ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU summit marked by Brexit threats and ultimatums

ஐரோப்பிய ஒன்றிய மாநாடு, பிரிட்டன் வெளியேறுவது மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் இறுதி எச்சரிக்கைகளால் நிறைந்திருந்தது

By Chris Marsden
22 September 2018

“பிரிட்டன் இலகுவாக வெளியேறுவதற்கான" (soft Brexit) பிரதம மந்திரி மாளிகை முன்மொழிவை நிபந்தனையின் பேரிலாவது ஆதரிக்க வேண்டுமென்ற அவரின் அழைப்பை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மறுத்தளித்த போது, பிரிட்டன் பிரதம மந்திரி தெரேசா மே சல்ஸ்பேர்க்கில் அரசியல் அவமானத்திற்கு உள்ளானார்.

புதன்கிழமை, இரவு விருந்துக்குப் பிந்தைய அந்த உத்தியோகபூர்வமற்ற சந்திப்பில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் முன் உரையாற்ற பிரதம மந்திரி மே க்கு வெறும் 10 நிமிடங்களே வழங்கப்பட்டன, அப்போது அவர் சபையோரின் முன், “நமது விவாதத்தில் நீங்கள் வெறும் பார்வையாளர்கள் இல்லை பங்காளர்களாகும்,” என்று முறையிட்டார்.

பழமைவாத கட்சியினது "கடுமையான பிரிட்டன் வெளியேற்றத்தை (hard-Brexit)” ஆதரிக்கும் பிரிவு/யூரோ மீது ஐயுறவு கொண்ட இந்த பிரிவின் சாத்தியமான சவாலை அவர் முறிக்க முயன்று வருகின்ற நிலையில், அவரது "தீவிரமான மற்றும் நிறைவேற்றத் தகுந்த" திட்டத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு குரல்களை அவர் கணக்கில் கொண்டிருப்பதாக தெரிவித்தார். வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து விடயத்திலும், அத்துடன் சமூக பதட்டங்களாலும் பிரிட்டன் கடுமையாக பாதிக்கப்படும் என்றும்; அவர் அரசாங்கம் வீழ்ந்தால், ஜெர்மி கோர்பினின் தொழிற் கட்சி பொது தேர்தலில் வெல்லக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்; மேலும் பிரிட்டனின் வர்த்தகம், முதலீடு மற்றும் இராணுவ ஆதரவை கூட ஐரோப்பிய ஒன்றியம் இழந்து பாதிக்கப்படலாமென சுட்டிக்காட்டினார்.

அவர் உரையும் மற்றும் மறைமுகமான அச்சுறுத்தல்களும் அதற்கு பதிலாக இறுக்கமான மவுனத்தைச் சந்தித்தன, அத்துடன் அதற்கடுத்த நாள் ஒன்றுகூடிய ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கும் நாடுகள் அவர் முன்மொழிவுகளை "நிறைவேற்றுவதற்குரியவை இல்லை" அறிவித்தன.

அப்பெண்மணியின் இரவு விருந்து உரைக்கு முன்னதாக, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் டொனால்ட் டுஸ்க், பண்டங்கள் மற்றும் விவசாயத்தை உள்ளடக்கிய ஆனால் சேவைகளை உள்ளடக்காத ஐரோப்பிய ஒன்றிய-பிரிட்டன் சுதந்திர வர்த்தகத்திற்கான மே இன் முன்மொழிவை நிராகரித்திருந்தார், இதற்கு தீர்வை வரி மற்றும் எல்லை கட்டுப்பாடுகளின் தேவை இருக்காது என்றும், அதுவும் குறிப்பாக வடக்கு அயர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடான தெற்கு குடியரசுக்கும் இடையே தேவைப்படாது என்றும் மே வாதிட்டிருந்தார். “பொருளாதார கூட்டுறவுக்காக அறிவுறுத்தப்படும் இந்த கட்டமைப்பு வேலைக்கு ஆகாது, ஒரே சந்தையைப் பலவீனப்படுத்தும் ஆபத்து இதில் குறைவின்றி உள்ளது,” என்று டுஸ்க் தெரிவித்தார்.

மே "தடுமாறி போனதாக,” “அதிர்ந்து போனதாக", “அவமானப்பட்டதாக", "கோபப்பட்டதாக" வெவ்வேறு விதமாக கூறப்பட்டது.

