Print Version|Feedback
Facebook blocks sharing of WSWS anti-censorship video
உலக சோசலிச வலைத் தள தணிக்கை எதிர்ப்பு காணொளிக்காட்சியைப் பகிர்ந்துகொள்வதை முகநூல் தடுக்கிறது
By Eric London
15 January 2018
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த்தும் புலிட்சர் விருது பெற்ற பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ்ம் பங்கேற்கும் “இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்” என்ற ஜனவரி 16 இணையவழி சந்திப்பை முன்னிலைப்படுத்தும் காணொளிக் காட்சியை ஒரு சமூக ஊடகம் பகிர்ந்துகொள்வதிலிருந்து பயனாளர்களை முகநூல் (Facebook) தடுத்துள்ளது. இந்த காணொளிக்காட்சியின் ஆரம்ப பதிவு வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது, எந்தப் பயனராளும் பகிர்ந்துகொள்ள முடியாது தடுக்கப்பட்டது. அவ்வாறு பகிர்ந்துகொள்ள முயற்சி செய்தவர்களும் அது ஒரு தொழில்நுட்பத் தவறை குறிக்கும் ஒரு பிழை எனக்காட்டும் தகவலை பெற்றனர்.
பயனளர்கள் தெரிவித்ததாவது, ஆயினும் அதன்மேல் சொடுக்கும்பொழுது “தவறுதலாக இச்செய்தியைக் காண நேர்ந்தால், எமக்குத் தெரியப்படுத்தவும்” என்று அவர்கள், இதில் உள்ளடங்கிய தகவல் முகநூல் “பாதுகாப்பு” என்ற பெயரில் தடுக்கப்பட்டிருப்பதாக தெளிவாகவே சுட்டிக்காட்டும் ஒரு அறிவிப்பை கொடுத்திருந்தனர்.
ஞாயிறு அன்று மறுபடியும் பதிவிடப்பட்ட காணொளிக்காட்சி, பகிரக்கூடியதாக இருந்தது. இது முகநூல் தணிக்கை நடவடிக்கைகளின் தன்னிச்சைப் போக்கைக் கோடிட்டுக்காட்டுகிறது. காணொளிக்காட்சி தடுக்கப்பட்டமை, முகநூலானது உலக சோசலிச வலைத் தளத்தின் இன்னொரு காணொளிக்காட்சியை பகிர்வதிலிருந்து தடுத்த ஒருநாள் கழித்து இடம்பெற்றது, அதன் அரசியல் ரீதியான நோக்கங்கொண்ட தணிக்கையின் ஒரு தீவிரம் இருப்பதுபோல் சுட்டிக்காட்டுகிறது.
சனிக்கிழமை அன்று இடம்பெற்ற இன்னொரு நிகழ்வில், உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோக்குப் பத்தியான ”செய்திகள் உள்ளடக்கத்தைத் தணிக்கைசெய்வதற்கு முகநூல் பெருந்திட்டம் அறிவிப்பு” என்பதை வாசிக்க ஊக்குவிக்க ஒரு விளம்பரம் வாங்கும் ஒரு முயற்சியை முகநூல் தடுத்தது. விளம்பரத்தை மறுத்ததற்கு முகநூலால் வழங்கப்பட்ட காரணம்: “ஒரு பொருளையோ அல்லது சேவையையோ வாசிக்க ஊக்குவிக்கும்போது Mark Zuckerberg இன் படங்களை பயன்படுத்தும் விளம்பரங்களை நாம் அனுமதிப்பதில்லை” என்று இருந்தது.
“தனிப்பட்ட நிகழ்வுகளை” வாசிக்க ஊக்குவிக்கும் அதேவேளை, அமைப்புகளால் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் பகிரங்க பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செய்யும் ஒரு புதிய செய்தி அளிப்பு நெறிமுறையை முகநூல் அறிவித்த நாட்களுக்குப் பின்னர், இந்த நடவடிக்கைகள் வருகின்றன. இந்தப் புதிய ஒழுங்குமுறையின் கீழ், விளம்பரங்களை வாங்குவது மட்டுமே செய்திகள் மற்றும் அரசியல் அமைப்புக்கள் அவற்றின் உள்ளடக்கங்களை கணிசமாக வெளிப்படுத்துவதற்கான ஒரே வழிமுறையாக இருக்கும். இதன் பொருள் முகநூல் CEO Zuckerberg இன் நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கும் எந்தவிதமான பொது விடயமும் முகநூலில் பகிர்வதற்கு தீவிரமாகத் தடுக்கப்படும்.
உலக சோசலிச வலைத் தளத்தால் உணரப்படும் முகநூல் தணிக்கையானது, இணையத்தில் அரசியல் பேச்சை தணிக்கை செய்வதற்கான நிறுவனத்தின் தீவிர நகர்வின் ஒரு பங்கு என்பது தெளிவாகும். இந்த நிலைமைகளின் கீழ், endcensorship.org இல் செவ்வாய், இரவு 7 மணிக்கு (EST) நடைபெறவிருக்கும் வலைத்தள சந்திப்பான “இணையத் தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்” என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.