ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German right demands nuclear “weapons of mass extermination”

ஜேர்மன் வலது "பாரிய நிர்மூலமாக்கலுக்கான" அணு "ஆயுதங்களை" கோருகிறது

Johannes Stern
31 July 2018

ஜேர்மனியின் வலதுசாரி கூட்டணி அரசாங்கம் இராணுவ செலவினங்களைப் பாரியளவில் அதிகரிப்பதற்கான அதன் உள்நோக்கத்தை அறிவித்து வெறும் ஒரு சில வாரங்களில், ஒரு பிரதான தேசிய பத்திரிகை அணுஆயுத தளவாடங்கள் உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரயிறுதியில் பிரசுரிக்கப்பட்ட அதன் சமீபத்திய பதிப்பில், Welt am Sonntag, ஜேர்மன் கொடியின் நிறங்களில் வரையப்பட்ட ஓர் அணுகுண்டின் படத்தை முதல் பக்கத்தில் தாங்கியுள்ளது. அந்த தலைப்பு குறிப்பிடுகிறது: “நமக்கு அந்த குண்டு தேவையா?” “ஆம்!” (Ja!) என்பது தான் ஐயத்திற்கிடமற்ற இரத்தம் கொதிப்பேறிய பதிலாக உள்ளது.

அரசாங்கம், இராணுவம் மற்றும் வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தின் முன்னணி பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒரு முன்னணி கல்வியாளர் கிறிஸ்டியான் ஹாக்க அக்கட்டுரையின் ஆசிரியராவார். அவரின் அரசியல் தொழில்வாழ்வு பின்னோக்கி 1960 களில் இருந்து வருகிறது, அப்போது அவர் தன்னை வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக மாணவர் அமைப்பின் (RCDS) ஒரு தலைவராக பெயரிட்டு இருந்தார். ஹம்பேர்க் இராணுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிற்றுவித்துள்ள இவர், ஜேர்மன் வெளியுறவு கவுன்சில், மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச பயிலகம், அட்லாண்டிக் ஆய்வுக் குழு, உலக பாதுகாப்பு வலையம் ஆகியவற்றின் ஓர் உறுப்பினர் ஆவார். தெளிவாக, ஹாக்க, வெறுமனே அவரின் சொந்த கருத்துக்களை மட்டும் வெளியிடவில்லை.


Welt am Sonntag பத்திரிகை, ஜேர்மன் கொடி சுற்றப்பட்ட ஓர் அணுஆயுத குண்டின் படத்தை முதல் பக்கத்தில் ஏந்தியுள்ளது

ஜேர்மனி அதன் மூலோபாய நலன்களுக்கான பாதுகாப்பை அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளிடம் ஒப்படைக்க முடியாதென வாதிட்டு, ஹாக்க இன் கட்டுரை, “ஜேர்மன் பாதுகாப்பு கொள்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள ஆதார விடயங்களை மீளாய்வு செய்ய" அழைப்பு விடுக்கிறது. “பாரிய நிர்மூலமாக்கலுக்கான ஆயுதங்கள்" [Massenvernichtungswaffen] இல்லாமல் ஜேர்மனி செயல்பட முடியாது என்றவர் பிரகடனப்படுத்துகிறார்.

ஹாக்க இன் கட்டுரை ஜேர்மன் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களை நினைவூட்டுகின்றன. Vernichtung என்பது நிர்மூலமாக்கல் என்பதன் ஜேர்மன் வார்த்தை. 1941 மற்றும் 1945 க்கு இடையே சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக மூன்றாம் ரைஹ் இன் போரை விவரிக்க Vernichtungskrieg [நிர்மூலமாக்கல் போர்] என்ற வார்த்தை நாஜிக்களால் பயன்படுத்தப்பட்டது. ஹாக்க, எந்தவித அரசியல் ஐயப்பாட்டிற்கும் இடமின்றி, Massenvernichtungswaffen ஐ (பாரிய நிர்மூலமாக்கலுக்கான ஆயுதங்களை) உருவாக்க கோருகிறார் என்ற உண்மை, ஜேர்மன் அரசின் உயர்மட்டங்களில் மேலோங்கி உள்ள அரசியல் கண்ணோட்டங்கள் மீது ஓர் அதிர்ச்சியூட்டும் உட்பார்வையை வழங்குகிறது. இரண்டாம் உலக போர் முடிந்த பின்னர் 70 ஆண்டுகளுக்கும் அதிக காலமாக ஜேர்மன் அரசியல் தலைவர்கள் பயன்படுத்துவதற்கே துணியாத மொழி, இப்போது பொது இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1945 இல் அதன் தோல்வியால் ஜேர்மனி மீது சுமத்தப்பட்ட கட்டுப்பாடுகளைத் தூக்கியெறிய வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும், அதன் நலன்களை வலியுறுத்துவதற்கு இனியும் அது வெட்கப்பட்டு விலகி இருக்கக்கூடாது என்றும், கடந்த கால குற்றங்கள் குறித்த தார்மீக தயக்கம் மற்றும் வருத்தத்திற்கான காலம் முடிந்துவிட்டதாகவும் ஹாக் வலியுறுத்துகிறார். “நமது பாதுகாப்பிற்கான அணுஆயுத தளவாடங்களைத் தடுப்பதில்" “அரசியல்ரீதியில் சரியானத்தன்மை, உரிமைக்கான தைரியமின்மை, மற்றும் போதியளவில் இராணுவ மூலோபாய பரிசீலனைகள் இல்லாமை" ஆகியவற்றை இனியும் அனுமதிக்கக் கூடாது என்றவர் எழுதுகிறார்.

