Print Version|Feedback
The Socialist Equality Party and the anti-Corbyn coup plot: A reply to a reader
சோசலிச சமத்துவக் கட்சியும், கோர்பின்-விரோத பதவிக்கவிழ்ப்பு சதியும்: ஒரு வாசகருக்கான பதில்
By Chris Marsden
5 September 2018
உலக சோசலிச வலைத் தளத்தின் சில வாசகர்கள், “ஜெர்மி கோர்பினுக்கு எதிரான யூத-எதிர்ப்புவாத அவதூறுகளை நிராகரி! தொழிற் கட்சியினுள் உள்ள வலதுசாரி பிரிவை வெளியேற்று!” என்ற ஆகஸ்ட் 31 முன்னோக்கானது, கோர்பின், தொழிற் கட்சி இடது மற்றும் தொழிற் கட்சியை நோக்கிய ஒரு தழுவலைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கவலை தெரிவிப்பதாக கருத்துரைத்துள்ளனர்.
அவற்றில் மிகவும் நீண்ட விமர்சனம் altacomposicionorganica ஆல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்னோக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்திற்கு எதிராக செல்வதாகவும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி பின்பற்றும் போக்குடன் குறிப்பிட்டளவிற்கு வித்தியாசப்படுவதைக் குறிப்பதாகவும் அவர் எச்சரிக்கிறார்.
வலதுசாரி பிரிவை வெளியேற்ற போராடுவதற்கான அழைப்பு, போலி-இடதுக்கு எதிரான "கட்சியின் அடிப்படை போராட்டத்திலிருந்து" விலகுகிறது என்று எழுதும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “[பேர்னி] சாண்டர்ஸ், [Alexandria] Ocasio-Cortez மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் [DSA] 'அதற்கு [ஜனநாயகக் கட்சியின் கிளிண்டன் கன்னைக்கு] எதிராக போதுமானளவுக்கு போராடவில்லை' என்பதோடு, 'அந்த வலதுசாரி கன்னையை நோக்கிய நமது அதிக போர்குணமிக்க நிலைப்பாட்டால் அவர்களை அம்பலமாக்கலாம்,' என்பதால், பிரிட்டனின் SEP போக்கை, அமெரிக்க SEP பின்தொடர்ந்திருந்தால், அது ஜனநாயக கட்சியிலிருந்து கிளிண்டன் கன்னைகளை வெளியேற்றுவதற்காக போராடி கொண்டு இருந்திருக்கும்," என்று எழுதுகிறார்.
“கோர்பினுக்கு வாக்களிக்கக் கூடிய அல்லது வாக்களிக்காமலும் போகக்கூடிய" “சாமானிய தொழிலாளர்களின்" “பலமான பெருந்திரளை" நோக்கி திரும்புமாறு ஒரு மாற்றீட்டையும் அவர் பரிந்துரைக்கிறார், ஆனால் அதில் "பூஜ்ஜிய மணிநேர ஒப்பந்தங்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தரமற்ற தொழிலாளர்களை கொண்ட பொருளாதாரம், தொழிற்சங்க சர்வாதிகாரம், இன்னும் இதர பிறவற்றுக்கு" எதிராக போராடுவதில் பெரிதும் 'வர்க்க உள்ளுணர்வு' உள்ளது."
அந்த விமர்சகர், ஏட்டறிவுவாத விடாப்பிடிவாதம் (scholastic formalism) மற்றும் வரலாற்றுத்தன்மை இழந்த அணுகுமுறையின் ஒரு கலவையை வழங்குகிறார், அது கோர்பினுக்கு எதிரான தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ள வர்க்க பிரச்சினைகளின் நிலைப்பாட்டிலிருந்து இங்கிலாந்தின் அரசியல் அபிவிருத்திகளையோ அல்லது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பணிகளுக்காக அதன் அரசியல் நனவை அதிகரிப்பதில் முன்நிற்கும் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தவில்லை. அரசியல் இறுதிபுள்ளி, ஒருவித குறுங்குழுவாத தட்டிக்கழிப்புவாதமாக (sectarian abstentionism) உள்ளது.
