Print Version|Feedback
US show of force intensifies pressure on North Korea and China
அமெரிக்க படைபல நிகழ்ச்சி வடகொரியா மற்றும் சீனா மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்துகிறது
By Mike Head
5 May 2017
இராணுவ வலிமையின் அடுத்தடுத்த ஆத்திரமூட்டும் காட்சிகளை காட்டுவதன் மூலம் ட்ரம்ப் நிர்வாகமும், பென்டகனும் வட கொரியாவை தொடர்ந்து அச்சுறுத்திவருவதுடன், சீனா தனது முன்னாள் அண்டை நட்பு நாடான வட கொரியாவுக்கு எதிராக தலையீடு செய்வதற்காக அதன் தலைமையின் மீதான அழுத்தத்தையும் அதிகரித்துவருகின்றன. இது கொரிய தீபகற்பத்தின் மீதான பதட்டங்களை உச்ச மட்டத்திற்கு இட்டுச்செல்கின்றது.
சமீபத்திய இராணுவ முன்னெடுப்பாக, அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலான USS கார்ல் வின்சன் முன்னதாக ஜப்பானிய கடற்படையுடன் போர்ப் பயிற்சிகளை நடத்தியதற்கு பின்னர், புதன்கிழமையன்று கொரிய கடற்கரையோரத்தில் போர்க் கப்பல்களின் தொகுப்புடன் ஒரு அணிவகுப்பினை நடத்தியது. மேலும், அச்சுறுத்தும் காட்சியாக, Sejong the Great மற்றும் Yang Manchun என்ற இரண்டு தென்கொரிய அழிப்புக்கப்பல்களுடன் இணைந்த ஒரு மிகப்பெரிய போர்க்கப்பல் காட்சி இருந்தது, அத்துடன் அமெரிக்க வழிகாட்டுதலில் மூன்று ஏவுகணை அழிப்புக்கப்பல்களான, USS Wayne E. Meyer, USS Michael Murphy மற்றும் USS Stetham ஆகியவையும், மேலும் Ticonderoga-class வழிகாட்டுதலில் கடல்மூல ஏவுகணை கப்பலான USS Lake Champlain உம் நிலைநிறுத்தப்பட்டிருந்தன.
வட கொரியா மீதான எந்தவொரு தாக்குதலையும் முன்னெடுக்கின்ற வகையில் F-18 ஹார்னெட்ஸ் மற்றும் சூப்பர் ஹார்னெட்ஸ் ஆகிய போர் விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் காட்சி அமெரிக்காவின் ஏழாவது கடற்படைக்காக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது (அமெரிக்க கடற்படை வீடியோ காட்சிகளை பார்க்கவும்). வட கொரியாவின் பழைமையான ஏவுகணைகளும், அணுஆயுத கட்டமைப்பும் ஏற்படுத்தியுள்ள அபாயம் என்று கூறப்படுவதை எதிர்கொள்வதற்கு இராணுவம் உட்பட “அனைத்து தேர்வுகளும்” “மேசை மீது” இன்னும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுவருகின்றதான ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் நடப்பு அறிவிப்புகளின் பின்னணியில், இரண்டு நாட்களில் இது இரண்டாவது தீவிரமான ஆர்ப்பாட்டமாக இருந்தது.
தென் கொரிய கடற்படையுடன் இணைந்து நிற்கும் விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழு 1
தென் கொரிய மற்றும் ஜப்பானிய இராணுவப் படைகளுடன் வெளிப்படையாகவே இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு, திங்களன்று அமெரிக்க விமானப்படை குவாமிலிருந்து கொரிய தீபகற்பத்திற்கு இரண்டு B-1B லான்செர் மூலோபாய குண்டு வீச்சு விமானங்களை அனுப்பியது.
