Print Version|Feedback
India: Bus strike cripples Tamil Nadu transport services
இந்தியா: பேருந்து தொழிலாளர் வேலைநிறுத்தம் போக்குவரத்து சேவைகளை முடக்கியது.
By Wasantha Rupasinghe
10 January 2018
இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், பேருந்து ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் மாநிலம் தழுவிய போராட்டம், இன்றோடு ஏழாவது நாளை எட்டி உள்ளது. சம்பள உயர்வு கோரிக்கைக்காக, நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மீறி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 1,40,000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று தமிழ்நாடு முழுவதும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும், தங்கள் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொத்தம் உள்ள 22,500 பேருந்துகளில், 15,000 பேருந்துகள் இயங்கவில்லை.கோவையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில், 1070 பேருந்துகளில் 400 பேருந்துகள் மட்டுமே இயங்கின, இவை அண்ணா தொழிற்சங்கம், அதாவது ஆளும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஊழியர்களால் இயக்கப்பட்டது. 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்து சேவையை பயன்படுத்துகின்றனர்.
வெளியில் இருந்து ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் வேலைக்கு எடுப்போம் என்ற மாநில அரசாங்கத்தின் மிரட்டலை போராட்டக்காரர்கள் அலட்சியம் செய்தனர். அதேபோல் பயணிகளுக்கு இது மிகப்பெரிய கஷ்டத்தை தருகிறது என்ற ஊடகத்தின் பிரச்சாரத்துக்கு எதிராகவும் அவர்கள் உறுதியாக நின்றனர். உலக சோசலிச வலைத் தளத்திடம் பேட்டி அளிக்கையில் அவர்கள் அரசு மற்றும் ஊடகத்தின் பிரச்சாரத்தினை கண்டித்தனர்.
தொழிலாளர்கள், இடையே உள்ள கோபத்தை திசை திருப்பவே, எதிர்கட்சிகளோடு இணைந்துள்ள தொழிற்சங்கள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முற்போக்கு தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த CITU, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த INTUC ஆகியவை இதில் அடங்கும்.
வேறு, சில சிறிய தொழிற்சங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றன. ஆளும் அதிமுக விடம் இருந்து மிரட்டல்கள் வந்தாலும் அதன் உறுப்பினர்கள் பலர் இந்த போராட்டத்தில் பங்கு பெற்றனர்.
மாதம் அடிப்படை சம்பளம் 19,500 ரூபாய் வேண்டும் மற்றும் 2.57 சதவீதம் சம்பள உயர்வு வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைக்கின்றன. தொழிற்சங்க தலைவர்களுக்கும், போக்குவரத்து அமைச்சர் விஜய பாஸ்கரால் வழிநடத்தபடும் அலுவலர்களுக்கும் இடையே நடந்த 11 கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து இந்த போராட்டம் வெடித்துள்ளது.
CITU கிளை தலைவர் எ.சௌந்தரராஜன் இவ்வாறு கூறினார்: “எங்களுக்கும் போராட்டத்தில் விருப்பம் இல்லை, ஆனால் வேறு வழி இல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மற்ற எல்லா தொழிற்சங்களும் இந்த முடிவை ஏற்றுள்ளன. போராட்டத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதை வெளிப்படுத்தும் விதத்தில்,சௌந்தரராஜன் கூறினார், “நாங்கள் சமரச பேச்சுக்கு தயாராக இருக்கிறோம்”. போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் பேரழிவுகரமான பின் விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.
கடந்த மே மாதம் இந்த தொழிற்சங்கங்கள், தாங்கள் பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக அரசோடு ஒரு உடன்படிக்கைக்கு வந்து விட்டதாக கூறி, TNSTC தொழிலாளர்களின் மூன்று நாள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தன, ஆனால் எந்த பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. டிசம்பர் 13, 14 ஆகிய தேதிகளில், அடிப்படை ஊதியத்தை அதிகரிக்க வேண்டி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை தொழிலாளர்கள் நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, எம்.சண்முகம் என்ற மாநில சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருக்கும் திமுக வின் தலைவர், தி இந்து என்ற ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார் அதாவது, அரசு 2.44 சதவீதம் சம்பள உயர்வுக்கு ஒப்புக்கொண்டதாக கூறினார். இது எதை காட்டுகிறது என்றால் தொழிற்சங்கமே 2.55 சதவீத கோரிக்கையை குறைத்து விட்டது என்பதை தான். தமிழ்நாட்டை ஆண்ட திமுக கடந்த காலங்களில் தொழிலாளர் போராட்டங்களை கடுமையாக நசுக்கி இருக்கிறது என்பது தான் உண்மை.
