Print Version|Feedback
French auto giant PSA announces new cuts at Opel
மிகப்பெரிய பிரெஞ்சு வாகனத்துறை நிறுவனம் PSA, ஓப்பெல் ஆலையில் புதிய வேலை வெட்டுக்களை அறிவிக்கிறது
By Marianne Arens and Peter Schwarz
7 July 2018
பிரெஞ்சு PSA குழுமத்தால் ஓப்பெல் கையகப்படுத்தப்பட்டு பதினொரு மாதங்களுக்குப் பின்னர், அடுத்த சுற்று வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு நாளிதழ் Le Monde இன் ஜூலை 3 செய்தியின்படி, PSA பொதுக்குழு Rüsselsheim நகரில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப அபிவிருத்தி மையத்தின் (ITEZ) பெரும் பகுதிகளையும் மற்றும் ஒஃபன்பாக் மாவட்டத்திலுள்ள Dudenhofen இல் உள்ள பரிசோதனை ஓட்டப்பாதையையும் விற்பதற்கு அது உத்தேசித்துள்ளது.
Le Monde க்கு உள்அலுவலக தகவல் கிடைத்துள்ளது, அதன்படி பொறியியல் சேவை வழங்கும் Altran உடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே அதிக முன்னேற்றமான நிலையை அடைந்துள்ளது. ஓர் ஒப்பந்தத்திற்கான சாத்தியமான திகதி இந்தாண்டு டிசம்பரில் நிர்ணயிக்கப்பட்டடுள்ளது. Altran விட, Akka மற்றும் Segula ஆகிய மற்ற இரண்டு பிரெஞ்சு கார் மேம்படுத்தும் நிறுவனங்களும் மற்றும் ஜேர்மன் Bertrandt உம் இதை வாங்கக்கூடிய நிறுவனங்களாக விவாதத்தில் உள்ளன. Akka நிறுவனம் ஏற்கனவே 2012 இல் டைம்லெரின் மேம்பாட்டு துறையின் (development department) பகுதியைக் கையகப்படுத்தி உள்ளது.
பிரான்சில், Altran நிறுவனம் நீண்டகாலமாக PSA குழுமத்தின் ஒரு முக்கிய பங்காளியாக இருந்துள்ளது. உண்மையில், இந்த வாகன ஆலை நவீன முன்னணு தொழில்துட்பத்திலிருந்து எழும் அபாயங்களையும் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தகப் போர் விளைவுகளையும் ஈடுசெய்ய, அதிக அதிகமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விடயங்களை வெளியிலிருந்து சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வெளியகற்றி வருகிறது. இதனால், தொழிலாளர்கள் புதிய புதிய துணை நிறுவனங்கள் மற்றும் துணை-ஒப்பந்ததாரர்களுக்கு இடையே துண்டாடப்படுவதால், வேலைகள் மற்றும் முன்னேற்றங்கள் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இந்த விற்றுத்தள்ளல், ITEZ இல் தற்போது வேலை செய்யும் அண்மித்து 8,000 தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களில் சுமார் பாதிப் பேர்களையாவது பாதிக்கும். இந்த வேலைகளில் பெரும் பாகம் ஆபத்திற்குள்ளாகும். ஜெனரல் மோட்டார்ஸ், இதுவும் Rüsselsheim இல் ஒரு அபிவிருத்தி பிரிவைக் கொண்டிருந்தாலும், இதிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர், அங்கே ITEZ இல் 40 சதவீதம் உபரி திறன் இருப்பதாக ஓப்பெல் அபிவிருத்தி பிரிவு தலைவர் கிறிஸ்தியான் முல்லர் கூறியதாக Le Monde குறிப்பிட்டது.
அதன் சொந்த அபிவிருத்தி பிரிவைக் கைவிடுவதானது மற்ற ஓப்பெல் ஆலைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும், இதுவும், Eisenach, Kaiserslautern மற்றும் Ellesmere துறைமுகத்தைப் போலவே, ஏற்கனவே மூடப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.
