Print Version|Feedback
Workers Struggles: Asia, Australia and the Pacific
தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக்
11 February 2017
பாகிஸ்தான்: நகரசபைத் தொழிலாளர்கள் ஹைதராபாத்துக்கு தண்ணீர் செல்வதை நிறுத்தினார்கள்
கொடுக்கப்படாத சம்பள மற்றும் நீண்டநாள் நிலுவையிலிருக்கும் கோரிக்கைகளுக்காக ஹைதராபாத் பத்திரிகையாளர் கூடம் மற்றும் லட்டிபாபாத் மற்றும் ஜாம்ஸொராவில் இருக்கும் தண்ணீர் வடிகால் தொழிற்சாலைக்கு வெளியில் மூன்று நாட்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். அதனை சிந்து மாகாண அரசாங்கம் நிராகரித்த பிறகு விரக்தியடைந்த ஹைதராபாத் அபிவிருத்தி ஆணயம் மற்றும் அதன் துணை நிறுவனமான நீர் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் நகரத்திற்குச் செல்லும் நீர் வளங்களை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நிறுத்தினார்கள்.
நிரந்தர ஊழியர்களின் நான்கு மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் இருக்கும் சம்பளம், ஆறு மாதங்களுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளபாக்கி மற்றும் வைப்பு நிதி உட்பட நிலுவையிலிருக்கும் தொகை ஆகியனவே அதன் உடனடியான கோரிக்கைகள் என்று ஹைதராபாத் அபிவிருத்தி ஆணய தொழிற்சங்கம் கூறியது. 550 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான ஓய்வுதியங்கள், பணிநீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதும் மற்ற கோரிக்கைகளாக இருந்தன. 850க்கு மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 1300 ஒப்பந்த தொழிலாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் தங்களை நிராகரித்தால், தொடர்ச்சியாக ஒரு நாளைக்கு 6 மணிநேரம் நீர் வழங்கலை தடுத்து நிறுத்துவோம் என்று இந்த தொழிலாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
பாகிஸ்தான் அரசாங்க மருத்துவமனை செவிலியர்கள் வெளிநடப்பு
சிந்து மாகாணத்திலுள்ள பல அரசாங்க மருத்துவமனைகளிலிருந்து நூற்றுக்கணக்கான செவிலியர்கள் செவ்வாய்க் கிழமையன்று வெளிநடப்பு செய்தனர். ஊதிய உயர்வு, ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பிற கோரிக்கைகளுக்காகவும் கராச்சி பத்திரிகையாளர் கூடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. பல்வேறு மாவட்டங்களின் அனைத்து தகுதிநிலைகளிலிருந்தம் செவிலியர்கள் இந்த வேலைநிறுத்ததில் பங்குபற்றியிருந்தனர்.
மாத சம்பளத்தினை 6,000 ரூபாயிலிருந்து ($US57) 20,000 ரூபாயாக உயர்த்தவும், மருத்துவ படி, சீருடை வழங்கள், உணவுக் கொடுப்பனவு, மற்ற மாகாணங்களுக்கும் சமமான ஊதிய சலுகைகள் மேலும் 1000 செவிலியர்களை பணியமர்த்துவது ஆகியவற்றை கூட்டுச் செவிலியர்கள் குழுவானது கோரியிருக்கிறது.
சிந்து பொதுத்துறை மருத்துவமனைகளில் பல லட்சக்கணக்கான நோயாளிகளை கவனிப்பதற்கு 3.000 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் மற்றும் முக்கியமான அடிப்படை சுகாதார மையங்கள் மற்றும் கிராம சுகாதார மையங்களில் செவிலியர்களும் எவருமே இல்லை என்றும் ஒரு செவிலியர்களுக்கான பிரதிநிதி கூறினார். மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் ஒன்றான லார்கனாவிலுள்ள பெனாஷிர் பூட்டோ மருத்துவமனையில் 200 செவிலிகள் தேவையாக இருக்கிறது ஆனால் 28 செவிலியர்களே இருக்கின்றனர். ஒரு செவிலி 60 நோயாளிகளை கவனிக்கிறார் என்று பெனாஷிரில் உள்ள மக்கள் மருத்துவ கல்லூரியிலிருந்து வந்த ஒரு செவிலி கூறினார்.
கராச்சி பத்திரிகை சங்கத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய இந்த செவிலியர்கள் அவர்களுடைய எதிர்ப்பினைத் தொடருவோம் என்று கூறியுள்ளார்கள்.
பங்களாதேச தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பங்களாதேசத்தின் காபிகன்ஞ் மாவட்டத்தில், தொழிலாளர்கள் நெல் பயிரிடும் நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதற்கு எதிராக 15,000க்கும் அதிகமான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராடினார்கள். 14 மாதங்களாக இருக்கும் இந்தப் போராட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச வேலை நிறுத்தப் போராட்டங்கள் அதேபோல் காவல்துறையினரின் வன்முறைத் தாக்குதல்களும் நடந்திருக்கிறது.
செவ்வாய்க்கிழமை அன்று நான்கு தேயிலைத் தோட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரண்டு மணி நேரம் வேலை செய்வதை நிறுத்தியிருந்தார்கள் மேலும் சான்ட்பூரில் 500 ஏக்கருக்கு அதிகமான அவர்களின் நிலங்களை எடுத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை கட்டுவதை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.
திங்களன்று துணை மாவட்ட உதவி ஆணையர் காவல்துறைக்கு ஆணை பிறப்பித்து நான்கு டிராக்டர்களை கைப்பற்றவும் அந்த நிலத்தில் தொழிலாளர்களிடம் விவசாயம் செய்வதை நிறுத்தச் சொன்னதாலும் இந்த ஆர்ப்பாட்டம் தூண்டப்பட்டிருந்து. ஸன்டப்போர், ராம்கோன்கா மற்றும் யுஆல் பங்களா போன்ற தேயிலைத் தோட்டங்களிலிருந்து போராட்டக்காரர்கள் வந்திருந்தனர்.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் ஒரு கிராமத்தவர் கூறினார் "இந்த அரசாங்கம் நிலத்தை அபகரித்தால் நாங்கள் மரணப் பட்டினிக்குட்படுவோம்". மற்றொருவர் கூறினார் "நாங்கள் 150 வருடங்களுக்கு மேலாக இங்கே விவசாயம் செய்துகொண்டு வாழ்ந்து வந்திருக்கிறோம். ஆனால் இன்னும் இந்த நிலத்திற்கான உரிமையைப் பெறவில்லை.”
அரசாங்கம் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை நீக்கும்வரை அவர்களின் போராட்டத்தை விடாமல் நடத்துவார்கள் என்று இந்த தோட்டத் தொழிலாளர்கள் கூறியுள்ளார்கள்.
இந்தியா: கேரளா எல்பிஜி பாட்டிலிங் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
ஒரு மின்சாரத் தாக்குதலாலும், மின்கசிவினால் ஏற்பட்ட கடுமையான தீக் காயங்களாலும் ஒரு பராமரிப்புத் தொழிலாளி பாதிக்கப்பட்டபிறகு செவ்வாய்க்கிழமை அன்று கேரளா எர்ணாகுளம் மாவட்டம் உட்யம்பேரூரில் உள்ள இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எல்பிஜி பாட்டிலிங் ஆலைத் தொழிலாளர்கள் காலவரையற்று வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளி அவருடன் பணியிலிருக்கும் தொழிலாளியின் மோட்டர் சைக்கிளில்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
பாட்டில் ஆலையில் ஆம்புலன்ஸ் இல்லை என்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருக்கிறது என்றும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். வேலைநிறுத்தம் செய்தவர்கள் அந்தப் பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் மற்றும், அவசர காலநிலையை எதிர்கொள்ளும் வசதிகளும் வேண்டும் என்றனர். நிறுவனம் மற்றும் உள்ளூர் அரசாங்கத்துடன் பலதடவைகள் நடந்த சந்திப்புகள் தோல்வி அடைந்தன. எனினும் பல மேலும் பல சந்திப்புக்களுக்கான திட்டங்கள் இருக்கிறது.
ஆந்திரப் பிரதேச அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு
திங்கட்கிழமையன்று குர்நூல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆந்திரப் பிரதேச மாநில போக்குவரத்து சங்கத்திலிருக்கும் தொலை தூர பேருந்து தொழிலாளர்கள் அடையாள அட்டை, குறைந்தபட்சம் மாத சம்பளமாக ரூபாய் 15,000 ($223.74), வைப்பு நிதி மற்றும் பணியாளர் மாநில காப்பீட்டு வசதிகள் மற்றும் மேலாளர்களின் அடக்குமுறைக்கு ஒரு முடிவு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த தொழிலாளர்கள் இந்திய தொழிற்சங்க மையத்தால் (CITU) ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர்.
கர்நாடகா எஃகுத் தொழிற்சாலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஐம்பதாவது வாரத்திற்குள் நுழைகிறது
கர்நாடகா பெல்லாரியில் எஃகு புனைதல் உற்பத்தியாளர் JSW Structuresலிமிடெட் தொழிலாளர்கள் எப்ரல் 2016 இலிருந்து பெல்லாரி தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு வெளியே கூடாரம் அமைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
JSSL நிறுவனத்தின் நிலையான கட்டளைகளை மீறி தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கி, 15 பேரை இடைநீக்கம் செய்து, 29 பேர் மாநிலத்தை விட்டு பணிமாற்றம் செய்த பிறகே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆட்குறைப்பு செய்த தொழிலாளர்களை அதே சம்பளத்துடன் மீண்டும் சேர்த்துக்க கொள்ளவும், பணிமாற்ற ஆணைகளை திரும்பப் பெறவும், தொழிலாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்த பொய்யான வழக்குகளை திரும்பப்பெறவும் அரசு - தொழிற்சங்க-முதலாளிமாருக்கிடையே சம்பள திருத்தம் தொடர்பாக கூட்டுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்கின்றனர்.
கிரன்ரிக்கரி காம்ஜர் தொழிற்சங்கம் மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் (TUCI) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பெல்லாரியில் பிப்ரவரி 5 அன்று 300வது நாள் வேலைநிறுத்தப் போராட்டம் என்பதைப் குறிக்கும் வகையில் அணிவகுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட இந்த தொழிற்சங்கங்கள் இந்த நீண்ட நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தனிமைப்படுத்தியிருக்கின்றன.
இலங்கை தொலைத் தொடர்பு தொழிற்சங்கம் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை கண்டிக்கிறது.
தொலைதொடர்பு தொழிற் சங்கம் மற்றும் இலங்கை தொலை தொடர்பு தொழிற் சங்கம் (SLT) ஆகியன 2100 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டு வெற்றிபெற்றால் இது நிரந்தரத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்று தவறாக கூறியிருக்கிறது. இந்த அறிக்கைகள் வேலைநிறுத்தம் செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு அப்பட்டமான முயற்சியாகும்.
வெளியாட்களிடம் பணியை ஒப்படைக்கும் ஒரு நிறுவனமான மனித மூலதன தீர்வுகள் (Human Capital Solutions) இந்த வேலைநிறுத்த செய்யும் தொழிலாளர்களை பணிக்கமர்த்தியிருக்கிறது.. நிரந்தர வேலை கோரி டிசம்பர் 26 அன்று அவர்கள் வெளிநடப்பு செய்தனர். வேலை நிறுத்ததில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விட மிகக் குறைந்த அளவே கொடுக்கப்படுகின்றது மேலும் போதுமான வசதிகளோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களோ வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் புதிய ஊழியர்களை பணியில் 200 நபர்களை அமர்த்துவதற்கு SLT யிலிருந்து வந்த வாய்ப்பை இந்த தொழிலாளர்கள் நிராகரித்தனர். 2100 ஒப்பந்த தொழிலாளர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கு 10 வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் என்பதே இது தெளிவு படுத்துகிறது. அவர்களின் அடிப்படை மாத சம்பளம் 30000 ரூபாயிலிருந்து 17,500 ரூபாயாக குறைக்கப்படும். ஏழு வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியான சேவை மற்றும் 50 வயதுக்குள் இருப்பவர்களை நிர்வாகம் ஒருங்கிணைத்துக் கொள்ள ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் அர்த்தம் கணிசமான எண்ணிக்கையினரால் இந்த சலுகையை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும்.
நிரந்தரத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் ஜனவரி 11 அன்று 13 கோரிக்கைகள் அடங்கிய ஒன்பது நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடித்துக் கொண்டது மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்க மறுத்துவிட்டது. நிரந்தரத் தொழிலாளர்கள் 20 சதவீத சம்பள உயர்வுக்கும், ஊதிய ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளியும், மருத்துவ உதவித் தொகை அதிகரிக்கவும், தினம் வேலை நேரத்தில் அரைமணி நேரத்தை குறைக்கவும் வேண்டி நின்றனர்.
இலங்கை கல்வித் துறை சாராத தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
மொத்தம் 14 அரசு பல்கலைக் கழகங்களின் கல்வித் துறை சாராத தொழிலாளர்கள் செவ்வாய் அன்று வெளிநடப்பு செய்தனர் மேலும் கொழும்பிலுள்ள பல்கலைக்கழக ஆணைக் குழு அலுவலகத்திற்கு வெளியே அதிக மாத இழப்பீட்டுக் கொடுப்பனவு கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். தொழிற் சங்கங்களின் கூட்டுக் குழு இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தது. அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் பிப்ரவரி 15 லிருந்து தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவோம் என்று தொழிலாளர்கள் கூறினர்.
இலங்கை மின்சாரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிலோன் மின்சார வாரியத்தின்(CEB) தொழிலாளர்கள் கொழும்பிலுள்ள வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று சம்பள உயர்வு, சம்பள முரண்பாடுகள் நீக்கப்படவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டம் CEB யின் கூட்டு தொழிற்சங்கங்களின் முன்னணியால் அழைக்கப்பட்டிருந்தது. 2015 அவர்களின் சம்பள உயர்வு வெற்றிக்குப் பின் ஊதிய ஏற்றத்தாழ்வுகள் 90 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்த தொழிற்சங்கம் கோருகிறது. நிர்வாகம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. நிர்வாகம் அவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லையென்றால் பிப்ரவரி 15 இல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.