Print Version|Feedback
India: BJP-backed student union unleashes violence at Delhi University
இந்தியா: தில்லி பல்கலைகழகத்தில் பி.ஜே.பி. ஆதரவு பெற்ற மாணவர் சங்கம் வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறது
By Pradeep Ramanayake
8 March 2017
நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தையும், அதன் நச்சுத்தன்மை வாய்ந்த இந்துமத மேலாதிக்கவாத கருத்தியலையும் விமர்சிப்பவர்களான தில்லி பல்கலைகழக மாணவர்களை மௌனமாக்குவதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (Akhil Bharatiya Vidyarthi Parishad's) அச்சுறுத்தலையும், வன்முறையையும் பயன்படுத்தியதற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்கலைக்கழக வளாகங்களில் கோபம் மற்றும் எதிர்ப்பும் வெளிப்பட்டுள்ளது.
அனைத்து இந்திய மாணவர் குழு (All Indian Student Council-ABVP) என்பது, பி.ஜே.பி. இன் சித்தாந்த வழிகாட்டியாகவும், அதன் பெரும்பாலான காரியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் தளமாகவும் இருக்கின்ற பாசிச ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (Rashtriya Swayamsevak Sangh-RSS) இனை சார்ந்த ஒரு மாணவர் அமைப்பாகும்.
தில்லி பல்கலைகழகத்தின் வடக்கு வளாகத்தில் இடதுசாரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட ABVP இன் தாக்குதலானது, அரசியல் கருத்துவேறுபாடுகளையும், இந்திய பல்கலைகழகங்களில் கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் இல்லாதொழிப்பதற்கான அரசாங்க ஆதரவான ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் மிக சமீபத்திய அத்தியாயமாக மட்டுமே உள்ளது.
தில்லி பல்கலைகழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரி இலக்கிய சமூகம் (Delhi University's Ramjas College Literary Society) பிப்ரவரி 21-22 ஆம் தேதிகளில் "எதிர்ப்பு கலாச்சாரம்" எனும் இரு நாள் கருத்தரங்கினை நடத்த திட்டமிட்டிருந்ததை ABVP தடுத்தது.
அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் (All India Student Federation-AISF) ஆர்வலர்களும், மேலும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (Stalinist Communist Party of India-CPI) மாணவர் பிரிவை சார்ந்தவர்களுமான, ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் (Jawaharlal Nehru University-JNU) இரு மாணவர்கள் உமர் காலித் மற்றும் ஷேஹ்லா ரஷீத் ஆகியோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்பதை பி.ஜே.பி. தொடர்புடைய மாணவர் குழு கண்டனம் செய்தது.
ABVP இன் அழுத்தத்திற்கு பணிந்தும், தில்லி பல்கலைகழகத்தின் வடக்கு வளாகத்தில் "அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது" போன்ற செயல்நோக்கம் கொண்டிருப்பதாகவும், ராம்ஜாஸ் கல்லூரி முதல்வர் இந்த கருத்தரங்கில் காலித் மற்றும் ரஷீத் இன் பங்கேற்பை இரத்துசெய்தார். இது மட்டுமே ABVP க்கு ஊக்கமளித்தது. இதன் ஆர்வலர்கள் இக்கருத்தரங்கு மேலும் தொடர்ந்து நடைபெற இயலாததை உறுதி செய்யும் வகையில் மின் வழங்கலை நிறுத்தியதுடன், கருத்தரங்கு அரங்கத்தையும் மூடிவிட்டனர்.
JNU மாணவர்கள் காலித் மற்றும் ரஷீத் ஐ "தேச விரோதிகள்" என்று ABVP முத்திரை குத்தியது. BJP, RSS மற்றும் ABVP ஆகியவை தங்களது வலதுசாரி, இனவாத திட்டத்தினை எதிர்க்கின்ற எவரையும் அவர்கள் "தேச விரோதிகள்" என்று வழக்கமாக முத்திரை குத்துவது போன்று, இவர்களையும் "நாட்டின் எதிரிகள்" என்று வஞ்சனையாகவும் மறைமுகமாகவும் குறிப்பிட்டன.
இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட மாநிலமும், மேலும் அப்சல் குரு என்ற ஒரு காஷ்மீரி மீது போலியாக புனையப்பட்ட பயங்கரவாத குற்றஞ்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டு 2013 இல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதுமான ஜம்மு காஷ்மீரில் அரசு அடக்குமுறையை எதிர்க்கின்ற வகையில் JNU நடத்திய ஒரு பேரணியின்போது காலித் உரையாற்றிய பின்னர் கடந்த ஆண்டு ABVP-BJP இன் சூனிய வேட்டையின் இலக்காக காலித் இருந்தார். (பார்க்கவும்: இந்தியா: "தேச விரோத" மாணவர்களை ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் (JNU) தண்டிப்பது குறித்து BJP இன் சூனிய வேட்டை தீவிரமடைந்துவருகிறது)
ABVP மூலமாக வலதுசாரியின் சீற்றம் தூண்டிவிடப்பட்டதன் விளைவாக, காலித்தும், மற்ற இரண்டு JNU மாணவர்களும் தேச துரோக குற்ற விசாரணையை இன்னும் எதிர்கொள்கின்றனர்.
பிப்ரவரி 23ல், AISF மற்றும் மாவோயிச அனைத்து இந்திய மாணவர் சங்கம் (Maoist All India Student Association-AISA) மற்றும் தில்லி பல்கலைகழக ஆசிரியர்கள் சங்கம் (Delhi University Teachers Association) ஆகியவற்றின் உறுப்பினர்கள் உட்பட தில்லி பல்கலைகழக மாணவர்கள், ABVP அதன் எதிரிகளை தொந்தரவு செய்வதானாலும், கருந்தரங்கினை சீர்குலைப்பதாலும் அதற்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை எடுப்பதற்கு கோரிக்கைவிடுக்கும் பொருட்டு பேரணிக்கு அழைப்புவிடுத்தது.
புதிய வன்முறையை கொண்டு ABVP இதற்கு விடையிறுத்தது. முதலில் இதன் உறுப்பினர்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும் ராம்ஜாஸ் கல்லூரிக்குள் வைத்து பூட்டுவதற்கு முயன்றனர். இருப்பினும் எதிர்ப்பு தொடங்கியபோது, ABVP அடியாட்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை ஹாக்கி மட்டைகளைக்கொண்டு தாக்கினர், அத்துடன் அருகிலுள்ள கடைகளிலிருந்து திருடப்பட்ட பாட்டில்களால் அவர்களை தாக்கவும் செய்தனர். பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். கைகலப்பின்போது குறைந்தபட்சம் 20 நபர்களாவது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்.
பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவரான நந்திதா நரேன், "முன்னரே மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் நாங்கள் நேற்று பார்த்ததற்கும், இன்று பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆசிரியர்களும் தாக்கப்பட்டனர்." என்று செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார்.
ஆங்கில துறையை சேர்ந்த ஒரு விரிவுரையாளரான தேப்ஜானி சென்குப்தா, "இதுதான் பாசிசத்தின் முகம்," என்றும், மேலும் பொருளாதாரத்தை கற்பிக்கும் சௌம்யஜித் பட்டாச்சார்யா, "இது வளாகத்திற்குள்ளும், வளாகத்திற்கு வெளியேயும் நடந்துகொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டதாகவும் கூறினார்.
ABVP அடியாட்கள் தீவிரமாக பொலிஸால் உதவி செய்யப்பட்டனர். "ஒழுங்கை பாதுகாக்க" நூறு அல்லது அதற்கு கூடுதலாகவே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ், ABVP இன் வன்முறைக்கும், அச்சுறுத்தலுக்கும் எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை தடுப்பதில் மட்டும் தோல்வியுறவில்லை. அவர்கள் தாங்களே எதிர்ப்பாளர்களை தாக்கினர். மாணவர்களும், பத்திரிகையாளர்களும் பொலிஸால் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டதை வீடியோ காட்சிகள் காண்பிக்கின்றன.
பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ளும் நிலையில் பொலிஸ் ஆணையர் தேவேந்திர பதக், பொலிஸ் இன் அப்பட்டமான மறைப்பினையும், அரசாங்கத்துடன் இணைந்த ABVP அடியாட்களுக்கு இருக்கின்ற அரசியல் உந்துதல்பெற்ற ஆதரவினையும், அவர்களது நடத்தையினை "தொழில்முறைகேடு" என்று குறிப்பிட்டதையும் மறைக்க முயன்றார். மூன்று பொலிஸ்களை அவர் பலிகடாக்களாக்கி பணி இடைநீக்கம் செய்தார்.