விற்பதற்கான திட்டங்கள் குறித்த அறிவிப்பானது, Rüsselsheim தொழிலாளர்களிடையே கோபம் மற்றும் சீற்றத்தைச் சந்தித்தது. வியாழனன்று, இந்த அலையைச் சமாளிக்கும் முயற்சியாக தொழிற்சாலை தொழிலாளர்குழு அசாதாரணமான விதத்தில் பணியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. அது ஓப்பெல் முதலாளி மிக்கையில் லோஷ்செல்லார் மற்றும் அபிவிருத்தி பிரிவு தலைவர் கிறிஸ்தியான் முல்லர் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்திருந்தது என்றாலும், அவர்கள் இருவருமே கலந்து கொள்ளவில்லை.
அக்கூட்டத்தில், ஓப்பெல் பொது தொழிற்சாலை தொழிலாளர்குழு தலைவர் வொல்ப்காங் ஷ்சேஃபெர்-குளூக் சீற்றத்துடன் பாசாங்கு செய்தார். ஒரு நாள் முன்னர் தான், அவர் அந்த விற்றுத்தள்ளும் பேரம்பேசல்களை "நம்ப முடியாத முன்னொருபோதும் இல்லாத ஆத்திரமூட்டல்,” என்றும், அதை IG Metall தொழிற்சங்கமும் மத்திய தொழிற்சாலை தொழிலாளர்குழுவும் "ஒரு போராட்டம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளாது,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வெற்றுரைகள் வெறுமனே அவர்கள் இதுவரை செய்தவற்றை மூடிமறைக்கவும், அடுத்த விற்றுத்தள்ளலுக்கு தயாரிப்பு செய்யவுமே சேவையாற்றுகிறது. ITEZ விற்றுத்தள்ளும் திட்டங்கள் குறித்து கேள்விபட்டதும் “நிதானம் இழந்துவிட்டதாக" ஷ்சேஃபெர்-குளூக் கூறியதாக, Le Monde குறிப்பிட்டது. ஒரு PSA செய்தி தொடர்பாளர் அற்ப தன்னிறைவோடு பதிலளித்தார், “மற்ற நிறுவனங்களுடனான மூலோபாய பங்காண்மைக்கான சாத்தியக்கூறு, டிசம்பரில் கையெழுத்தான ஒரு கட்டமைப்பு உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை தொழிலாளர்குழுவின் தலைவர் வொல்ப்காங் ஷ்சேஃபெர்-குளூக் அவரே அதில் கையெழுத்திட்டுள்ளார்.”
தொழிலாளர்கள் கோபத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஷ்சேஃபெர்-குளூக்கிற்கு நன்கு தெரியும். “இந்த மனோநிலை மோசமானது, ஆக்ரோஷமாக உள்ளது, தொழிலாளர்கள் எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தொழிலாளர்கள் போராடுவதற்கு தயாராக உள்ளனர்” இவ்வாறு அவர் தொழிலாளர் கூட்டத்தில் இருந்த மனநிலை குறித்து விவரித்தார்.
டுயிஸ்பேர்க் நகர பல்கலைக்கழகத்தின் வாகனத்துறை வல்லுனர் Ferdinand Dudenhöffer உம் கூட வரவிருக்கும் ஒரு புரட்சி குறித்து எச்சரித்தார். “விடயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அறியத்தருவது நல்ல யோசனையாக இருப்பதாக பிரான்சில் வெளிப்படையாக நம்பப்படுகின்றது. அவர்கள் அனைத்தையும் ஒரே முறையில் அறிவித்திருந்தால், அவர்கள் ஒரு 'புரட்சி' அல்லது ஒரு வேலைநிறுத்தம் தூண்டப்படுவது குறித்து பயந்திருப்பார்கள்,” என்று அவர் கூறியதாக ZDF ஒளிபரப்பு நிறுவனம் குறிப்பிட்டது.