கார்ல் வின்சனின் பயிற்சிகள் படையெடுப்பிற்கான ஒத்திகை போன்று இருப்பதாக வட கொரிய அரசாங்கம் கண்டனம் செய்ததுடன், அந்த விமானந்தாங்கி கப்பலைத் தாக்கி “உலோக துண்டுகளின் ஒரு மாபெரும் குவியலாக” மாற்றப்போவதாகவும், “கடலில் புதைக்கப் போவதாகவும்” அச்சுறுத்தியதன் காரணமாக, அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுவின் பிரசன்னம் இருமடங்கு எரியூட்டுவதாக இருந்தது. வாஷிங்டன் உடன் மட்டுமேயான கிம் ஜோங்-உன் இன் ஆட்சியின் இத்தகைய இராணுவவாத காட்சியளிப்பானது, அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல்களை அதிகரிப்பதற்கு சாக்குப்போக்குகளை வழங்குவதன் மூலம் அமெரிக்காவிற்கு சாதகமாகவே அமையும்.
அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையின் (CIA) இயக்குனரான மைக் பாம்பியோவின் ஒரு முன் அறிவிப்பில்லாத மூன்று நாட்களுக்கான தென் கொரிய விஜயம் இராணுவ மோதலுக்கான அமெரிக்க திட்டமிடல் பற்றிய கூடுதலான ஆதாரமாகவுள்ளது. பாம்பியோ உள்ளூர் அதிகாரிகளுடனும், அத்துடன் அமெரிக்க இராஜதந்திர மற்றும் இராணுவ அதிகாரிகளுடனும் பாதுகாப்பு குறித்த ஆழமான விவாதங்களை நடத்தியதாக அவரது விஜயத்தின் இறுதி நாளான செவ்வாயன்று ஒரு ஊடக வெளியீட்டில் கொரியாவின் அமெரிக்க படைகள் தெரிவித்தன.
அமெரிக்க அறிக்கையின்படி, தென் கொரிய தேசிய புலனாய்வு சேவையின் (South Korean National Intelligence Service) இயக்குனரான லீ பையோங் ஹோ, தென் கொரிய-அமெரிக்க ஒருங்கிணைந்த படைகள் கட்டளையகத்தின் (South Korea-US Combined Forces Command) தலைவரான ஜெனரல் வின்சென்ட் புரூக்ஸ் மற்றும் சியோலின் அமெரிக்க தூதரகப் பொறுப்பாணை d’Affaires Marc Knapper, ஆகியோரை பாம்பியோ ஏனையோர் மத்தியில் சந்தித்தார். CIA இயக்குனரின் விஜயத்தின்போது அவருடன் ஒருங்கிணைந்த படைகளின் துணைத் தளபதியான ஜெனரல் லீம் ஹோ-யோங்கும் இணைந்திருந்தார்.
குறிப்பாக, பதட்டமிக்க கொரிய எல்லைக்கு இடைப்பட்ட பகுதிக்கு அருகேயுள்ள Yeonpyeong தீவுக்கு பாம்பியோ விஜயம் செய்தார். இரு கொரியாக்களுக்கிடையில் போட்டிநிலவும் நீர்நிலைகளைப் பார்க்க அவர் யியோன்பியோங் தீவிற்கும் பயணம் செய்ததுடன், கடந்த காலத்திலும், சாத்தியமான அதன் வெடிப்புப் புள்ளிகளிலும் தென் கொரியா மீதான வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் குறித்து முதன் முதலாக அவர் பாராட்டுக்களை பெற்றதாகவும்” கொரிய அமெரிக்க படைகள் தெரிவித்தன.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையேயான ஒரு இராஜதந்திர மோதலுக்கு மூலகாரணமான ஒரு வெடிப்புப் புள்ளியாகவும் இந்த தீவு மாறியிருந்த நிலையில், நவம்பர் 2010 ல், வட கொரிய பீரங்கித் தாக்குதலின் கீழ் அது வந்தபோது அதில் தென் கொரிய கடற்படையினர் இரண்டு பேரும், பொதுமக்கள் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில், மஞ்சள் கடலில் தென் கொரிய இராணுவ பயிற்சிகளுக்கு எதிரான ஒரு எதிர்த் தாக்குதலாக அதன் குண்டுவீச்சுத் தாக்குதல் நடைபெற்றபோது வட கொரிய பிராந்தியத்திற்குள் குண்டுகள் வீசப்பட்டதாக பியோங்யாங் வலியுறுத்திக் கூறியது. வட கொரியாவை கட்டுப்படுத்த சீனா தலையிட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு ஒபாமா நிர்வாகம் இந்த மோதலைப் பயன்படுத்தியது.
