ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India, China pull back from clash over Himalayan ridge

ஹிமாலய மலைமுகட்டுப்பகுதி மீதான மோதலில் இருந்து இந்தியாவும் சீனாவும் பின்வாங்கியுள்ளன

By Keith Jones
29 August 2017

இந்தியாவும் சீனாவும் டோக்லாம் அல்லது டோங்லாங் பீடபூமி மீதான கட்டுப்பாடு குறித்து பத்து வாரங்கள் முன்பு தொடங்கிய அவற்றின் சர்ச்சையை நேற்று தணிப்பதற்கு முனைந்தன – இந்த சச்சரவு, 1962 இல் நடந்த ஒரு மாத காலம் நீடித்த எல்லைப் போருக்குப் பின்னர் ஒரு போதும் நிகழாததொரு இராணுவ மோதலுக்கு நெருக்கமான வகையில் அணுஆயுதம் தாங்கிய போட்டியாளர்களையும், உலகின் பெரும் மக்கள்தொகை மிகுந்த இரண்டு நாடுகளையும் இட்டுச்சென்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகளாக, “டோக்லாமில் எல்லையிலுள்ள இராணுவத்தினர் துரிதமாக அங்கிருந்து விலக்குவதற்கு…. ஒப்புக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அது நடைபெற்று வருகின்றது” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று மதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. சுமார் தொன்னூறு நிமிடங்களுக்கு பின்னர், “அத்துமீறி நுழைந்திருந்த இந்திய இராணுவத்தினர் அனைவரும் இந்திய எல்லைப் பகுதிக்குள் திரும்ப பெறப்பட்டனர்” என்பதை பெய்ஜிங் உறுதிப்படுத்தியுள்ளதாக ஒரு சீன அரசாங்க செய்தியாளர் தெரிவித்தார். “களத்தில் நிலவும் சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப,” சீனா அதன் படைகளை நிலைநிறுத்துவதில் “அவசியமான சீரமைவுகளை ஏற்படுத்தும்,” என்று வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங்கும் சேர்த்துக் கூறினார்.

இரண்டரை மாதங்களுக்கு முன்னர், இந்தியா, சீனா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லைகளை இணைக்கும் மும்முனை சந்திப்பில் உள்ள ஒரு தொலைதூர ஹிமாலய மலைமுகட்டுப் பகுதியான டோக்லாம் பீடபூமியில்,  நூற்றுக்கணக்கான இந்திய மற்றும் சீன துருப்புக்கள் நூறு மீட்டருக்கு சற்று அதிக தொலைதூர இடைவெளியில் “நேருக்கு நேர்” எதிர்கொண்டனர்.

மேலும் அச்சுறுத்தும் வகையில், புது தில்லியும், பெய்ஜிங்கும் போர்க்குணமிக்க அச்சுறுத்தல்களையும், வசைசொற்களையும் பரிமாறிக்கொண்டதோடு, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியின் கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 3500 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளாக தங்களது ஆயிரக்கணக்கான துருப்புக்களை கொண்டு குவித்தனர், மேலும் வேறுவழியில் ஆயுத மோதலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவர்களது தயார் நிலையையும் எடுத்துக்காட்டினர்.

இந்தியா குறிப்பிடும், “டோக்லாம் சர்ச்சையில் இருந்து விடுபடும் உடன்பாடு” என்பது, செப்டம்பர் 3-5 தேதிகளில் ஜியாமனில் நடைபெறவுள்ள BRICS அரசாங்க தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளபடி சீனாவுக்கு விஜயம் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஏற்பட்டது.

இந்த “உடன்பாடு” பற்றிய செய்தியை எந்த ஒரு அரசாங்கமும் வெளியிடவில்லை, அப்படி எதுவும் எதிர்பார்க்கப்படவும் இல்லை.

