ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

No money for teacher pay or textbooks, but…

US CEO pay, bank profits, corporate cash set new records

ஆசிரியர் சம்பளத்திற்கோ அல்லது பாடப் புத்தகங்களுக்கோ பணமில்லை, ஆனால்...

அமெரிக்கை தலைமை செயலதிகாரிகளின் சம்பளம், வங்கி இலாபங்கள், பெருநிறுவனங்களின் வருவாய்கள் புதிய சாதனை மட்டத்தை அடைகின்றன

By Barry Grey
18 April 2018

கண்ணியமான சம்பளங்கள், ஓய்வூதியங்கள் அல்லது மருத்துவ கவனிப்புக்கு "பணமில்லை" என்று அமெரிக்கா எங்கிலும், ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினரால் ஒரேமாதிரியாக தொழிலாளர்களிடம் கூறப்படுகிறது. மேற்கு வேர்ஜினியாவில் இருந்து ஒக்லஹோமா, கென்டக்கி, அரிசோனா மற்றும் பிற மாநிலங்கள் வரையில், ஆசிரியர்கள், வறுமை நிலைக்கு நெருக்கமான சம்பளங்களுக்கு எதிராகவும் மற்றும் பல ஆண்டுகளாக செய்யப்பட்ட பள்ளிச் செலவு வெட்டுக்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து வருகின்றனர், அவர்களின் கோரிக்கைகள் "யதார்த்தத்திற்கு முரணானது" என்றும், அவற்றை பூர்த்தி செய்யவியலாது என்றும் அரசியல்வாதி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களால் அவர்களுக்கு கூறப்படுகிறது.

ஆனால் தலைமை செயலதிகாரிகளின் சம்பளங்கள், வங்கி இலாபங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் வருவாய் தொடர்பாக கடந்த வாரங்களில் வெளியான பல அறிக்கைகள், பெருநிறுவன அமெரிக்க மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்கள் முன்னொருபோதும் இல்லாதளவில் செல்வ வளத்தில் கொழித்துக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. வெள்ளியன்று வாஷிங்டன் போஸ்ட் அறிவிக்கையில், டிசம்பரில் கொண்டு வரப்பட்ட பெருநிறுவனங்களுக்கான மற்றும் செல்வந்தர்களுக்கான வரி வெட்டுகளால் ஊக்குவிக்கப்பட்டு, மிகப் பெரிய அமெரிக்க நிறுவனங்கள் "பணத்தைச் செலவு செய்வதற்கான ஆக்கபூர்வ வழிகளைக் காண முடியாமல் அதை விட வேகமாக பாய்ந்தோடி வரும் இலாபங்களுடன்" "அவை பணக்குவியல் மீது அமர்ந்திருப்பதைக் காண்கின்றன,” என்று குறிப்பிட்டது.

“2017 இன் இறுதியில்,” “ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் 500 பங்குச்சந்தை குறியீட்டில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் வரலாற்றிலேயே மிகப் பெரிய பணக் குவியல் மீது அமர்ந்திருந்தன: இதன் பெறுமதி அண்ணளவாக 1.8 ட்ரில்லியன் டாலர்,” என்று போஸ்ட் குறிப்பிட்டது.

ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எந்த ஆழமான எதிர்ப்புமின்றி நிறைவேற்றப்பட்ட, ட்ரம்பின் வரி வெட்டால் திரண்ட இலாபம், அச்சட்டத்தை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொய்களான, நல்ல சம்பளத்தில் புதிய வேலைகளை உருவாக்கவும் நாட்டின் சிதைந்து வரும் உள்கட்டமைப்பை மீளகட்டமைக்கவும் உதவும் என்பதற்கு எதிர்மாறாக இருக்கின்றது. தொழிலாள வர்க்கத்தின் உழைப்பில் உருவாக்கப்பட்ட செல்வவளத்தை ஒட்டுண்ணித்தனமாக சூறையாடி குவிக்கப்பட்ட அந்த இலாபங்கள், பங்கு விலைகளை உயர்த்தவும், செல்வந்த முதலீட்டாளர்கள் மற்றும் பெருநிறுவன நிர்வாகிகளின் செல்வ வளத்தை அதிகரிக்கவும், பங்குகளை வாங்கிவிற்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

