Print Version|Feedback
German government raids and shuts down left-wing Indymedia site
ஜேர்மன் அரசாங்கம் இடதுசாரி Indymedia இணைய தளத்தை திடீர்சோதனை செய்து மூடுகின்றது
By Johannes Stern
26 August 2017
ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டி மைஸியர், இடது-சாரி வலைத் தளமான linksunten.indymedia.org ஐ மூடுவதற்கு வெள்ளிக்கிழமை காலை உத்திரவிட்டார். உலகளாவிய ஊடக தளமான Indymedia வின் ஜேர்மன் துணை நிறுவனங்கள் இரண்டில் ஒன்றான இந்த இணைய தளம் இணையத்திலிருந்து விரைவாக அகற்றப்பட்டு, பின்னர் அடுத்த அறிவிப்பு வரும் வரை அணுக முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது.
அதிகாலையில், பாடன்-வூட்டெம்பேர்க் மாநில பொலிஸூம், மத்திய பொலிஸூம், ஃப்ரைபேர்க் நகரில் உள்ள தளத்தின் குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகிகளின் வீடுகளை திடீர்சோதனை செய்ததோடு, கணனிகள் மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், linksunten.indymedia.org இணைய தளத்திற்கு குற்றம்சாட்டப்பட்ட “இடதுசாரி தீவிரவாதம்” பின்னணியாக இருப்பதை நிரூபிக்கும் வகையில், பாடன்வூட்டெம்பேர்க் மாநில பொலிஸ் அலுவலகம் கத்திகள், பிரம்பு, குழாய் மற்றும் ஸ்லிங்ஷாட் தடி போன்றவற்றை ஆதாரங்களாக முன்வைத்தது.
செய்தி அறிக்கை ஒன்றில், டி மைஸியர், “இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து பொலிஸ் படையினருக்கும்” நன்றி தெரிவித்தார், மேலும் “உள்நாட்டு உளவுமுகமைக்கு மத்திய பொலிஸ் அலுவலகம் மூலமாக தீவிரமான தயாரிப்பு வேலை” மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால், “இன்றைய நடவடிக்கைகள் சாத்தியமற்றவையாக இருந்திருக்கும்” என்றும் கூறினார்.
டி மைஸியர், அந்த வலைத் தளம் “அரசியலமைப்பு ஒழுங்கிற்கு” எதிராக இயக்கப்பட்டதாகவும், மேலும் “அதன் நோக்கமும், நடவடிக்கையும் குற்றவியல் சட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடியதாக இருந்ததாகவும் வலியுறுத்துவதன் மூலம் தடையை முறையானதென நியாயப்படுத்தினார். “வித்தியாசமாக சிந்திப்பவர்களுக்கும், நாட்டின் பிரதிநிதிகளுக்கும் எதிராக வெறுப்பை விதைக்க” இந்த தளம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாக, “அத்தகைய கிளர்ச்சிகள் கொண்டிருக்கும் விளைவுகளை ஹம்பேர்கில் G20 மாநாட்டின் போது நிகழ்ந்த சம்பவங்கள் காண்பித்தன.” என்றார்.
linksunten.indymedia மீதான தடை ஒரு வலதுசாரி அரசியல் பிரச்சாரத்தின் பாகமாகவே உள்ளது என்பதை தெளிவுபடுத்துவதற்கு ஹம்பேர்க் பற்றிய குறிப்பு போதுமானதாகவுள்ளது. பல வாரங்களாக, “ஹம்பேர்க் நிகழ்வுகள்” என அழைக்கப்படுபவை அரசியல்வாதிகளால் பரந்தளவில் மிகைப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் ஊடகங்களில் “இடதுசாரி தீவிரவாதம்” மூலமாக வன்முறை விசித்திரத்தை பரப்புவதற்கு, அரசு எந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதோடு, அடிப்படை ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டாட்சி தேர்தலுக்கு நான்கு வாரங்கள் முன்னதாக, அரசாங்கம் இடதுசாரி, பாசிச எதிர்ப்பு மற்றும் இராணுவவாத எதிர்ப்பு வலைத் தளங்களை பகிரங்கமாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்வதற்கு முனைந்து வருகின்றது.
