல்ட் மற்றும் மைௗங் ஷின் ஆட்டோமெட்டிவ் (MSA) நிறுவனங்களிலிருந்தும் வந்தார்கள்.

சிஐடியு இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் கட்டுப்பாட்டில் உள்ளது. தொழிற்சங்க அமைப்பு, "[யமஹா] நிறுவனம் புதிய தொழிலாளர்களை சேர்ப்பதை தடுக்கும்படியும்" மற்றும் போராட்டத்திற்கு ஒரு "இணக்கமான தீர்வை" வழங்குமாறு நிறுவனத்திற்கு அறிவுறுத்துமாறும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.

யமஹாவின் வேலைநிறுத்தம் செப்டம்பர் 21 அன்று தொடங்கியது, அது சிஐடியு-யமஹா தொழிலாளர் சங்கம் அல்லது யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம் சிஐடியு உடன் இணைந்த ஒரு தொழிற்சங்கத்தை அமைப்பதில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக தொடங்கியது. என்ஃபீல்டு மற்றும் MSA போராட்டங்கள் முறையே செப்டம்பர் 24 மற்றும் செப்டம்பர் 5 ம் தேதிகளில் தொடங்கின.

ஸ்ராலினிச CPM மற்றும் அதனுடன் இணைந்த CITU, தொழிலாளர்கள் யமஹா, என்ஃபீல்ட் மற்றும் MSA இல் தொழிலாளர்களை பாதுகாக்க தொழிலாளர்களின் தொழிற்துறை வலிமையை அணிதிரட்ட மறுத்துவிட்டன. அதற்கு பதிலாக, அவர்கள் நீதிமன்றங்கள் மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கத்திடம் முறையிடுகின்றனர், இவ்வாறாக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வைக்க இப்படியான முகவர்கள் மூலம் அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை விதைக்கின்றனர்.

உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா, சிஐடியு அளித்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், இது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது. யமஹா மற்றும் பிற நிறுவனங்கள் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக அறிவித்துள்ளன, மேலும் போலீசார் மற்றும் நீதிமன்றங்கள் தொழிலாளர்களின் உள்ளிருப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நசுக்க வேண்டும் என்று கோரின.

யமஹா வேலைநிறுத்தம் சட்டபூர்வமானதல்ல என அரசாங்கமும் கூட அறிவித்துள்ளது. அக்டோபர் 3 ம் தேதி தமிழ்நாடு இணை தொழிலாளர் ஆணையர் திரு. பொன்னுசாமி "முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தம் செய்வது சரியாகாது" என்று தொழிற்சங்கங்களிடம் கூறினார்.

இந்திய பெருவணிகம், ஆளும் உயரடுக்கு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், சென்னை மற்றும் நாட்டிலுள்ள பிற பிராந்தியங்களில் பெருகி வரும் வாகன தொழிலாளர்களின் போராட்டங்கள் குறித்து கவலை கொண்டுள்ளனர். திங்களன்று, ராய்ட்டர்ஸ் வெளியிட்ட நீண்ட கட்டுரை ஒன்றை எக்கனமிக்ஸ் டைம்ஸ் என்ற பத்திரிகை பின்வரும் தலைப்பில் வெளியிட்டது, "இந்தியாவின் உற்பத்தி மையங்களில் தொழிலாளர்களின் போராட்டங்கள், மோடியின் வேலைகளுக்கான உந்துதலை பலவீனப்படுத்த முடியும்."

இந்தக் கட்டுரை சென்னை மற்றும் புதுடில்லிக்கு அருகே ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிரம் ஆகிய இரு இந்திய வாகன தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தங்களைக் குறிப்பிட்டது. சென்னை வேலைநிறுத்தங்களுக்கும் கூடுதலாக, வட இந்தியாவிலுள்ள குருகிரமில் மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பாதுகாப்பு மற்றும் உயர் ஊதியங்கள் கோரி அக்டோபர் 7 அன்று ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர்.

நிலையான மற்றும் கவர்ச்சிகரமான ஊதியங்களைக் கொடுக்கும் இந்த போராட்டங்கள் "பிரதம மந்திரி நரேந்திர மோடி அரசாங்கம், நிலையான மற்றும் கவர்ச்சிகரமான ஊதியங்களைக் கொடுக்கும் புதிய தயாரிப்பு வேலைகளை உருவாக்குவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை” கோடிட்டு காட்டுவதாக பிரகடனம் செய்தன.

உண்மையில், காங்கிரஸ் தலைமையில் இருந்தவை உட்பட, மோடி அரசாங்கம் மற்றும் கடந்த நிர்வாகங்கள், வெளிநாட்டு முதலீட்டிற்கும் உள்ளூர் பெருவணிகத்திற்கும் இந்தியாவில் "நிலையான வேலைகள்" மற்றும் "கவர்ச்சிகரமான ஊதியங்கள்" வழங்குவதற்கு அல்ல, மாறாக மலிவான உழைப்பு மண்டலங்களை உருவாக்க பாடுபட்டன.

