ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Munich Security Conference threatens war on all fronts

மூனிச் பாதுகாப்பு மாநாடு அனைத்து முனைகளிலும் ஒரு போரை அச்சுறுத்துகிறது

By Chris Marsden
19 February 2018

கடந்தவாரம் ஜேர்மனியில் நடந்த 54வது மூனிச் பாதுகாப்பு மாநாட்டின் நடவடிக்கைகள், ஏகாதிபத்திய அரசுகள் மீண்டும் ஒருமுறை மனிதசமூகத்தை அழிவின் விளிப்புக்கு கூட்டாக இழுத்து வருகின்றன என்பதைத் தெளிவுபடுத்தியது.

வெளிப்படையான போர் அச்சுறுத்தல் உடனடியாக சிரியா, ஈரான் மற்றும் வடகொரியா மீது மையப்படுத்தியது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர சக்திகள் இறுதி இராணுவ இலக்கு ரஷ்யாவும் சீனாவும் என்று தெளிவுபடுத்தின. மேலும், அவர்களின் உலக மேலாதிக்கத்தை உத்தரவாதப்படுத்தும் கூட்டுப் போராட்டம் என்று சொல்லப்படுவதில், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் இருந்து இதுவரை காணப்படாத வழிகளில் ஏகாதிபத்திய சக்திகள் ஒருவரையொருவர் குழிபறித்துக்கொண்டிருக்கின்றனர்.

வாஷிங்டன் தலைமையிலான குழுவானது சிரியா மற்றும் வடகொரியா நோக்கிய போர்வெறிக்கூச்சல்களை, ரஷ்ய மற்றும் சீனாவின் குற்றப்பொறுப்புக்களின் குற்றச்சாட்டுகளுடன் கட்டிப் போடுகின்றது.

மாநாட்டைத் திறந்து வைத்த தலைவர் வொல்ப்காங் இசிங்கர் உலகம் “பிரதான அரசுகளுக்கிடையிலான மோதலுக்கு” மிக அருகாமையில் நகர்ந்திருக்கிறது என்று எச்சரித்தார்.

ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், “குளிர் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னர் முதல்தடவையாக, நாம் அணுஆயுத அச்சுறுத்தலை, ஒரு அணு ஆயுத மோதலை எதிர்கொள்கிறோம்.” என்று அறிவித்தார். இது வாஷிங்டனின் கதவுக்கு அருகில் இருக்கவில்லை, மாறாக “வடகொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் அணு ஆயுதங்கள் மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் தொடர்பாக அபிவிருத்தி செய்வது பற்றியதாகும்.”

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் வெள்ளிக்கிழமை அன்று தனது பேச்சில், அது ரஷ்யா மீதான கோபத்தை குவிமையப்படுத்தும் முன்னர், மூனிச் வாஷிங்டனை விடவும் வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகில் உள்ளது. நேட்டோ ரஷ்யாவுடனான புதிய ஆயுதப் போட்டியைத் தவிர்க்க விழைவதாகக் கூறப்படுகிறது, ஆனால் “ரஷ்யா அதன் அணுஆயுதத் திறன்களை நவீனமயப்படுத்தி வருகிறது, புது அணுஆயுத முறைகளை அபிவிருத்தி செய்து வருகிறது, அதன் இராணுவ மூலோபாயத்தில் அணு ஆயுதங்களின் பங்கை அதிகரித்து வருகிறது. இதுதான் கவலைப்பட வேண்டிய உண்மையான காரணமாகும்” என்று கவனிக்கத்தக்க ஒரு புள்ளியைக் குறிப்பிட்டார்.

ஸ்டொல்டென்பேர்க் கடந்த வாரம் அமெரிக்கா அல்லாத நேட்டோ பாதுகாப்புச் செலவினம் 2017ல் 5சதவீதம் அதிகரித்திருக்கிறது, எனவே எட்டு கூட்டணி உறுப்பு நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் எட்டியுள்ளன. இதை 2024ல் 15 உறுப்பு நாடுகளும் செய்யும் என்று தற்பெருமை பீற்றிக் கொண்டார்.