“தார்மீக இறுமாப்பு பீடத்திலிருந்து ட்ரம்ப்-நிராகரிப்பதை" சமாளித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஜேர்மனி "இராணுவ வழிவகைகளில்—அனைத்து திசைகளிலும், எல்லா விதத்திலும்—தன்னைத்தானே சிறந்ததாக" ஆக்கிக் கொள்ள வேண்டும்.

ஜேர்மனி "தன்னை மட்டுந்தான் சார்ந்திருக்க முடியும்.” தேசிய பாதுகாப்பு "அதன் சொந்த அணுஆயுத தாக்குதல் தடுப்பு தகைமைகளின் அடிப்படையில்" இருக்க வேண்டும் என்பதோடு, "அட்லாண்டிக் கடந்த நாடுகளின் புதிய நிச்சயமற்றத்தன்மைகளையும், ஏற்படக்கூடிய மோதல்களையும் எதிர்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க" வேண்டும் என்று ஹாக்க எச்சரிக்கிறார்.

“அதிநவீன பாதுகாப்பு கலாச்சாரத்தை" உருவாக்கி அபிவிருத்தி செய்வதை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு அழைப்பு விடுக்கும் ஹாக்க, “இராணுவ மூலோபாய வகைமுறைகளில் சிந்திக்க அல்லது செயல்பட பேர்லின் அதன் விருப்பத்தையும் திறமையையும் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் என்கிறார். வர்த்தக நலன்களைப் பாதுகாத்தல் போன்ற புவிசார் அரசியல் பரிசீலனைகள் புதிய சவால்களின் முன்னால் அவசரமானவை,” என்றவர் எழுதுகிறார். ஆனால் "ஐரோப்பாவின் இந்த மத்திய அதிகாரம், என்ன நிலைமைகளின் கீழ் மற்றும் என்ன விலையில் மீண்டும் ஓர் அணுஆயுத சக்தியாக மாறும்? என்பதே மத்தியக் கேள்வியாக உள்ளது.”

Welt am Sonntag கருத்துக்கள் ஜேர்மனியின் அபாயகரமான அபிவிருத்திகள் மீது வெளிச்சமிடுகின்றன. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயக கட்சியை உள்ளடக்கிய இந்த கூட்டணி அரசாங்கம் தனித்துவமான பாசிசவாத பக்கவாத்தியங்களுடன் தீவிர வலதுசாரி திட்டநிரலை நடைமுறைப்படுத்தி வருகிறது. கடந்த தேர்தலில் அதிவலது மற்றும் இனவாத Alternative für Deutschland (AfD) வெறும் 12.5 சதவீத வாக்குகளே பெற்றிருந்தது என்றபோதும், அதன் அரசியல் செயல்திட்டத்தையே பெயரளவிற்கு சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தலைமையிலான இந்த கூட்டணி அரசாங்கம் தரந்தாழ்ந்து பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆளும் கூட்டணியில் SPD பங்கெடுத்திருப்பதும், இடது கட்சி [Die Linke] மற்றும் பசுமை கட்சி இந்த கூட்டணி அரசாங்கத்திற்கு நேரடியாக வழங்கி வரும் ஆதரவும், ஜேர்மன் அரசின் உயர்மட்டங்களுக்குள் நவ-நாஜி செல்வாக்கு புத்துயிர் பெறுவதற்குத் துணை போகின்றன. தீவிர வலதின் பலம் வளர்ந்து வருவதற்குப் பங்களிப்பு செய்யும் மற்றொரு காரணி, ஜேர்மன் கல்வியாளர்களின் கோழைத்தனமாகும். இவர்கள் AfD உடன் கூட்டணி அரசாங்கம் ஏற்பாடு செய்து கொள்வதை விமர்சிப்பதிலிருந்து விலகி உள்ளனர்.