Indymedia வின் இரண்டாவது ஜேர்மன் துணை நிறுவனமான de.indymedia.org இந்த தடையினால் பாதிக்கப்படவில்லை என்பதோடு, “இடதுசாரி இயக்கம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் மீதான தீவிர தாக்குதல்” தான் அது என்பதாக linksunten.indymedia.org மூடுதலை விவரித்தது. இந்த தளம், “எவர் மூலமாகவும் கட்டுரை வெளியிடப்படக்கூடியதாகவும் மற்றும் குறைந்தபட்சம் நடுத்தரமானதாகவும் இருக்கின்ற வகையில், ஜேர்மனியில் இடதுசாரிகளுக்கான மிகப்பரந்தளவிலான பரப்பப்படும் ஒரு தளமாக” காணப்படுகின்றது.
Indymedia வின் வேர்கள், 1999 இல் சியாட்டிலில் உலக வர்த்தக அமைப்பிற்கு (World Trade Organisation) எதிரான ஆர்ப்பாட்டங்களில் இருந்து வெளிப்பட்ட “பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கத்தை” சார்ந்து இருந்தன என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. “உச்சிமாநாட்டு எதிர்ப்புக்கள் மீதான சாத்தியமான சுயாதீனமான அறிக்கையிடலை உருவாக்குவதற்கு” என்று இந்த ஊடக வழிமேடை ஸ்தாபிக்கப்பட்டது. அப்போதிருந்து, “இடதுசாரி எதிர்ப்புக்கு ஒரு வழிமேடையை வழங்கும் விதமாக உலகம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான Indymedia கள் நிறுவப்பட்டது.”
தற்போது தடை செய்யப்பட்டுள்ள linksunten.indymedia.org தளம், “ஆரம்பத்தில் குறிப்பாக தெற்கு ஜேர்மனிக்கான ஒரு வழிமேடையாக நிறுவப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், இந்த தளம் “அதன் இலக்கை நோக்கி விஸ்தரிக்கப்பட்டுள்ள போதிலும்,” “ஆர்ப்பாட்டங்கள் பற்றிய அறிக்கைகள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய கருத்துக்கள், அமைப்புகளின் அறிக்கைகள், அத்துடன் ஆயுதக்குழுக்களின் தாக்குதல்களுக்கு பொறுப்பளிக்கும் அறிக்கைகள்” போன்றவற்றை பிரசுரிக்கின்றன.
நீண்ட காலத்திற்கு அணுக முடியாத linksunten.indymedia.org தளம் குறித்த வெளியீடுகளின் முக்கிய மையம் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமாக இருந்தது. பல கட்டுரைகள், ஜேர்மனி (AfD) மற்றும் பிற வலதுசாரி தீவிரவாத ஆர்ப்பாட்டங்களுக்கான மாற்றுக்கு எதிரான எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, “ஜேர்மனியின் மத்திய அகதி கொள்கை” ஐ விமர்சித்தது, அல்லது தேசிய சோசலிச இரகசிய (National Socialist Underground) பயங்கரவாத அமைப்பு குறித்து பின்னணி ஆய்வு நடத்தியது. மற்ற பாடங்களிலும் போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டமும் அடங்கும்.
linksunten.indymedia.org தளம் குறித்து “ஆயுதக்குழுக்களின் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற அறிக்கைகள்” தோன்றியமையானது டி மைஸியர் இற்கு ஒப்பீட்டளவில் “எளிதான” இலக்காக அமைந்தது என்பது உண்மையே. “வலைத் தளத்தில், அநாமதேய பாதுகாப்பின் கீழ்… தேசம் முழுவதிலும் செய்த குற்றங்களுக்கு பொறுப்பான அறிக்கைகள்” பிரசுரமாகி இருந்தன என்று உள்துறை அமைச்சகம் ஒரு செய்தி வெளியீட்டில் அறிவித்தது.
