Print Version|Feedback
Socialist Equality Party (Sri Lanka) to hold lectures to mark its 50th anniversary
சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அதன் 50 வது ஆண்டு நிறைவை கொண்டாட விரிவுரைகளை நடத்தவுள்ளது
By our reporters
14 June 2018
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.). அதன் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாட இலங்கையின் பல நகரங்களில் விரிவுரைகளை நடத்தவுள்ளது. ஆரம்ப விரிவுரை கொழும்பில் நடைபெறவுள்ளது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) இலங்கைப் பகுதியாக, 1968 யூன் மாதம் 16–17ம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் ஸ்தாபிக்கப்பட்டது. அது, நா.அ.அ.குழுவின் ஏனைய பகுதிகளைப் போல் 1996ல் சோசலிச சமத்துவக் கட்சியாக பரிணமித்தது.
இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்துக்கான அரை நூற்றாண்டுகால போராட்டத்தின் முக்கியத்துவமானது இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கம், மாணவர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களும் எழுச்சிபெறும் இன்றைய சூழ்நிலையில் தெளிவாகியுள்ளது. இந்த சமூக வெடிப்புக்கள், பூகோள முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடிகள் மற்றும் அமெரிக்கா தலமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் பேரழிவுமிக்க மூன்றாம் உலக யுத்த்தினை நோக்கிய உந்துதலினாலும் எரியூட்டப்படுகின்றன.
தன்னை ஒரு ட்ரொஸ்கிச கட்சியாக கூறிக்கொண்ட லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க), 1964ல் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) உடன் ஒரு கூட்டரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டு காட்டிக்கொத்திருந்த சூழ்நிலைக்கு எதிராகவே பு.க.கழகத்தின் ட்ரொஸ்கிசத்துக்கான போராட்டம் அபிவிருத்தி செய்யப்பட்டது. ல.ச.ச.க.யின் காட்டிக் கொடுப்பானது 1950களின் முற்பகுதியில், நான்காம் அகிலத்துக்குள் எழுந்த பப்லோவாத கலைப்புவாத போக்கினாலேயே தயாரிக்கப்பட்டது.
பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் மூலம் 1953ல் ஸ்தாபிக்கப்பட்ட நா.அ.அ.குழுவின் வேலைகள், பு.க.க. உருவாக்கப்படுவதற்கு வழியமைத்தன. பு.க.க./சோ.ச.க.வின் அரசியல் வரலாறானது, சகல முதலாளித்துவ பிரிவுகளுக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வுக்காக மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலமைத்துவத்துக்காக முன்னெடுக்கப்பட்ட நீண்ட மற்றும் சமரசமற்ற போராட்டத்தை உள்ளடக்கிக்கொண்டுள்ளது.
பு.க.க./சோ.ச.க. இன் அரை நூற்றாண்டு கால போராட்டத்தின் அரசியல் படிப்பினைகள், எதிர்வரவுள்ள புரட்சிகரப் போராட்டங்களுக்காக தொழிலாள வர்க்கத்தை தயார்படுத்துவதற்கு தீர்க்கமானவையாகும். முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் மற்றும் அதன் முகவர்களுக்கும் எதிராக போராட விரும்பும் தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில்சார் நிபுணர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனையோரையும் இந்த விரிவுரையில் கலந்து கொள்ளுமாறும் அதை அடுத்து இடம்பெறும் கலந்துரையாடல்களில்களில் கலந்துகொள்ளுமாறும் அழைக்கின்றோம்.
விரிவுரை தலைப்புக்கள், திகதிகள் மற்றும் இடங்கள்
- ட்ரொஸ்கிசத்துக்கான கொள்கை ரீதியான போராட்டத்தின் ஒரு அரை நூற்றாண்டு
- புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதம்
- இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டம்.
- முதலாளித்தவ அரசாங்கங்களுக்கு எதிராக சோசலிசக் குடியரசுக்கான போராட்டம்
- குட்டி முதலாளித்து தேசியவாத்துக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டம்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்
ஜூன் 22, வெள்ளி, மாலை 4 மணி
ஜூலை 12, வியாழன், மாலை 4 மணி
ஆகஸ்ட் 2, வியாழன், மாலை 4 மணி
ஆகஸ்ட் 16, வியாழன், மாலை 4 மணி
ஆகஸ்ட் 30, வியாழன், மாலை 4 மணி
காலி மாநகரசபை விளையாட்டு கூடம்
ஜூன் 24, ஞாயிறு, பி.ப. 3 மணி
ஜூலை 8, ஞாயிறு, பி.ப. 3 மணி
ஆகஸ்ட் 5, ஞாயிறு, பி.ப. 3 மணி
ஆகஸ்ட் 26, ஞாயிறு, பி.ப. 3 மணி
செப்டம்பர் 9, ஞாயிறு, பி.ப. 3 மணி
கண்டி, ஜனமெதுர மண்டபம் (குட் ஷெட் பஸ் நிலையத்துக்கு அருகில்)
ஜூலை 3, செவ்வாய்கிழமை, பி.ப. 4 மணி
கண்டியிலும் மற்ற இடங்களிலும் நடத்தபடவுள்ள ஏனைய கூட்டங்களுக்கான திகதி மற்றும் இடங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.