உலக சோசலிச வலைத் தளம் பிரசுரித்த முன்னோக்கில் எங்கேயுமே அது கோர்பினுக்கு மண்டியிடவில்லை, அல்லது 2015 இல் அவர் தொழிற் கட்சி தலைவராக ஆன பின்னர் இருந்து நாம் செய்து வந்துள்ள விமர்சனங்களில் இருந்து எந்தவிதத்திலும் பின்வாங்கவில்லை.
தொழிற் கட்சியானது "ஒரு வலதுசாரி முதலாளித்துவ கட்சி… பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அனைத்து குற்றங்களுக்கும் உடந்தையாய் இருந்துள்ளதுடன், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சோசலிசத்திற்கான பிரதான அரசியல் எதிர்ப்பாளராக செயல்பட்டுள்ளது,” என்று நாம் எச்சரிக்கிறோம். கோர்பின் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி, சந்தர்ப்பத்திற்கேற்ப—நேட்டோவுக்கான ஆதரவு, நிலம், நீர் மற்றும் வான்வழி அணுஆயுத பிரயோகம் கூடாது என்பதைப் பேணுவது போன்ற பிரச்சினைகளில் இருந்து அவர் பின்வாங்குவது, மற்றும் பெருவணிகம் சார்ந்த, சிக்கன நடவடிக்கைகள் சார்ந்த, அவரை நீக்க முயன்று வரும் போர்-ஆதரவு தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவர் ஆதரவாளர்களது எந்தவொரு போராட்டத்தையும் அவர் தீர்மானமாக எதிர்ப்பது போன்ற பிரச்சினைகளில்—பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கான அவரின் விசுவாசம் வெளிப்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவுபடுத்துகிறோம்.
கோர்பின் ஒரு முதலாளித்துவ-ஆதரவு முன்னோக்கு கொண்ட ஒரு முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதி என்ற உண்மையின் அடிப்படையில் பார்த்தால், நமது வாசகர் அறிவுறுத்தும் ஒரு தட்டிக்கழிப்புவாத கொள்கையானது நிஜத்தில் தொழிற் கட்சியின் இரண்டு கன்னைகளுக்கும் அடிபணிவதாக இருக்கும். உலக சோசலிச வலைத் தளத்தின் நோக்குநிலை கோர்பினை நோக்கியல்ல. கோர்பினின் வெற்றி ஓர் இடதை நோக்கி, சோசலிச அரசாங்கத்தை உருவாக்குவதற்கே கூட இட்டுச் செல்லுமென தவறான நம்பிக்கையில் தொழிற் கட்சியில் இணைந்துள்ள ஆயிரக் கணக்கான உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களை நோக்கியதாகும்.
நாம் கோர்பினின் தலைமையுடன் இணங்கவில்லை, அல்லது சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான மற்றும் போருக்கு ஆதரவான குற்றவாளிகளின் ஒரு வலதுசாரி கூட்டத்திற்கு எதிராக பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உறுதியாக நிலைநிற்கும் ஓர் அரசியல் போராட்டத்திலிருந்தும் ஒதுங்கிக் கொள்ளவில்லை. வெற்றிக்கு அவசியமான சோசலிச கொள்கைகளுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட, திரும்பி போராடுவதற்குரிய ஒரு வழியை நாம் வழங்குகிறோம்.
2015 இல் தொழிற் கட்சி தலைவராக கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்டதே, தொழிலாள வர்க்கத்தின் இடதை நோக்கிய ஒரு திருப்பத்தின் குழப்பமிக்க வெளிப்பாடு என்றும், டோரிக்கள், அவர்களின் பிளேயர் கூட்டாளிகள் மற்றும் பிரதான பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பெரும் செல்வந்தர்களும், அவர்களின் நலன்களுக்காக தான் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து, அத்தியாவசிய சேவைகளை அழித்து, மீண்டும் மீண்டும் குற்றகரமான போர்களை நடத்தினார்கள் என்பதால் அவர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு பரந்தளவில் உள்ள விருப்பத்தை அது சுட்டிக்காட்டுவதாகவும் நாம் விவரித்தோம். அதனால் தான் கோர்பின் கட்சித் தலைவராக ஆவதற்கு முன்னர் 201,000 ஆக இருந்த கட்சி அங்கத்தவர்களின் எண்ணிக்கை இப்போது 560,000 க்கும் அதிகமாக நிற்கிறது — இது வலதுசாரி வேட்டையாடலுக்கு நேரடி எதிர்ப்பாக, கடந்த மாதத்தில் மட்டும் 10,000 அதிகரித்தது.
ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் முகவர்களும் விடயங்களை இந்த வரையறைகளில் பார்க்கின்றன. கோர்பினின் எந்த பின்வாங்கலும் அவர் தொழிற் கட்சி தலைமையில் வைத்திருப்பதற்கு அவர்களை ஒத்துப் போகச் செய்யாது ஏனென்றால் அவருக்கு அடியில் சீறிக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூக மற்றும் அரசியல் அதிருப்தியை அவர்கள் காண்கிறார்கள். நிதியியல் செல்வந்த தட்டின் கட்டளைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் குற்றகரமாக்குவதும் ஒடுக்குவதுமே அவர்களின் நோக்கம். அதை செய்வதிலிருந்து அவர்களை எதுவும் தடுத்துவிடாது. இதனால் தான் நாம் ஆகஸ்ட் 31 முன்னோக்கில், பிரிட்டன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இரகசிய சேவைகள் சம்பந்தப்பட்டிருப்பதைக் குறித்தும் மற்றும் கோர்பின்-தலைமையிலான அரசாங்கத்திற்கு ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பைக் கொண்டு விடையிறுப்பதற்கான இராணுவத்தின் அச்சுறுத்தல்களைக் குறித்தும் எச்சரித்தோம்.
பிளேயர்-ஆதரவாளர்கள் மற்றும் சியோனிசவாதிகளைக் கையாள விரும்பும், தொழிற் கட்சிக்குள் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் கூறுவது இதுதான்: “வலதுசாரி பிரிவை வெளியேற்று!” என்ற கோரிக்கையை முன்னெடுங்கள், கிளைக் கூட்டங்களுக்கு அழைப்புவிடுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர்களை நீக்கி, கட்சியிலிருந்தும் அவர்களை நீக்குங்கள். சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்த அழைப்புவிடுங்கள்!
அதுபோன்றவொரு போராட்டத்திற்கு நாங்கள் விமர்சனரீதியான ஆதரவை வழங்குகிறோம் என்றாலும், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய மற்றும் உண்மையான சோசலிசக் கட்சி தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்துகிறோம். அதுபோன்றவொரு போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் தவிர்க்கவியலாமல் கோர்பின் உடன் தங்களைத்தாங்களே ஒரு மோதலில் காண்பார்கள், ஏனென்றால் கோர்பினும் அவரது குழுவும் தொடர்ந்து வலதுசாரிக்கு எதிரான போராட்டத்தை தணிய செய்ய, சமரசப்படுத்த இல்லையென்றால் அடிபணிய செய்யும் என்பதை அவரின் முதலாளித்துவ-சார்பு அரசியல் உறுதிப்படுத்துகிறது.
சம்பவங்கள் நமது மதிப்பீட்டை ஊர்ஜிதப்படுத்தும். அது போன்ற நிலைமைகளின் கீழ், வலதுசாரி பிரிவை வெளியேற்றுவதற்கான கோரிக்கை வர்க்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு இயங்குமுறையை மட்டும் வழங்கப் போவதில்லை, மாறாக சந்தர்ப்பவாத கொள்கைகளுக்கும் புரட்சிகர சோசலிச கொள்கைகளுக்கும் இடையிலான வேறுபாட்டின் மீது தொழிலாள வர்க்கத்தைக் கல்வியூட்டவதற்கான வழிவகையையும் வழங்கும். வலதுசாரிக்கு நமது சமரசமற்ற எதிர்ப்பும் மற்றும் சதிகாரர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு நாம் தெளிவாக அழைப்புவிடுப்பதும் நமது கட்சி மீதான நம்பகத்தன்மையைக் கட்டமைக்கும் என்பதோடு, இதன் வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைக்கும்.
இதனால் தான் "சாமானிய தொழிலாளர்களின்" “பலமான பெருந்திரளுக்கு" மற்றும் அவர்களின் போராட்டங்களை நோக்கி நோக்குநிலை கொள்வதற்கு எதிராக, தொழிற் கட்சி உறுப்பினர்களை நோக்கிய ஒரு திருப்பத்திற்கு, தவறான மற்றும் தொழிற்சங்கவாத தன்மையை கொடுக்கின்றது.
பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி கோர்பினைப் பாதுகாப்பதானது நமது அமெரிக்க சக-சிந்தனையாளர்களுடனும் மற்றும் போலி-இடதுக்கு எதிரான "அடிப்படை" போராட்டம் மீதான அவர்களின் ஒருமுனைப்புடனும் நம்மை மோதலில் நிறுத்தாது. போலி-இடது குழுக்களுக்கு எதிராக பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அனைத்து பிரிவுகளும் நடத்தி வரும் போராட்டம், ஓர் கன்னைவாத மோதல் அல்ல, மாறாக இந்த வழிவகை மூலமாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தைப் பாதுகாக்கவும், முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசத்திற்காக உண்மையான அடிப்படை போராட்டத்தை முன்னெடுக்கவும் நாம் முயல்கிறோம்.
அவர்கள் கூறும் “இடதுசாரியைப்" பெருமைப்படுத்துவதன் மூலமாக அல்லது முன்னாள்-ஸ்ராலினிசவாதிகள் மற்றும் முன்னாள் சமூக ஜனநாயக கட்சியினரால் வழிநடத்தப்படும் கிரீஸின் சிரிசா அல்லது ஸ்பெயினின் பெடொமோஸ் போன்ற "பரந்த இடது" உருவாக்கங்களை ஆதரிப்பதன் மூலமாக, சர்வதேச அளவில் போலி-இடது குழுக்கள் தொழிலாள வர்க்கத்தைப் பழைய ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளுடன் பிணைத்து வைப்பதற்கான அவற்றின் முயற்சிகளைக் கொண்டு மத்திய பாத்திரம் வகிக்கின்றன. கடந்த மாதம் தான், பிரிட்டனின் சோசலிஸ்ட் கட்சி அதன் சொந்த தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்தது ஏனென்றால் "இந்த தருணத்தில், ஜெர்மி கோர்பின் தலைமை முகப்பைக் கட்டமைப்பதே தெளிவான பாதை, இதன் மூலமாக தொழிலாளர்கள் தமது பெருந்திரளான சொந்த கட்சி ஒன்றைக் கட்ட முடியும்” என்றது.
தொழிற் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் வரலாற்று தோற்றுவாய்களில் முக்கிய வேறுபாடுகள் இருப்பது உண்மை தான் என்பதால், நமது வாசகர் சுட்டிக்காட்டுவதைப் போல, கிளிண்டன் மற்றும் அவர் சாராரை வெளியேற்றுவதற்கு எந்தவொரு தந்திரோபாய கோரிக்கையைப் பயன்படுத்துவதையும் நடைமுறைக்கு ஒவ்வாததாக்கி விடுகிறது. இருந்தபோதினும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி பேர்ணி சாண்டர்ஸிற்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் கன்னை செய்து வரும் சதித்திட்டங்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் பிரச்சினைகளை அம்பலப்படுத்த விரிவாக எழுதியுள்ளது.
அனைத்திற்கும் மேலாக, கோர்பினுக்கு எதிரான வலதுசாரி சதிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அழைப்பில் இன்று சோசலிச சமத்துவக் கட்சியால் எடுக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டுக்கும், ஜனாதிபதி பில் கிளிண்டன் மீது களங்கம் கற்பிப்பதற்கான 1998 முயற்சியை நமது அமெரிக்க தோழர்கள் எவ்வாறு எதிர்த்தார்கள் என்பதற்கும் இடையே தெளிவான சமாந்தரங்கள் உள்ளன. கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு சற்றும் அரசியல் அனுதாபம் காட்டாமல், சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கையில், லெவென்ஸ்கி விவகாரத்திற்குப் பின்புலத்தில் உள்ள சக்திகள் வலதை நோக்கி அமெரிக்க அரசியல் ஒரு கூர்மையான திருப்பம் எடுப்பதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரைப் பதவியிலிருந்து நீக்க முயன்று வருகின்றனர் என்று எச்சரித்தது. உண்மையில் குடியரசு கட்சி வலது பயன்படுத்திய ஜனநாயக-விரோத நடவடிக்கைகளால் உழைக்கும் மக்களுக்கு முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு போலி-இடது குழுக்கள் காட்டிய அலட்சியத்தை சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்தது.
நமது வாசகர் குறிப்பிட்ட, ட்ரொட்ஸ்கியின் பிரிட்டன் எங்கே செல்கிறது? எழுத்துக்களுடன் நாம் உறுதியாக நிற்கிறோம். பொது வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக 1926 இல் முதலில் பிரசுரிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் அந்த தர்க்க உரை, ஒரு புரட்சிகர நெருக்கடி மேலெழுகையில் புரட்சிகர முன்னணிப்படையைத் தயாராக இருக்க வேண்டுமென்றும், தலையீடு செய்ய அனைத்திற்கும் மேலாக தொழிற் கட்சி மற்றும் அதன் இடதுசாரியிடமிருந்து தொழிலாளர்களை உடைக்க ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் கோருகிறது.
“பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயப்படல் விரைவில் நடக்கும்" மற்றும் "தொழிற் கட்சி ஆட்சியைப் பிடிக்க தயாரிப்பு" செய்யக்கூடும் என்று அனுமானித்து, ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகையில், “முதலாளித்துவ புலி" “விரைவிலேயே பதுங்கி இருப்பதிலிருந்து வெளியில் வந்து, தனது நகங்களை காட்டத் தொடங்கும்,” என்று குறிப்பிடுகிறார்.
இது "தொழிற் கட்சியின் 'இடது' சாரிகள் எனப்படுபவர்களுக்கும் மற்றும் வலதுக்கும் இடையிலான உறவை மேற்கொண்டு கூர்மையாக்கும் என்பதோடு, மிக முக்கியமானது என்னவென்றால், பெருந்திரளான மக்களிடையே புரட்சிகர போக்குகளைப் பலப்படுத்துவதாகும்…"
பழமைவாதிகளுக்குப் "பின்னால் உத்தியோகபூர்வ அரசு எந்திரம் மட்டுமல்ல மாறாக பாசிசத்தின் உத்தியோகபூர்வமற்ற கும்பல்களும் இருக்கலாம். அவை இரத்தந்தோய்ந்த ஆத்திரமூட்டும் வேலையை தொடங்கும்...” தொழிற் கட்சி அரசாங்கம் ஒன்று "வெட்கக்கேடாக மண்டியிட வேண்டியிருக்கும் அல்லது எதிர்ப்பை நசுக்க” வேண்டியிருக்கும், அதேவேளையில் "புரட்சிகர பிரிவு தவிர்க்கவியலாமல் வளரும், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்ட புரட்சிகர கூறுபாடுகள் உயர்மட்டத்திற்கு வரும்,” என்றார்.
“தவிர்க்கவியலாத ஒரு புதிய உள்நாட்டு போர் வெடிக்கும் மற்றும் எல்லா போக்குகளினோடு சேர்ந்து வர்க்கங்களுக்கு இடையே ஒரு கூர்மையான மோதலுக்கான,” நிலைமை அபிவிருத்தி அடையும். புரட்சிகர கட்சியைப் பொறுத்த வரையில், தவிர்க்கவியலாத நிர்பந்தகளாக இருப்பது: “பெருந்திரளான மக்களுக்குக் கல்வியூட்டி, ஒரு புரட்சிகர வழியில் செலுத்துவது. இதற்கான முதல் நிபந்தனை, மக்டொனால்டிசத்தின் ஊழல் அடைந்துவரும் உத்வேகத்திற்கு எதிரான ஒரு விட்டுக்கொடுக்காத போராட்டமாகும்.”
சோசலிச சமத்துவக் கட்சி, இப்போது திட்டநிரலில் இருக்கும் புரட்சிகர பணிகளுக்காக தொழிலாள வர்க்கத்தைத் தயாரிப்பு செய்ய, பிரிட்டனின் தற்போதைய இந்த ஆழ்ந்த அரசியல் நெருக்கடியில் செய்யும் நமது தலையீட்டை இந்த உத்வேகத்துடன் தான் மேற்கொள்கிறது.