அயர்லாந்து எல்லையில் தீர்க்கமான முன்னேற்றம் இல்லாமல், திட்டமிடப்பட்டுள்ள அக்டோபர் 18 ஐரோப்பிய ஒன்றிய சந்திப்பு, ஓர் "உண்மையின் தருணமாக" இருக்காது என்று குறிப்பிட்டு டுஸ்க் காலக்கெடு விதித்தார், அந்த தேதியில் பிரிட்டன் வெளியேறுவது மீதான பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்படவிருக்கின்றன. அத்தகைய முன்னேற்றம் இல்லை என்றால், ஓர் உடன்படிக்கையை "முறைப்படுத்தி இறுதி செய்வதற்காக" புரூசெல்ஸில் நவம்பர் 17-18 இல் திட்டமிடப்பட்டுள்ள சந்திப்புக்கு அவர் அழைப்பு விடுக்க மாட்டார். “உடன்பாடு எட்டப்படாமல் போவதற்கான சாத்தியக்கூறை நாம் விட்டு விட முடியாது. எங்களின் நான்கு சுதந்திரங்கள், எங்களின் ஒரே சந்தை அத்துடன் அயர்லாந்து எல்லை விவகாரத்திலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லை,” என்றார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்தான் டுஸ்கின் கடுமையான நிலைப்பாட்டிற்குப் பின்னால் இருப்பவராக கூறப்பட்டது, அந்த கூட்டத்தின் நிறைவில் அவர் அறிவிக்கையில், “ஒரே சந்தை மற்றும் அதன் ஒத்திசைந்த தன்மையை நாம் பாதுகாக்க வேண்டும். பிரதம மந்திரி மாளிகை திட்டமானது, ஏற்றுக் கொள்வதானால் ஏற்றுக் கொள்ளுங்கள்-அல்லது-விட்டுவிடுவதானால் விட்டுவிடுங்கள் என்றவொரு திட்டமாக இருக்க முடியாது... பிரிட்டன் வெளியேறுவதானது ஒரு விடயத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது: அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது சுலபமில்லை. விலை கொடுக்காமல் இதிலிருந்து வெளியேற முடியாது. பாதிப்புகள் இல்லாமல் இதிலிருந்து வெளியேற முடியாது.”

பிரிட்டனின் 2016 ஐரோப்பிய ஒன்றிய கருத்து வாக்கெடுப்பில் வெளியேறலாம் என்ற வெற்றியானது, “தீர்வுகள் எளிதாக இருக்குமென அனுமானித்தவர்களால் அழுத்தமளிக்கப்பட்டது," என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “அவர்கள் பொய்யர்கள்.”

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கூறுகையில், பிரிட்டன் வெளியேறுவது மீதான அக்டோபர் உடன்படிக்கையில் "கணிசமான முன்னேற்றம்" தேவைப்படுகிறது என்பதோடு, எஞ்சிய 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் "ஒரே சந்தை விடயத்தில், அங்கே எந்த சமரசமும் கூடாது என்பதில் ஒன்றிணைந்து" உள்ளன என்றார்.

ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகம் "உடன்பாடு இல்லாத" பிரிட்டன் வெளியேற்றத்திற்கான "விபரங்களை" தயாரித்துள்ளதாகவும், “ஆகவே மகிழ்ச்சியோடு இருங்கள், கவலை வேண்டாம்,” என்றும் தெரிவித்தார்.

அந்த சந்திப்புக்கு முன்னதாக, அதன் "இருண்ட மணிதியாலங்களின்" போது பிரிட்டன் வெளியேறுவதிலிருந்து பின்வாங்க நிர்பந்திக்கப்படலாம் என்ற ஆதாரமற்ற கருத்துக்களுடன், செக் குடியரசு ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் பாபிஸ் மற்றும் அவரின் மால்டிஸ் ஜனாதிபதி ஜோசெப் முஸ்கட்டும், மே ஐ பேச்சுவார்த்தைக்கான ஒரு நம்பத்தகுந்த பங்காளியாக கூட இனி கருதுவதற்கில்லை என்று பகிரங்கமாக அறிவுறுத்தினார்கள்.

அவர் பதவியிலிருந்து வெளியேறுவதையும், “பிரிட்டன் கடுமையாக வெளியேறுவதை" பிரிட்டன் நாடாளுமன்றம் ஒருவேளை வாக்களித்து நிறுத்தினால் அனேகமாக மற்றொரு சர்வஜன கருத்து வாக்கெடுப்புக்கான நிலைமைகளை உருவாக்கலாம் என்றும், அது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் என்பதற்கு ஆதரவாக செல்லக்கூடும் என்றும் அவர்கள் கணக்கிடுகிறார்கள். “என்ன பேசப்பட்டது என்பதை பார்த்து, வாய்ப்புகளைப் பார்த்து, பின்னர் ஒரே முறை ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து, பிரிட்டன் மக்கள் விடயங்களை முன்னோக்கில் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறை உருவாக்கும் சூழலை எங்களில் பெரும்பான்மையினர் வரவேற்கிறோம்,” என்று பாபிஸ் அறிவித்தார்.

