ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Belgian military plans to quintuple spending on weapons systems

பெல்ஜிய இராணுவம் ஆயுத அமைப்புகள் மீதான செலவினங்களை ஐந்து மடங்கு அதிகரிக்கத் திட்டமிடுகிறது

By Olivier Laurent 
6 March 2018

ஐரோப்பா எங்கிலும் நேட்டோ நாடுகள் அவர்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகித அளவிற்கு இராணுவச் செலவினத்தை அதிகரிக்கும் உந்துதலுடன் ஒருங்கிணையும் நிலையில், பெல்ஜியம் ஒரு முக்கிய மீள் ஆயுதமயமாக்கல் உந்துதலை செயல்படுத்தி வருகிறது. பெல்ஜிய இராணுவமும் அரசு இயந்திரமும் நாட்டின் ஆயுத அமைப்புகள் மற்றும் துருப்புக்களின் நிலை குறித்து கண்டனம் தெரிவிக்கையில், அரசாங்கமோ ஒரு கடுமையான தீர்வை முன்மொழிந்துள்ளது.

அதன் 2018 இராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் 4.7 மடங்கு அதிகமாக கொண்ட -அதாவது சாதாரண நடைமுறை வரவு-செலவுத் திட்டத்திற்குள் உட்படாததான பொருள் விநியோகிப்பின் பேரில் தொகை செலுத்தப்படக்கூடிய செலவினங்களை உள்ளடக்கியுள்ளது- 2017 வரவு-செலவுத் திட்டத்தை விட அதிகமாக உள்ளது. மொத்தத்தில், 2020 மற்றும் 2030 க்கு இடையில் இராணுவ உபகரணங்கள் மீது 9.2 பில்லியன் யூரோக்களை (11.3 பில்லியன் அமெரிக்க டாலர்) இது செலவிடும் என்பதாகும்.

அதிகாரபூர்வமாக, பெல்ஜிய இராணுவத்தின் "நம்பகத்தன்மையை” மறு ஸ்தாபகம் செய்வதுதான் இதன் இலக்காகும். ரோயல் இராணுவ அருங்காட்சியகத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் மார்க் காம்பர்னோல் ஆற்றிய புத்தாண்டு உரையின்படி, “வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி செலவினங்களை சுருக்க முடியும்” என்ற வகையிலான நடவடிக்கைகளால் பெல்ஜிய இராணுவம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் “நவீனமயமாக்கவும், முக்கிய நோக்கங்களை உறுதிப்படுத்த முதலீடு செய்யவும் முன்மொழிந்தாலும், கூடவே, மக்கள்தொகை மாற்றத்தைக் கணக்கில் கொள்ளும் போது நமது முக்கிய வணிகத்தை பாதுகாக்கவும்” முனைகிறார்.

உண்மையில், ஏற்கனவே பல ஆண்டுகளாக செலவின அதிகரிப்பு நடந்து வருகிறது. 2014 இல், நேட்டோ உறுப்பினர் நாடுகள் “பாதுகாப்பு செலவினங்கள் மீதான வெட்டுக்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர” ஒப்புக்கொண்டன. அதே ஆண்டில் ஒரு தொங்கு பாராளுமன்றத்தை உருவாக்கிய தேர்தலுக்கு பின்னர், பிளெமிய கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் (CD&V), சீர்திருத்த இயக்கம் (MR, வலதுசாரி ஃபிராங்கோபோன்ஸ்), வலதுசாரி பிரிவினைவாத புதிய பிளெமிய கூட்டணி (N-VA) மற்றும் திறந்த Vld (பிளெமிய சுதந்திர சந்தையாளர்கள்) ஆகியோரிடையே ஒப்புக்கொள்ளப்பட்டதான அரசாங்க கூட்டணி ஒப்பந்தத்தில் இது உத்தியோகபூர்வமாக பொறித்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி சார்ல்ஸ் மைக்கேலின் கீழ் உருவான கூட்டணி, கலாச்சார மற்றும் அறிவியல் வரவு-செலவுத் திட்டங்களில் 20 சதவிகித வெட்டுக்கள், நீதித்துறை அமைப்பில் வெட்டுக்கள், தனியார்மயமாக்கங்கள், வணிகத்திற்கான வரி வெட்டுக்கள், வேலையற்றவர்களுக்கு ஓய்வூதிய வெட்டுக்கள், கூடுதல் நேர மற்றும் பகுதி நேர வேலைகளில் கட்டுப்பாடுகளை அகற்றுதல் ஆகியவை உள்ளிட்ட மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைத் திட்டங்களை தொடங்கியது. அதே நேரத்தில், அரசாங்கம், “இராணுவத்திற்கு திரும்பக் கொடுக்கும் என்பது அதற்கு அதன் நோக்கங்களை நிறைவேற்ற தேவைப்படுகிறது” என்பதாக பெருமையடிக்கிறது.

2015 இல், ஒரு “சமச்சீர்” இராணுவப் படைக்கு அழைப்பு விடுக்கும் ஒரு தீர்மானத்தை பெல்ஜிய பாராளுமன்றம் நிறைவேற்றியது, அதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு மந்திரி ஸ்டீவன் வாண்டேபூட் (N-VA), “மேலும் செலவு செய்வது தவிர்க்க முடியாததாக இருக்கும்” என்றார். 2016 இல், வார்சா உச்சி மாநாட்டில் தீட்டப்பட்ட நேட்டோ இராணுவச் செலவு அதிகரிப்பு குறித்த திட்ட நிரலை ஒரு புதிய தீர்மானம் ஏற்றுக்கொண்டது. 2017 இல், இராணுவ திட்டமிடல் சட்டம் செலவில் ஒரு பெரும் அதிகரிப்புக்கு தயார் செய்தது, மேலும் டிசம்பர் 2017 இல், பெல்ஜியமும், மற்றும் ஏனைய 25 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், பேர்லின் மற்றும் பாரிஸ் ஆகியவற்றால் முன்மொழியப்பட்ட கருநிலை ஐரோப்பிய இராணுவமான நிரந்தர கட்டமைப்பு ஒத்துழைப்பில் (Permanent Structured Cooperation-PESCO) கையெழுத்திட்டன.

பெல்ஜிய அரசாங்கத்தின் தொழில்நுட்ப திட்டங்கள், பிற ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள அதன் சக அரசாங்கங்களைப் போல், ஆக்கிரமிப்பு போர்களுக்கு தயாராகி வருகின்றனவே தவிர, கூடுதல் “நம்பகமான” பாதுகாப்பு நிலைப்பாட்டிற்காக இல்லை என்பதைக் காட்டுகிறது.

இயந்திரமயமாக்கல் (CAMO) திட்டம், முக்கிய தரைப்படை திட்டம் ஆகியவை, பெல்ஜிய இராணுவத்தின் முக்கிய நில அலகான இடைநிலை படையணி (Median Brigade), “அதன் கோட்பாடு, பயிற்சி மற்றும் தளவாடங்களை பெருமளவு மாற்றியமைப்பதற்கு” அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம், 60 போர் மற்றும் இராணுவ உளவுக்கான ஜாகுவார் கவச வாகனங்களையும், 417 க்ரிஃபான் பன்முக கவச வாகனங்களையும் வாங்குவதை இன்றியமையாததாக்குகிறது. இந்த திட்டம், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டின் சோசலிசக் கட்சி (PS) அரசாங்கத்தின் கீழ் 2013 இல் தொடங்கப்பட்ட பிரெஞ்சு “ஸ்கார்பியன்” மறுஆயுதமயமாக்கத் திட்டத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

