ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mounting tensions between India and its nuclear-armed neighbors, China and Pakistan

இந்தியாவிற்கும், அணுஆயுதங்களை கொண்ட அதன் அண்டை நாடுகளான சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரிக்கின்றன

By Wasantha Rupasinghe and Keith Jones
14 July 2017

சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா தன்னை மேலும் முழுமையாக ஒருங்கிணைத்து கொண்டுள்ள நிலையில், புது தில்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளும், மற்றும் இந்தியாவுக்கும், அதன் மற்றைய அணுஆயுதம் தாங்கிய அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளும் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன.

கடந்த மாதம், இமையத்தின் உச்சியில், சீனா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் டோக்ளாம் அல்லது டோங்க்லாங் பீடபூமி பகுதியில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் ஒருவருக்கொருவர் எதிராக அணிவகுத்து நின்றனர்.

1962 இல் இந்தியாவும் சீனாவும் ஒரு மாத காலம் நீடித்த எல்லைப் போரை நடத்தியதில் இருந்து, இந்த மோதல் மிகவும் அபாயகரமானதாக பரவலாக விவரிக்கப்பட்டு வருகின்றது. இந்திய மற்றும் சீன அதிகாரிகள் இருவருமே வரவிருக்கும் இராணுவ மோதலுக்கான மெல்லிய மறைமுகமான அச்சுறுத்தல்களை பலமுறை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தியாவும், பாகிஸ்தானும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (Line of Control-LoC) ஊடாக பீரங்கித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. எதிரிப் படையினரை கொல்வது பற்றி பெருமையாக பேசுகின்ற போதும், கடந்த வாரம், ஏழை கிராமவாசிகளை அழிக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஊடாக கண்மூடித்தனமாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவதாக புது தில்லி மற்றும் இஸ்லாமாபாத் இருவருமே ஒருவரையொருவர் கண்டனம் செய்துள்ளனர்.

மேலும் நிலைமையை எரியூட்டுவதாக, இஸ்லாமிய இந்திய எதிர்ப்பு காஷ்மீர் கிளர்ச்சியாளர்கள் திங்களன்று இரவு நெடுந்தொலைவிலுள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு பேருந்து நிறைந்த இந்து யாத்திரிகர்களை தாக்கியதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதலில் ஏழு பேர் இறந்தனர், 19 பேர் காயமடைந்தனர்.

கடந்த வருடம், நாட்டின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாகாணமான ஜம்மு-காஷ்மீரை கொந்தளிப்பிற்குள்ளாக்கிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மீதான அடக்குமுறையை தீவிரப்படுத்த திங்கட் கிழமை இரவில் நடந்த அராஜகத்தை இந்திய அரசாங்கம் உடனடியாக பயன்படுத்திக்கொண்டது.

தெற்காசியாவின் 1947 ஆம் வருட இரத்தகளரியான வகுப்புவாத பிரிவினை, வெளிப்படையாக முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் ஒரு பிரதான இந்து இந்தியா என்ற பிளவை உருவாக்கியதன் ஆரம்பத்திலிருந்து, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பிற்போக்குத்தனமான மூலோபாய போட்டியின் மையமாக காஷ்மீர் உள்ளது. அடுத்தடுத்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம் காஷ்மீர் மக்களை வெட்கமின்றி தவறாகவும், மோசடியாகவும் கையாண்டது. பிற்போக்குத்தன, இனவாத வழிநடத்துதலில் உள்ள இந்திய அரசை எதிர்ப்பதற்கு இஸ்லாமியவாத அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த கூலிப்படை நலன்களை முன்னெடுக்க முயல்கின்ற நிலையில், இன்று இந்தியா இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்காவிலிருந்து பெற்ற மூலோபாய ஆதரவு மற்றும் புதிய ஆயுதங்களால் வலுவூட்டப்பட்ட இந்தியாவின் பி.ஜே.பி. அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகரித்தளவில் கடுமையான கொள்கையையே பின்பற்றியுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும்பாலும், காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சிக்காக பாகிஸ்தானிய எல்லைப்பகுதியிலிருந்து வழங்கப்படும் அனைத்து தளவாட உதவிகளையும் இஸ்லாமாபாத் வெளிப்படையாக நிறுத்துகின்ற வரையிலும் பாகிஸ்தானுடனான மிக அடிப்படையான உறவுகளை கூட ஆழ்ந்த முடக்கத்தில் வைத்திருக்குமென இது வலியுறுத்தி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்குள் சட்டவிரோத எல்லை தாண்டிய தாக்குதல்களை அதிகரிக்குமாறு இந்திய சிறப்புப் படையினருக்கு கட்டளையிட்டதோடு, இந்தியா பாகிஸ்தானுடனான அதன் உறவுகளில் “மூலோபாய கட்டுப்பாட்டை” நீண்ட காலம் கடைப்பிடிக்காது என்றும் அப்பொழுது பிரகடனப்படுத்தினார்.