சனிக்கிழமை பேசுகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் H.R. McMaster கூறினார், “நாம் பொது அச்சுறுத்தலின் ஒரு வரம்பை எதிர்கொள்கிறோம். போக்கிரி ஆட்சிகள் ஏற்கெனவே மத்தியகிழக்கிலும் வடகிழக்கு ஆசியாவிலும் சர்வதேச பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்துள்ளன.”

“ஈரானுக்கு எதிராக செயல்படுவது” அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார், அது, “நிழற்குழுக்களின் ஒரு வலைப்பின்னலை” மற்றும் குடிப்படைகளை சிரியா, ஏமன் மற்றும் ஈராக்கில் வளர்த்து வருகிறது “ஈரான் மேலும் மேலும் அழிவுகரமான ஆயுதங்களை இந்த வலைப்பின்னல்களுக்குள் விதைக்கையில்…. அவை மேலும் மேலும் திறன் பெறும்.” சிரயாவின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் இன்னும் அமெரிக்க ஆதரவு குடிப்படைகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திக்கொண்டிருந்தார், அவரும் கூட “பொது தரவுகள் மற்றும் படங்களை மேற்கோள் காட்டி கூறிக்கொண்டார்.

ஈரானை அடையாளமிட்டு, ஆனால் வெறும் மறைமுக குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவைக் குறிப்பிட்டு, மேலும் அவர் கூறினார், “ஆபத்தான ஆயுதங்களை அபிவிருத்தி செய்வது, பயன்படுத்தல் மற்றும் பரப்பும் போக்கிரி அரசுகள் சிரியா மற்றும் வடகொரியா மட்டுமல்ல..” என்றார்.

எரிதலை எடுத்துக் கொண்டு ஞாயிறு அன்று பிரதமர் பெஞ்ஜமின் நெதனியாகு ஈரானுடன் பல்முனைப் போருக்கான இஸ்ரேலின் தயார்நிலையை எச்சரித்தார். பிப்ரவரி 10 அன்று இஸ்ரேலிய வான்வெளியில் சுட்டு வீழ்த்திய ஈரானிய ஆளில்லா விமானத்தின் துண்டு என்று கூறிக்கொள்ளும் மேற்பகுதி ஒன்றைப் பிடித்துக் கொண்டு, அவர் “தெஹ்ரான் அரக்கர்களுக்கு ஒரு செய்தி….. இஸ்ரேலின் உறுதியைச் பரிசோதிக்க வேண்டாம்” என்றார்.

ஈராக்கில் ஷியைட் நிழல் குடிப்படை, ஏமனில் ஹோத்தீஸ், லெபனானில் ஹெஸ்பொல்லா, காசாவில் ஹமாஸ் என ஈரான் மத்திய கிழக்கில் பெரும் அளவிலான பகுதியை விழுங்கிக் கொண்டிருக்கிறது”, “நம்மைப் பாதுகாக்க நாம் தயக்கம் எதுவுமின்றி செயல்படுவோம். தேவைப்பட்டால் நம்மைத்தாக்கும் ஈரானின் நிழற்குழுக்களை மட்டுமல்ல, ஈரானையே தாக்குவோம்” என்றார்.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் சிக்மார் காப்ரியேல் சீனா மற்றும் ரஷ்யா என்று வரும்பொழுது, “இந்த இரண்டு சக்திகளையும் கவனிப்பதற்கு மேற்கிடம் ஒரு புதிய மூலோபாயம் இல்லை.” சீனாவும் ரஷ்யாவும் “(ஐராப்பிய ஒன்றியத்தின்) ஒற்றுமையை சோதிக்கவும் கீழறுக்கவும் மாறாமல் முயற்சித்து வருகின்றனர்.” அதன் ஒரே இணைப்பு ஒரே சாலை என்ற முன்முயற்சி ஊடாக “சீனா ஒருங்கிணைந்த மாற்று முறையை அபிவிருத்தி செய்து வருகிறது, அந்த முறை எம்முடையது போன்றதல்ல, அது சுதந்திரம், ஜனநாயகம், மற்றும் தனி மனித உரிமைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல. சீனா உண்மையான உலக மூலோபாயக் கருத்தை வைத்திருப்பதாகத் தெரிகிறது மற்றும் இந்தக் கருத்தை அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.”