“ஒரே மாதிரியான பிரெஞ்சு மற்றும் பெல்ஜியன் போர் வாகனங்களை வாங்கும் அடிப்படையில் ஒரு கூட்டாண்மையை ஸ்தாபிக்க” நோக்கம் கொண்டு, ரெனோல்ட் ட்ரக்ஸ் பாதுகாப்பு, தாலேஸ் மற்றும் நெக்ஸ்டெர் ஆகிய நிறுவனங்களுக்கு பலனளிக்கும் வகையில் இந்த திட்டம், ஜூன் 2017 இல், பெல்ஜிய அரசாங்கம் CAMO திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் மீது 1.1 பில்லியன் யூரோக்களை செலவழித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அதே நேரத்தில், சிஎம்ஐ, ஹெர்ஸ்டல் மற்றும் தாலேஸ்-பெல்ஜியம் ஆகிய பெல்ஜிய நிறுவனங்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பெல்ஜியத்தின் முடிவுக்கு பதிலீடாக ஒப்பந்தங்கள் பெறப்படக்கூடுமென அரசாங்கமும் அறிவித்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் அதன் பங்கிற்கு 1,668 க்ரிஃபான் மற்றும் 248 ஜாகுவார் வாகனங்களை வாங்குகிறது.

போர்க்களத்தில் இரு நாடுகளின் படைகளும் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைய அனுமதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

வெளிநாட்டில் நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கு, சிறிய துருப்புக்களுக்கு தேவைப்படும் 200 போக்குவரத்து வாகனங்களைப் பெற்று “சிறப்பு நடவடிக்கைப் படைகளை” மேம்படுத்துவதில் ஏனைய திட்டங்கள் ஈடுபட்டுள்ளதை இன்றியமையாததாக்குகிறது. ஏற்கனவே 2016 இல், பிரிட்டிஷ் நிறுவனம் ஜான்கெல் உடன் 108 ஃபாக்ஸ் ரக விரைவு-எதிர்ப்பு வாகனங்கள் சிலவற்றை வாங்குவதற்கு பெல்ஜியம் உத்திரவிட்டிருந்தது.

2023 ஆரம்பத்தில், பீரங்கிக்கப்பல்கள், மற்றும் போர்க்கப்பல்கள், சுரங்கங்கள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும், மற்றும் புலனாய்வு சேவைகளுக்கான கணினி அமைப்புகளில் ஒரு முற்றுமுழுதான மறுவடிவமைப்பை உருவாக்கவும், நெதர்லாந்த் உடனான பொதுவானதொரு திட்டத்தில் ப்ரூஸெல்ஸூம் இணைந்து 34 ரக போர் ஜெட் விமானங்கள் சிலவற்றை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் உடன் ஒரு கூட்டு இராணுவ செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு திட்டமும் உள்ளது.

இருந்தபோதிலும், முன்னாள் காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய போர்களை அதிகரிப்பதற்கு மட்டும் இந்த திட்டம் வகுக்கப்படவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகம் இதுவரை காணாத வகையில் வளர்ந்துவரும் சர்வதேச மோதல்கள் குறித்த எதிர்பார்ப்புகளில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பாரிய மறு ஆயுதமயமாக்கல் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வெளியிட்ட அறிக்கையில், “அரசியலின் சாத்தியமானதொரு தொடு எல்லையில் மீண்டும் போர் உருவாக காரணமாகவுள்ள சர்வதேச உறவுகளின் ஒரு சகாப்தத்திற்குள் நாம் நுழைந்துள்ளோம்” என்பது குறிப்பாக வெளியிடப்பட்டது.

கட்டாய சேவைக்கு திரும்புவதற்கான சற்று மாறுவேடமிட்ட அழைப்புகளாக பல நாடுகள் “குடிமை சேவை” திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. மக்ரோன் ஒரு உலகளாவிய இராணுவ சேவையை ஸ்தாபிக்க விரும்புகிறார், மேலும் ஸ்வீடன் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்த கட்டாய இராணுவ சேவை திட்டத்தை 2010 இல் ரத்து செய்துவிட்டது. இவையனைத்திற்கும் மேலாக, 2014 இல், பேர்லின் அதன் வெளியுறவுக் கொள்கையை மீள் இராணுவமயமாக்கும் என அறிவித்தது.