வட கொரியாவிற்கு எதிரான சாத்தியமான இராணுவ நடவடிக்கையை எடுக்கும் பொருட்டு அமெரிக்கக் கூட்டணிகளுக்கு முட்டுக்கொடுப்பதற்கு கடந்த மாதம் ஆசியாவிற்கு துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் விஜயம் செய்த பின்னர், உடனடியாக சமீபத்திய வாரங்களில் சியோலுக்கு பயணித்த நான்காவது உயர்மட்ட அமெரிக்க அதிகாரி பாம்பியோ ஆவார். முன்னதாக, வட கொரியாவுடனான மோதல் குறித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் கவனக்குவிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கு வெளியுறவு செயலரான றெக்ஸ் ரில்லர்சனும், பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மேட்டிஸும் தென் கொரியாவிற்கு தனித்தனி பயணங்களை மேற்கொண்டனர்.
தென் கொரிய உள்ளூர் தினசரி செய்திப் பத்திரிகையான Chosun Ilbo, பியோங்யாங் குறித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான விவரங்களை தென் கொரிய அதிகாரிகளுக்கு பாம்பியோ விளக்கியதாக தெரிவித்தது. இது பல உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டியது. வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை திறன்களைப் பற்றியும், கிம் ஜோங்-உன் ஆட்சியின் உள் நிலைமை பற்றியும் அதிகாரிகளும் மதிப்பீடு செய்ததாக இந்த செய்தித்தாள் தெரிவித்தது.
ஜனாதிபதி பார்க் குன்-ஹை இன் பதவி நீக்கத்தின் காரணமாக தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நாளான மே 9 ஆம் தேதிக்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்பாக பாம்பியோவின் விஜயம் இடம்பெற்றதால், தென் கொரிய ஊடக நிறுவனங்கள் அவரது விஜயத்தை பெரிதுபடுத்திக் காட்டின.
தேர்தலில் ஏற்கனவே முன் வாக்கெடுப்பு நடந்துவருகிறது, இதில் முன்னணி போட்டியாளரும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான மூன் ஜே-இன், அமெரிக்கா அதன் THAAD கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் போர்முறையினை தென் கொரியாவில் ஸ்தாபிப்பதை அமெரிக்கா தாமதம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க கூட்டணி தொடர்பான அவரது ஆதரவு குறித்து வாஷிங்டனுக்கு உறுதியளிக்கும் அதே வேளையில், இந்த ஸ்தாபிதம் குறித்த பொது மக்கள் எதிர்ப்பை சுரண்டுவதற்கும் மூன் முனைந்துவருகிறார். இருப்பினும், தேர்தலுக்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டதை உறுதி செய்யும் பொருட்டு THAAD ஸ்தாபிதத்தை மூர்க்கத்தனமாக பென்டகன் முடுக்கிவிட்டுள்ளது.
மூனின் பிரச்சார அலுவலகம் பாம்பியோவின் விஜயம் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. “தென் கொரியாவிற்கான அவரது வருகை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது,” என்றும் “எங்களுக்கு (அமெரிக்காவிலிருந்து) எந்தவொரு தகவல் தொடர்பும் கிடையாது” என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.
பாம்பியோ விவாதித்தது எதுவாயினும், சீனாவின் நுழைவுவாயிற் பகுதியில் முக்கிய அமெரிக்கத் தளங்களையும், 28,500 இராணுவத்தினரையும் வரவேற்கும் தென் கொரியாவில் வரவிருக்கும் புதிய நிர்வாகத்தின் எந்தவொரு தயக்கத்தையும் ஒப்புக்கொள்ளபோவதில்லை என்பதை THAAD பாட்டரியை விரைவாக ஸ்தாபிப்பதன் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இராணுவ அச்சுறுத்தல்களுக்கும் கின் ஜோங்-உன் ஐ சந்திப்பதில் அவர் மகிழ்ச்சியடைவார் என்று கூறுவதற்கும் இடையில், ட்ரம்ப்பினால் கணக்கிடப்பட்ட போரில் ஈடுபடா இராஜதந்திரம் மற்றும் கணிக்க முடியாத விடயமும் “சூழ்நிலைகள்” சரியாக இருந்தால், பெய்ஜிங்கிற்கும், பியோங்யாங்கிற்கும் இடையில் வளர்ந்துவரும் வேறுபாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி அவற்றிற்கு இடையிலான இத்தகைய பதட்டங்களை தெளிவாக அதிகரித்துள்ளது.