IG Metall மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்குழு கூட, PSA தலைமை செயல் அதிகாரி Carlos Tavares, ஓப்பெல் முதலாளி Lohscheller ஆகியோருடனும் மற்றும் ITEZ கலைக்கப்படுகையில் அதை வாங்கக்கூடியவர்களுடனும் மற்றும் "PACE” மறுசீரமைப்பு திட்டத்தில், கடந்த காலத்தில் செய்ததைப் போலவே, ஆம்ஸ்டர்டாம் மற்றும் Bochum நகரில் ஓப்பெல் ஆலையை மூடுவதால், அடைக்கப்படக்கூடிய பிற ஆலைகளை வாங்கக்கூடியவர்களுடனும் நெருக்கமாக நெருங்கி செயல்படுகின்றன. கால்வாசி வேலைகளைக் குறைக்க நோக்கம் கொண்ட "PACE” மறுசீரமைப்பு திட்டத்தில், அவை PSA கையகப்படுத்தப்பட்ட போது "கையெழுத்திட்டிருந்தன.
மிக சமீபமாக இந்த மே மாதம், தொழிற்சாலை தொழிலாளர்குழு, PSA உடனான இந்த /06/02/opel-j02.html"உடன்படிக்கையை "ஓப்பெல் க்கு ஒரு மைல்கல்" என்று வர்ணித்தது. அதில் தொழிற்சாலை தொழிலாளர்குழு, ஓப்பெல் தொழிலாளர்கள் அவர்கள் கடினமாக வென்றெடுத்த பல மாதங்களுக்கான கூலி உயர்வைக் கைவிடுவதற்கு உடன்பட்டிருந்தது. ஜனவரி 2019 இல் வழங்க வேண்டிய கூடுதல் சம்பளங்கள் வழங்கப்படாது, மற்ற சம்பள உயர்வுகளும் 2020 வரையில் தொடங்கப்படாது. “விரிவான வேலை பாதுகாப்பு" என்றழைக்கப்படுவதன் உண்மையான மதிப்பை இப்போது ITEZ இல் காணலாம்.
அனைத்திற்கும் மேலாக, PSA இணைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து, தற்காலிக தொழிலாளர்கள் நீங்கலாக, 3,700 வேலைகள் ஏற்கனவே பறிபோய் உள்ளன. Eisenach நகரின் தொழிற்சாலையின் எதிர்காலம் இப்போதும் முழுமையாக பாதுகாப்பின்றி உள்ளது, Rüsselsheim மற்றும் Kaiserslautern தொழிலாளர் குறைப்பையும், வேலை-நேர குறைப்பையும் முகங்கொடுக்கின்றன.
தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் வாகனத்துறை ஒரு கடுமையான போட்டியைச் சந்தித்து வருகிறது, அதேவேளையில் பெருநிறுவனங்களும் நிதி முதலீட்டாளர்களும் தங்களின் பின் பைகளில் பில்லியன்களை நிரப்பி வருகிறார்கள், நிறுவன உயர் அதிகாரிகளோ இரட்டை இலக்க மில்லியன்களில் வருவாய் பெறுகின்றனர். அமெரிக்கா உடன் வரவிருக்கின்ற வர்த்தகப் போர் இந்த அபிவிருத்தியை மேற்கொண்டும் தீவிரப்படுத்தும்.
அடுத்தடுத்த ஒன்றோடு ஒன்றான இணைப்புகளோடு (அதாவது வேலை இழப்புக்களோடு) முன்பினும் பெரிய ஏகபோகங்களாக வாகனத்துறை நிறுவனங்கள் ஒருங்கிணைவது, கூலிகளைக் குறைப்பதற்காகவும் மற்றும் இதைபோல் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதின் பாகமாக உள்ளது. சான்றாக, PSA குழும நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் ஐரோப்பிய கார் சந்தையில் வோல்ஸ்வாகனின் மேலாதிக்கத்தை எதிர்கொள்ள கடந்த ஆண்டு ஓப்பெல் மற்றும் Vauxhall இன் ஆலைகளை விலைக்கு வாங்கியது. ஏற்கனவே Peugeot, Citroën மற்றும் DS ஆகியவை இணைக்கப்பட்டுவிட்டன.