மாருதி சுஜூகி தொழிலாளர்கள் கம்பனி தொழிற்சங்கத்தை நிராகரித்து தங்கள் கோரிக்கைகளுக்காக போராடுவதற்காக தங்களின் சொந்தக் போராட்டத்தை ஒழுங்கமைத்தபோது, நிர்வாகம் 2012 ல் ஒரு ஆத்திரமூட்டல் நடத்தியது, அது போர்க்குணமிக்க தொழிலாளர்களை வேட்டையாடல் செய்ய வழிவகுத்தது. ஹரியானா மாநில அரசு, மத்திய அரசு, பொலிஸ் மற்றும் நீதித்துறை ஆகியவற்றால் இந்த நிறுவனம் ஆதரிக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதற்காக மோடி அரசாங்கத்தின் கீழ் பதிமூன்று ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஜோடிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்.

சந்தேகத்திற்கு இடமின்றி வலதுசாரி மோடி அரசாங்கம் செய்யும் வியாபார நிறுவனங்கள் சார்பான தொழிலாளர் திருத்த சட்டங்களினால்  தனியார் நிறுவனங்கள் தைரியம் அடைந்தன. இருப்பினும், மாருதி சுஜூகி தொழிலாளர்கள் இரக்கமற்ற வேட்டையாடலை எதிர்கொண்டபோது அவர்களை தனிமைப்படுத்துவதில் சிஐடியு மற்றும் சிபிஎம், ஒரு முக்கிய பங்காற்றின. அவர்கள் யமஹா, என்ஃபீல்ட் மற்றும் MSA தொழிலாளர்களை  தனிமைப்படுத்துவதில் அதே நடைமுறையில் ஈடுபட்டுள்ளனர்.

அக்டோபர் 14 ம் தேதி, ஸ்ராலினிச மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) செய்தித்தாளான மக்கள் ஜனநாயகத்தில் ஒரு கட்டுரை, தமிழ்நாடு வாகன தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் அவர்களது நம்பிக்கையை வைக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தியது. "இந்திய அரசியலமைப்பு அதன் சகல குடிமக்களுக்கும், அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உருவாக்குவதற்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது" என்று அறிவித்தது."

யமஹா, என்ஃபீல்டு மற்றும் எம்.எஸ்.ஏ ஆகியவை அரசியலமைப்பை மதிக்கவில்லை என்று குற்றும் சாட்டிய அந்தக்கட்டுரை சிபிஎம் "தமிழ்நாடு முழுவதும் அனைத்து வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புக்களை அணிதிரட்டி ஆதரவான செயல் அலைகளை வழங்கியுள்ளது" என்று கூறுகிறது.

இது ஒரு அப்பட்டமான பொய்யாகும். சிபிஎம் மற்றும் அதன் தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்க தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுக்கவில்லை. ஸ்ராலினிஸ்டுகள் தமிழக அரசு, நீதிமன்றங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு மட்டுமே விண்ணப்பம் செய்கின்றனர், இவ்வாறாக, வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீது தங்கள் தாக்குதல்களை நிறுவனங்கள் தீவிரப்படுத்தும் போது தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கி தனிமைப்படுத்துகிறது.

தொழிலாளர்களை பாதுகாப்பதில் இருந்து தொலைதூரத்தில், தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களை பலவீனப்படுத்துகின்றன.

24 வயதான சத்தீஷ் குமார், இரண்டு வருடங்களாக பயிற்சியாளராகவும், ராயல் என்ஃபீல்ட்டில் ஒரு வருடம் பயிற்சி பெற்றவராகவும் பணியாற்றினார். WSWS நிருபர்களிடம் அவர் கூறுகையில், அந்த நிறுவனம் அவரை மற்றும் பிற தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவில்லை ஆனால் அவர்களை ஆட்குறைப்பு செய்தது.

"பொதுத்துறை நிறுவனங்களில் மேற்கொண்டு நிரந்தர தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதைத் தடுக்க மோடி அரசாங்கம் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது என்பதனால் என்ஃபீல்ட் போன்ற தனியார் நிறுவனங்கள் நிரந்தரத் தொழிலாளர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டன என்று எங்களுக்கு கூறப்பட்டது. என் குழுவை சேர்ந்த தொழிலாளர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது" என்று அவர் கூறினார்.

ஆசிரியர்கள் பரிந்துரைக்கிறார்:

வேலைநிறுத்தம் செய்யும் நூற்றுக்கணக்கான இந்திய வாகன தொழிலாளர்களை தமிழ் நாடு போலிஸ் கைது  [PDF]

[11 அக்டோபர் 2018]