வட கொரியா மேலும் ஏதேனும் ஏவுகணை அல்லது அணுஆயுத சோதனைகள் நடத்துவதை சீனா நிறுத்தவேண்டுமென ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தார். பியோங்யாங் மீதான எந்தவித கட்டுப்பாடும் இல்லை என பெய்ஜிங் இதனை எதிர்க்கின்றபோதும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவ்வாறு செய்வதற்கு உறுதியுடன் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சீனாவின் ஒரு முதன்மை வருவாய் ஆதாரமான வட கொரியாவிலிருந்து பெறப்படும் நிலக்கரி இறக்குமதியை பெய்ஜிங் நிறுத்திவைத்துள்ளது, ஆனாலும் அதற்கு வடக்கிலுள்ள அரசின் உடைவு அதன் எல்லைப்பகுதியில் ஒரு நெருக்கடியை உருவாக்கக்கூடுமெனவும், மேலும் அப்பகுதியில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சியின் ஸ்தாபகத்திற்கும் வழிவகுக்கக்கூடுமெனவும் அச்சமடைகிறது.
கொரிய மத்திய செய்தி நிறுவனம் (Korean Central News Agency-KCNA) புதன்கிழமை ஒரு கருத்துரையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ செய்தி பரப்பும் சாதனமான People’s Daily பத்திரிகையும், மற்றும் சீன அரசு நடத்தும் Global Times ஊடக நிறுவனமும், “அமெரிக்காவின் இசைக்கு ஏற்ப சீனா நடனமாடிவருவது குறித்து நொண்டிச்சாக்குகள் மன்னிப்புக்கள் கூறுவதை” கண்டனம் செய்தது. வட கொரியா அதன் ஆயுதங்களை கைவிட்டது “சிவப்புக் கோட்டை” தாண்டிவிட்டதாக சீனா பரிந்துரைப்பதாகவும், மேலும் வட கொரியா-சீன உறவுகளைத் தாங்கிநிற்கும் “தூணை வெட்டுவதன்” மூலமாக நிகழக்கூடிய “மிகக் கடுமையான விளைவுகள் குறித்து சீனா ஆழ்ந்து சிந்தித்து வருவதாகவும்” அது தெரிவித்தது.
வியாழனன்று ஒரு விடையிறுப்பில், பியோங்யாங் “அதன் அணுஆயுத திட்டங்கள் தொடர்பாக பகுத்தறிவுக்கு ஒவ்வா தர்க்கத்தின் சில வடிவங்களுடன் இணைப்பதை” Global Times ஊடகம் குற்றம்சாட்டியதுடன், பியோங்யாங் மற்றுமொரு அணு ஆயுத சோதனை நடத்தும் பட்சத்தில், அது முன்சம்பவிக்காததொரு பாணியில் எதிர்வினையாற்றும் என்பதை வலியுறுத்தி பியோங்யாங்கை பெய்ஜிங்கும் விழிப்புடன் இருக்கச்செய்யவேண்டுமெனவும் அறிவித்தது.
இத்தகைய “முன்னோடி இல்லாத” எதிர்வினை என்னவாக இருக்குமென்று அந்த தலையங்கம் கூறவில்லை. ஆனால், வட கொரியாவின் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான 1961 ம் ஆண்டில் கையெழுத்தான ஆக்கிரமிப்பின்மை குறித்த உடன்படிக்கையை அச்சுறுத்தியதாக அது எச்சரித்தது. மேலும், “வட கொரியாவின் அணுஆயுத நடவடிக்கைகள் மூலமாக அதன் வடகிழக்கு பிராந்தியம் மாசடைவதற்கும் சீனா அனுமதிக்காது” என்றும் தெரிவித்தது.
அணு ஆயுதங்களைக்கொண்டு ஒரு பெரும் மோதலை வெடிப்புறச் செய்யக்கூடிய வகையில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலையை இந்த எதிர்க் குற்றச்சாட்டுக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.