Print Version|Feedback
New NATO headquarters planned in Germany
ஜேர்மனியில் புதிய நேட்டோ தலைமையகங்கள் திட்டமிடப்படுகின்றன
By Johannes Stern
12 February 2018
புண்டஸ்வேர் (ஜேர்மன் ஆயுதப்படை) ஜேர்மனியில் புதிய நேட்டோ தலைமையகங்களை கட்ட இருக்கிறது. Deutsche Presse Agentur (DPA) யிலிருந்து வந்த தகவலின்படி, இராணுவக் கூட்டணியின் உறுப்பு நாடுகள் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லையன் (CDU, கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்) இடமிருந்து வந்த அறிவிப்பை கோட்பாட்டளவில் ஏற்றுக்கொண்டுள்ளன. தலைமையகங்களுக்காக வேறெந்த வேட்பு நாடுகளும் இருக்கவில்லை. இதுபற்றிய உத்தியோகபூர்வ முடிவானது இந்த வாரம் நடைபெறும் பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பின்போது அறிவிக்கப்பட இருக்கிறது.
புதிய தலைமையகங்களுக்கான சாத்தியமான இடம் கொலோன்- பொண் பிராந்தியமாகும். ஏற்கனவே புண்டஸ்வேர் அதன் கூட்டு ஆதரவு சேவை மற்றும் ஆயுதப் படை அலுவலகங்களை அங்கு வைத்திருக்கிறது. விரைவுத் துருப்புக்கள் மற்றும் பொருள் போக்குவரத்துக்கான புதிய திட்டமிடலும் ஆணையக மையமும் நிறுவுதல் நேட்டோவில் நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களின் ஒரு பகுதி ஆகும்.” அமைச்சகத்தின் சார்பிலான ஒரு பேச்சாளரின்படி, ஜேர்மனியின் போட்டித்திறன், கூட்டணியில் அதன் அங்கீகாரம் மற்றும் அதன் மைய புவியியல் நிலையை எடுத்துக் கொண்டால், “இந்த ஆணையகத்தை நிறுவுதற்கும் இயக்குதற்குமாக அடிப்படை ரீதியாக தகுதியுள்ள தேசங்களுள் ஒன்று” ஜேர்மனி ஆகும்.
யதார்த்தத்தில், 2014லிருந்து அதன் இராணுவத் திறனைப் பெரிய அளவில் மேம்படுத்தி இருக்கின்ற மற்றும் நேட்டோவுக்குள் அதன் இராணுவ எடையை அதிகரிக்க முயற்சிக்கும் ஜேர்மனியானது, முன்னரை விட ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ தயாரிப்பில் இன்னும் வலிமையான வகையில் சம்பந்தப்படுவதாக இருக்கும். கடந்த இலையுதிர் காலத்தில், இராணுவக் கூட்டின் ஒரு இரகசிய ஆவணத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட Der Spiegel-ல் அறிவிக்கப்பட்ட ஒரு செய்தி எந்த அளவுவரை இந்தத்திட்டங்கள் முன்னேறியிருக்கின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
கூட்டணியின் “வலுப்படுத்தப்பட்ட தடுப்பு மற்றும் பாதுகாப்பை வெளிப்படுத்தல் மீதான முன்னேற்ற அறிக்கை” என்று தலைப்பிடப்பட்ட தாளானது, “பெரிய கூட்டுநடவடிக்கை பிளஸ்” என்றழைக்கப்படுவதற்கு தலைமை வகிக்க இட்டுச்செல்லும் வகையில் இராணுவத் திறன்களை வலுப்படுத்த குறிக்கப்பட்டுள்ள நேட்டோ இராணுவ அலுவலர்களது வேண்டுதலுக்கு இட்டுச்செல்கிறது. ஒரு போர் என்று விவரிக்கும் அர்த்தத்தில் அனைத்து நேட்டோ நாடுகளின் பெரிய இராணுவ அமைப்புக்களும், இவ்வாறு நூறாயிரக்கணக்கான படையினர்களும் இதில் ஈடுபடுவதாகும்.
இரகசிய அறிக்கையானது நேட்டோ “அச்சுறுத்தப்பட்ட நேச நாடு அல்லது நேச நாடுகளை வேகமாக ஆட்களைச்சேர்த்து வலுவாக்கல், நெருக்கடியிலும் அமைதிக்காலங்களிலும் அச்சுறுத்தித் தடுத்தலை வலிமைப்படுத்தல் மற்றும் தாக்குதல் வருமிடத்தே நேச நாடு அல்லது நேச நாடுகளை வலுப்படுத்துவதற்கு இயலக்கூடியதாகக் கட்டாயம் செய்யவேண்டும்” என்று மேலும் கூறுகிறது. அது “என்ன தன்மையதாக இருந்தாலும், தேவை, சேருமிடம் அல்லது நடவடிக்கை, பணித்திட்டம் அல்லது செயல்பாட்டின்பொழுது” துருப்புக்களை விரைவாக அணிதிரட்டக்கூடியதாகவும் தக்கவைத்துக்கொள்ளக்கூடியதாகவும் அது கட்டாயம் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும். இதற்கு வடஅமெரிக்காவிலிருந்து கூட்டணி எல்லைப்புறங்களின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகள் வரை, “ஐரோப்பாவுக்குள்ளான வழித்தடங்கள் உள்ளடங்கலாக” செய்தித்தொடர்புகளின் வழி ஒன்றிணைந்த வகையில், “ஒரு வலிமையான ஆரோக்கியமான சிவில் / இராணுவ தளவாட கட்டமைப்பு” தேவைப்படும்.
