ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Socialist Equality Party (UK) holds online meeting for education workers and students

இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சி கல்வித்துறை தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இணையவழி கூட்டங்களை நடத்துகிறது

By our reporters
2 April 2018

இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) கடந்த செவ்வாயன்று விரிவுரையாளர்கள் மற்றும் கல்லூரி தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் குறித்து ஓர் இணையவழி கூட்டம் நடத்தின. “UCU இன் விற்றுத்தள்ளல் வேண்டாம்! சாமானிய குழுக்களை அமையுங்கள்!” என்ற தலைப்பில் கல்வித்துறையின் திருப்பி-தாக்கும் கலந்தாய்வு பேரவையில் (The Education Fightback forum) நாடெங்கிலும் இருந்து கல்வித்துறை பணியாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.  

IYSSE உறுப்பினர் டோம் ஸ்க்ரிப்ஸ் வெற்றிகரமாக இந்நிகழ்வை நெறிப்படுத்தினார். இதன் நோக்கம், குறிப்பாக தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான கிளர்ச்சியின் அவசியம் மற்றும் சாமானிய குழுக்கள் உருவாக்க வேண்டியதன் அவசியம் மீதும், முன்னோக்கிய பாதை குறித்தும் விவாதிக்க ஒரு ஜனநாயகரீதியிலான கலந்தாய்வு களத்தை வழங்குவதற்காகும் என்று ஸ்க்ரிப்ஸ் தெரிவித்தார்.

அங்கே குறிப்பாக உலக சோசலிச வலைத்தளத்தின் தொழிலாளர் பிரிவு அமெரிக்க எழுத்தாளர் ஜெர்ரி வொயிட் க்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது, அவர் இம்மாத ஆரம்பத்தில் முடிவுற்ற 30,000 மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களின் ஒன்பது நாள் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். 

WSWS இன் பிரிட்டன் எழுத்தாளரான ரோபர்ட் ஸ்டீவன்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்க வேலைநிறுத்தங்களைச் சர்வதேச அளவில் அபிவிருத்தி அடைந்து வரும் வேலைநிறுத்த அலையின் உள்ளடக்கத்தில் நிறுத்தி அக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்திய கல்வித்துறை தொழிலாளர்களின் நடவடிக்கைகள், துனிசியா, ஈரான், ஜேர்மனி மற்றும் கிரீஸில் பிரதான வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள், பிரான்சில் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் மக்ரோன் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டநிரல் ஆகியவற்றிற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களும் அதில் உள்ளடங்கி இருந்தன.  

முந்தைய வாரயிறுதியில் அமெரிக்காவில் நூறாயிரக் கணக்கான பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடங்களிலும் மிகப் பொதுவான சமூகத்திலும் பலமுறை நடந்துள்ள வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தனர்.

“சர்வதேச அளவில் போராட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் படிப்பினைகளை எடுப்பது மிக முக்கியமாகும்,” என்று ஸ்டீவன்ஸ் வலியுறுத்தினார். மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களின் நடவடிக்கை அந்த கல்வித்துறை பணியாளர்களால், அவர்களின் தொழிற்சங்க தலைவர்களின் செயலற்ற நிலைக்கு எதிராக, அவர்களாலேயே தொடங்கப்பட்டது. WVEA மற்றும் AFT-WV தொழிற்சங்கங்கள் விருப்பமின்றி மாநிலந்தழுவிய ஒரு மட்டுப்பட்ட வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போது, அது ஆளுநர் ஜிம் ஜஸ்டிஸ் உடன் விற்றுத்தள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கைக்குப் பின்னால் விரைவாக அந்த இயக்கத்தை அடைத்து வைப்பதற்கான முயற்சியாக மட்டும் இருந்தது.   

இந்நகர்வுகளை நிராகரித்த ஆசிரியர்கள், நிர்வாகம் மற்றும் அவர்களின் சொந்த சங்கங்களது எச்சரிக்கைகளை மீறி, மறியல் இடங்களிலும் இணைய வழியிலும் கூட்டங்களை ஒழுங்கமைக்க தொடங்கினர். ஆனால் அவர்களின் கிளர்ச்சியைத் தொடர்வதற்கான வேறுவழி இல்லாததால், ஆசிரியர்கள் நிராகரித்த அதே உடன்படிக்கையை அத்தியாவசியமானவற்றில் மறுதொகுப்பு செய்து ஒரு சில நாட்களுக்குப் பின்னர் அவர்களிடமே தொழிற்சங்கங்களால் விற்றுத் தள்ள முடிந்தது. அதை குறித்து விவாதிக்கவோ, வேலைக்குத் திரும்புவதன் மீது வாக்களிக்கவோ ஆசிரியர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்காமல் சங்கங்கள் அதை முட்டிமோதி நிறைவேற்றின.    