ரஷ்ய எதிர்ப்பு மற்றும் சீன எதிர்ப்பு வாய்ச்சவடால் தாக்குதல்  அதிகரித்த அளவில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய அரசுகளுக்கும் இடையிலான இடைவெளி பற்றிய கலந்துரையாடலாக இருந்தது. உலகப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய “பங்களிப்பு” மீதாக குவிமையப்படுத்தப்பட்ட மாநாடானது, அதிகரித்த இராணுவச் செலவுக்கான திரும்பத்திரும்ப விடுக்கப்பட்ட அமெரிக்கக் கோரிக்கைகளுக்குப் பின், நேட்டோ கூட்டத்தில் இந்தவாரம் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ்-ஆல் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்ட பின், ஒழுங்கமைக்கப்பட்டது. ஆனால் மூனிச்,  நேட்டோ கூட்டை மீறுவது பற்றிய ஆபத்துக்கள் மீதாக தற்போது நடந்து கொண்டிருக்கும் விவாதத்தை வெளியிட்டது.

ஸ்டொல்டென்பேர்க் அவரது பங்களிப்பில் பெரும்பான்மை நேரத்தை,  ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் எதிர்காலம் —கடந்த டிசம்பரில் அமைக்கப்பட்ட நிலையான கட்டமைப்பு ஒத்துழைப்பு உடன்பாடு, PESCO—  நேட்டோவின் ஒற்றுமையைக் கட்டாயம் அச்சுறுத்தக் கூடாது என்று எச்சரிப்பதில் செலவிட்டார்.

“நேட்டோவுக்குள்ளான ஐரோப்பிய தூணை” வலிமைப்படுத்துவதும் “சிறப்பான சுமை பகிர்வும்” நன்றாக இருந்தது. ஆயினும் அவர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது முடிவுற்றதும், சுமார் 80 சதவீதம் நேட்டோ நிதி ஐரோப்பிய ஒன்றியம் அல்லா கூட்டாளிகளிடமிருந்து வரும் என்றார். “அட்லாண்டிக் கடந்த கூட்டைப் பலவீனப்படுத்தும் ஆபத்துநேர்வு, ஏற்கனவே செய்யப்பட்டு வரும், நேட்டோ ஏற்கெனவே செய்ததை அப்படியே செய்யும் ஆபத்து நேர்வு, மற்றும் நேட்டோ கூட்டின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத உறுப்பினர்களை பாரபட்சமாய் நடத்தும் ஆபத்துநேர்வு…. கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.” என்றார்.

“ஐரோப்பிய ஒன்றியம் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியாது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, நேட்டோவுக்கான அமெரிக்க தூதர் Kay Bailey Hutchison, “[PESCO] ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாதுகாப்பு வாகனமாக இருப்பதை நாம் விரும்பவில்லை மற்றும் நாம் மிகக் கவனமாகக் கவனிக்கப் போகிறோம், ஏனெனில், அதுதான் விடயமென்றால், அது நாம் கொண்டிருக்கும் பலத்த பாதுகாப்புக் கூட்டைப் பிளவுபடுத்தும், ….ஐரோப்பியர்கள் திறன்களையும் பலத்தையும் கொண்டிருப்பதை நாம் விரும்புகிறோம், ஆனால் அமெரிக்க உற்பத்திக்கு வேலியிடல் அல்ல.”

வாஷிங்டனுக்காக தெளிவாகப் பேசிவரும் ஸ்டொல்டென்பேர்க் பேச்சு, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியால் சிறு பாவமன்னிப்பு ஆக வழங்கப்பட்டது.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயென், நேட்டோவுக்குள்ளான கூட்டு வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் தேவையில் தாங்கள் தவிர்க்கப்படும் ஒரு நிலையை ஐரோப்பா இனியும் ஏற்காது என்றார்.