இதுவரை மக்களின் முதுகுக்குப் பின்னே வரையப்பட்ட இத்திட்டங்கள் -மற்ற விடயங்களுடன்,– வாரச்செய்தியிதழ் Der Spiegel முடிவாய்க் கூறியவாறு “வேறுவார்த்தைகளில்: நேட்டோ ரஷ்யாவுடன் சாத்தியமானவகையில் போரிடலுக்காக” என்று முடிவாய்க் கூறியவண்ணம் குடிமக்கள் கட்டமைப்பை (சாலைகள், இரயில் மற்றும் விமானநிலைய வலைப்பின்னல்கள்) தயாராய் இருக்கும்படி மற்றும் விநியோகங்களை சிறந்தமுறையில் ஒழுங்கு செய்யக்கூடியதாகச் செய்வதாகும்.
ஜேர்மனியில் புதிய நேட்டோ தலைமையகங்கள் கட்டுதல் —DPA படி, இரண்டாவதானது அட்லாண்டிக் ஊடாக வடஅமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வான் மற்றும் கடல்வழித் தடங்களைப் பாதுகாப்பதற்கு அமெரிக்காவில் கட்டப்பட இருப்பது— சமூக ஜனநாயகக் கட்சியினருக்கும் (SPD) கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினருக்கும் (CDU/CSU) இடையில் ஒரு புதிய மகா கூட்டணியை அமைப்பதற்கான உடன்பாடு நிகழ்ந்த அடுத்த நாளே இதனை பகிரங்கப்படுத்தியது தற்செயலான நிகழ்வு அல்ல. இந்தக் கூட்டணி உடன்பாட்டில், “ஒரு வலுவான ஐரோப்பியப் பாதுகாப்புக்கு (நேட்டோ) கூட்டணியின் அச்சமூட்டித் தடுக்கும் மற்றும் பாதுகாப்புத் திறமைகளைப் பேணுவதற்குப் பொருத்தமான பங்களிப்பைச் செய்வதற்கு” கட்சிகள் உறுதி எடுத்திருக்கின்றன.
அதில் ஒருபகுதி, “நேட்டோ, OSCE மற்றும் ஐரோப்பிய மன்றத்தில் ஜேர்மனி ஒரு நம்பிக்கையான பங்காளர் என்ற வகையில்” “அட்லாண்டிக் கடந்த பங்காண்மையை வலுப்படுத்துவதற்கு நாம் விரும்புவதுடன் நேட்டோவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பிற்கு அர்ப்பணித்துள்ளோம்” என்றும் கூறுகிறது. நாம் உடன்பட்ட நேட்டோ திறனுடைய இலக்குகளை நிறைவேற்றவும் திறமையில் கிடக்கும் இடைவெளிகளை நிரப்பவும் விரும்புகிறோம்.
இந்தச் சூத்திரப்படுத்தலுடன் CDU/CSU மற்றும் SPD கட்சிகள் 2024 அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நேட்டோ உடன்பட்ட குறைந்தபட்ச இரண்டு சதவீதத்திற்கு பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதற்கு உண்மையில் அர்ப்பணித்துள்ளன. வேறென்ன சேர்க்கப்பட்டுள்ளது? மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு கூட்டுச்சதியின் பாகமாக ஒரு கூட்டணி உடன்பாட்டை அவர்கள் பேசியபொழுது CDU/CSU மற்றும் SPD கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கெனவே அங்கீகரித்துள்ளவை எந்த வகையான குறிப்பிட்ட போர்த்திட்டங்கள்?
2014ல் உக்ரேனில் மேற்கத்திய ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஒரு மையப் பாத்திரம் ஆற்றிய மற்றும் லித்துவேனியாவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக போரிடும் துருப்புக்களை நிறுத்தி வந்துள்ள ஜேர்மனி, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரில் பங்கேற்குமா? அல்லது ஜேர்மனியில் உள்ள ஆளும் வர்க்கம் புதிய தலைமையகங்களை நேட்டோவிலிருந்து சுதந்திரமானதாக ஜேர்மன்-ஐரோப்பிய போர்த் திட்டப்பணிகளுக்குத் தயார் செய்வதற்கான பிரதானமான ஒரு வாய்ப்பாகப் பார்க்குமா?
“ஜேர்மனியில் புது தலைமையகங்களின் சிறப்பு அம்சம் இப்போதிருக்கும் நேட்டோ ஆணையக் கட்டளை கட்டமைப்புக்குள் ஒருங்கிணைக்கப்படாது. DPA கட்டுரைகளின்படி, இது கூட்டணிக்கு வெளியே தேசிய பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக பணியாளர் மற்றும் திறத்தைப் பயன்படுத்துவதை சாத்தியமாக்கக்கூடும்.