தில்லி பல்கலைகழகத்தில் நடந்த ஜனநாயக விரோத தாக்குதல் குறித்து நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் பல்கலைகழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொலம்பியா, கேம்பிரிட்ஜ், பென்சில்வேனியா, டொராண்டோ, கலிபோர்னியா, நியூயோர்க், மற்றும் கோட்டின்ஜேன் பல்கலைகழகங்களை சேர்ந்த உயர்கல்வியாளர்களால் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கை பின்வருமாறு தெரிவித்தது: "கல்லூரி வளாகங்களில் அரசு பொறுத்துக்கொண்டிருக்கும் வன்முறைக்கான விதிகளுக்கு எதிராக நாம் நிற்கவேண்டும்." இந்த அறிக்கை மேலும், "ஆளும் கட்சியின் மாணவர் அணி" "அயோக்கியத்தனமான முரட்டுத்தனத்தை தணிக்கை" செய்வதை செயல்படுத்தி வருவதுடன், மேலும் "முற்போக்கான அரசியலை தடைசெய்வதையும், வன்முறை கலாச்சார தேசியவாதத்தின் அரசியலை மட்டும் அனுமதிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது" என்று மேலும் குறிப்பிட்டது.
ABVP, ராம்ஜாஸ் கல்லூரி கருத்தரங்கில் காலித் மற்றும் ரஷித்தின் பங்கேற்பை தடுப்பதில் இருந்த அதன் பாத்திரம் பற்றி வெட்கமின்றி இருக்கின்றபோதும், தனது அச்சுறுத்தல் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. ABVP இன் ஒருங்கிணைப்பு செயலரான சுனில் அம்பெத்கர் கூறியதுபோல மாணவர்கள் குழு அனைத்து பல்கலைகழகங்களுக்கும், "எந்தவொரு 'தேச விரோத' கோஷத்திற்கும், 'சர்ச்சைக்குரிய' நபர்களின் அழைப்புகளுக்கும் எதிராக அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்" என்று எழுதவேண்டுமென Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, தில்லி பல்கலைகழகத்தில் குழு ஒன்று, "கம்யூனிஸ்ட் சக்திகளுக்கு" எதிராக ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது, மேலும் "தேசியவாத சக்திகளுக்கு எதிரானவர்கள்" மீதான கூடுதலான தாக்குதல்கள் குறித்தும் அச்சுறுத்தியது.
"கம்யூனிஸ்ட் பயங்கரவாதத்தை" கண்டனம் செய்யும் விளம்பர பலகைகளையும், ஸ்லோக அட்டைகளையும் ABVP நிறுத்திவைப்பதன் மூலமாக வன்முறை அச்சுறுத்தல் சுட்டிக்காட்டப்பட்டது. கேரளாவில் ஒரு RSS ஆர்வலரின் சிதைவுற்ற உடலின் படங்களை இந்த காட்சி உள்ளடக்கியது, இங்குதான் ஸ்ராலினிச தலைமையிலான மாநில அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் RSS ற்கும் இடையில் வன்முறை மோதல்கள் ஏற்பட்டன.
கடந்த வாரம் முன்னதாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு RSS தலைவர், கேரள முதலமைச்சரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of India-Marxist-CPM) அரசியல் குழு உறுப்பினருமான பினராயி விஜயனுக்கு தாராளமாக 100 மில்லியன் இந்திய ரூபாய் உதவித்தொகை ஒதுக்கீட்டினை அறிவித்தார்.
ஸ்ராலினிச CPM, CPI யும் கம்யூனிசத்துடன் இணைந்து எதையும் செய்யவில்லை. பல தசாப்தங்களாக புதிய தாராளவாத சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுவந்துள்ளதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு மூலோபாய கூட்டினை தொடர்கின்றதுமான அலுவலக அரசாங்கங்களில் நிலைக்க வைப்பது உட்பட முதலாளித்துவ அரசியல் அமைப்புமுறையின் ஒரு அங்கமாக அவைகள் செயல்பட்டுள்ளன.