மக்ரோனிடமிருந்து நேரடியாக வெளிப்பட்ட கருத்துக்கள், ஏனையோர் மத்தியில் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மூலம் நிதியளிக்கப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ பெல்ஜிய சிந்தனை களஞ்சியமான எக்மான்ட் நிறுவனம், பிரசுரித்த சமீபத்திய ஒரு அறிக்கைக்கு, “2018 இல் பெல்ஜிய பாதுகாப்பு: இது மீள் உருவாக்கத்திற்கான நேரமா?” என தலைப்பிடப்பட்டிருந்ததை குறிப்பிட்டது.

இது, “தற்போதைய மற்றும் எதிர்கால படைகளின் கட்டமைப்பு சமாதான காலத்திற்குரிய ஒரு தர்க்க அடிப்படையில் இருக்கிறது, அதே நேரத்தில், ஐரோப்பிய கண்டத்தின் மீதான பெரும் மோதலுக்கான வாய்ப்புக்கு ஒருவேளை இன்னும் காலம் செல்லலாம், ஆனால் நிச்சயமாக வெகு காலமாகும் என்று எதிர்பார்க்கமுடியாது. பெல்ஜிய பாதுகாப்பை திட்டமிடுபவர்களுக்கான ஆழ்ந்த சவால், சமீபத்திய தசாப்தங்களின் அனுபவத்தை விட நடைமுறைகளின் அடிப்படையில் பரந்த பெரும் சவாலாக அது இருக்கக்கூடும் என்ற வகையில், எதிர்கால தீடீர் செலவினங்களை எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற கேள்விகளுடன் தொடர்புடையது” என அறிவித்தது.

பெல்ஜியத்திற்குள்ளேயே தலையீடுகளுக்கு திட்டமிடவும் இது முன்மொழிகிறது. இந்த அறிக்கை, “ப்ரூசெல்ஸ்ஸில் நிகழ்ந்த 2016 பயங்கரவாத தாக்குதல், “‘தொலைவிலுள்ள’ பிரச்சினைகள் குறித்த பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது” என அறிவிக்கிறது.

உண்மையில், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அவர்களது மிருகத்தனமான யுத்தத்திற்கு தாக்குதல்காரர்களின் ஒரு பகுதியாக இருந்த இஸ்லாமிய வலையமைப்புகளை பயன்படுத்துவதில் அவர்களை பாதுகாத்த உளவுத்துறை சேவையுடன் அவர்கள் அனைவருமே ஒன்று அல்லது மற்றொரு வழியில் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஐரோப்பாவில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. அவர்கள், கண்டம் முழுவதிலுமான கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்கு திரும்புவதற்கு முன்னர், உண்மையில் அவர்கள் நேட்டோவிற்காக போரிட்டார்கள்.

பெல்ஜிய இராணுவத்திற்கும், மற்றும் அனைத்து நேட்டோ நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கும், மக்களிடையே நிலவும் உற்சாகமின்மையோ, அல்லது உண்மையில் போர் குறித்த அதன் ஆழ்ந்த எதிர்ப்பையோ எதிர்கொள்வது தான் ஒரு மையப் பிரச்சினையாக உள்ளது. கடல்கடந்த மோதல்களில் இளைஞர்களை கொல்வதற்கு விருப்பப்படக்கூடாது என்பதில் இவ்வறிக்கை விழிப்புணர்வுடன் இருக்கிறது. ஆகவே இது, “நெகிழ்தன்மை கொண்ட மற்றும் கவர்ந்திழுக்கும் வேலைவாய்ப்புகளில் மிக அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களையும், இளம் பெண்களையும் நியமிப்பது குறித்து நிலையான கவனத்தை செலுத்த வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக பொருளாதார சூழ்நிலை மோசமடையும் பட்சத்தில் எதிர்காலத்திற்கான திறவுகோலாக அவை இருக்க வேண்டும்” என்றும் சிடுமூஞ்சித்தனமாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.