அரசு, குறைந்த பட்ச ஊதியத்தை 17,700 ஆக நிர்ணயிப்பதாக முன்வைத்தது, அதாவது தொழிற்சங்கங்களின் கோரிக்கையை விட 1,800 ரூபாய் குறைவு. போக்குவரத்து அமைச்சர் விஜய பாஸ்கர், அரசு போக்குவரத்து கழகத்தின் மோசமான நிதிநிலையை எடுத்து கூறினார், அவர் குறைகூறினார் இப்போது அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வுக்கு கூட அரசு கஜானவில் இருந்து 10,000 மில்லியன் பணம் செலவாகும் என்று.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அடக்குவதற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 5 அன்று ஒரு தற்காலிக ஆணையை பிறப்பித்தது.
அது போரட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவித்தது மட்டும் அல்லாது, தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பவில்லை என்றால் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தது. ஜனவரி 8 அன்று தொழிலாளர்கள், நீதிமன்ற உத்தரவை சவால் செய்தபோது, அது தனது ஆணையை நீக்கம் செய்யுமாறு வேண்டி கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்தது. நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் எந்த தொழிலாளியையும் வேலை நீக்கம் செய்ய முடியாது என்று அது அறிவித்தது.
போராட்டங்களை நிறுத்துமாறு கோரும் கட்டளைகளை இந்திய நீதிமன்றங்கள் பல முறை விடுத்துள்ள வரலாறுகள் இருக்கின்றன. கடந்த செப்டம்பர் மாதம், போராட்டத்தில் ஈடுபட்ட 33,000 தொழிலாளர்களை உடனே வேலைக்கு திரும்புமாறு ஆணையிட்டது நீதிமன்றம், இந்த ஆணையை தொழிற்சங்கள் உடனே ஏற்றுக்கொண்டன.
மற்ற துறைகளில் உள்ள தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கக் கூடும் என்று அஞ்சும் தமிழ்நாடு அரசு, பேருந்து தொழிலாளர்களின் எந்தப் போராட்டத்தையும் ஒடுக்க நினைக்கிறது. தொழிலாளர்கள் ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்டு, போராடும் தொழிலாளர்களுக்கு TNSTC நோட்டீஸ் அனுப்பிள்ளது. TIMES OF INDIA என்ற பத்திரிக்கைக்கு ஒரு அலுவலகர் சொன்னார் “தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று.
TNSTC, மதுரை கிளையில் உள்ள 11,819 தொழிலாளர்களுக்கு “ஷோ காஸ்” நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக THE HINDU பத்திரிகை கூறுகிறது. மதுரையில் கிட்டதட்ட 7,200 தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 72 மணி நேரத்துக்குகள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
போலீஸ் அடக்குமுறை சமீபத்திய நாட்களிள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடியில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய 139 பேரை போலீஸார் கைது செய்தனர். போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தனர்.
திருநெல்வேலியில், 1000 தொழிலாளர்கள் திருநெல்வேலி இரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர், அதில் 495 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூரில் ஊர்வலம் செல்ல முயன்ற 400 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில், போராடும் நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டு,பேருந்துக் கண்ணாடியை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
ஜனவரி 9 அன்று, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் அடையாள அணிவகுப்பில் ஈடுப்பட்ட 900 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்துக்கான ஆதரவு ஏனைய துறைகளை சேர்ந்த தொழிலாளர்களிடமும் வளர்கிறது.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்களின் போராட்டத்தை நசுக்கக் கூடாது என்றும் ஒரு நாள் அடையாள அணிவகுப்பை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்தியது.
ஆனாலும், அரசின் அச்சுறுத்தலுக்கு பின்னரும், ஏனைய துறை தொழிலாளர்களை போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைக்கவில்லை, மாறாக CPM ஆல் வழிநடத்தபடும் தொழிற்சங்கங்கள் குறுகிய போராட்டத்துக்கு மட்டுமே அழைப்பு விடுகின்றன. CITU மாநில செயலாளர் எஸ்.பரசுராமன் கூறினார் ”செவ்வாய் கிழைமை அன்று குடும்பத்தோடு, TNSTC பிராந்திய கிளை அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுமாறு எங்களுக்கும் உத்தரவு வந்தது”
சிபிஎம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தொழிற்சங்கள் இந்திய ஆளும் முதலாளித்துவ அரசியல் அமைப்போடு நெருக்கமாக இணைந்துள்ளன.
தமிழகத்தில், திமுக மற்றும் அதிமுக தலைமையிலான முதலாளித்துவ அரசாங்களை சிபிஎம் ஆதரித்து வந்திருக்கின்றன. தேசிய அளவில் ,காங்கிரஸ் கட்சியை பல முறை தொடர்ச்சியாக ஆதரித்து வந்துள்ளன.
இந்த ஸ்ராலினிச கட்சிகளும், தொழிற்சங்களும் தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடவில்லை, மாறாக தொழிலாளர் போராட்டத்தை கட்டுப்படுத்தி,தொழிலாளர்களின் சுயாதீனமான செயல்பாட்டை தடுத்து,போராட்டதை காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றன.