தொடர்ச்சியான மாதங்கள் நீடிக்கும் போர் நெருக்கடியின் போது, சீனா பாகிஸ்தானின் ஆதரவுக்குள் வந்தது.

பெய்ஜிங்கும், இஸ்லாமாபாத்தும் ஒரு தசாப்த காலம் நீண்ட “அனைத்து காலத்திற்குமான” இராணுவ மூலோபாய பங்காண்மையை கொண்டுள்ளன. ஆனால், இந்திய அமெரிக்க “பூகோளமய மூலோபாய பங்காண்மை” கடந்த தசாப்தத்தில் வலுவாகிவிட்ட நிலையில், மேலும் குறிப்பாக 2015 இல் இருந்து, சீனாவும், பாகிஸ்தானும் இன்னும் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதன் மூலம் விடையிறுத்தன.

இந்திய இராணுவ மூலோபாயம் நீண்டகாலமாக பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் ஒரே நேரத்தில் போராடுவதற்கான சாத்தியங்களை எதிர்நோக்குகின்ற வேளையில், இந்தியாவின் புதிய இராணுவத் தலைவரான ஜெனரல் பிபின் ராவத், ஒரு “இரு முனை யுத்தத்தை” எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக பெருமையடிப்பதன் மூலம் மீண்டும் ஒரு நேரடி அச்சுறுத்தலாக இது சித்தரிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான அவர்களது நீண்ட சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதி மீதான பதட்டங்கள் புதியதல்ல. இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள், தற்போதைய இந்திய மற்றும் சீன கட்டுப்பாட்டிற்குரிய பிராந்தியத்தை வரையறுக்கும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஊடான சீன ஊடுருவல்களை சாட்டியுரைத்து ஆத்திரமூட்டும் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுகின்றன.

தற்போதைய சர்ச்சையில் உள்ள வித்தியாசமாக உள்ளது என்னவெனில்  பெய்ஜிங் எடுத்துள்ள ஆக்கிரோஷமான நிலைப்பாடாகும். இது குறித்து சீன அரசு நடத்தும் பத்திரிகைகள் கவனம் செலுத்துகின்றன. மேலும், டோக்லாம் பீடபூமி மீதான கட்டுப்பாடு பற்றிய புது தில்லியின் வலியுறுத்தல் சீனாவின் முக்கிய மூலோபாய நலன்களை பாதிப்பதாக உள்ளது.

இரு நாடுகளும் கடந்த காலத்தில் தங்கள் எல்லை வேறுபாடுகளை நிர்வகித்தது போல, தற்போதைய நிலைப்பாடும் மாதங்கள், பல ஆண்டுகள், நீடித்தாலும் கூட “கையாளப்படக்” கூடியதே என்று இந்திய வெளியுறவு செயலர் எஸ். ஜெய்சங்கர் விடுத்த கோரிக்கையை, புதனன்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷூவாங் நிராகரித்தார்.

எல்லைப் பிரச்சனையை ஒரு “வேறுபாடு” என்று கூறிய ஜெய்சங்கரின் விளக்கத்துடன் ஜெங் இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டதுடன், இது ஒரு தீர்க்கமான “சர்ச்சை” என்று கூறுகிறார். மேலும், இது முந்தைய எல்லைப்புற மோதல்களை ஒத்ததாக பெய்ஜிங் இதைக் கருதவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். “சீனா,” “சீன பிராந்தியத்திற்குள் இந்திய எல்லை துருப்புகளின் சட்டவிரோத அத்துமீறல் சீன இந்திய எல்லையாக வரையறுக்கப்பட்ட சிக்கிம் பிரிவில் இந்த முறை நிகழ்ந்தமையானது, சீன இந்திய எல்லையின் வரையறுக்கப்படாத பிரிவுகளில் இரு பக்கங்களுக்கு இடையேயான முந்தைய முரண்பாடுகளிலிருந்து இயல்பாகவே முற்றிலும் வேறுபட்டது என்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியுள்ளதாக” அவர் கூறினார்.

எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் முன்னிபந்தனையாக இந்தியா ஒருதலைப்பட்சமாக டோக்லாம் பீடபூமியில் இருந்து தனது துருப்புக்களை மீளப்பெறவேண்டும் என்ற பெய்ஜிங்கின் கோரிக்கையை சீன வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்த முனைந்தார்.

இந்தியா, எனினும், பிடிவாதமாக உள்ளது; இதுவும், சீனாவுடன் இராஜதந்திர உறவு எதையும் கொண்டிராத சிறிய இராஜ்ஜியமான பூட்டானும், டோக்லாமில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க பெய்ஜிங்கை அனுமதிக்காது. அவ்வாறு செய்ய, சீனாவை ஒரு போரை எதிர்நோக்க செய்வதன் மூலம் மூலோபாயமான சிலிகுரி வழித்தடத்தை கைப்பற்றும் என்று இந்தியா கூறுகிறது. டோக்லாம் பீடபூமியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிராந்தியத்தின் ஒரு குறுகிய பகுதியான சிலிகுரி வழித்தடம் இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாகாணங்களை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கிறது.

மிக சமீபகாலம் வரை, விரோதமாக அல்லது அச்சுறுத்தலாக கருதப்பட்ட இந்திய நடவடிக்கைகளுக்கு, பெய்ஜிங் பொதுவாக “மறு கன்னத்தை காட்டியது”. ஏனெனில், ஒரு முக்கிய அமெரிக்க மூலோபாய நோக்கம் அதன் சீன எதிர்ப்பு தாக்குதலுக்கு இந்தியாவைக் கட்டுப்படுத்துவதாகும், என்பதோடு இந்தியா மீதான ஆக்கிரோஷமான விடையிறுப்பு புது தில்லியை வாஷிங்டனின் ஆதரவை நாடி செல்ல வழிவகுக்கும் என்ற பயத்தினாலும் இது வருத்தத்துடன் விழிப்புடன் இருந்தது.

எனினும், இராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவை அச்சுறுத்துவது உட்பட, இந்தியாவிற்கு தீவிரமாக அழுத்தம் கொடுக்க தற்போது சீனா முற்றிலும் தயாராக உள்ளது.

பெய்ஜிங் அதன் முந்தைய கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்பதை தெளிவாக முடிவு செய்தது. மோடியின் கீழ், சீனாவின் எழுச்சியைத் தடுக்கவும், ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான எந்தவொரு சவாலையும் நிராகரிக்க முனையும் அமெரிக்க உந்துதலில் ஒரு உண்மையான முன்னணி நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் வழமையான பயன்பாட்டிற்கு இந்தியா தனது இராணுவ தளங்களையும், துறைமுகங்களையும் திறந்துவைத்துள்ளது; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான இராணுவ மூலோபாய நட்பு நாடுகளான ஆசியா-பசிபிக், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ மூலோபாய உறவுகளை உருவாக்கியுள்ளது; மேலும், தென் சீனக் கடல் பிரச்சனையில் வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை வழமையாக பின்பற்றிவருகிறது.   

மேலும், பல முனைகளில் இந்தியா சீனாவிற்கு பகிரங்கமாக சவால் விடுக்கிறது. பெய்ஜிங் அதிருப்தியுறும் அளவிற்கு, இந்தியாவில் எந்தவொரு பகுதியிலிருந்தும், சீனாவின் எந்தவொரு பெரும் மக்கள் நெருக்கம் மிக்க மையத்தின் மீதும் பல்வேறு அணுஆயுதங்களை பொழிய செய்யும் திறன்வாய்ந்ததான Agni V என்ற பெருந்தொலைவு பாயும் ஏவுகணை சோதனை ஒன்றை சமீபத்தில் இது நடத்தியது. திபெத்திய நாடுகடந்த அரசாங்கத்திற்கு புது தில்லி தனது ஆதரவை தீவிரப்படுத்தியுள்ளதுடன், தெற்கு திபெத் என்று பெய்ஜிங் அழைக்கின்ற மற்றும் நியாயமாக சீனாவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்ற ஒரு வடகிழக்கு இந்திய மாகாணமான அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவின் விஜயத்திற்கு சமீபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