“அமெரிக்காவில் என்ன நடந்ததோ அது வெகுசில நாட்களுக்கு முன்னர் பிரிட்டன் விரிவுரையாளர்கள் வேலைநிறுத்த சம்பவங்களுடன் ஒத்திருக்கின்றன,” என்பதை ஸ்டீவன்ஸ் விவரித்தார். “தொழிற்சங்கங்களால் விற்றுத்தள்ளப்படுவதை நிறுத்த மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் அவர்களே அதை கையிலெடுத்தனர், அதே போல விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தமும் ஓர் அழுகிய விற்றுத்தள்ளல் உடன்படிக்கையில் முடிந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த அவர்கள் தலையீடு செய்வதற்கு தள்ளப்பட்டனர். 

“தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரம் குறித்தும், UCU என்ன செய்ய முயலும் என்பதைக் குறித்தும் விரிவுரையாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே எச்சரிக்கையூட்டியது,” என்பதையும் தெரிவித்தார். “பிரிட்டனில் விரிவுரையாளர்கள் பிரச்சினை: மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திலிருந்து படிப்பினை,” என்று தலைப்பிட்ட அறிக்கை ஒன்றை பிரசுரித்து அதை பல்கலைக்கழகம் எங்கிலும் அது வினியோகித்தது.

“சங்கங்களுக்கு எதிரான அவர்களின் கிளர்ச்சியில், மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்கள் முன்னோக்கிய பாதையைச் சுட்டிக்காட்டுகின்றனர். பிரிட்டன் விரிவுரையாளர் வேலைநிறுத்தம் சங்க அதிகாரத்துவத்தின் கரங்களில் விடப்பட்டால், அது தோல்வியில் போய் முடியும் என்பதோடு, தொழிலாளர்களின் இந்த தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும். கோரிக்கைகளை வெல்வதற்கு, சங்கங்களில் இருந்து சுயாதீனமான புதிய போராட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது,” என்பதை அந்த தீர்க்கதரிசமான எச்சரிக்கை உள்ளடக்கி இருந்தது. 

UCU மற்றும் UUK (ஐக்கிய இராஜ்ஜிய பல்கலைக்கழகங்கள்) தொழில்வழங்குனர் அமைப்பு மார்ச் 12 இல் ஒரு விற்றுத்தள்ளப்பட்ட உடன்படிக்கையை அறிவித்த போது, இரண்டே நாட்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கை ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அந்த உடன்படிக்கை எந்தளவுக்கு மோசமானது என்பது தெளிவான போது, பல்கலைக்கழக பணியாளர்கள் கூட்டங்களை ஒழுங்கமைத்ததுடன், அந்த உடன்படிக்கையை நிராகரிக்கப்பட்டதாக வலியுறுத்த இலண்டனில் UCU தலைமையகத்தைச் சுற்றி, நூற்றுக் கணக்கில் அணிவகுத்தனர்.

“இதுவொரு முக்கிய படியாகும், இது தொழில்வழங்குனர்களின் வரையறைகளுக்காக வேலைநிறுத்தத்தை நிறுத்திக் கொள்வதில் இருந்து UCU ஐ தடுத்தது,” என்று ஸ்டீவன்ஸ் குறிப்பிட்டார். “ஆனால், மேற்கு வேர்ஜினியாவில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, வரவிருந்த நாட்களில் UCU அதேபோன்றவொரு மறுதொகுப்பு செய்த உடன்படிக்கையைத் திணிக்க முயல்வதில் இருந்து அந்த நிராகரிப்பு அதை தடுத்துவிடவில்லை. 

“தொழிலாளர்கள் அவர்களின் போராட்டங்களை தொழிற்சங்கங்களில் இருந்து அமைப்புரீதியிலும் அரசியல்ரீதியிலும் சுயாதீனமாக ஒன்றிணைக்க வேண்டும் என்பதையே அமெரிக்காவிலும் இங்கேயும் நடந்த வேலைநிறுத்தங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

“தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்க நலன்களுக்காக போராடும் அமைப்புகள் அல்ல. அவை பெருநிறுவனங்கள், நிர்வாகம் மற்றும் அரசின் முகமைகள். அவை முதலாளித்துவத்தைப் பாதுகாக்கவும், தொழிலாள வர்க்கத்தினை ஒடுக்குவதற்குமே இருக்கின்றன.”