பதட்டமான இராணுவ நிலைப்பாட்டிற்கு இட்டுச்சென்ற சூழலை சீர்செய்யும் வகையில் எந்தவொரு அடிப்படையான பிரச்சினைகளும் தீர்க்கப்படாத நிலையை அது அடிக்கோடிட்டுக் காட்டும்போது, இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் மற்றவர் தான் இறுதியில் பின்வாங்கியதாக கூறிக்கொள்கின்றனர்.

டோக்லாமில் இருந்து இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு அருகாமை பகுதிகள் வரையிலான இடங்களுக்கு அனைத்து இந்திய துருப்புக்களையும் திரும்ப பெறுமாறு பெய்ஜிங் வலியுறுத்தி வருகின்றது. இக்கட்டானநிலை முழுவதிலும், இந்தியப் படைகள் நிபந்தனையின்றி திரும்பப் பெறப்பட வேண்டுமென்று பெய்ஜிங் கோரியது. இந்த தொலைதூர மலைமுகட்டுப் பகுதி மீது புது தில்லி எந்தவொரு உரிமையையும் கொண்டிராத நிலையில், இந்தியாவின் தலையீடு முன் சம்பவிக்காத ஆத்திரமூட்டலாக இருந்ததென்று அது வலியுறுத்தியது, ஆனால் உண்மையிலே சிறிய ஹிமாலய அரசான பூட்டானின் பெயரில் தலையீடு செய்தது, அதனை பல தசாப்தங்களாக புது தில்லி ஒரு ஏவலரசாகவே நடத்தியது.

நேற்றைய பத்திரிகையாளர் மாநாட்டில், ஹூவா, சீன எல்லைப் படைகளின் ரோந்துகள் உட்பட, டோக்லாம் மீதான அதன் “பிராந்திய இறையாண்மையை” நிலைநாட்டுவதை சீனா தொடரும் என்று தெரிவித்தார்.

புது தில்லி அதன் பங்கிற்கு, பதட்ட தணிப்புக் குறித்த வரிசைமுறையான தன்மையை வலியுறுத்தியது, அதேசமயம் சீனா சர்ச்சைக்குரிய பகுதியில், தனது படைகளை  குறைக்கும் என்பதை சுட்டிக் காட்டியது.

ஜூன் 18 அன்று டோக்லாமை நோக்கி இந்தியா துருப்புக்களை அனுப்ப தூண்டுதலாக இருந்த விவகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை: தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மலைமுகட்டுப் பகுதியில் ஒரு சாலையை விரிவுபடுத்தும் சீனாவின்  திட்டம் ஆனால் அதன் மீது பூட்டானும் உரிமை கோருகின்றது. பூட்டான்-சீனா எல்லையின் இறுதி வரையிறுப்பு நிலுவையில் உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அனைத்து பகுதிகளிலும் இதுவரையிலும் உள்ள நிலைமையை அப்படியே பேணுவதற்கான பூட்டானுடனான ஒரு ஒப்பந்தத்தை பெய்ஜிங்கின் சாலை கட்டுமானம் மீறுவதாக இந்தியா குற்றம்சாட்டியது.

பல வாரங்களாக, இந்த டோக்லாம் மோதல் ஒரு ஆயுத மோதலாக வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறு பற்றி இந்திய மற்றும் சீன செய்தி ஊடகங்கள் முழு விவாதத்தில் மூழ்கியிருந்தனர்.

பல்வேறு சீன ஆய்வாளர்கள், அந்த நாட்டிற்கு சொந்தமான செய்தி ஊடகத்தில் மேற்கோளிட்டு, அத்தகையதொரு மோதலை ஒரு குறுகிய எல்லைப் போரினால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இந்திய வர்ணனையாளர்கள் அடிக்கடி அக்கருத்தில் இருந்து வேறுபட்டனர்.

இந்த உறைநிலை தொடர்ந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுமே இந்தியாவிற்கான தங்களது ஆதரவை நிரூபிக்கும் வகையில் தலையீடு செய்தன. ஏனென்றால், சீனாவின் “எழுச்சி” ஐ தடுப்பதில் ஒரு மிக முக்கிய கூட்டாளியாக இந்தியாவை அவர்கள் கருதுகின்றனர்.