பல்வேறு இந்திய பெருங்கடல் துறைமுக கட்டமைவுகளை சீனாவின் கடற்படை தளங்களாக மாற்றுவதற்கு பெய்ஜிங் திட்டமிட்டு, ஏராளமான சீன நீர்மூழ்கிக் கப்பல்களை இந்திய பெருங்கடலில் இறக்கி வருவது குறித்து தெரிவிப்பது உட்பட, சீனாவில் இருந்துவரும் இராணுவ மூலோபாய அச்சுறுத்தலை பற்றி எச்சரிக்கையூட்டும் கட்டுரைகளால் இந்திய பத்திரிகை நிறைந்துள்ளது.

வங்காள விரிகுடாவில் தற்போது நடத்தப்பட்டுவருகின்ற மிகப் பெரிய இந்திய-அமெரிக்க-ஜப்பானிய கூட்டு கடற்படை பயிற்சியையும், இந்தியாவிற்கு கடற்படை கண்காணிப்பு ட்ரோன்களை விற்பதற்கான சமீபத்திய அமெரிக்க ஒப்பந்தத்தையும் சுட்டிக்காட்டி, இவைகள் சீனாவைச் சுற்றிவளைத்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாக சீன செய்தி ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. “அதன் வர்த்தகம் மற்றும் எண்ணெய் இறக்குமதிக்காக இந்திய பெருங்கடலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது,” என்று திங்களன்று சீன தினசரியில் ஒரு தலையங்கம் அறிவித்ததோடு, மேலும் இது, “சீனா ‘பாதுகாப்பு கவலைகளை’ உணரவேண்டும்” என்றும் தெரிவித்தது.

தற்போதைய இந்திய-சீன எல்லை பிரச்சனைகளுக்கு மத்தியில், புது தில்லி வாஷிங்டன் உடனான அதன் இராணுவ பாதுகாப்பு கூட்டணியை இன்னும் விரிவுபடுத்தவும், முறைப்படுத்தவும், இந்திய ஊடகங்கள் மற்றும் பல்வேறு இராணுவ பாதுகாப்பு சிந்தனையாளர்களிடம் இருந்து அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

நேற்று Indian Express பத்திரிகை, தற்போதைய வங்காள விரிகுடா போர் பயிற்சிகளின் மத்தியில் “இந்திய-ஜப்பானிய-அமெரிக்க முத்தொகுப்பு,” “மூலோபாய நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும்” என்று காட்சிப்படுத்த அதற்கு அழைப்பு விடுக்கக்கூடிய, முன்னாள் இந்திய கடற்படைத் தலைவர் அருண் பிரகாஷ் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. “நமது நில எல்லைகள் மற்றும் கடல் இரண்டின் மீதான…… சீனாவின் விரோதப் போக்கினையும், ஆக்கிரோஷமான தோற்றமைவையும்” சுட்டிக்காட்டி, பிரகாஷ், “ஒத்துழைப்பு மற்றும் பங்காண்மை மூலம் ஒரு சாதகமான பிராந்திய சக்தி சமநிலைக்கும்; தேவைப்பட்டால் குறுகிய கால கூட்டணிகளை உருவாக்கவும்” “இந்திய யதார்த்த அரசியல் கோரிக்கைகள்” உறுதியளிப்பதாக தெரிவித்தார்.

இதுவரை, டோக்லாம் பீடபூமி நிலைப்பாடு பற்றி வாஷிங்டன் எதுவும் கூறவில்லை. ஆனால் கடந்த மாதம் மோடி வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தபோது, அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான “மூலோபாய கூட்டிணைவு” குறித்து ட்ரம்ப் வலியுறுத்தியதோடு, இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியை “விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும்” உறுதி பூண்டார்.

சீனாவுடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற முனைவுடனான மோதலில் இந்தியாவை ஒரு பொன்மகுடம் தாங்கிய சிற்றரசராக பயன்படுத்த முனைவதானது, இந்த பிராந்தியத்தையும் மற்றும் உலகையே பேரழிவுகரமான மோதலுக்குள் இட்டுச்செல்கின்ற அச்சுறுத்தும் வகையில் ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவையும் ஒரு பூகோள அரசியல் வெடிமருந்து கிட்டங்கியாக மாற்றியுள்ளதையே சமீபத்திய நிகழ்வுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.