ஜெர்மி கோர்பனின் தொழிற்கட்சி மீதும் நம்பிக்கை வைக்க முடியாது என்றவர் தொடர்ந்து தெரிவித்தார். இப்போது டோரி அரசாங்கத்தால் விரிவாக்கப்பட்டு வருகின்ற கல்வித்துறை மீதான பல தாக்குதல்களுக்கு தொழிற்கட்சி தலைமை வகித்துள்ளது என்பது மட்டுமல்ல, அது நாடுமுழுவதும் உள்ளாட்சிகளில் டோரி வெட்டுக்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தொழிற்கட்சி "இப்போது ஜெர்மி கோர்பின் தலைமை கொடுக்கும், ஒரு பெருவணிகத்தின் கட்சியாகும்,” என்று தெரிவித்த ஸ்டீவன்ஸ், தொழிற்கட்சி தலைவர்கள் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவதற்காக மட்டுமே விரிவுரையாளர்களின் பிரச்சினையில் தலையிட்டுள்ளனர்—இதேமாரிதியான பேச்சுவார்த்தைகள் தான் விற்றுத்தள்ளப்பட்ட உடன்படிக்கையில் போய் முடிந்தது.  

கல்வித்துறை பணியாளர்களின் போராட்டம் அதன் அடிமூலத்தில் "முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டமாகும். இறுதியில் இது சமூகத்தின் ஆதாரவளங்களின் ஒதுக்கீட்டை எந்த வர்க்கம் கட்டுப்படுத்துகிறது, இந்த பிரச்சினைகளில் யார் முடிவெடுக்கிறார்கள் என்பது சம்பந்தப்பட்டதாகும்,” என்று கூறி ஸ்டீவன்ஸ் நிறைவு செய்தார். 

கல்வியாளர்களது போராட்டங்களின் சர்வதேச தன்மையை வொயிட் வலியுறுத்தினார்: “வங்கி பிணையெடுப்புகள், பெருநிறுவன வரி வெட்டுக்கள் மற்றும் போருக்காக ட்ரில்லியன் கணக்கில் செலவிட்ட பின்னர், உலகளாவிய நிதியியல் பொறிவுக்கு பத்தாண்டுகளுக்குப் பின்னரும் அரசாங்கம் இடைவிடாமல் சமூக செலவின குறைப்புகளைத் தொடர்ந்து வருகின்றன.” 

மேற்கு வேர்ஜினியா, அரிஜோனா, ஆக்லஹோமா இதர மாநிலங்களிலும் ஆசிரியர்களுக்கு 31,000 டாலர் (22,000 பவுண்டு) ஆரம்ப சம்பளமாக வழங்கப்படுகிறது. “பலர் மாணவ கடனை அடைக்கவே ஆயிரக் கணக்கில் செலவிடுகின்றனர், இரண்டு வேலை செய்ய வேண்டியுள்ளது, அல்லது தங்களின் குடும்பங்களுக்கு உணவளிக்க மானிய உணவு வில்லைகளை எதிர்பார்த்திருக்க வேண்டியுள்ளது,” என்றார். தொழிற்சங்கங்களால் பல ஆண்டுகளாக காட்டிக்கொடுக்கப்பட்டு வந்த பின்னர், அவர்கள் பேஸ்புக் குழுக்கள் மூலமாக ஒழுங்கமைந்து, மாநிலந்தழுவிய வேலைநிறுத்தங்களுக்கு அழுத்தமளித்தனர். பொதுக்கல்வியை அழிக்க விரும்பும் இரண்டு பெருவணிக கட்சிகள் மற்றும் பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கிற்கு எதிராக, சாமானிய குழுக்களை கட்டமைப்பதன் மூலமாக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணித்திரட்ட, தொழிற்சங்கங்களில் இருந்து தொழிலாளர்கள் தீர்க்கமாக உடைத்துக் கொள்ள வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி ஊக்குவிக்கிறது என்பதை வொய்ட் விளக்கினார். 

உலகெங்கிலுமான ஆசிரியர்கள் பொதுக்கல்விமுறையில் பொதிந்துள்ள சமநோக்கு கோட்பாடுகளுக்கு ஆழமாக பொறுப்பேற்றுள்ளதை அவர் தெரிவித்தார், இதை தான் மாபெரும் அமெரிக்க புரட்சியாளரான தோமஸ் ஜெஃபர்சன் கூறுகையில் "அரசர்கள், மதபோதகர்கள் மற்றும் உன்னத புருஷர்களின்" கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறை மீண்டு வருவதை தடுக்கும் ஒரே வழிவகையாக தெரிவித்தார். இன்று, “நவீனகால அரசர்கள், மதபோதகர்கள் மற்றும் உன்னத புருஷர்கள், அதாவது பில்லியனிய முதலாளித்துவவாதிகளுக்கு அறிவொளி மிக்க மக்கள் தேவைப்படவில்லை மாறாக சுரண்டுவதற்கும் போருக்கு அனுப்புவதற்கும் அப்பாவி அடிமைகள் தேவைப்படுகிறார்கள் என்று வொயிட் தெரிவித்தார். இதனால் தான் உயர்ந்த தரமான பொதுக்கல்வினை  பாதுகாப்பு என்பது தொழிலாள வர்க்கத்திடம் விடப்படுகிறது, ஏனென்றால் முதலாளித்துவ வர்க்கத்தின் பலமாக வேரோடியுள்ள செல்வம் மற்றும் அதிகாரம் மீதான நேரடி தாக்குதல் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும்.

