Print Version|Feedback
French President Macron names right-wing PM, meets Merkel to plan austerity and war
பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் வலதுசாரி பிரதம மந்திரியை பெயரிடுகிறார், சிக்கனத் திட்டம் மற்றும் போருக்காக மேர்க்கெலை சந்திக்கிறார்
By Alex Lantier
16 May 2017
எலிசே மாளிகையில் அவர் பதவியேற்று ஒரு நாளுக்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலைச் சந்திப்பதற்கு பேர்லின் பயணிப்பதற்கு முன்னதாக, உயரடுக்கினருக்கான தேசிய நிர்வாக பள்ளியின் (ENA) ஒரு வலதுசாரி பட்டதாரியை பிரதம மந்திரியாக தேர்ந்தெடுத்தார்.
பேர்லினில் மக்ரோன் மற்றும் மேர்க்கெலுக்கு இடையிலான நட்புரீதியிலான சந்திப்பானது, எலிசே மாளிகையில் அவர் பதவியேற்றிருப்பது ஒரு சமூக எதிர்புரட்சியின் பாகமாக உள்ளது என்பதையும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் இராணுவவாத பரவல் அதிகரிப்பையும் அடிக்கோடிடுகிறது. சிக்கனத் திட்டங்களின் பாதுகாவலனாக உள்ளதும், நாஜி ஆட்சியின் தோல்விக்குப் பிந்தைய ஏழு தசாப்தகால இராணுவ தடையாணைகளை 2014 இல் முறித்துக் கொண்டு அதன் வெளியுறவு கொள்கையில் மீள்இராணுவமயப்படுத்தலை தொடங்கிய பேர்லின், மக்ரோனை ஆழ்ந்த சிக்கனக் கொள்கைகள் மற்றும் கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் கொண்டு வருவதற்கான ஓர் ஆதரவாளர் என்று புகழ்ந்தது.
உத்தரவாணை மூலமாக ஒப்பந்தங்களை மற்றும் சமூக நலன்களை கிளித்தெறிவதற்காக, பிரெஞ்சு மக்களில் 70 சதவீதத்தினரின் எதிர்ப்புடன் பாரிய போராட்டங்களை முகங்கொடுத்திருந்த நிலையில், மக்ரோனுக்கு முன்பிருந்த பிரான்சுவா ஹோலாண்ட் ஒரு வாக்கெடுப்புமேயின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய தொழிலாளர் சட்டத்தை பயன்படுத்த மக்ரோன் திட்டமிடுகிறார்.
சிக்கன நடவடிக்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தாலோ அல்லது ஜேர்மனியாலோ தனக்கு கட்டளையிடப்படவில்லை, மாறாக அது அவரது அரசாங்கத்தின் கொள்கை என்று வலியுறுத்தி அவர் மேர்க்கெல் உடனான கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்கினார். “பிரெஞ்சு திட்டநிரல் வரவிருக்கும் மாதங்களில் ஒரு சீர்திருத்த திட்டநிரலாக இருக்கும், அது ஏனென்றால் ஐரோப்பா நம்மிடம் கேட்கிறது என்பதற்காக அல்ல, மாறாக ஏனென்றால் அதுதான் பிரான்ஸிற்குத் தேவைப்படுகிறது,” என்றார்.
“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ மண்டலத்திற்கான ஒரு பொதுவான முன்னோக்கிய பாதை மீது சேர்ந்து வேலை செய்வதற்கு" பேர்லினுடன் அவர் மிக நெருக்கமான கூட்டுழைப்பை முன்மொழிந்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “மிக முக்கிய விடயங்கள் உள்ளன… நான் வெளிப்படையான, நேரடியான மற்றும் ஆக்கபூர்வமான பங்காளியாக இருப்பேன் ஏனென்றால் நம்மிரு நாடுகளின் வெற்றியானது மிக நெருக்கமாக பிணைந்திருப்பதாக நான் நம்புகிறேன்,” என்றார்.