வெறுமனே பெப்ரவரியில் மட்டுமே, ஒரே மாதத்தில் சாதனையளவுக்கு 150.7 பில்லியன் டாலர் வாங்கி விற்றலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க பெருநிறுவனங்கள் அறிவித்தன. இவை வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு முந்தைய ஆண்டான 2007 இல் 589 பில்லியன் டாலராக இருந்த முந்தைய சாதனையைக் கடந்து, 2018 இல் ஒரு புதிய வருடாந்தர சாதனையை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் பங்குகள் வாங்கி விற்றலில் 5.1 ட்ரில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன.

இதை கருத்தில் எடுத்தால், நாட்டிலேயே மிகக் குறைந்த சம்பளத்தில் உள்ள ஒக்லஹோமா ஆசிரியர்கள் கடந்த பத்தாண்டு கால கடுமையான வெட்டுகளைச் சமாளிப்பதற்கு பள்ளிக்கல்வி நிதி ஒதுக்கீட்டில் கூடுதலாக 200 மில்லியன் டாலர்களை கோரினர். மாநில அரசாங்கமோ வெறும் 50 மில்லியன் டாலர் வழங்க ஒப்புக் கொண்டது, இதை ஒக்லஹோமா கல்வித்துறை கூட்டமைப்பு ஒரு "வெற்றியாக" புகழ்ந்து தள்ளியது.

ஆசிரியர் கோரிய தொகை, அமெரிக்க பெருநிறுவனங்கள் குவித்து வரும் பணத்தில் வெறும் 0.01 சதவீதமாகவே உள்ளது.

அமெரிக்க மக்கள் அடுக்கில் அனேகமாக ஒரு சதவீதத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த "இமயமலை சிகர" குவியல் பெடரல் அரசாங்கம் அடிப்படை சமூக தேவைகளுக்காக ஒதுக்கும் தொகைகளை விட அதிகமாக உள்ளது. சுகாதாரம் மற்றும் மக்கள் சேவைத்துறைக்கான வரவு-செலவுத் திட்டக்கணக்கு இந்த பெருநிறுவன பணக் கையிருப்பில் வெறும் 60 சதவீதம் தான். இந்த பெருநிறுவன பணக்குவியல், கல்வித்துறை வரவு-செலவு திட்டக்கணக்கை விட 26 மடங்கும், வீட்டுவசதித்துறை மற்றும் நகர்புற அபிவிருத்தித்துறையின் வரவு-செலவு திட்டக்கணக்கை விட 56 மடங்கும், தொழிலாளர் நலத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கை விட 150 மடங்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் வரவு-செலவு திட்டக்கணக்கை விட 225 மடங்கும் அதிகமாகும்.

 

 

கடந்த வாரம் வெளியிடப்பட்ட தலைமை செயலதிகாரிகளுக்கான சம்பள அறிக்கையின்படி, 2017 இல் அதிக சம்பளம் ஈட்டிய மூன்று தலைமை செயலதிகாரிகளின் கூட்டு சம்பள கையகப்படுத்தலே நடைமுறையளவில் ஒக்லஹோமா ஆசிரியர்களின் நிதி தேவையைப் பூர்த்தி செய்துவிடும். பிராட்காம் நிறுவனத்தின் Hock E. Tan 103.2 மில்லியன் எடுத்துச் சென்றார், அமெரிக்க சர்வதேச குழுமத்தின் Brian Duperreault 42.8 மில்லியன் டாலர் பெற்றார் மற்றும் ஓராக்கிள் நிறுவனத்தின் Mark V. Hurd 40.8 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்றார், மொத்தம் 186.8 மில்லியன் டாலர் ஆகும்.

இந்த அறிக்கைகளை ஒட்டுமொத்தமாக எடுத்துப்பார்த்தால், கணக்கில் வராத மற்றும் பேராசை மிக்க நிதியியல் செல்வந்த தட்டுக்களால் ஈவிரக்கமின்றி சூறையாடப்பட்டு வருகின்ற சமூகத்தின் சித்திரத்தை வழங்குகின்றது. ஆதார வளங்கள் வீணாக்கப்படுவதும் மற்றும் செல்வம் கொழிந்த பணக்கார உயரடுக்கின் கரங்களுக்குள் சமூக செல்வ வளம் செலவிடப்படுவதும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் எந்தவொரு சமூக பிரச்சினைகளையும் தீர்க்க முடியாதவாறு செய்து விடுகிறது.