இருப்பினும், வன்முறை அராஜகவாதிகள் மற்றும் தன்னாட்சி குழுக்களிடமிருந்து அல்லது வலதுசாரி அல்லது அரசு ஆதரவிலான ஆத்திரமூட்டலாளர்களிடம் இருந்தும் உண்மையில் எத்தனை அறிக்கைகள் வந்தன என்பது ஒட்டுமொத்தமாக இன்னமும் தெளிவாக தெரியவில்லை. அக்டோபர் 3ல் (அக்டோபர் 3ம் தேதி நிகழ்ந்த ஜேர்மனிய மறு ஒருங்கிணைப்பை நினைவுகூரும் நாள்) டிரெஸ்டன் ஆண்டிஃபா (Dresden Antifa) மற்றும் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு கொண்டாட்ட கூட்டணி (Anti-Unification Celebration Alliance) என்ற பெயரில் டிரெஸ்டனில் உள்ள Fatih மசூதி மற்றும் சர்வதேச மாநாட்டு மையம் (International Conference Centre) மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பான ஒரு அறிக்கை தளத்தில் தோன்றியது ஒரு போலி செய்தியாக மாறியது. சாக்சோனி மாநில பொலிஸ் மற்றும் உளவுத்துறையுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள வலதுசாரி Pegida இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தார் என்பது பின்னர் வெளிப்பட்டது.
linksunten.indymedia.org குறித்த அரசு தணிக்கை ஒரு ஆபத்தான வளர்ச்சி ஆகும், மேலும் இடதுசாரி மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக இன்னும் பரந்த அளவிலான நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக அமைந்திருக்கக்கூடும். சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதம் தொடர்பாக பெருகிவரும் எதிர்ப்பு நிலைமைகளின் கீழ், யுத்தத்திற்கும் இராணுவவாதத்திற்கும் எதிராக எழுப்பப்படும் எந்தவொரு முக்கியமான குரலும் அமைதியாக இருக்க வேண்டும். ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆரம்பகட்ட பதில்கள் இது பற்றி எந்தவொரு சந்தேகத்தையும் விட்டுச்செல்லவில்லை.
ஜூலையில் வலைத் தள அமலாக்க சட்டம் (Network Enforcement Law) என்றழைக்கப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்தவரும், மேலும் ஹம்பேர்க் நிகழ்வுகளை அடுத்து இடதுசாரி தீவிரவாதிகள் பற்றிய ஒரு ஐரோப்பிய அளவிலான தரவுதளத்தை உருவாக்க அழைப்பு விடுத்தவருமான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) சார்ந்த நீதித்துறை அமைச்சரான ஹெய்கோ மாஸ், “வன்முறையை தூண்டுவதற்காக இடதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிரான முக்கிய தாக்குதலுக்கு தயாரிப்பு செய்யப்பட்டது. தீவிரவாதம், எந்த பக்கத்திலிருந்து உருவானது என்பதை பொருட்படுத்தாமல், நம்முடனான எந்தவொரு இடமும் அதற்கு இல்லை – இணையதளத்தில் கூட இல்லை” என்று ட்விட்டரில் குறிப்பிட்டார்.
சிவப்பு-சிவப்பு-பச்சை பேர்லின் மாநில அரசாங்கத்தின் சமூக ஜனநாயக (SDP) உள்துறை மந்திரியான ஆண்ட்ரியாஸ் கைசெலும் இந்த தடையை வெளிப்படையாக வரவேற்றதோடு, சரியான திசையிலான அடுத்தகட்ட முன்னேற்றம் பற்றி பேசினார். மேலும் அவர், “இடதுசாரி தீவிரவாதிகள் இந்த தளத்தை தீவிர முயற்சியுடன் கூடிய தாக்குதலுக்கு திட்டமிடவும், அதன் பின்னர் அவை பற்றி பெருமையடித்துக் கொள்ளவும் பயன்படுத்தினர். பேர்லினில் இது மட்டும் தான் மிக நன்றாக இருப்பதை நாம் அறிவோம்” என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
துரிங்கியாவில் உள்ள AfD பாராளுமன்றக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கை ஆளும் வர்க்கம் எந்த திசையில் நகர்கின்றது என்பதை தெளிவுபடுத்தியது. ஒட்டுமொத்த ஆண்டிஃபா இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்துவதற்கான பாதையில் முதல் கட்டமாக மட்டும் தான் இந்த தடை இருந்ததாக இது குறிப்பிட்டது. “தடையுத்தரவு ஒரு தேர்தல் தந்திரோபாயம் அல்ல என்பதை மத்திய அரசாங்கம் இப்போது நிரூபிக்க வேண்டும். அவர்கள் நம்பத்தகுந்தவர்களாக இருக்க விரும்பினால், ஆண்டிஃபா வுக்கு எதிராக அவர்கள் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று AfD உள்துறை கொள்கை பேச்சாளர் ஜோர்க் ஹென்கே கூறினார்.