இருப்பினும், ABVP இன் மூலமாக கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் தூண்டிவிடப்பட்டு வருகின்றது, மேலும் எதிர்விளைவை தூண்டுவதையும், எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து உருவாகின்ற எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்குவதையும் இலக்காக கொண்டு இந்துமத வலது இயக்கப்படுகிறது.
ABVP இன் செல்வாக்கின் காரணமாக பல்கலைகழகம் "அமைதியான தணிக்கைமுறையை" அனுபவித்துகொண்டிருக்கிறது என்று தில்லி பல்கலைகழகத்தின் மாணவர்களும், ஆசிரியர்களும் புகார் செய்கின்றனர். ABVP இன் அச்சுறுத்தக்கூடிய தாக்குதல்களால், பல்கலைகழக அதிகாரிகள் இந்துமத உரிமை பற்றிய புகழாரங்கள் மற்றும் பாரபட்சங்களுக்கு சவாலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க மிகவும் தயங்குகின்றனர்.
அடக்குமுறைக்கு மேலும் வலுசேர்ப்பதாக தில்லி வளாகத்தை சுற்றிலும் சுமார் 500 பொலிஸ்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பி.ஜே.பி. அரசாங்கம் அதன் பங்கிற்கு வன்முறை மற்றும் அச்சுறுத்தலுடனான ABVP இன் பிரச்சாரத்திற்கு செருக்குடன் ஆதரவளித்தது. தில்லி பல்கலைகழகத்தின் வடக்கு வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் பற்றி கேட்டபோது மாநில அமைச்சர் ஜிதேந்திர சிங் பின்வருமாறு கூறினார்: "இந்திய எதிர்ப்பு செயற்பாட்டுவாதங்களுக்கு உதவியளிக்க இந்தியா அனுமதிக்கக்கூடாது என்ற செய்தி உரத்த சத்தத்தோடும், தெளிவாகவும் வெளியே செல்லவேண்டும். விவாத சுதந்திரம் இந்திய எதிர்ப்பு செயற்பாட்டுவாதங்களை தூண்டிவிடுவதற்கான விவாதத்திற்கு அனுமதிக்க முடியாது." சிங் மேலும், "அமெரிக்காவும், இங்கிலாந்தும் உட்பட உலகின் மிகுந்த தாராளவாத ஜனநாயகங்களும் கருத்து முரண்பாட்டின் மீது தணிக்கையை சுமத்துகின்றனர்" என்றும் கூறினார்.
வாஷிங்டனில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு தடைகள் மீதான தனது விரோதப்போக்கு குறித்து எந்தவொரு இரகசியத்தையும் கொண்டிராத ஒரு ஜனாதிபதி ஆட்சிக்கு வருவது உட்பட, உண்மையில் உலகம் முழுவதிலுமான தீவிர வலதுசாரி தேசியவாத சக்திகளை வலுப்படுத்துவதன் மூலமாக, இந்துமத மேலாதிக்கவாத பி.ஜே.பி. யும் அதன் வலதுசாரி கூட்டணியும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.
தில்லி பல்கலைகழக நிகழ்வுகள் ஜனநாயக உரிமைகள் மீதான மோடி தலைமையிலான பி.ஜே.பி. மேற்கொண்ட ஒரு பரந்த தாக்குதலின் அங்கமாக இருந்தன. பி.ஜே.பி. அரசாங்கத்தின் சிக்கன மற்றும் முதலீட்டாளர் சார்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்பை அது எதிர்கொண்டதுடன், இந்த அரசாங்கம் அரசு அடக்குமுறையையும், பிற்போக்குத்தன வகுப்புவாதத்தையும், இராணுவவாத முறையீடுகளையுமே அதிகரித்த வகையில் நாடுகிறது.
இந்தியாவின் புதிய பலத்திற்கு நிரூபணமாக கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானுள்ளே சட்டவிரோதமான மற்றும் மிகவும் ஆத்திரமூட்டுகின்ற வகையிலான சிறப்பு அதிரடிபடையினரின் திடீர்தாக்குதல்கள் உத்திரவிடப்பட்டது குறித்து பி.ஜே.பி. கொண்டாடியுள்ளதுடன், மேலும் இராணுவத்தின் நடவடிக்கைகளை சந்தேகிப்பது "தேச துரோகம்" மட்டுமல்ல, பாதியளவு காட்டிக்கொடுப்புமாகும் என்று ஆலோசனை வழங்குகின்றது.
அரசாங்கத்தினால் இந்த சச்சரவு அதிகரித்தளவில் "நாட்டின் ஒற்றுமைக்கு" ஒரு அச்சுறுத்தல் போன்று உள்ளது என சித்தரிக்கப்பட்டுவந்ததுடன், இது ஒடுக்கப்படவேண்டியது என கூறியுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களும், மாணவர்களும் பி.ஜே.பி. இன் வகுப்புவாதம் மற்றும் சர்வாதிகார அரசியலால் ஆத்திரமடைந்துள்ளனர். ஆனால், ஆளும் உயரடுக்கு மற்றும் இந்திய அரசின் அரசியல் கட்சிகளுக்கு தொழிலாளர் வர்க்கத்தை கட்டிப்போடும் அவர்களது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதன் மூலமாக ஸ்ராலினிச CPI மற்றும் CPM மும் விடையிறுத்துகொண்டிருக்கின்றன.
பி.ஜே.பி. இன் வெளிப்படையான இந்துமத வகுப்புவாத தேசியவாதத்திற்கு எதிராக ஸ்ராலினிஸ்டுகள் ஒரு "முற்போக்கு" இந்திய தேசியவாதம் என்று அழைக்கப்பவதை முன்வைப்பதுடன், இந்த அடிப்படையில் இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியும் வலதுசாரி வகுப்புவாத மற்றும் சாதிய கட்சிகளின் ஒரு தொகுப்பாகவும் உள்ள வலதுசாரிக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ளதை நியாயப்படுத்துகின்றது.
இதனால், கடந்த வாரம் ஒரு பேரணியில் மாணவர்களிடையே உரையாற்றிய போது, CPM பொது செயலர் சீதாராம் யெச்சூரி "நமது தேசியவாதம் என்பது 'நாம் இந்தியர்கள்' என்பதேயன்றி 'யார் இந்து' என்பதல்ல" என்று அறிவித்தார்.
"கருத்தரங்கினை சீர்குலைக்கவும், ஜனநாயக ஆர்ப்பாட்டத்தை தாக்கவும், வன்முறையில் இறங்கிய அனைவரையும் கைதுசெய்வதற்கு அரசாங்கம் மற்றும் பொலிஸ் மீது அழுத்தத்தை ஏற்படுத்தவேண்டும்” என்று CPM கட்சியின் அரசியல் குழுவின் ஒரு அறிக்கை வலியுறுத்தியது.
தொழிலாளர்களும், இளைஞர்களும் CPM, CPI இன் முதலாளித்துவ சார்பு அரசியல் குறித்த ஒரு விமர்சன இருப்புநிலை குறிப்பை வரையவேண்டும். பல ஆண்டுகளுக்கு, மத்தியில் அவர்கள் வலதுசாரி அரசாங்கங்களின் அதிகாரத்தில், அவற்றில் பெரும்பாலும் காங்கிரஸ் தலைமையில், அவைகள் நிலைநிறுத்தப்பட்டன, ஏனெனில் ஆட்சிக்கு வரவிடாமல் பி.ஜே.பி. இன் பாதையை தடுக்கவேண்டியது அவசியமாக இருந்தது என்று கூறுகின்றனர். ஸ்ராலினிச ஆதரவுகொண்ட திட்டமான தாராளவாத "மனிதாபிமானத்துடனான சீர்திருத்தம்" என்பதன் தோல்வி குறித்த பரந்த மக்களின் கோபத்தை சுரண்டுவதற்கு இந்த கொள்கை பி.ஜே.பி. க்கு கதவை திறந்துவிட வழிவகுத்தது.
ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டுதல் என்பது ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கு அவசியமாவதுடன், பரந்தளவிலான மக்கள் வறுமை, வேலையின்மை, மற்றும் எப்பொழுதும் பெருகிவருகின்ற சமூக சமத்துவமின்மைக்கு ஒரு சோசலிச தீர்வை முன்னெடுக்கவேண்டியுள்ளது.