உலகளாவிய போருக்காக அமெரிக்க ஆளும் வர்க்கம் தயாராவதற்கும் மற்றும் இராணுவத்திற்கும் எப்போதும் விரிவடைந்து வரும் செலவுகளின் வடிவத்தில், ஆதார வளங்களின் மிகப் பெரிய அளவு வீண்டிக்கப்படுகின்றது.

தலைமை செயலதிகாரி சம்பளம்

ஏப்ரல் 11 அன்று, செயலதிகாரிகளுக்கான வருமான ஆய்வு நிறுவனம் ஈக்வைலர் அதன் வருடாந்தர "ஈக்வைலர் 100” (Equilar 100) எனும் அறிக்கையை பிரசுரித்தது, இது வருவாய் அடிப்படையில் 100 மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளது வருமானத்தை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. 100 தலைமை செயலதிகாரிகளின் சராசரி வருமானம் 2017 இல் அதற்கு முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் உயர்ந்து, 11 ஆண்டுகளில் அதிகபட்சமாக 15.7 மில்லியன் டாலரை எட்டியதை அந்த ஆய்வு எடுத்துக்காட்டியது.

Equilar இன் படி அதே நிறுவனத்தில் ஒரு தொழிலாளரின் சராசரி வருமானம் 100 இன் தலைமை செயலதிகாரிகள் சம்பளத்தின் விகிதத்தில் 235 இல் ஒரு பங்காகும். ஆனால் அப்பட்டியலில் உள்ள சில நிறுவனங்களின் விகிதங்கள் இந்த நடுத்தர வருமானத்தை விட மோசமாக இருந்தன. மேன்பவர் குழுமம், இதன் தலைமை செயலதிகாரி 12 மில்லியன் டாலர் பெற்றுள்ளார், அறிவிக்கையில், அதிகபட்ச விகிதமாக 2,483 இல் ஒரு பங்கு என்று அறிவித்தது. அந்நிறுவனத்தின் 600,000 தொழிலாளர்களின் சராசரி வருமானம் 4,828 டாலர் ஆகும். சில்லரை விற்பனை தொடர்-நிறுவனமான Kohl, 1,264 இல் ஒரு பங்கை கொண்டிருந்தது.

 

 

ஒக்ஹோமா ஆசிரியர் ஒருவரின் சராசரி சம்பளம் 42,460 டாலராகும். ஈக்வைலர் இன் படி 100 தலைமை செயலதிகாரிகளுக்கான சராசரி வருமானம் அந்த தொகையை விட 374 மடங்கு அதிகம். 2017 இல் ஈக்வைலர் குறிப்பிடும் தலைமை செயலதிகாரிகளுக்கான சராசரி வருமான அதிகரிப்பு —700,000 டாலர்— என்பதே கூட ஒக்லஹோமா ஆசிரியரின் சம்பள சராசரியை விட 17 மடங்கு அதிகமாகும்.

அதிகபட்ச சம்பளம் பெறுவதில் இரண்டாவது இடத்தில் உள்ள தலைமை செயலதிகாரியான, காப்பீட்டு பெருநிறுவனம் அமெரிக்கன் இன்டர்நேஷனல் குழுமத்தின் (AIG) தலைவர் Brian Duperreault இன் வருமானம் 42.8 மில்லியன் டாலராகும். பத்தாண்டுகளுக்கு முன்னர் வீட்டு அடமானக்கடன்-பின்புல பத்திரங்கள் (subprime mortgage-backed securities) மற்றும் திருப்பி செலுத்தவியலா கடன்களுக்கான காப்பீடுகளில் (credit default swaps) இந்நிறுவனம் செய்த ஊக வணிகம் நிதியியல் நெருக்கடியில் மத்திய பாத்திரம் வகித்தது, அந்த நிதியியல் நெருக்கடியில் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையும் சேமிப்புகளும் அழிக்கப்பட்டதுடன் அது மிகப்பெரும் மந்தநிலையைத் தூண்டியது. அவர் நிறுவனம் பெடரல் ரிசர்வ் மற்றும் அமெரிக்க கருவூலத்தால் 150 பில்லியன் டாலர் மதிப்பில் பிணையெடுக்கப்பட்டது.

வங்கி இலாபங்கள்

கடந்த வாரத்தில் பிரதான வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் 2018 இன் முதல் காலாண்டில் சாதனையளவுக்கு அல்லது அண்மித்து சாதனையளவுக்கு இலாபங்களை அறிவித்துள்ளன. வெள்ளியன்று, ஜேபி மோர்கன் சேஸ், சிட்டி குழுமம் மற்றும் வெல்ஸ் ஃபார்கோ ஆகியவை இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு 19 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஒருமித்த இலாபத்தை அறிவித்தன.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஜேபி மோர்கன் சாதனையளவுக்கு ஒரு காலாண்டுக்கான நிகர வருவாய் 8.71 பில்லியன் டாலரை அறிவித்தது. அதன் இலாபங்கள் ஓராண்டுக்கு முந்தைய இதே காலாண்டை விட 35 சதவீதம் அதிகரித்தது. இம்மாத தொடக்கத்தில், தலைமை செயலதிகாரி ஜெமி திமோன் அதிகரித்து வரும் சம்பளங்களைக் குறித்து பங்குதாரர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியதோடு, தேசியளவில் கூலிகளுக்கான இயக்கம் அபிவிருத்தி அடைவதை முன்கூட்டியே தடுக்க, பொருளாதார வளர்ச்சியை தடுப்பதற்காகவும் வேலைவாய்ப்பின்மையை அதிகரிப்பதற்காகவும் வட்டி விகிதங்களை அதிகரிக்குமாறு பெடரல் வங்கிக்கு ஆலோசனை வழங்கினார்.

சிட்டிக் குழுமம் (13 சதவீத இலாப உயர்வு) மற்றும் வெல்ஸ் ஃபார்கோ (8சதவீதம்) ஆகியவற்றிற்கும் இதே கதைதான். பேங்க் ஆஃப் அமெரிக்கா திங்களன்று 34 சதவீத இலாப உயர்வை அறிவித்தது மற்றும் கோல்ட்மன் சாச்ஸ் செவ்வாயன்று அறிவிக்கையில் அதன் இலாபங்கள் 26 சதவீதம் உயர்ந்ததாக அறிவித்தது.

பெருநிறுவன வரி விகிதம் மிகப் பெரியளவில் வெட்டப்பட்டதும், வோல் ஸ்ட்ரீட் இலாப உயர்வுக்கான காரணத்தில் கணிசமான பாகம் வகித்தது. நடைமுறையளவில் வரி விகிதங்களைக் கடுமையாக குறைத்ததன் விளைவாக ஐந்து வங்கிகள் மொத்தமாக 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சேமித்தன.

ட்ரம்ப் நடைமுறைப்படுத்தி வருகின்ற, மற்றும் ஜனநாயக கட்சியினரால் மறைமுகமாக ஆதரிக்கப்படுகின்ற, வரிச்சட்டம் மற்றும் பிற கொள்கைகளில் இருந்து கிடைக்கும் அதிருஷ்ட மழை குறித்து சிட்டிக்குழுமம் தலைமை நிதித்துறை அதிகாரி John Gerspach வெள்ளியன்று கூறுகையில், நிறுவனங்கள் மாற்றங்களில் இருந்து ஆதாயமெடுக்க மட்டுமே தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். “இன்னும் சிறப்பானவை இனிமேல் தான் வரவிருக்கின்றன என்று நம்புகிறேன்,” என்றார்.

சமூக சமத்துவமின்மையை உருவாக்கும் முதலாளித்துவத்தையும் சமூக சமத்துவமின்மையையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவ கவனிப்பு, வீட்டுவசதி, போதிய ஓய்வூகாலம் ஆகியவற்றை வழங்குவதும், கலாச்சாரம், சுற்றுச்சூழல், நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றை அணுக அனுமதிப்பதும் இன்றியமையாததாகும்—அதாவது, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகளைப் பாதுகாப்பது இன்றியமையாததாகும்.