கடந்த ஆண்டு கையகப்படுத்தப்படுதல் ஒரு தீவிர சேமிப்பு திட்டத்துடன் தொடர்புபட்டிருந்தது. PSA முதலாளி Tavares, ஓப்பெல் தொழிற்சாலை தொழிலாளர்குழு மற்றும் IG Metall இன் ஒப்புதலுடனும், நெருக்கமான ஒத்துழைப்புடனும் ஒவ்வொரு ஆண்டும் 1.7 பில்லியன் யூரோ வெட்ட விரும்புகிறார். இதன் பாகமாக, தொழிற்சாலை தொழிலாளர்குழு ஏற்கனவே ஜனவரியில் இருந்து வேலை-நேர குறைப்பை அறிமுகப்படுத்த, நூற்றுக் கணக்கான தற்காலிக வேலைகளை வெட்ட, Eisenach நகரில் 450 வேலைகளை நீக்க ஒப்புதல் வழங்கியது. ITEZ இல் பல ஆயிரக் கணக்கான வேலைகளை நீக்குவது நீண்ட காலத்திற்கு முன்னரே திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டது.
தொழிற்சாலை தொழிலாளர்குழுவும் மற்றும் IG Metall ஆகியவை நிர்வாகம் மற்றும் பங்குதாரர்களின் தரப்பில் நிற்கிறது. அவர்கள் வஞ்சித்து விட்டதாகவும் பொய்யுரைத்து விட்டதாகவும் அவை கூச்சலிடுவது, தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கும் அவர்கள் வகிக்கும் உண்மையான பாத்திரத்தை மூடிமறைப்பதற்காகவும் மட்டுமே ஆகும்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அவர்களின் விசுவாசமான சேவைகளுக்காக அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் ஒரு சாமானிய தொழிலாளரின் சம்பளத்தை விட பல மடங்கு சம்பாதிப்பதுடன், வேலைநீக்கம் இல்லாத பாதுகாப்பை அனுபவித்து கொண்டு, இன்னும் பல தனிச்சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள். இரண்டாவதாக, அவர்கள் ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத வேலைத்திட்டத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவர்கள் "தங்களின்" அமைப்பின் எதிர்காலத்தைத் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச நிலைப்பாட்டில் இருந்து அல்ல, முற்றிலும் முதலாளித்துவ நலன்களின் தேசியவாத கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறார்கள். இதனால் தான் அவர்கள், ஆலை மூடல்கள், கூலி வெட்டுக்கள் மற்றும் அதிகரிக்கப்படும் இடர்பாடுகள் உள்ளடங்கலாக ஒவ்வொரு நடவடிக்கையையும் போட்டித்தன்மையை ஊக்குவிப்பதற்காக என்று அவற்றை ஆதரிக்கிறார்கள்.
தொழிலாளர்கள் அவர்களும் சர்வதேச அளவில் அவர்களின் படைகளுடன் இணைந்தால் தான், இந்த சர்வதேச பெருநிறுவனங்களை எதிர்க்க முடியும் என்பது தெளிவாகிறது. ஆனால் தொழிற்சாலை தொழிலாளர்குழுவும் IG Metall உம் இதை விடாப்பிடியாக நிராகரிக்கின்றன. நிறுவனங்கள் செய்வதைப் போலவே, தொழிலாளர்களின் ஓர் உண்மையான போராட்டத்தைக் குறித்து அவை அஞ்சுகின்றன. “ஓப்பெல் ரக வாகனத்தின் இதயதானத்தை" காப்பாற்றுவதற்கும், “ஜேர்மனியை ஒரு தொழில்துறை மையமாக" பாதுகாக்குமாறும் அவர்கள் அழைப்புவிடுப்பது, வேலைகளைப் பாதுகாப்பதற்காக கிடையாது, மாறாக தொழிலாளர்களை இன்னும் அதிகமாக சுரண்டுவதற்காக ஜேர்மனியில் உள்ள தொழிலாளர்களை பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்துவதற்காக ஆகும்.