இந்த அரசியல் சூழலில் தான், தீவிர வலது அதன் நவ-நாஜி திட்டநிரலைப் பின்தொடர துணிவு பெற்றுள்ளது. பைனான்சியல் டைம்ஸ், அதன் வாரயிறுதி பதிப்பில், நவ-நாஜி சக்திகளின் திமிர்தனம் அதிகரித்து வருவதைக் குறித்து குறிப்பிடுகிறது. அது இடதுசாரி கலைஞர்களுக்கு எதிரான சரீரரீதியில் தாக்குதல்கள் மற்றும் மரண அச்சுறுத்தல்களைக் குறித்து குறிப்பிடுகிறது.

ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி (AfD), “ஜேர்மனியர்கள் அவர்களின் கடந்த காலத்தைப் பார்க்கும் விதத்தை மாற்ற விரும்புகிறது. ஜேர்மனி மூன்றாம் ரைஹ் மீதும், ஹிட்லர் ஆட்சியின் குற்றங்கள் மற்றும் அட்டூழியங்கள் மீதும் நிறைய ஒருமுனைப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு அதன் தலைவர்களில் ஒருவரான Björn Höcke இந்த நினைவேந்தல் கலாச்சாரத்தில் '180-பாகை புரட்சிக்கு' அழைப்பு விடுத்ததுடன், பேர்லின் மையத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய யூதர்கள் படுகொலை செய்யப்பட்டது மீதான நினைவு மண்டபத்தைத் தாக்கினார். 'உலகிலேயே ஜேர்மனியர்கள் மட்டுந்தான் அவர்களின் தலைநகரின் மையத்தில் வெட்கக்கேடான ஒரு நினைவுச்சின்னத்தை நிறுத்தி உள்ளனர்,' என்றவர் கூறினார்,” என்று பைனான்சியல் டைம்ஸ் எச்சரிக்கிறது.

ஸ்தாபக கட்சிகளின் ஒரு பிரதிநிதியால் எதிரொலிக்கப்படாத AfD இன் ஓர் அரசியல் கோரிக்கை அல்லது அறிக்கை என்பது அரிதாகவே உள்ளது.

ஆளும் வட்டாரங்களில் AfD கொண்டிருக்கும் செல்வாக்கு, பெரும்பான்மை மேலதிக மக்களின் உணர்வுகளுடன் கூர்மையாக முரண்படுகின்றன என்பதை வலியுறுத்தியே ஆக வேண்டும்.

ஜேர்மன் வாரயிதழ் Der Spiegel இன் ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ஜேர்மன் மக்களில் 67 சதவீதத்தினர் "ஜேர்மன் அரசியல் தற்போது வலதுக்கு நகர்வதை" எதிர்க்கின்றனர். ஒரு பரந்த பெரும்பான்மையினர் அணுஆயுதங்கள் அபிவிருத்தி செய்வதையும் எதிர்க்கின்றனர். சர்வதேச அணுஆயுத ஒழிப்பு அமைப்பின் சார்பில் YouGov நடத்திய ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ஜேர்மனி அணுஆயுதங்கள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தடையில் இணைவதற்கு எழுபத்தியொரு சதவீதத்தினர் ஆதரவாக உள்ளனர்.

ஆனால் இந்த பரந்த எதிர்ப்பானது, இடது கட்சி, சமூக ஜனநாயக கட்சி, பசுமை கட்சி மற்றும் தொழிற்சங்கங்களது நடைமுறைரீதியிலான நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் இந்த அபாயகரமான அபிவிருத்திகளைக் குறித்து எச்சரித்துள்ளதும், வலதுசாரி அத்துமீறல்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தைத் தொடுத்துள்ளதும், ஒரே அரசியல் கட்சி சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei -SGP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பாகும் (IYSSE). உண்மையில், தீவிர வலதின் அதிகரித்து வரும் செல்வாக்குக்கு எதிராக SGP மற்றும் IYSSE தொடுத்த தொடர்ச்சியான பிரச்சாரம், முதலாளித்துவ பத்திரிகை மற்றும் அரசின் ஓர் இலக்காக அதை மாற்றியுள்ளது.

இது, தீவிர வலதின் மீளெழுச்சியை தடுப்பதற்கும் தோற்கடிப்பதற்குமான ஒரே வழியாக உள்ள ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் பின்னால் தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் அணித்திரட்டுவதற்கான அதன் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதில் இருந்து SGP ஐ தடுத்து விடப் போவதில்லை.