அந்த விவாதத்தில் கருத்தரைத்தவர்களில் ஒருவரான ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் விவரிக்கையில், ஓய்வூதியங்கள் சம்பந்தமாக விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தத்தை விற்று தள்ளுவதற்கான UCU இன் முயற்சிகள் தனியொருவரின் பங்காக 200,000 பவுண்டு வரையில் இழக்க உள்ள பழைய பணியாளர்கள் மீது மட்டுமல்ல, மாறாக இளம் தலைமுறைகளுக்கான ஒரு கண்ணியமான ஓய்வூதி உரிமைகளையும் இல்லாதாக்கிவிடும். “தனித்தனி பல்கலைக்கழகங்கள் அதிகரித்த சந்தைப்படுதல்கள் மற்றும் ஒரு சர்வதேச சந்தையில் மாணவர்களிடையே போட்டியை அதிகரித்தல் என ஆயத்தமாகின்ற நிலையில், அவற்றின் தேவைக்கேற்ப இது ஓய்வூதிய 'நெகிழ்வுதன்மை' மீதான தொழில்வழங்குனர்களின் விருப்பத்திற்கேற்ப உள்ளது", என்றவர் தெரிவித்தார்.   

உயர்கல்வியில், நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. UCU ஏற்றுக் கொண்ட 1 சதவீத சம்பள உடன்படிக்கையை, பல கல்லூரிகள் இன்னும் நடைமுறைப்படுத்த கூட இல்லை. “இப்போது அது மற்றொரு விற்றுத்தள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு தயாரிப்பு செய்து வருகிறது மற்றும் நடைமுறையளவில் தேசிய பேரம்பேசல்களை இல்லாதாக்கும் வகையில், உள்ளாட்சி அளவில் பேரம்பேசல்களைத் தொடங்க அவற்றின் அங்கத்தவர்களை வலியுறுத்தி வருகிறது.” 

உயர்கல்வி கற்பிப்பில் அவரது 20 ஆண்டுகால அனுபவம் எடுத்துக்காட்டுவதைப் போல, கல்வியினை  தற்காலிகமயமாக்கும் அளவு பற்றி மற்றொரு விரிவுரையாளர் கூறியதையும் அக்கூட்டும் செவிமடுத்தது. இதன் விளைவாக, அவர் வேலையில் சேர்ந்த போது சம்பாதித்தை விட இன்று குறைவாக சம்பாதிக்கிறார்.

தெற்கு இங்கிலாந்தின் சிறப்பு கல்வி அவசியத்தின் ஆசிரியர் ஒருவர் விஷேடமான பங்களிப்பு வழங்கினார். அவர் கருத்துக்கள் கல்வித்துறை மீது தாக்குதல் நடத்த உலகெங்கிலுமான ஆளும் உயரடுக்குகள் எவ்வாறு 2008 நிதியியல் நெருக்கடியை சாதகமாக்கி கொண்டன என்பதன் மீது வொயிட் கூறிய கருத்துக்களை அப்பெண்மணியின் கருத்துகள் அடிக்கோடிட்டன. இதன் விளைவு நாசகரமாக இருந்தது, குறிப்பாக மிகவும் பலவீனமான குழந்தைகளுக்கு என்றவர் விவரித்தார்.   

அந்த விவாதத்தை முன்னெடுக்கவும் மற்றும் சாமானிய குழுக்கள் உருவாக்குவதற்கு தயாரிப்பு செய்ய உதவுவதற்கும் மற்றொரு இணையவழி கல்வித்துறைக்கான திருப்பி-தாக்கும் கலந்தாய்வு பேரவையை ஏப்ரல் 10, செவ்வாயன்று நடத்த அக்கூட்டம் ஒப்புக் கொண்டது. முழு விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

கல்வித்துறையின் திருப்பி-தாக்கும் கலந்தாய்வு பேரவை

செவ்வாய்கிழமை, ஏப்ரல் 10, மாலை 7.30 மணிக்கு

இக்கூட்டத்தில் பங்கெடுக்க, கூட்டம் தொடங்கும்போது bit.ly/efb100418 என்ற தளத்தை பார்வையிடவும், அல்லது +44 330 221 0088 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, 274-739-237 என்ற குறீயீட்டு எண்ணை உள்ளீடு செய்யவும்.  
 

நீங்கள் பிரிட்டனில் இருந்து அழைத்தீர்கள் என்றால், தேசிய அழைப்பு கட்டணம் செலவாகும்.