ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

 Workers Struggles: Asia, Australia and the Pacific

தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக்

25 February 2017

ஆசியா

தென்கொரிய கப்பல் கட்டும் தொழிலாளர்கள் மறுசீரமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 15 ன்று தென் கொரியாவில் உள்ள மூன்று பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலைகளில் ஒன்றான உல்சனில் உள்ள ஹுன்டாய் கனரகத் தொழிற்சாலைக்கு (HHI) வெளியே சுமார் 4,000 இயந்திரத் தொழிலாளர்கள் நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். HHI தொழிலாளர்கள் யூலை மற்றும் ஆகஸ்டில் அரசாங்கத்திற்கு எதிராகவும்  நாட்டின் கப்பல் கட்டும் பணியிடங்களுக்கு நிறுவனம் ”மறுவடிவம்’’ கொடுக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும் பல மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களை நடத்தினர்.

யூனில் தென்கொரிய ஜனாதிபதி பார்க் ஜீயுன்-ஹைய், HHI, சாம்சாங் கனரக நிறுவனம் (SHI) மற்றும் டேவூ ஷிப்பில்லடிங் & மரைன் இன்ஜினரிங் (DSME)  ஆகிய மூன்று கப்பல் கட்டும் நிறுவனங்கள் “எலும்பை முறிக்கும்” சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். முன்மொழியப்ட்ட மறுசீரமைப்பானது கூலி, வேலை மற்றும் வேலைச் சூழ்நிலைகளில் பாரிய வெட்டுக்கள் உள்ளடங்கியிருக்கிறது. சாம்சாங் 2018 இறுதிக்குள் 40 சதவீத தொழிலாளர்களை குறைப்பதற்கு  திட்டமிடுகிறது மேலும் DSME 20 சதவீதம் சம்பளக் குறைப்பையும் அதனுடைய ஐந்து மிதக்கும் உலர் துறைமுகங்களை விற்பதாவும் கூறியிருக்கிறது. மேலும் 10,000 பணியிடங்களில் தொழிலாளர்களை குறைக்கிறது.

அக்டோபர் இறுதியில் HHI றொபோட்டிக்ஸ், குளோபல் செர்விசஸ், எலக்ரிக் & எனர்ஜி சிஸ்சிடம்ஸ், கன்ஸ்ரக்சன் மெசினரி, கிரீன் எனர்ஜி மற்றும் ஹெவி இன்டஸ்ரிஸ் என ஆறு பிரிவுகளாக பிரிக்கவுள்ளது என அறிவித்துள்ளது. HHI பிப்ரவரி 27 தனது பங்குதாரர்களின் கூட்ட நிகழ்ச்சிநிர அட்டவணையில் மறுசீரமைப்புத் திட்டங்களை சேர்த்துக்கொண்டிருக்கிறது.

பிலிப்பைன்ஸ்: ஸிபூ ஜீப்னி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

ஸிபூ நகரத்திலுள்ள ஓட்டுநர்கள் மற்றும் இயக்குபவர்கள் போக்குவரத்து தொழிற்சங்கமான PISTON (Pinagkaisang Samahan ng mga Tsuper at Opereytor Nationwide) உடன் சேர்ந்து, அதாவது 15 அல்லது அதற்குமேல் உள்ள பழைய பயணிகள் ஜீப்னி வண்டிகளை இயங்காமல் நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தினை எதிர்த்து திங்களன்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். என்னமாதிரியான நடவடிக்கை என்று முடிவு செய்யப்படாத நிலையில் ஜீப்னி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஸ்டொப் அன்டு கோ வுடன் ஒன்றுபட்டு இந்த மாதத் தொடக்கத்தில் கூட்டணி சேர்ந்து ஒரு  தேசிய வேலைநிறுத்த போராட்டத்திற்குப் பிறகு இது வருகிறது.

போக்குவரத்து வாகனங்களை நவீனமயப்படுத்தப் போவதாகவும் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றதாக அவற்றை மாற்ற விரும்புவதாகவும் Duterte அரசாங்கம் கோருகிறது. பெரிய நிறுவனங்கள் மட்டுமே தேவையான வண்டிகளை கொடுப்பதற்கு முடியும் அதனால் ஜீப்னிகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறோம் மேலும் சாலை தகுதிவாய்ந்த விதிகளை செம்மையாக அமுல்படுத்த வேண்டும் என்று ஸ்டொப் அன்டு கோ கூறுகிறது.

தற்காலிக திட்டத்தின் கீழ், ஒரு ஜீப்னி இயக்குபவருக்கு ஒரு உரிமத்தைப் பெற 7 மில்லியன் பீசஸ் ($US140,393) வேண்டும். 2018 க்குள் அந்த இயக்குபவர் 20 பகுதிகளை வைத்திருக்கவேண்டும் மேலும் 2019 இல் 40 பகுதிகளில் வண்டி ஓட்ட தொகுதி உரிமையை அதிகரிக்க வேண்டும். இயக்குபவர்கள் ஜீப்னி வண்டிக்கு GPS மற்றும் WI-FI இணைப்பினை கொண்டிருக்கவேண்டும்.

ஜீப்னி வண்டிகளை இயக்காமல் நிறுத்தினால் 600,000 ஓட்டுநர்கள் மற்றும் 250,000 இயக்குபவர்களுக்கும் அதிகமாக பாதிப்படைவார்கள்

கம்போடியா நீதிமன்றம் சம்பளம் கொடுப்பதற்கு கருவிகளை விற்பதற்கு ஆணையிடுகிறது

ஃப்நாம் பெந் நகராட்சி நீதிமன்றம் மூடப்பட்ட கம்போடியாவின் சிறந்தப ஆடை தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து தற்காலிகமாக கைப்பற்றப்பட்ட கருவிகளை நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி தொழிலாளர்களின் நிலுவையிலிருக்கும் சம்பள பாக்கியை கொடுப்பதற்கு பயன்படுத்துமாறு ஆணையை கொடுத்திருக்கிறது. ஜனவரியில் இதன் முதலாளி தொழிலாளர்களுக்கு டிசம்பர் மாத சம்பளத்தை கொடுக்காமல் திடீரென்று தொழிற்சாலையை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இது ஃப்நாம் பெந் பக்கத்தில் கெயின் ஸ்வாய் மாவட்டத்தில் இருக்கிற தொழிற்சாலையிலிருந்து சுமார் 200 தொழிலாளர்கள், இந்த பிரச்சனையில் அரசாங்கம் தலையிடக்கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தார்கள். நீதிமன்றம் தொழிற்சாலை கட்டிடத்தையும், அலுவலக பொருட்களையும், இயந்திரங்களையும் மற்றும் வாகனங்களையும் தற்காலிகமாக கைப்பற்றியது.

கம்போடியா ஆடைத் தொழிற்சாலையில் அதிகமானோர் மயங்கி விழுந்தனர்.

செவ்வாயன்று, காம்போங் சாம் பாதே மாவட்டத்திலுள்ள லீ குஜாங் கூட்டுறவு ஆடைத் தொழிற்சாலையில் பக்கத்திலுள்ள விவசாய பண்ணையில் பயன்படுத்திய பூச்சிக் கொல்லி மருந்தினை சுவாசித்த 80 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரசாயண நாற்றத்தை  சுவாசித்த மறுகணம் திடீரென வலுவிழந்ததுடன் மயக்கமுற்றார்கள் என்று தொழிலாளர்கள் சொன்னார்கள். நவம்பரில் இதே தொழிற்சாலையிலிருந்து 40 தொழிலாளர்கள் பக்கத்திலுள்ள வயலில் குறிப்பிடப்பட்ட பூச்சிக்கொல்லியினை தெளிக்கும்போது சுவாசித்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது சட்டப்படியானது என்றும், தெளிப்பது தொடரும் என்றும் ஒரு அரசாங்க தொடர்பாளர் இந்தப் பகுதியின் விவசாயிகளால் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தைப் பாதுகாக்கும் விதமாக பேசியுள்ளார்.

தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் கூற்றுப்படி,2015இல் 32 கம்போடியன் ஆடைத் தொழிற்சாலையிலும் காலணித் தொழிற்சாலைகளிலும் கிட்டத்தட்ட 2000 தொழிலாளர்கள் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். 2014 புள்ளிவிபரங்களுடன் இந்தப் எண்ணிக்கை அதே நிலமையில் இருக்கின்றன. அதிகப்படியான மேலதிகமான வேலைப்பழுக்களாலும், மோசமான சுகாதாரம் மற்றும் உற்பத்தியிலும் பூச்சிகளைக் கட்டுப்டுத்த இராசயணங்களப் பயன்படுத்துவதாலும் மயக்கமடைந்து விழுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தான்; எல்லைப்புற மாகாண சுகாதார தொழிலாளர்கள் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப்ரவரி 18 அன்று எல்லைப்புற மாகாண மேல் Dir இல் சுகாதாரத்துறையின் 4ம் தர பாராமெடிக்கல் ஊழியர்கள் சுகாதாரநல தொழிலாளர்கள் மேல் உடல்ரீதியான தாக்குதலுக்குட்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இரண்டு ஊழியர்கள் உயரடுக்கினை சேர்ந்த இராணுவத்தினரால் தாக்கப்பட்டிருந்தார்கள். தாலுகா தலைமை மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தை விசாரணை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அடித்ததற்காக எந்த காரணத்தையும் கொடுக்கவில்லை. தாக்கப்பட்ட அவரகளுடைய புகாரினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தொழிலாளர்கள் காவல்துறையினரை குற்றம்சாட்டினர்.

உள்ளூர் பழங்குடி கவுன்சில் தலையீட்டினைத் தொடர்ந்து இரண்டாவது நாளன்று வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்ப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுத்தனர் அல்லது அவர்கள் மீண்டும் அவர்களுடைய வெளிநடப்பை தொடர்வோம் என்று கூறியுள்ளார்கள்.

தொழிலாளர்கள் மீது இராணுவ சிப்பாய்கள் தாக்குதல்கள் நடப்பது வழக்கத்துக்கு மாறானதாக இருக்கையில், பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தவர்களும் வழமையாக மருத்துவமனை தொழிலாளர்களை தாக்குகிறார்கள். தரம் குறைந்த மருத்துவ பராமரிப்பு மற்றும் நிலமைகள் மோசமானதாகவும் இருப்பதாக கூறி நோயாளிகள் மருத்துவ அலுவலர்மீது தவறாக பழிபோடுகிறார்கள்.

ராவல்பிண்டியில் இடமாற்றுதலுக்கு எதிராக ஆசிரியர்கள் போராடுகிறார்கள்.

புதன்கிழமை அன்று, 38 ஆரம்ப நிலை ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களும் ராவல்பிண்டியிலுள்ள பஞ்சாப் கல்வித்துறை தூரத்திலுள்ள கிராம பள்ளிகளுக்கு அவர்களை திடீரென இடமாற்றுதல் அளித்ததால் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆசிரியர்கள் இடமாற்றுதலை திரும்பப்பெறவேண்டுமென்று கோரிக்கையை வைத்தனர். இது திடீரென்று திணிக்கப்பட்டது மேலும் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் சவால் செய்ய தீர்மானித்துள்ளனர்.

இந்தியா: வதோரா நகராட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குஜராத்தில் உள்ள வதோரா கூட்டுறவு நகராட்சி (VMC) பல நூறு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிப்ரவரி 16 அன்று நகரத்தில் நிரந்தரப் பணியுரிமை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தவார திட்டமிட்ட போராட்ட நடவடிக்கையானது VMC நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பார்ப்பதாக ஒரு தெளிவற்ற வாக்குறுதிக்கு பின்னர் தொழிற்சங்கத்தால் திரும்பப்பெறப்பட்டது.

200 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அவர்களுடைய நிலுவையில் இருக்கும் நிரந்தரப் பணியமர்த்தல் கோரிக்கைக்காக ஜனவரி 27 அன்று VMC வாகன முற்றுகை போராட்டத்தை செய்தனர். குஜராத் மஸ்தூர் சேனா தொழிற்சங்க பிரதிநிதி 10 தொடக்கம் 15 வருடங்களுக்கு சுமார் 250 ஓட்டுநர்கள் பணியிலமர்த்தப்பட்டிருக்கிறார்கள் ஆனால் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை ஏனெனில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்ததாரரை மாற்றிவிடுகின்றனர் என்று கூறினார். அவர்களுக்கு குறைந்தபட்ச கூலியும் கொடுக்கப்படுவதில்லை அல்லது அவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருந்தாலும் போனஸ், விடுமுறை, மருத்துவ உதவிப்படி, அல்லது ஊழியர் மாநில காப்பீடோ வழங்கப்படுவதில்லை என்று மேலும் அவர் கூறினார்.

தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனையாளர்கள் போராட்டம்

500 மதுபானக் கடைகளை மூடுவதாக அரசாங்கம் அறிவித்த பின்னர் புதன்கிழமையன்று சென்னையிலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வெளியே சுமார் 500 தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கார்ப்பரேசன் (டாஸ்மார்க்) தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மற்ற அரசாங்கத் துறைகளில் வேலைக்கான உத்தரவாதத்தைக் கொடுக்காதவரை தங்களுடைய போராட்டத்தை தொடரப்போவதாக அவர்கள் கூறினர்.

டாஸ்மார்க் தொழிலாளர் சங்கத்தின் கூற்றுப்படி இந்த மூடலானது 2000 தொழிலாளர்கள் வேலையற்ற நிலைக்கு தள்ளப்படுவர். பல டாஸ்மார்க் தொழிலாளர்கள் பட்டதாரிகள் அவர்களுக்கு பல அரசாங்க துறைகளில் வேலை கொடுக்கமுடியும் என்று ஒரு தொழிற்சங்க பிரதிநிதி கூறினார்.

தமிழ்நாடு: அலுமினியம் அலாய் தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேற்றப்பட்டனர்

ஸ்ரீபெரும்புதூர் இருக்கும் சிஎம்ஆர் டொயான்ஸு அலுமினியம் தொழிற்சாலையிலிருந்து பத்தொன்பது நிரந்தர தொழிலாளர்கள் அவர்களுடைய இரண்டு மாத வேலைநிறுத்தப் போராட்டத்தை முடித்துகொண்ட பின்னர் உடனடியாக இந்தவாரத்தில் வேலையைவிட்டு வெளியேற்றப்பட்டனர். தொழிற்சங்கத்தை உருவாக்கியதற்காக இரண்டு சக தொழிலாளிகளை பணியிடம் மாற்றியதைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்கத்தை உருவாக்கிய உடனே அந்த தொழிற்சங்கத்தின் தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் தொலைவிலுள்ள தொழிற்சாலைக்கு பணிமாற்று உத்தரவை கொடுத்திருந்தனர்.

இந்த தொழிற்சங்கம் தற்போது இருக்கும் 10,000 ரூபா ($US150) மாத சம்பளத்தைவிட சம்பள உயர்வு கோருவதற்காக உருவாக்கப்பட்டது. அத்துடன் தொழிற்சங்க உறுப்பினர்கள் தொழிற்சாலையில் ஏற்படும் அதிகப்படியான தூசுகளிலிருந்தும், மற்றும் இதர மாசுபடுத்தும் நிலைகளிலிருந்து பாதுகாப்பதற்கான உபகரணங்களை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஜப்பானிலுள்ள சென்சுரி மெட்டல் ரிசைக்கிளிங் மற்றும் டொயட்டா ரிசுயுசு கார்ப்பரேசன் இடையில் கூட்டு முயற்சியில் உருவான நிறுவனம்தான் சிஎம்ஆர் டொயான்ஸு. இந்த நிறுவனம் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் உதிரிப்பாக விநியோகத்தர்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு அலுமினியம் அலாய் பொருட்களை உற்பத்திசெய்கிறது.

இலங்கை: பொதுமருத்துவமனை துணை மருத்துவக் குழுவினர் போராட்டம்.

இலங்கை பொதுமருத்துவமனை பல நூற்றுக்கணக்கான துணை மருத்துவ குழுக்கள் கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சகத்திற்கு வெளியே புதன்கிழமையன்று ஏராளமான கோரிக்கைகளைவைத்து போராட்டம் செய்தனர்.

பட்டதாரிகளுக்கு பொருத்தமான சம்பளம் அளவு, துணை மருத்துவக்குழுவுக்கு ஒரு இயக்குநர் நிலையை உருவாக்குதல் மற்றும் பொருத்தமான மொழித் திறன் சோதனை போன்ற கோரிக்கைகளும் அதில் அடங்கியிருந்தன. தங்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால் தொழிலாளர்கள் இடைவிடாத வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவோம் என்று எச்சரிக்கைவிட்டுள்ளார்கள்.