உண்மையில், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவின் ஒருங்கிணைப்பு தான் டோக்லாம் மோதல் குறித்த இந்திய-சீன உறவுகளில் ஏற்படும் சரிவிற்கான வெளிப்பாடு மற்றும் முடுக்கம் இரண்டிற்கான முக்கிய காரணியாக இருக்கின்றது.

மோடியின் மூன்றாண்டு கால அரசாங்கத்தின் கீழ், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலில் ஒரு உண்மையான முன்னணி நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. மோடி அரசாங்கம், தென் சீனக் கடல் மற்றும் வட கொரிய விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நிலைப்பாடுகளையே பின்பற்றியுள்ளது, அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் வழமையான பயன்பாட்டிற்கு இந்தியாவின் விமானத் தளங்களையும், துறைமுகங்களையும் திறந்து வைத்துள்ளது, மேலும் வாஷிங்டனின் பிரதான ஆசிய-பசிபிக் கூட்டாளி நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனும் மூலோபாய ஒத்துழைப்பை வியத்தகு முறையில் விரிவுபடுத்தியுள்ளது.

இதற்கு விடையிறுப்பாக, இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுடன் சீனா அதன் தசாப்தங்களாக நீடித்த உறவை மேலும் ஆழப்படுத்தியது. யூரேசிய இணைப்பு மற்றும் பாதை உள்கட்டமைப்பு கட்டமைவு திட்டத்தின் ஒரு மையமாக அதனை உருவாக்குவது உள்ளிட்ட பாகிஸ்தானுக்கான சீனாவின் ஆதரவு புது தில்லி உடனான பதட்டங்களை மேலும் மோசமடைய செய்தன.

இந்த மாத தொடக்கத்தில், டோக்லாம் சர்ச்சை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஜப்பான் வெளிப்படையாக ஆதரித்ததோடு, சீனாவுடனான தனது சொந்த பிராந்திய மோதல்களுடன் ஒப்பிட்டது. ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அடுத்த மாதம் புது தில்லிக்கு விஜயம் செய்யும் போது, இந்தியா உடனான அதிகரித்த இராணுவ-பாதுகாப்பு உறவுகள் தான் முதன்மை வாய்ந்த திட்டநிரலாக இருக்கும் என்பதை டோக்யோ தெரியப்படுத்தியது.

பொதுவாக ட்ரம்ப் நிர்வாகம் டோக்லாம் சர்ச்சையில் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டை பேணியது, ஆனால் இந்திய-அமெரிக்க “பூகோள மூலோபாய பங்காண்மை” இன் பலத்தை உயர்த்திக்காட்டுவதை இலக்காக கொண்டு தான் சமீபத்திய வாரங்களில் முழுமையான தொடர் நடவடிக்கைகளை இது மேற்கொண்டது. இந்திய சுதந்திர தினம் குறித்த தொலைபேசி அழைப்பில், ட்ரம்பும் மோடியும் தங்களது நாடுகளின் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் சம்பந்தப்பட்ட ஒரு புதிய மூலோபாய பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டனர். கடந்த வாரம் அவரது உரையில், ஆப்கானிய போரை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதை குறிப்பிட்டுக்காட்டி, ஆப்கானிஸ்தானில் பெரும் பாத்திரத்தை வகிப்பதற்கான இந்தியாவின் இலட்சியங்களை ட்ரம்ப் ஆதரித்த அதேவேளையில் பாகிஸ்தானை கவனத்தில் வைக்கும் போது, அமெரிக்காவின் உத்திரவுகளை அது நிறைவேற்றாவிட்டால், ஆயுத விற்பனை மற்றும் இராணுவ உதவியில் ஏற்படுத்தும் வெட்டுக்கள் மூலமாக அதனை தண்டிக்கும் என்று தெரிவித்தார்.

அனைத்திற்கும் மேலாக, சீனாவின் பொருளாதாரத்திற்கு ஊட்டமளிக்கும் எண்ணெயில் 80 சதவிகிதத்திற்கான கடத்தியாகவும், அதேபோல ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிற்குமாக பெருமளவு தனது ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் சேவை செய்யும் கடல் பாதைகளைக் கொண்ட இந்திய பெருங்கடலில் புது தில்லி உடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு அமெரிக்கா ஆர்வமாகவுள்ளது.

ஆகஸ்ட் மத்தியில், இந்திய இராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு உதவுவதற்கு அமெரிக்காவின் ஆர்வத்தைத் தூண்டும் குறிப்புகளில், அமெரிக்க பசிபிக் கடற்படை தலைவரான அட்மிரல் ஹாரி ஹாரிஸ், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் இரண்டிலும் நடத்தப்படும் கூட்டு கடற்படை ரோந்துகளில் பென்டகனுடன் இணைய இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

India Today பத்திரிகையின் படி, அந்த நடவடிக்கைக்கு இந்தியா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், டோக்லாம் போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் இந்திய பெருங்கடலில் “அதன் செல்வாக்கை பரப்பவும் மேலும் அதன் பிடியை வலுப்படுத்தவும்” அது திட்டங்களை ஆரம்பித்து விட்டது. செயலற்றிருக்கும் இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கிற்கு புத்துயிரூட்டுவது, வங்காள விரிகுடாவில் ஒரு பெரிய கடற்படை பயிற்சியை தொடங்குவதுடன் “நட்பு” நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு தளமாக பயன்படுத்துவது, மேலும் பிற தெற்காசிய மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு கடற்படை பயிற்சி வழங்குவதை விரிவுபடுத்துவது போன்றவை இதில் அடங்கும்.

மிக முக்கியமாக, இந்திய கடற்படை இனிமேல், மிக முக்கியமான தகைமையுள்ள இந்திய/பசிபிக் பெருங்கடலின் வெடிப்புப் புள்ளியாகவும், போர் மற்றும் போர் நெருக்கடியின் போது சீனா மீது ஒரு பொருளாதார முற்றுகையை திணிக்க அமெரிக்க திட்டங்களின் நீண்டகால முக்கிய குறுகிய கப்பல்வழி மையமாகவும் இருக்கும் மலாக்கா ஜலசந்தியின் மேற்கு நுழைவாயிலில் இந்திய போர்க்கப்பல்களை நிரந்தரமாக நிலைநிறுத்தும்.

இந்தியாவும் சீனாவும் டோக்லாம் மீதான போரின் விளிம்பில் இருந்து பின்வாங்குவதாக தோன்றினாலும், சமீபத்திய நெருக்கடி முடிந்தளவிற்கு பெரும் வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய மோதலின் சுழற்சிக்குள் தெற்காசியா மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியம் தூக்கி வீசப்பட்டுள்ளதை வெளிச்சத்தில் காட்டுவதற்கு மட்டுமே சேவை செய்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில் மற்றும் எந்தவித சந்தேகமுமின்றி டோக்லாம் நெருக்கடியை தணிப்பதற்கான ஒரு உடன்படிக்கை அண்மையில் நிகழப்போவதாக முன்னதாகவே தெரிந்த நிலையில், இந்திய இராணுவத்தின் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு பொது விரிவுரையில், சீனா உடனான இன்னும் கூடுதலான இராணுவ நெருக்கடி இருக்கும் என்றும் எச்சரித்தார். “இந்த இக்கட்டான நிலை தீர்க்கப்பட்டு விட்டது என்று நாம் கூறலாம்” என்றும், “அது மீண்டும் நிகழ முடியாதென நமது துருப்புக்கள் கருதக்கூடாது… எனவே உங்களது பாதுகாப்பை கைவிடாதீர்கள் என்பது தான் துருப்புக்களுக்கான எனது செய்தியாகும்” என்றும் ராவத் கூறினார்.