மே இன் முன்மொழிவுகள் "வெடித்து" சிதறிவிட்டதாக Jacob Rees-Mogg குரூர திருப்தியோடு தெரிவித்தார் மற்றும் "பிரிட்டனின் அரசியல், அரசியலமைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைவைப்" பேணுவதே “எங்களின் முழுமுதலான முன்னுரிமை,” என்று ஜனநாயக தொழிற்சங்கவாத கட்சியின் (DUP) துணை தலைவர் நிகல் டொட்ஸ் கூறிய நிலையில், பிரிட்டன் வெளியேறுவதை எதிர்ப்பவர்களுடன் பேசி ஏற்பாடு செய்வதற்கு மேக்கு இடமளிக்கப்படவில்லை.

மே அவரின் பெரும்பான்மைக்காக ஜனநாயக தொழிற்சங்கவாத கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சார்ந்துள்ளார்.

வேறெங்கும் செல்ல இயலாமல், மே அழுத்தந்திருத்தமாக கூறினார், “அங்கே இரண்டாவது சர்வஜன கருத்து வாக்கெடுப்பு நடக்காது... இவ்வாறு நிகழுமென மற்றவர்கள் கருத தொடங்கியிருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவோம்,” என்றார்.

பைனான்சியல் டைம்ஸ் நிறைவாக குறிப்பிட்டது: எதிர்வரவிருக்கும் வாரங்களில் நடக்கவுள்ள டோரி கட்சி கூட்டத்தில் “மே அவரின் திட்டத்தை, சாத்தியமான அளவுக்கு அவரின் பிரதம மந்திரி பதவியையும் தக்க வைக்க போராடுவார்.” ஆனால் "வர்த்தகம் மற்றும் இராஜாங்க உறவுகளைப் பாதுகாப்பதற்காக, இலகுவாக பிரிட்டன் வெளியேறுவதையே எல்லா கட்சிகளும் விரும்புகின்றன" என்பதால், "இராஜாங்க நடவடிக்கைகளில் குளறுபடி" இருக்குமென்றும் அதிகமாக நம்பப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தை சூழ்ந்துள்ள பரந்த சிக்கல்கள் மற்றும் பதட்டங்களை பற்றி பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது, அது குறிப்பிடுகையில், “அயர்லாந்து பிரச்சினை பரந்த சவாலை உரைக்கிறது. பிரிட்டன் வெளியேறுவதற்கான இந்த விவாதம் நெடுகிலும், பிரிட்டிஷ் அரசியலுக்கு—அதுவும் குறிப்பாக டோரிக்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்முரணாக கருத்துக்கள் மீது—நிறைய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் பெரும் அரசியல் சவால்களை முகங்கொடுக்கின்றன. இத்தாலியில் இருந்து ஸ்வீடன் வரையில், கூடுதலாக கிழக்கில் இருந்து போலந்து வரையில் ஜனரஞ்சகவாத சக்திகள் வளர்ந்து வருகின்றன. புரூசெல்ஸிற்கு எதிரான ஒரு கிளர்ச்சி அவரின் பொதுவான நிலைப்பாடு உள்ளது,” என்று அறிவித்தது.

இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, செக் குடியரசு, போலாந்து மற்றும் ஸ்லோவேகியாவின் வலதுசாரி அரசாங்கங்கள் "மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச கடல் போக்குவரத்து சட்டத்தைப் பின்பற்ற விரும்பவில்லை என்பதுடன், கப்பல்களை அவற்றின் துறைமுகங்களில் நிறுத்துவதையும் மறுக்கின்றன,” என்று, “புலம்பெயர்வை சூழ்ந்த நெருக்கடி மற்றும் பதட்டங்களுக்காக" குறைகூறி அவற்றை மக்ரோன் கண்டித்து வருகின்ற நிலையில், இத்தகைய பதட்டங்கள் அந்த சந்திப்பில் வெடிப்பார்ந்த வடிவங்களை எடுத்தன.

“நல்லிணக்கத்தைக் காட்டாத நாடுகள் அதன் விளைவாக சென்கென் உடன்படிக்கையிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும், அதற்கு மேல் அவற்றால் (ஐரோப்பிய ஒன்றிய) நிதி உதவிகளில் இருந்து ஆதாயமடைய முடியாது,” என்றவர் அச்சுறுத்தினார்.