Peugeot, Citroen மற்றும் DS தொழிலாளர்கள், அவர்களின் ஜேர்மன் சக தொழிலாளர்களைப் போலவே, நீண்ட காலமாக கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். இவ்விதத்தில், PSA, 2013 மற்றும் 2017 க்கு இடையே வருவாய் பங்கில் தொழிலாளர்களுக்கான செலவுகளை 15 சதவீதத்தில் இருந்து 11 சதவீதத்திற்கு குறைத்தது.
PSA குழுமத்தால் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட விருப்பத்திற்குரிய அணுகுமுறைகளில் ஒன்று, தற்காலிக தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும். PSA இன் 60,000 பணியாளர்களில் சுமார் 8,000 பேர் தற்காலிக தொழிலாளர்கள், இவர்களின் சம்பளம் அவர்களது நிரந்தர சமதரப்பினரை விட குறைவு என்பதோடு, வேலை அழுத்தங்களை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
“PSA இன் தலைவர் Xavier Chéreau ஜனவரியில் Le Monde க்கு கூறுகையில், “இதே சிகிச்சை, Opel-Vauxhall க்கும் வழங்கப்பட வேண்டும்,” என்றார். ஜெனரல் மோட்டார்ஸ் இன் நிதி திட்டமிடலுடன் ஒப்பிடுகையில் ஏற்கனவே 2017 இல் 12 சதவீத சேமிப்பு கிடைத்திருப்பதாக அவர் தற்பெருமை பீற்றிக் கொண்டார். கூடுதல் நடவடிக்கைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார், “நாங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால இணைப்புகளை செய்வதை விடப் போவதில்லை,” என்று வலியுறுத்திய Chéreau, “ … எப்போதும் தொழிற்சங்கத்தின் ஒத்துழைப்பின் உள்ளடக்கத்தில்" என்பதையும் சேர்த்துக் கொண்டார். Tavares மற்றும் Lohscheller ஐ போலவே, Chéreau க்கும் தொழிற்சாலை தொழிலாளர்குழு மற்றும் IG Metall உடன் நல்ல பரிச்சயம் உண்டு.
வேலைகளைப் பாதுகாப்பதற்கு, IG Metall மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்குழு உடன் முறித்துக் கொண்டு, ஆலைகளிலும் மற்றும் பிரான்சிலும் ஏனைய எல்லா இடங்களிலும் உள்ள PSA ஆலைகள், Opel மற்றும் Vauxhall ஆலைகள், இதர பிற கார் ஆலைகள் மற்றும் தொழில்துறைகளிலும் தொடர்பில் உள்ள சக தொழிலாளர்களுடன் இணைந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைப்பது அவசியமாகிறது. பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்காக அல்லாமல், சமூக தேவைகளுக்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம் அவசியப்படுகிறது.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei), அதன் சகோதர கட்சியுமான பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l'égalité socialiste) இந்த பிரச்சினைகளை விவாதிக்கவும் மற்றும் சர்வதேச கூட்டுறவை ஒழுங்கமைக்கவும் தொடர்பு கொள்ளுமாறு ஓப்பெல் மற்றும் PSA இன் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. உலக சோசலிச வலைத்தளம் மற்றும் வாகனத்துறை தொழிலாளர் தகவல் சிற்றிதழை வாசிக்கவும்.