புதிய பிரெஞ்சு ஜனாதிபதிக்கு சாத்தியமானளவிற்கு, குறைந்தபட்சம் வார்த்தையளவிலாவது, நிறைய ஆதரவளிக்க விரும்புவதாக மேர்க்கெல் தெரிவித்தார். பிரான்சின் சமூக மற்றும் பொருளாதார கொள்கையைக் குறிப்பிடும் விதத்தில் அவர் குறிப்பிடுகையில், “எனக்கு அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது, என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்துள்ளார்” என்றார்.
அரசியல்ரீதியாகவும் நிதிரீதியாகவும், உபாயங்களை கையாள்வதற்கு நிறைய இடமளிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பு உடன்படிக்கைகளை பேர்லின் மீளசீராய்வு செய்யுமென்றும் மேர்க்கெல் தெரிவித்தார். “ஜேர்மன் கண்ணோட்டத்திலிருந்து, அர்த்தமுள்ள விதத்தில் செய்தால் [உடன்படிக்கைகளை] மாற்றுவது சாத்தியமே,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இறுதி விளைவாக யூரோ மண்டலம் பலமடையும் என்றால் உடன்படிக்கைகளை மாற்ற நாங்கள் ஆதரவாகவே உள்ளோம். லிஸ்பன் உடன்படிக்கை சிறப்பாக உள்ளதாக நான் கேட்கும் போதெல்லாம் எப்போதுமே நான் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளேன்,” என்றார்.
ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகளை திருத்தம் செய்யும் பிரச்சினை குறித்து மக்ரோன் கூறுகையில், “அங்கே சம்பிரதாயமான விலக்குகள் இருக்காது,” என்றார்.
ஆனால் அவர் அரசாங்க நலன்களுக்கேற்ப இத்தகைய உடன்படிக்கைகளை திருத்தியமைப்பதற்கான கருத்துக்கள், ஓர் அரசியல் மாயை என்பதை தவிர வேறொன்றுமில்லை. ஒரு ஏமாற்றுத்தனமான இது, அவருக்கு முன்பிருந்த மதிப்பிழந்த பிரான்சுவா ஹோலாண்ட் இன் சிக்கனக் கொள்கைகளையே தொடரவும் தீவிரப்படுத்தவும் உள்ள அவரது சிக்கனக் கொள்கைகளை வழங்குவதற்காக மக்ரோனாலேயே சுட்டிக் காட்டப்பட்டது.
நிதி அமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள இல் இருந்து தொடங்கி பேர்லினின் செல்வாக்கான குரல்கள், அதுபோன்றவொரு கொள்கையை மக்ரோனால் ஒருபோதும் செய்ய முடியாது என்று விவரித்து பேசியுள்ளனர். பிரான்சின் வலதுசாரி தினசரி Le Figaro உடனான ஒரு நேர்காணலில், அவர் மக்ரோனின் முன்மொழிவுகளை "யதார்த்தமில்லை" என்று அப்பட்டமாக உதறிவிட்டார். சொய்பிள இன் கருத்துப்படி, “யூரோ மண்டலத்திற்கான ஒரு வரவு-செலவு திட்டக்கணக்கு போன்ற இத்தகைய முன்மொழிவுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையை மாற்றி எழுதுவது அவசியமாகும், அதற்கு 27 அங்கத்துவ நாடுகளின் ஒருமனதான ஒப்புதலும்,” அத்துடன் பல நாடுகளில் சர்வஜன வாக்கெடுப்பும் "அவசியமாகும்.”
மக்ரோன் பேர்லினில் இருந்தபோதே, TF1 தொலைக்காட்சியின் இரவு 8 மணி செய்தியில் எடுவார்ட் பிலிப் (Edouard Philippe) தன்னை பிரெஞ்சு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர் தயாரித்துக் கொண்டிருக்கும் சமூக தாக்குதல்களையும் விரித்துரைத்தார். அரசாணை மூலமாக சமூக வெட்டுக்களை திணிப்பதற்கான மக்ரோனின் திட்டங்களைக் குறித்து கவலையுற்று, அவர் கூறுகையில், “குடியரசின் ஜனாதிபதி இந்த முன்மொழிவுக்கு அவர் அதிகாரத்தைப் பயன்படுத்த பொறுப்பேற்றுள்ளார். அவர் தொழிலாளர் சட்டமசோதா வடிவமைப்பை மாற்றுவதை தவிர்க்கவியலாததாக விவரித்தார். இது மிகவும் பலமானதும், மிகவும் சிக்கலானதுமாகும். இதனால் தொழிலாளர்கள் நன்கு பாதுகாக்கப்படவில்லை. நாம் செயலற்று இருக்க முடியாது,” என்றார்.
அரசியல் விஞ்ஞானத்தின் (Sciences-Po) ஒரு மாணவராக பிலிப், வலதில் இணைந்து அலென் யூப்பே ஐ ஆதரிப்பதற்கு முன்னதாக மிஷேல் ரொக்காவை ஆதரிப்பதற்காக ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சியில் சிறிது காலம் இணைந்திருந்தார். 2007 இல் இருந்து 2010 வரையில், அவர் அணுசக்தி பெருநிறுவன அரேவா (Areva) உடன் ஆபிரிக்காவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நவகாலனித்துவ செயல்பாடுகளில் வேலை செய்தார்.
இந்த பின்னணி காரணமாக, அவர் "அரசின் அதிகாரத்தைப் பாதுகாப்பதில் அரசு ஒரு பாத்திரம் வகிக்க வேண்டியுள்ளது என்பதில்" அவருக்கு பலமான நம்பிக்கையை வலியுறுத்தி, அவர் ஒரு பலமான மற்றும் ஒடுக்குமுறை அரசை பாதுகாக்கின்ற ஒரு "வலதின் நபர்" என்பதை எடுத்துக்காட்ட வேண்டியிருப்பதாக அவர் உணர்ந்தார். பிரான்சில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தும் அவசரகால நிலையின் கீழ் சோசலிஸ்ட் கட்சியால் ஏற்படுத்தப்பட்ட பொலிஸ் அணிதிரட்டலை பேணுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் மக்ரோன் விரும்புகிறார் என்பதற்கு அதுவொரு மற்றொரு சமிக்ஞையாகும்.
பிலிப் ஐ பிரதம மந்திரியாக மக்ரோன் நியமித்திருப்பதும் மற்றும் மக்ரோன் உடனான அவரின் நெருக்கமான உறவுகளும் எதை எடுத்துக்காட்டுகின்றன என்றால் தேசியவாதம், சர்வாதிகாரம் மற்றும் இராணுவவாதத்தை எதிர்க்க வாக்காளர்கள் தார்மீகரீதியில் நவ-பாசிசவாத மரீன் லு பென்னுக்கு எதிராக மக்ரோனுக்கு வாக்களிக்க கடமைப்பட்டிருப்பதாக கூறப்பட்ட வாதங்களின் திவால்நிலையை எடுத்துக்காட்டுகின்றன. ஊடகங்களும் மற்றும் அரசாங்கத்தில் இருந்த பாரம்பரிய கட்சிகளும் மட்டும் மக்ரோனுக்கு வாக்களிக்க அழைப்புவிடுக்கவில்லை, மாறாக ஜோன்-லூக் மெலோன்சோனின் France insoumise (அடிபணியா பிரான்ஸ் இயக்கம் - FI) மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற சக்திகள் மக்ரோனுக்கான ஒரு வாக்களிப்புக்காக முன்வைக்கப்பட்ட நியாயப்படுத்தல்களை அவை "புரிந்து கொண்டதாக" அறிவித்துள்ளன.
இது இப்போது ஓர் ஆழமான பிற்போக்கு அரசாங்கத்தை உருவாக்கி உள்ளது, இது ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் அமைப்பையும் வலதை நோக்கி தீவிரமாக நகர்த்தி கொண்டிருக்கிறது. பாரீஸ் மற்றும் பேர்லின் மட்டுமே ஒரு வன்முறையான சமூக-எதிர்ப்பு சிக்கன கொள்கையை ஒருங்கிணைத்து கொண்டிருக்கவில்லை, மாறாக அவை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கான ஓர் ஆக்ரோஷமான இராணுவவாத வெளியுறவு கொள்கையை அபிவிருத்தி செய்வதற்கான கட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளில் நெருக்கமாக கூடி வேலை செய்து வருகின்றன.
கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டு வருவதற்கும் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கவும் மக்ரோன் அழைப்புவிடுப்பது, 2014 இல் பேர்லினின் வெளியுறவு கொள்கை மாற்றத்திற்குப் பின்னர் இராணுவவாதம் மற்றும் போரை மீண்டும் சட்டபூர்வமாக்க ஜேர்மன் ஆளும் உயரடுக்கின் நகர்வுகளில் ஒரு பகுதியாகும். அவர்களுக்கிடையே ஆழ்ந்த பிளவுகள் இருந்தாலும், பிரிட்டன் வெளியேற்றம் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசியவாத கொள்கையிலிருந்து வரும் சவாலை முகங்கொடுத்துள்ள ஐரோப்பிய சக்திகள், இராணுவ தலையீடுகளை இன்னும் ஆக்ரோஷமாக நடத்துவதற்கு ஒருங்கிணைந்து பிணைத்துக் கொள்ள முயல்கின்றன.
பேர்லினில் மக்ரோன்-மேர்க்கெல் சந்திப்பு நடந்தபோது, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் குறிப்பாக ஆபிரிக்காவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவ மற்றும் வெளியுறவு கொள்கையை ஒருங்கிணைக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கூட்டத்திற்காக புரூசெல்ஸில் கூடியிருந்தனர். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் பெடெரிக்கா மொக்கெரீனி (Federica Mogherini) மத்தியதரைக் கடலை கடந்து அகதிகள் வருவதை நிறுத்துவதற்காக ஆபிரிக்க முனையிலும் அத்துடன் தெற்கு லிபியாவிலும் தலையீடு செய்வது உட்பட பல்வேறு விடயங்களை எழுப்பினார்.
கட்டாய இராணுவ சேவையுடன் கூட, வெளிநாடுகளில் ஏகாதிபத்திய தலையீடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை ஐக்கியப்படுத்துவதற்கான முயற்சி, பிற்போக்குத்தனமானது என்பதுடன் ஐரோப்பிய இளைஞர் மற்றும் தொழிலாளர்களிடையே பரந்த எதிர்ப்பை எதிர்கொள்ளும். அது ஏற்கனவே ஐரோப்பாவில் நிலவும் வெடிப்பார்ந்த சமூக பதட்டங்களைத் தீவிரப்படுத்த மட்டுமே செய்யும்.
பாரீஸின் நலன்களுக்கேற்ப ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகளை மேலெழுந்தவாரியாக மறுதிருத்தம் செய்ய பேர்லின் பாரீஸை அனுமதித்தாலும் கூட, அது தொழிலாள வர்க்கத்திற்கு எந்த பலனையும் அளிக்கப்போவதில்லை. அது ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்குப் பின்னர் ஐரோப்பிய சமூக கொள்கையின் இன்றியமையா கட்டமைப்பான சிக்கனக் கொள்கைகள் மீதான சகல ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களது ஒரு பொதுவான உடன்பாட்டின் அடிப்படையில் தான் செய்யப்படும். இது 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகளைச் சீரழித்துள்ளது, மிகவும் இழிவுகரமாக கிரீஸை நாசமாக்கியுள்ளது.
மக்ரோன் மற்றும் லு பென்னுக்கு இடையே நடந்த ஜனாதிபதி தேர்தல் இரண்டாம் சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிக்க சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste) விடுத்த அழைப்பில் வலியுறுத்தியவாறு, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக மற்றும் சர்வதேச அளவில் அணிதிரட்டுவதே முன்நோக்கி செல்வதற்கான ஒரே பாதையாகும். பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் ஐரோப்பா எங்கிலும் அங்கே சிக்கனக் கொள்கை மற்றும் இராணுவவாதத்திற்கு ஆழ்ந்த மற்றும் அதிகரித்த எதிர்ப்பு உள்ளதுடன், சிக்கன கொள்கைகளுக்கு கட்டளையிடுவதற்கான மக்ரோனின் முயற்சிகள் பரந்த எதிர்ப்பை முகங்கொடுக்கும்.