இவ்வாறிருப்பினும், “அத்தேசத்தின் எதிர்காலம் குறித்த முக்கிய கேள்விகள், இந்த இடைமருவு காலப்பகுதிக்குள் நகர்த்தப்படலாம்: அதாவது, குறிப்பிட்டு கூறுவதானால், மார்ச் 2019 இல் இருந்து டிசம்பர் 2020 வரையில் அது கத்திமுனையில் நிறுத்தப்படலாம்,” குறுகிய காலத்தில் ஒரு பூதாகரமான நிலைமையை எதிர்நோக்கலாம் என்று பைனான்சியல் டைம்ஸ் தலையங்கப்படுத்தியது.

பிரிட்டனில் டோரி கட்சியின் முட்டுக்கட்டையானது, தொழிற் கட்சி இரண்டாவது சர்வஜன கருத்து வாக்கெடுப்புக்கு பொறுப்பேற்கவும் மற்றும் கோர்பினை கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கவுமான ஒரு ஒன்றிணைந்த முயற்சிகளைத் தூண்டிவிட்டு வருகிறது. கோர்பின் பிரிட்டன் வெளியேறுவது மீது என்ன நிலைப்பாடு எடுத்தாலும் சரி, பிரதமர் பதவியேற்றாலும் சரி இவை ஆளும் வர்க்கத்திற்கு ஒவ்வாததாக உள்ளது, ஏனென்றால் மக்களால் அவர் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்தை நிறுத்துவதற்கான கோரிக்கைகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறார்.

தொழிற் கட்சி இரண்டாவது சர்வஜன கருத்து வாக்கெடுப்பை ஆதரித்தால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான கூடுதல் வாக்காளர்களை அது வெல்லக்கூடும் என்று குறிப்பிட்டு, People’s Vote எனும் பிரச்சார குழு இவ்வாரம் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டது. பிளேயரிச Chuka Umunna மற்றும் டோரி Anna Soubry ஆகியோரால் கூட்டாக நடத்தப்படும் People’s Vote குழு, தொழிற் கட்சியின் மாநாட்டுடன் பொருந்தி வருகின்றவாறு ஞாயிற்றுக்கிழமை லிவர்பூலில் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.

இந்த மாநாடு, பிரிட்டன் வெளியேறுவதற்கான எந்தவொரு இறுதி உடன்படிக்கை மீதும் சர்வஜன கருத்து வாக்கெடுப்பை ஆதரித்து 100 க்கும் அதிகமான உள்ளாட்சி கட்சிகளின் தீர்மானங்களைப் பரிசீலிக்கும். அதுபோன்றவொரு விவாதத்தைத் தடுக்கப் போவதில்லை என்று கோர்பின்-ஆதரவு Momentum group தெரிவித்துள்ளது.

இத்தகைய முரண்பாடுகள் என்ன பாத்திரம் வகித்தாலும், பிரிட்டனும் சரி ஒட்டுமொத்த ஐரோப்பாவும் சரி ஐரோப்பிய ஒன்றியத்தை துண்டு துண்டாக்க அச்சுறுத்தும் ஒரு மோசமடைந்து வரும் நெருக்கடியை முகங்கொடுக்கின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதங்கள் மற்றும் சமூக எதிர்விரோதங்கள் இரண்டினது வளர்ச்சியும் பிரிட்டன் வெளியேறுவதில் வியத்தகு வடிவமெடுத்தன, இதை இலண்டன் நகர மேலாதிக்க பிரிவுகளும், பெருவணிகங்கள், அனைத்து பிரதான கட்சிகளும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன் கூட்டாளிகள் அனைவரும் எதிர்த்தன. இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், மே அவரின் ஐரோப்பிய ஒன்றிய-விரோத மற்றும் "பிரிட்டன் கடினமாக வெளியேறுவதை ஆதரிக்கும்" கன்னைக்கு எதிரான மோதலில் பெரும்பிரயத்தனத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவுக்குத் தலைமை கொடுக்கும் ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவுக்கு அவர் ஆதரவை அறிவித்துள்ளார், பல்வேறு அதிவலது அரசாங்கங்களோ ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிடும் சிக்கன நடவடிக்கைகள் மீதான மக்கள் கோபத்தைச் சாதகமாக்கி பகுதியாக அதிகாரத்தை ஏற்றுள்ளன.

முதலாளித்துவம், முன்பினும் ஆழமாக வர்த்தகப் போர் மற்றும் இராணுவப் போருக்குள் மூழ்கி வருகின்ற நிலையில், ஐரோப்பிய கண்டத்தை முற்போக்காக ஐக்கியப்படுத்துவதற்கு அதற்கு தகைமையில்லை என்பதை நிரூபித்துள்ளது. இந்த பணி இப்போது, ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளுக்கு எதிராகவும் அதாவது பிரிட்டன் வெளியேறுவதை அல்லது தங்கியிருப்பதை ஆதரிக்கும் இருதரப்பினருக்கும் எதிராகவும் சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்திற்காக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது.