ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Statement by Julian Assange opposing Internet censorship will be read at WSWS “Organizing Resistance” Webinar

இணைய தணிக்கையை எதிர்க்கும் ஜூலியான் அசாஞ்சின் அறிக்கை, உலக சோசலிச வலைத் தளம் “எதிர்ப்பை ஒருங்கிணைக்கும்” இணையவழி கருத்தரங்கில் வாசிக்கப்படும்

16 January 2018

தகவல் பரிமாற்றத்திற்கான அடிப்படை ஜனநாயக உரிமைகளை இழக்கச்செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களை எச்சரித்து ஒரு முக்கியமான அறிக்கையை உலக சோசலிச வலைத் தளத்திற்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் அனுப்பியுள்ளார். இவ்வறிக்கையை, உலக சோசலிச வலைத் தளத்தின் “இணைய தணிக்கைக்கு எதிராக எதிர்ப்பை ஒருங்கிணைக்கும்” இணையவழி கருத்தரங்கின் போது வாசிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.


ஜூலியான் அசாஞ்

உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர் டேவிட் நோர்த் மற்றும் பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் ஆகியோர் இடையேயான ஒரு கலந்துரையாடல் காணொளி நேரடி ஒளிபரப்பாக இடம்பெறவுள்ளது. இது ஜனவரி 16, செவ்வாயன்று மாலை 7 மணி (EST) க்கு, இந்திய நேரம் 05:30 IST புதன் அதிகாலை wsws.org/endcensorship.என்ற இணைய முகவரியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

அசாஞ், லண்டன் ஈக்வடோரியன் தூதரகத்தில் சிக்கிக் கொண்டு ஐந்தரை வருடங்களை கழித்து வந்த நிலையில், அங்கிருந்து அவர் வெளியேறும் பட்சத்தில், அவர் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கான வாய்ப்பை எதிர்கொள்கிறார். ஈக்வடோர் அரசாங்கத்தின் மூலமாக சமீபத்தில்தான் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்துவதில் விக்கிலீக்ஸ் கொண்டிருக்கும் பங்கு குறித்து அசாஞ் துன்புறுத்தப்படுகிறார்.

நோர்த் மற்றும் ஹெட்ஜஸ் இடையேயான அந்த கலந்துரையாடல், இணையம் தணிக்கை செய்யப்படுவதையும் மற்றும் இணைய நடுநிலைமையை அகற்றவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் அரசியல் உள்ளடக்கம் குறித்து வெளிப்படுத்துவதாகவும், சுதந்திரமான பேச்சுரிமையை நசுக்குவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் சாக்குப்போக்குகளை ஆராய்வதாகவும் (அதாவது “போலிச் செய்திகள்”), மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியல் மூலோபாயங்கள் குறித்ததாகவும் இருக்கும்.

ஹெட்ஜஸ் மற்றும் நோர்த் இருவரிடமும் இணையவழி பார்வையாளர்கள் கேள்விகள் கேட்க முடியும் என்பதோடு, அவை wsws.org/endcensorship மற்றும் facebook.com/wsws.org மூலமாக அனுப்பிவைக்கவும்.