“பயங்கரவாதம், வறுமை, புவி வெப்பநிலை மாற்றம் இவற்றிலிருந்து வரும் உலக சவால்களை எதிர்கொள்கையில் ஐரோப்பா அதன் வேகத்தை உயர்த்தும்,” என்றார் அவர். “”விரும்புபவர்கள் தனி நாடுகளால் தடைபண்ணப்படாது முன்னேற்றக்கூடியதாக்க விரும்புபவர்களாக இருந்தாக வேண்டும்….நாம் தொடர்ந்து அட்லாண்டிக் கடந்த உறவை வைத்திருக்க விரும்புகிறோம் ஆனால் கூடுதலாக ஐரோப்பிய நிலையினதாக இருக்க விரும்புகிறோம்.”

“ ஒரு ஆரம்பம் செய்யப்பட்டுவிட்டது” என்றார் அவர். “கடந்த டிசம்பரில் ஐரோப்பிய பாதுகாப்பு ஒன்றியத்திற்கான திட்டங்களை நாம் இறுதியாகத் தொடங்கிவிட்டோம். இந்த வழியில் ஒரு ஐரோப்பிய இராணுவத்தினை உருவாக்குவதற்கு வேலைசெய்வதற்கான ஒரு அரசியல் பாதையையும் ஆரம்பித்து விட்டோம்.”

France 24-இடம் பேசுகையில் வொன் டெர் லெயென், “பிரெக்ஸிட், புலம்பெயர்ந்தோர் நெருக்கடி, மிக உறுதிப்படுத்தப்பட்ட ரஷ்யா மற்றும் கணிப்பிடமுடியா வெள்ளைமாளிகை என்பவற்றை தொடர்புபடுத்தி”, “சிலவற்றை மாற்றவேண்டியும் மற்றும் எமது சொந்த இரு கால்களில் நிற்பதற்குமான ஒரு விழிப்பு அழைப்பு” என்று கூறும் வரைக்கும் போனார்.

பிரான்சின் வெளியுறவுச் செயலர் Florence Parly யும் அமெரிக்க கவலைகளை அதே அளவுக்கு நிராகரித்தார்.

“எமது சொந்த அக்கம்பக்கத்தில், குறிப்பாக தெற்கில், நாங்கள் பதில் கொடுக்க வேண்டி இருக்கிறது, அமெரிக்கா அல்லது (நேட்டோ) கூட்டு குறைந்து குறிப்புணர்த்த விரும்பினாலும் கூட,” என்றார் அவர்.

ஐரோப்பிய ஒன்றிய தேசங்கள், “அமெரிக்கா நமது உதவிக்கு வரவேண்டும் என்று கேட்காது, அவர்களது ISR (உளவு, கண்காணிப்பு மற்றும் இராணுவ கள ஆய்வு) திறமைகளை அல்லது மற்ற பணிகளில் இருந்து அவர்களின் விநியோக விமானங்களை திசை திருப்பாது செயல்பட கட்டாயம் தயாராக இருக்க வேண்டும்.”

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இரண்டுமே அண்மையில் இராணுவச் செலவினங்களை அதிகரிக்க தம்மை அர்ப்பணித்துள்ளன –பிரான்ஸ், 2025ல் 370 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உறுதி அளித்ததன் மூலம் நேட்டோவின் இரண்டு சதவீத இலக்கை நிறைவேற்ற உறுதி கொண்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே, ஐரோப்பாவின் கூட்டு இராணுவ மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பில் இங்கிலாந்தின் பங்கு மீதாக கவனம்செலுத்தியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளில் தனது கரத்தைப் பலப்படுத்த விழைந்தார். பாதுகாப்பு உடன்படிக்கை மீதான ஒப்பந்தத்தைத் தடுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையை விட்டு பிரிட்டனின் விருப்பத்தை வெளியேற்றி விட வேண்டாம் என்று ஐரோப்பியத் தலைவர்களை மே வலியுறுத்தி வேண்டிக் கேட்டுக்கொண்டார். அது “உண்மையான உலக விளைவுகளைப் பாதிக்கலாம்” என்றார்.

மே அமெரிக்காவால் முழுமையாக ஆதரிக்கப்பட்டார், நேட்டோவில் இரண்டாவது பெரிய பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தைக் கொண்டிருக்கும் இங்கிலாந்து, ஜேர்மன் மற்றும் பிரான்சுக்கு ஒரு மதிப்பு மிக்க தடுப்பாக இருக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது.