Print Version|Feedback
US threats of war against North Korea continue
வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்காவின் போர் அச்சுறுத்தல்கள் தொடர்கிறது
By Peter Symonds
17 April 2017
ஞாயிறன்று காலையில் நடத்தப்பட்ட வட கொரிய ஏவுகணை சோதனை தோல்வியடைந்தும், மேலும் இது குறித்து வாஷிங்டன் ஒப்பீட்டளவில் மௌனமாக விடையிறுத்தும் உள்ள நிலையில் வடகிழக்கு ஆசிய பகுதியில் பதட்ட நிலைமைகள் இன்னும் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. பியோங்யாங் மேற்கொள்ளும் எந்தவொரு அணுஆயுத அல்லது ஏவுகணை சோதனைக்கும் விடையிறுப்பாக இராணுவ சக்தியை பயன்படுத்த முடியும் என ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்துவருகிறது.
ட்ரம்ப் இன் தேசிய பாதுகாப்பு செயலரான H.R. McMaster, வட கொரியா தொடர்பாக “நடைபெற்றுவருகின்ற முன்னிலும் அதிக மேம்படுத்தலுக்கும், மேலதிக அபிவிருத்திக்கும் எங்களது அனைத்து தேர்வுகளும் தயாராக உள்ளன” என்று வலியுறுத்தினார். மேலும் அவர், “இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவும், மற்றும் அதன் கூட்டணி நாடுகளும், பங்காளிகளும், அணுஆயுதங்களுடனான இந்த விரோதப்போக்கு உடைய ஆட்சியின் அச்சுறுத்தலின் கீழ் இருப்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளதாகவும்” கூறினார்.
ABC இன் “This Week” நிகழ்ச்சியில் நேற்று McMaster பேசுகையில், முதல் நிகழ்வாக பியோங்யாங் அதன் அணுஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டங்களை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க விடுக்கும் கோரிக்கைகளுக்கு அதனை தலைவணங்க செய்ய பெய்ஜிங் பெரும் அழுத்தம் கொடுக்குமென வாஷிங்டன் நம்புவதாக தெரிவித்தார். மேலும், “சீனாவின் அழுத்தத்தை பொறுத்தவரையில் வட கொரியா மிகவும் பலவீனமானதாக உள்ளது. 80 சதவிகித வட கொரிய வர்த்தகம் சீனாவிலிருந்து தான் வருகிறது. மேலும் அவர்களது அனைத்து எரிசக்தி தேவைகளும் சீனாவின் மூலமாக தான் நிறைவேற்றப்படுகிறது” என்று அவர் கூறினார்.
“இந்த பிரச்சனை பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது” என்பதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெளிவுபடுத்தினார். “இதனை அமைதியாக தீர்வுக்கு கொண்டுவர முனைவதில், குறுகிய இராணுவ வழிமுறையில், எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு” இதுவே சரியான நேரமாக இருந்தது எனும் நிலையில், எதுவும் நடக்காதென கூறவும் முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ட்ரம்ப் நிர்வாகம், “வரவிருக்கும் வாரங்களில், அல்லது மாதங்களில்”, குறுகிய இராணுவ படை பிரயோகத்தை தேர்வுசெய்து ஆராயும் என்பதான McMaster இன் கருத்தின் மீது எந்தவித நம்பகத்தன்மையும் கொடுக்கப்படமுடியாது.
இதுபோன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ட்ரம்ப் நிர்வாகம் எவ்வாறு விடையிறுக்கும் என்பது பற்றி தந்தி செய்தி எதையும் அனுப்பாது என்று McMaster தானே அறிவித்தார். சிரியா மீதான பேரழிவுகரமான நடுத்தர கப்பல் ஏவுகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதை மேற்கோள்காட்டி, “கடுமையான முடிவுகளை எடுப்பதில் ட்ரம்ப் தெளிவான திருப்தியுடன் இருந்தார்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த வாரம் ட்ரம்ப், அமெரிக்க கடற்படை கப்பலான கார்ல் வின்சன் மூலமாக வழிநடாத்தப்படும் வான்வழி விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுவை கொரிய தீபகற்பத்தின் கடல் பகுதிக்கு மீண்டும் திரும்ப உத்தரவிட்டதுடன், அந்த பகுதிக்கு அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் உட்பட “போர் கப்பல்களின் தொகுப்பு” ஒன்றை அவர் அனுப்பிவைத்துள்ளதாகவும் பெருமையடித்து கொண்டார். ஜப்பான் மற்றும் குவாம் இல் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் உயர்தர போர் விமானங்களையும், மூலோபாய வெடிகுண்டுவீசிகளையும் பென்டகன் அதன் வசம் கொண்டிருக்கிறது.
தென் கொரியாவில், 28,500 துருப்புகளையும், அத்துடன் இராணுவ வானூர்திகள், மற்றும் ஏனைய வன்பொருள்களையும் “இன்றிரவு போராடவும்” தயாராக இருக்கும் விதத்தில் உயர் நிலை விழிப்பில் அமெரிக்கா வைத்துள்ளது. வட கொரியாவுடன் போர் ஏற்பட்டால், சுமார் 625,000 படையினரையும், அத்துடன் அதிநவீன கடற்படை, வான்வழி மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளையும் கொண்டதான நன்கு ஆயுதமயப்படுத்தப்பட்ட தென் கொரிய இராணுவத்தின் மீது செயல்பாட்டு கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ள அமெரிக்க இராணுவம் அனுமானிக்கிறது.
தோல்வியுற்ற ஏவுகணை சோதனை குறித்து தென் கொரிய அரசாங்கம் உடனடியாக கண்டனம் செய்ததானது அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல்களை முழுமையான ஆதரவளிப்பதையே தெளிவுபடுத்துகிறது. “கொரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு இது தெளிவான அச்சுறுத்தலாகவுள்ளது என்று அரசாங்கம் கண்டனம் செய்கிறது” என்று ஞாயிறன்று ஒரு அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வட கொரியா உடனான வாஷிங்டனின் போர் தயாரிப்புக்கள் தொடர்பான தங்களது பிரிட்டிஷ் சமதரப்பினர் பற்றி அமெரிக்க அதிகாரிகள், லண்டனை தளமாக கொண்ட Sunday Times பத்திரிகைக்கு சுருக்கமாக விளக்கியுள்ளனர். “அது எடுக்கின்ற முடிவை பொறுத்து, அவர்கள் எதையும் செய்வார்கள்” என ஒரு மூத்த பிரிட்டிஷ் செய்தியாளர் பத்திரிகைக்கு தெரிவித்தார். “எதுவும் ஒதுக்கப்படவில்லை. குறிப்பிட்ட விடயங்கள் மீது இலக்கு வைக்கவும், அவற்றை அடியோடு அழிக்கவும் செயல்திறன் பெற்றுவிட்டதாகவே அவர்கள் நினைக்கின்றனர்” என்றும் கூறினார்.
போர் திட்டங்கள் பற்றி நன்கறிந்த ஒரு முன்னாள் அமெரிக்க அதிகாரி Sunday Times பத்திரிகைக்கு பின்வருமாறு தெரிவித்தார்: “ட்ரம்ப் சீனாவுக்கு கடினமாக அழுத்தம் கொடுத்துவருகிறார், என்றாலும் அவர் தானே தான் வலுவான நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டுமென இறுதியில் உணர்கிறார். ஏவுகணை தளங்களை அழிக்கும் திட்டங்கள் இருப்பதுடன், இராணுவம் இப்பொழுது தனக்கு தெரிந்தவற்றின் மீது வலுவான நம்பிக்கையும் கொண்டுள்ளது.”
ஒரு அமெரிக்க வெளியுறவு கொள்கை ஆலோசகர் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உடனான தனது தற்போதைய ஆசிய சுற்றுப்பயணத்தின் போது McMaster விடுத்த அச்சுறுத்தல்களை பற்றி மீண்டும் வலியுறுத்தினார். வட கொரியா ஒரு மத்திய-தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை தான் செயல்படுத்தியிருக்குமென தோன்றுகிறது, அது ஒரு ICBM அல்ல, ஆனால் சில விநாடிகளுக்குள் அது தோல்வியுற்றுப்போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு அமெரிக்க நடவடிக்கையையும் நிராகரிக்கும் போதும், “நாங்கள் தேர்வுகளை கொண்டிருக்கிறோம். இராணுவ, இராஜதந்திர மற்றும் ஏனைய, ஆகிய இரண்டு வகை தேர்வுகளை நாங்கள் வைத்திருக்கிறோம். இவ்வாறு ஜனாதிபதி தேர்ந்தெடுக்க கூடிய கருவிகளின் பரந்த ஒழுங்குமுறையினையே (எங்களது) நாங்கள் கொண்டிருக்கும் நிலையில், அவர் அவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்” என ஆலோசகர் வலியுறுத்தினார். வட கொரியா ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி முடித்திருக்குமானால், அமெரிக்காவினால் வேறுமாதிரி நடவடிக்கைகள் எடுக்கவேண்டியதாக இருந்திருக்கும்” என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதே சமயத்தில், ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களுடன் இணைந்து, அமெரிக்கா மற்றும் உலகத்தின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்துகின்ற “ஒரு போக்கிரி நாடாக” வட கொரியா உள்ளதென அரக்கதனமாக சித்தரிப்பதை தொடர்ந்துவருகிறது. இதே வகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய கிழக்கிலிருந்து பால்கன், வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியா வரையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு சட்டவிரோத தலையீட்டையும், நடத்தப்பட்ட போரையும் இந்த பரப்புரை பிரச்சாரம் முன்னிலைப்படுத்தியுள்ளது.
கிம் ஜோங்-உன் தலைமையிலான பியோங்யாங் ஆட்சியின் மிருகத்தனத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகரான McMaster கண்டனம் செய்தார். மேலும், “இது யாரோ ஒருவர் தனது சொந்த சகோதரனையும், அவரது குடும்பத்திலுள்ள ஏனையோரையும் கொல்வதன் மூலமாகவும், எவ்வித காரணமுமின்றி, அரசியல் காரணங்களை முன்னிட்டு கொடூரமான சூழ்நிலையில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை சிறையில் அடைத்ததன் மூலமாகவும் அவரது மிருகத்தனத்தை நிரூபணம் செய்துள்ளார்,” எனவும் கூறினார்.
ஒரு கொடூரமான பொலிஸ்-அரசு ஆட்சி மற்றும் அதன் பிற்போக்குதனத்தின் கீழ் அமெரிக்க அச்சுறுத்தல்கள் குறித்த இராணுவவாத விடையிறுப்பின் கீழ் இருக்கும் வட கொரியா நிச்சயமாக போர் அபாயத்தை மட்டுமே அதிகரிக்கிறது. இருப்பினும், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தற்போதைய மிருகத்தனமான போர்கள், அத்துடன் ஏனைய தலையீடுகள் மற்றும் ஆத்திரமூட்டல்கள் போன்றவற்றின் மீது ஸ்திரத்தன்மையுடன் உள்ள நிலையில், அமைதி குறித்து தன்னை ஒரு பாதுகாவலனாக அமெரிக்கா காட்டிக்கொள்வது முற்றிலும் பாசாங்குத்தனமானதாக உள்ளது.
“மனித உரிமைகளை” பாதுகாக்க என்பது வாஷிங்டனின் கூற்றுக்களை பொறுத்தவரையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு குறிப்பிட்ட நாட்டை இசைந்துபோவதற்கான இது ஒரு சுலோகமாகவே மாற்றப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் அல்லது அதற்கு முந்தைய நிகழ்வுகளான சிரியா மீதான ஏவுகணை தாக்குதல்கள், பாரிய வெடிமருந்து வான் வெடி குண்டு வெடிப்பை (Massive Ordnance Air Blast-MOAB) நிகழச் செய்தது, மற்றும் வட கொரியா மீதான தவிர்க்க முடியாத தாக்குலுடன்கூடிய அச்சுறுத்தல்கள், இவையனைத்தும் சர்வதேச ஸ்திரமற்ற நிலைமைக்கும், போர் அபாயத்திற்குமான மிகப்பெரிய மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளது என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்த மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான McMaster உடன் பேசியவரும், பிரிட்டிஷ் இராணுவ நபர் ஒருவர், Sunday Times பத்திரிகைக்கு பேசுகையில், வட கொரியா மீதான அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் பதிலடியை தூண்டக்கூடிய வகையில் “பயங்கர விளைவு கொண்டதாகவே இருக்கும்,” என்பதில் அவர் விழிப்புடன் இருந்ததாக கூறினார்.
அந்த கட்டுரை பின்விளைவுகளை பற்றி விவரித்து கூறாதபோதும், கொரிய தீபகற்பத்தின் மீது தொடுக்கப்படும் எந்தவொரு புதிய போரும் மில்லியன் கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம், ஆனால் அதுவே சீனா மற்றும் ஏனைய சக்திகளுடனான மோதலுக்குள் தள்ளப்பட்டால் அதற்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை தெரிவிக்கிறது. இருப்பினும், அமெரிக்கா பூகோள மேலாதிக்கத்துக்கான அதன் விடாப்பிடியான முயற்சியில், பொறுப்பற்ற முறையில் இது போன்ற பேரழிவுக்குள் உலகத்தை வீழ்த்துவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது.