ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

 This week in the Russian Revolution

ரஷ்ய புரட்சியில் இந்தவாரம்

பிப்ரவரி 27-மார்ச் 5: அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகப் போருக்கு தயார்செய்கிறது

27 February 2017

ஜாரிச ரஷ்ய பேரரசு முதலாம் உலக யுத்தத்தின் சுமையின் கீழ் தள்ளாடுகையில், அமெரிக்க அரசாங்கம் யுத்தத்திற்குள் நுழைய தயாரிப்பு செய்து வந்தது. ஒரு புறம் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவற்றுக்கும் மற்றொரு புறம் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியவற்றுக்கும் இடையில் 1914ல் யுத்தம் வெடித்ததிலிருந்து, அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பரந்த போர் எதிர்ப்பு உணர்வுகளினால் ஓரளவிற்கு அமெரிக்காவானது சம்பிரதாய ரீதியான நடுநிலை வகித்தலை பின்பற்றியது. யுத்தம் உள்ளிழுக்கையில் நடுநிலைத்தன்மை என்பது அதிகரித்த அளவில் போலித்தனமாக ஆகியது. வில்சனின் இராஜதந்திரம் என்பது “கோட்பாடற்ற மற்றும் ஜனநாயகப் பாசாங்கு” என ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறலாம். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், வாஷிங்டன் பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றை ஆதரித்தது, அமெரிக்க தொழிற்துறை, கூட்டணியின் படையினரை ஆயுதபாணியாக்கிய வேளையில், அதன் வங்கிகள் போருக்கான நிதியை வழங்கின. 1917 அளவில் அமெரிக்கா நுழைதல் என்பது, இப்பொழுது இல்லாவிடில் எப்பொழுது என்ற அளவில் இருந்தது.

பெட்ரோகிராட், பிப்ரவரி 27 (Feb. 14 O.S.): ரஷ்ய தலைநகரில் வேலைநிறுத்தம் தொடர்கிறது

ரஷ்ய புரட்சியில் முன்னணி நபரான அலெக்சாண்டர் ஷிலியாப்னிகோவ்

போல்ஷிவிக்குளால் அழைக்கப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்ந்தது அதேவேளை, Tauride அரண்மனையில் டுமாவின் புதிய கூட்டத் தொடர் தொடங்குகையில் மென்ஷிவிக்குகள் டுமாவிற்கு ஆதரவைக் காட்டுவதற்காக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். பல்வேறு வகையான 50 தொழிற்சாலைகளில் சுமார் 84,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய முயற்சித்தது. ஆனால் தொழிலாளர்கள் எதிர்த்துப் போராடினர்.

1914ல் போர் வெடித்த பின்னர் வேலை நிறுத்த நடவடிக்கையின் ஆரம்பக்கட்ட சீர்குலைவு இருந்தது. தொழிலாளர்கள் போர் பொருளாதாரத்தின் அதிகரித்துச்செல்லும் வறுமைக்கு, ஒரு அதிகரித்த வேலை நிறுத்த அலையால் பதிலளித்தனர். 1915க்கும் 16க்கும் இடையில், ரஷ்ய பேரரசில் வேலைநிறுத்தம் செய்பவர்களின் எண்ணிக்கை 539,528 இலிருந்து 957,075 ஆக அதிகரித்தது.

1917ல் தொழிலாள வர்க்க போராட்டங்களின் அலை புதிய பரிணாமங்களை எடுத்தது, மற்றும் வேலை நிறுத்தங்கள் என்றுமில்லாத வகையில் அதிகமாக அரசியல்மயமானதாக இருந்ததன. பிப்ரவரி முதல் இருவாரங்களில் 5,75,000 தொழிலாளர்கள் அரசியல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். போர் தொடங்கியதிலிருந்து பெட்ரோகிராட் வேலைநிறுத்த நடவடிக்கைகளின் மையமாக இருந்தது. 1914லிருந்து இங்கு 72 சதவீதம் அரசியல் வேலைநிறுத்தங்கள் இடம்பெற்றன. 1916லும் 1917ன் ஆரம்பத்திலும் தொழிலாள வர்க்கத்தில் இருந்த பதட்டமான மனோநிலையை விவரிக்கையில், போல்ஷிவிக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் உலோகத் தொழிலாளியுமான ஷிலியாப்னிகோவ் பின்னாளில் இவ்வாறு நினைவு கூர்ந்தார்: தொழிலாளர் தொழிற்சாலையை நிறுத்துவதற்கு சமிக்கையாக எடுத்துகொள்ள, சிலவேளைகளில் விசில் அல்லது ஏதாவதொரு வகை சப்தம் மட்டும் போதுமானதாக இருந்தது.

வாஷிங்டன் மற்றும் லண்டன் பிப்ரவரி 28: ஜேர்மனியும் அமெரிக்காவும் போரின் விளிம்பில்

1916ன் பின்பகுதியில் அமெரிக்க கடற்படையின் ஆள்சேர்ப்பு சுவரொட்டி.

ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலால் பிரிட்டிஷ் கப்பலான லக்கோனியா மூழ்கடிக்கப்பட்ட பின்னர், சில நாட்கள் முன்னர், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பத்திரிகைகள் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையில் வரவிருக்கும் யுத்தம் பற்றிய ஊகங்கள் நிரம்பிய கட்டுரைகளால் நிரம்பப்பெற்றன. டைம்ஸ் ஆஃப் லண்டன் கூறியது: “குறைந்த பட்சம் இரு அமெரிக்க பெண்கள் காணாமல் போனது லக்கோனிய குற்றத்தை ஜனாதிபதி வில்சன் ஜேர்மனியை எச்சரித்த அர்த்தத்தில், அமெரிக்க இறையாண்மைக்கு எதிரான “மன்னிக்கமுடியாக தாக்குதலை” கொண்டிருக்கும் வகையில் பார்க்கப்படும்.” தி டெய்லி குரோனிக்கள் குறிப்பிட்டது: “”லக்கோனியன் விஷயம் வரம்பு மீறியதாக இல்லையென்றால் அது என்னவாக இருக்கும் என்பதை விளங்கிக்கொள்வது என்பது சிறிதே கடினமானது”.

பெட்ரோகிராட், மார்ச் 1 (பிப்ரவரி16 O.S): அதிகாரிகள் ரொட்டி அட்டைகள் அறிமுகப்படுத்தல்


லியோன் ட்ரொட்ஸ்கி

ரஷ்ய பேரரசில் உணவு நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வருவதற்கு மத்தியில், பெட்ரோகிராட் அதிகாரிகள், ஏற்கனவே பட்டினி கிடக்கும் மக்களுக்கு ரொட்டியை பகிர்ந்து வழங்கும் பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினர். இறுதியாய் புரட்சிக்கு வழிவகுக்கும் சமூக நெருக்கடியில் பசியின் பாத்திரம் பற்றி கருத்து தெரிவிக்கையில் ட்ரொட்ஸ்கி தனது கட்டுரையில் எழுதுகிறார்: நேவி மிர் (புதிய உலகம்) ஐ பொறுத்தவரை: “போர் நடைபெறும் எல்லா நாடுகளிலும், உணவு வழங்கலில் பற்றாக்குறை என்பது, வெகுஜனங்கள் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தும் மிக உடனடியான, மிகக் கூர்மையான காரணியாகும். போரின் முழு பைத்தியக்காரத்தனமும் வாழ்வதற்கான சாதனங்களை உருவாக்குவது இயலாதது, ஏனெனில் சாவின் ஆயுதங்களை உருவாக்குவது அவசியமானது என்ற இந்த மிகத் தெளிவான நிலைப்பாட்டிலிருந்து அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.

வாஷிங்டன் டிசி, மார்ச்1: வில்சன் சிம்மர்மானின் தந்தியை பகிரங்கமாக்கல்


New York Times headline

அமெரிக்காவை யுத்தத்திற்குள் தள்ளும் திட்டமிட்ட முயற்சியில், ஜனாதிபதி வூட்ரோ வில்சன், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரிடமிருந்து மெக்சிக்கோ அரசாங்கத்திற்கு வந்த, இரகசிய செய்தியான சிம்மர்மான் தந்தியின் முழு உரையையும் பகிரங்கமாக்கி வெளியிட்டார். தந்தியானது அமெரிக்க தென்மேற்குப் பகுதியை திரும்பப் பெறுவதில் அமெரிக்காவிற்கு எதிரான யுத்தத்தில் மெக்சிக்கோவை இறக்கிவிடும் முயற்சியாகும், இப்பகுதி ஏழு தசாப்த காலங்களுக்கு முன்னர் மெக்சிக்கன் அமெரிக்க போரின் விளைவாக அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டதாகும்.

பெட்ரோகிராட், மார்ச் 2 (பிப்ரவரி17, O.S.): உணவு நெருக்கடியின் காரணமாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன

பெட்ரோகிராட்டின் உணவுக் கடைகளின் முன்னால் கூட்டங்கள் திரண்டு ரொட்டியைக் கோரின. அவர்களுள் பெரும்பாலோர் பெண்களாவர். ஒரு நாள் கழித்து நகரின் பல பகுதிகளில் ரொட்டி சுடும் அடுமனைகள் அடித்து நொருக்கப்பட்டன. ட்ரொட்ஸ்கி இந்த சம்பவங்களை பின்னர், ”சில நாட்களில் வரவிருக்கும் புரட்சியின் மின்னல் வெப்பம்” என்றார்.

இந்தக் கட்டத்தில் போரானது மொத்தம் 1,700,000 உயிர்களைப் பலி கொண்டது. சுமார் 2 மில்லியன் ஆண்கள் காயமடைந்தனர், 4 மில்லியனுக்கும் அதிகமானோர் சிறைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையில் போர் பொருளாதாரம் மற்றும் போரின் கொடூரமானது குடிமக்களுக்கு என்றுமில்லா வகையில் சமூகத் துன்பத்தை மோசமாக்கியது.

இந்த அபிவிருத்திகள் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஆழமான பாதிப்பைக் கொண்டிருந்தன. “புரட்சியின் நுழை வாயில்” என்ற கட்டுரையில் குறித்தவாறு, “இதற்கு முன்னர் ஒருவேளை புரட்சிகரக் கிளர்ச்சியின் ஒரு வார்த்தையை கூட உச்சரித்திருந்திராத தொழிலாளர்களின் பரந்த தட்டினர் மத்தியில் போர் சம்பவங்களின் ஆழமான பாதிப்பின் கீழ், ஆட்சியாளருக்கு எதிரான ஆழமான கசப்பான எதிர்ப்பு திரண்டது. இதற்கிடையில், முன்னேறிய தொழிலாளர் தட்டினர் மத்தியில், புதிய சம்பவங்களை விமர்சனத்துடன் மீளவேலை செய்வது பற்றிய நிகழ்ச்சிப்போக்கு இடம்பெற்றது. ஆனால் ரஷ்யாவின் சோசலிசப் பாட்டாளி வர்க்கமானது சர்வதேசியத்தின் மிக செல்வாக்குள்ள பகுதிகளில் தேசியவாதத்தின் வீழ்ச்சியால் வழங்கப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் தன்னை சீரமைத்துக்கொண்டு, புதிய சகாப்தமானது புரட்சிகர போராட்டத்தை மென்மைப்படுத்தாது கூர்மைப்படுத்த ஆணையிடுகிறது என்று புரிந்துகொண்டுள்ளது.”

சான் ஜூவான், மார்ச் 2: போர்ட்டோ ரிக்கன்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு. கட்டாய இராணுவ சேவைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்


போர்ட்டோ ரிக்கன்களை குறிவைத்து நீராவிக் கப்பலுக்காக ஒரு விளம்பரம்

மார்ச் 2, 1917 அன்று, அமெரிக்க காங்கிரசானது Jones–Shafroth சட்டம் போர்ட்டோ ரிக்கன் மக்களை அமெரிக்க குடிமக்களாக்க சட்டத்தை நிறைவேற்றியது. போர்ட்டோ ரிக்கா கரிபியனின் கிழக்கு முனையிலுள்ள ஏழ்மை பீடித்த பகுதி, இது 1898ல் சூறையிடும் ஸ்பானிய-அமெரிக்க போரில் வாஷிங்டனால் கைப்பற்றப்பட்டது.

எல்லைப்புற பகுதியில் வசிப்பவர் என்ற வகையில், புதிய போர்ட்டோ ரிக்க குடிமக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்கப்படவில்லை மற்றும் அவர்களுக்கு செனெட்டர் அல்லது காங்கிரஸிற்கு தேர்ந்தெடுக்கப்படுவராக உரிமை வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும், அவர்கள் அமெரிக்க இராணுவத்திற்குள் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இப்பொழுது அவர்கள் அமெரிக்க பிரதான நிலத்திற்குள் சுதந்திரமாக செல்லவும் முடியும். நேசநாடுகள் மத்தியில் போர் சாதனங்களுக்கான தேவைகளை நிறைவேற்ற ஒரு முழு வேலைவாய்ப்பளிக்கும் சூழ்நிலைக்கு அமெரிக்க பொருளாதாரம் நகரும் நிலையிலும் மற்றும் அமெரிக்கா, ஜேர்மனியுடன் ஒரு யுத்தத்திற்கு செல்ல தயாரிப்பு செய்த நிலையில், ஐரோப்பாவில் நடக்கும் யுத்தமானது, அங்கிருந்து அமெரிக்கா அதன் பாரம்பரிய உழைப்பு சக்தியை பெறுவதை தடுத்துவிட்டது.

வார்சோ, மார்ச் 3: 35 சதவீத கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் “முற்ற முழுதுமான கதியற்ற நிலைக்குள் விடப்பட்டனர்.”


கிழக்கு ஐரோப்பிய யூத மக்கள் அடர்ந்து வாழ்ந்த பிரதேச பூகோள வரைபடம்.

அமெரிக்காவிற்குள் செயற்பட்ட யூத அகதிகள் நிவாரண அமைப்புக்களின் சார்பாக கூட்டு விநியோக குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கை ஐரோப்பாவின் போர் நடவடிக்கைகள் உள்ள நாடுகளில் உள்ள 7 மில்லியன்  யூதர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர்” உயிர்வாழ உணவு என்ற வகையில், தினந்தோறும் நிவாரணம் தேவைப்படும் நிலையையும் விதியையும் முற்றிலும் சார்ந்திருந்தனர் என்று அறிவிக்கிறது. வார்சோவில் உள்ள 500,000 யூதர்களில் அரைவாசிப்பேர் மற்றும் Lodz இல் உள்ள அரைவாசி யூதர்கள் மிகவும் வறுமையான நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தனர். லித்துவேனியாவிலுள்ள நிலைமையும் அதேபோன்றுதான் இருந்தது.

தனியார் நன்கொடைகளை நாடிய அறிக்கையானது, “கூட்டு விநியோக குழுவானது பட்டினியை எதிர்கொள்ளும் அனைவரையும் காப்பாற்றுவது இயலாதது என்று உணர்கிறது. அது எவ்வளவு உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் கேள்வியாக இருந்தது.” முதலாம் உலக யுத்தத்தின் பொழுது, கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நூறாயிரக் கணக்கான யூதர்கள் போரின் நசுக்குதலிலிருந்தும் பசியிலிருந்தும் தப்பிக்க பறந்தோடினர் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஜேர்மனியிலும் இருக்க முயற்சித்தனர்.

ஹாலிவுட், கலிஃபோர்னியா, மார்ச்3: ஜோன் போர்ட் முதலாவது முறையாக இயக்குராகினார்

டொர்னாடோ முழுகிப்போனதாக நம்பப்பட்டது. இது 1917ல் எடுக்கப்பட்ட ஜோன் போர்ட்டின் இன்னொரு திரைப்படம், Harry Carey உடன் நேரடிப் படப்பிடிப்பு.

யூனிவேர்சல் ஸ்டூடியோவின் கிளை நிறுவனமான Bison Motion பிக்சர்ஸ், ஜான் போர்ட் இயக்கிய டொர்னாடோ என்ற படத்தை வெளியிட்டது. அந்த படத்தில் ஜான் போர்ட் ஒரு புலம்பெயர்ந்த கதாநாயகன் ஜாக் டேய்ட்டன் ஆக நடித்திருந்தார். இவர் “துப்பாக்கி இல்லா ஆள்” ஆக அறியப்பட்டிருந்தார். ஏனெனில் அதில் அவர் ஆயுதம் இல்லாமல் வில்லன்களை எதிர் கொண்டார். டேய்ட்டன் கொள்ளைக்காரர்களிடமிருந்து கிராமத்தைக் காப்பாற்றுவார் மற்றும் பரிசுத் தொகையை அயர்லாந்திலுள்ள தனது தாயாருக்கு (Jean Hathaway) அனுப்புவார். போர்ட் தாமே ஐரிஷ் புலம்பெயர்ந்தோரின் மகன் ஆவார். மற்றும் அவர் 1917ல் நீண்ட மற்றும் சிறந்த படைப்புக்களை படைக்கும் தொழிலில் இருந்தார். 1917ல் அவர் இன்னும் ஒன்பது பேசா திரைப்படங்களை எடுத்தார், மற்றும் 1927ல் இன்னும் 62 படங்களை எடுத்தார்.

வாஷிங்டன் டிசி, மார்ச் 4: வில்சன் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்

Wilson speaking in 1913 and 1916

வூட்ரோ வில்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவி ஏற்றார். இவர் உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்ற ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது ஜனாதிபதியாவார். வில்சன் அவரது முதல் வெற்றிக்கு, குடியரசுக் கட்சியில் முற்போக்குவாதி என போட்டியிட்ட தியோடர் ரூஸ்வெல்ட்டுக்கும் பதவியிலிருக்கும் ஜனாதிபதி வில்லியம் டிராப்ட்டுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவிற்கு நன்றிகூற கடமைப்பட்டிருந்தார். “அவர் நம்மைப் போரில் பங்கேற்க வைக்கமாட்டார்” என்ற முழக்கத்தின் கீழ் இரண்டாவது முறையாக வென்றார்.

ஆயினும், வில்சனுக்கு போரிலிருந்து அமெரிக்காவை விலக்கி வைக்கும் நோக்கம் இல்லை. சிம்மர்மான் தந்தி உரையை வெளியிடுவதற்கான அவரது முடிவை போலவே, அவரது பதவி ஏற்பு உரையானது அமெரிக்கா யுத்தத்தில் பங்கேற்பதற்கு வடிவமைக்கப்பட்டதாக இருந்தது. வில்சன் கூறிக்கொண்ட தனது வார்த்தைகளை தாராளவாத சர்வதேசியவாதத்தால் மூடுதிரையிட்டுக்கொண்டது ஜேர்மன் சூறையிடல்களால் மீறப்பட்டது.

“எமது சொந்த வாழ்க்கைக்கு வெளியில் ஒரு தேசமாக அமைந்திருக்கும் மற்றும் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நாம் கவனிக்கும் விஷயங்கள் மீது அவர்களை மேலும் மேலும் இதர விஷயங்கள் நிர்பந்தித்தன,” என வில்சன் கூறினார், எங்களால் மேற்கொள்ளப்பட்ட சில விசாரணைகள் சகிக்க முடியாததாக இருந்தன……. நம் உரிமைகளை இன்னும் அதிகமாக வலியுறுத்துவதற்கு…. நாம் சூழ்நிலைமைகளால் அதில் கூட இழுக்கப்படலாம்…

“நாம் வெற்றிகொள்ளவோ சாதகமாக்கிக் கொள்ளவோ ஆவல்கொள்ளவில்லை. இன்னொருவரை பலியிட்டுத்தான் நாம் பெறவேண்டும் என்று ஒன்றும் விரும்புவதில்லை. ஆனால் இன்னும் நாம் உள்ளூர்வாதிகள் அல்லர். நாம் கடந்து வந்திருக்கும் முப்பதுமாத கொந்தளிப்புகளின் துயர சம்பவங்கள் எம்மை உலக குடிமக்களாக்கி உள்ளன. புறமுதுகு காட்டல் அங்கே இருக்க முடியாது. ஒரு தேசம் என்ற வகையில் எமது சொந்த நல்வாய்ப்புக்களை நாம் மேற்கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளன”.

வேர்டன், மார்ச் 5: வேர்டன் அருகே ஜேர்மன் தாக்குதல் தோல்வியடைதல்


“புயல் துருப்புக்கள் விஷவாயுவின் கீழ் முன்னேறுதல்” போரில் பங்கேற்ற ஜேர்மன் அதிகாரியால் தீட்டப்பட்டது, 1924.

வேர்டனுக்கு அருகே புதுப்பிக்கப்பட்ட ஜேர்மன் தாக்குதலானது நன்கு பதுங்குகுழி பலப்படுத்தப்பட்ட பிரெஞ்சு நிலைகளுக்கு எதிராக குறைந்த முக்கியத்துவமே பெற்றது. Bois des Caurières எல்லையில் இருந்து ஜேர்மன் இராணுவம் ஒன்றே முக்கால் மைல் தூரம் தள்ளி இராணுவ தாக்குதலை நடத்தியது. கடும் குண்டு வீச்சுக்களுக்கு பின்னர் போரில் கடும் சேதங்கள் பற்றி அறிவிக்கப்பட்டன. சண்டை நடந்த இடத்தில் பெரும் புதைகுழிகள் அமைந்தன. 1916 பிப்ரவரிக்கும் டிசம்பருக்கும் இடையில் ஒன்பது மாதங்கள் நீடித்த முதலாவது வேர்டன் யுத்தமானது இருபக்கங்களிலும் சேர்த்து 300,000 பேர்களை பலி கொண்டது மற்றும் நூறாயிரம் பேர் ஊனமாகினர்.

சமீபத்திய தாக்குதலில் இறந்தவர்களில், Karlsruhe நகரை சேர்ந்த முகமூடி அணிந்த 32 வயது ஏர்ன்ஸ்ட் ஸிமிட் என்ற படையினரும் ஒருவராவர். பிப்ரவரி 10 அன்று அவர் வீட்டுக்குக் கடிதம் எழுதினார்: “நிலத்தடியில் தோண்டப்பட்ட 7 மீட்டர் குழியில், எலி, சுண்டெலிகள் மற்றும் பூச்சி வகைகள் உடன் வாழ்வதாக குறிப்பிட்டார். மொழிபெயர்க்கப்பட்ட கடிதத்தின் படி, “ஒரு முறை கூட தனது உடைகளை கழுவவோ மாற்றவோ முடியவில்லை” என்று எழுதி இருந்தார். மார்ச் 5 அன்று வீட்டுக்கு அவர் இரண்டாவது கடிதம் எழுதிய அன்று இறந்திருந்தார்.