Print Version|Feedback
European neo-fascists gather in Koblenz, Germany to hail Trump inauguration
ட்ரம்ப் பதவியேற்பை பாராட்ட ஜேர்மன் கோப்லன்ஸ் நகரில் ஐரோப்பிய நவபாசிஸ்டுகள் ஒன்றுகூடினர்
By Alex Lantier
27 January 2017
வாஷிங்டனில் ஜனவரி 21 அன்று ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாள், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பின் அமர்வை பாராட்ட ஜேர்மனியில் கோப்லன்ஸ் நகரில் ஐரோப்பிய அதிவலது கட்சிகளின் கூட்டணி கூடியது.
அதில் பங்கேற்றேவர்களில், பிரான்சின் தேசிய முன்னணியின் மரின் லூ பென் (FN), ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் (AfD) இன் ஃவ்வுக்க பெட்றி, டச் சுதந்திர கட்சியின் (PVV) இன் கீயர்ட் வில்டேர்ஸ், ஒஸ்திரிய சுதந்திர கட்சியின் (FPÖ), இன் ஹரால்ட் விலிம்ஸ்கி, இத்தாலியின் வடக்கு லீக் இன் மட்டேயோ சல்வினி ஆகியோர் உள்ளடங்குவர். இவர்கள் அனைவரும் வாஷிங்டனில் மூர்க்கமான தேசியவாத மற்றும் பாதுகாப்புவாத ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை ஐரோப்பாவில் தங்களது சொந்த அரசியல் அபிலாசைகளுக்கான ஆதரவாக எடுத்துக் கொண்டனர்.
ட்ரம்ப் நிர்வாகமானது ஐரோப்பாவில் நவபாசிஸ்டுகளை வளர்த்தெடுப்பதற்கு அதன் வெளிநாட்டுக் கொள்கையில் முன்னுரிமை கொடுப்பதாக தெளிவுபடுத்தியுள்ளது. ட்ரம்ப் தனக்கு உயர் ஆலோசகராக தேர்வுசெய்த வெள்ளை மேலாதிக்கவாதி ஸ்ரெபான் பானன் ஜனாதிபதி தேர்தலின்போது FN ஐ புகழ்ந்தார், அவரது Breitbart News வலைத் தளமானது பிரான்சின் புதிய வலதை குறிக்கையில் - FN இன் கருத்தியல் அடிப்படை- “ஊக்கமூட்டும்” ஒரு மூலவளம் என்றார். மரீன் உடைய சகோதரி மகள் மரியோன் மரெசால்-லு பென் ஐ “எழுச்சித் தாரகை” என்று புகழ்ந்தார்.
அதிதீவிர வலதுசாரி கத்தோலிக்க நபரான மரியோன் மரெசால்-லு பென், நாஜி ஒத்துழைப்பாளர் விச்சி ஆட்சிக்கு அடித்தளத்தை வழங்கிய சார்ல்ஸ் மொராசின் யூத விரோத Action Française இன் வழித்தோன்றலான Action Française இன் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பானனுக்கு பகிங்கமாக நன்றி தெரிவித்தார். அவ்வம்மையார் பின்வருமாறு ட்வீட் செய்தார்: “டொனால்ட் ட்ரம்ப்பின் ஜனாதிபதி பிரச்சார நிர்வாக அதிகாரியான ஸ்ரெபான் பானன் உடன் சேர்ந்து வேலை செய்வற்கான அழைப்புக்கு நான் ஆம் என்பேன்.”
அதேவேளை, அதிவலது சக்திகளை வளர்த்தெடுக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் நோக்கம், ட்ரம்ப்புக்கும் நவ-பாசிசத்திற்கும் இடையிலான அரசியல் ஆதரவுக்கும் மேலான ஒன்றை பிரதிபலிக்கின்றமை மிகத் தெளிவனாதாகும். ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதை கைதட்டிவரவேற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மனியின் கருவி என்று கண்டனம் செய்தும் டைம்ஸ், பில்ட் ஆகிய பத்திரிகைகளிடம் பேசியதன் பின்னர், அதிவலது மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு கட்சிகளுடனான அவரது தொடர்பானது, ஐரோப்பிய ஒன்றியத்துடன், குறிப்பாக ஜேர்மனியுடன் மோதும் பரந்த நிகழ்ச்சிநிரலுடன் பிணைந்துள்ளமை தெளிவானதாகும்.
கோப்லன்ஸ் மாநாட்டிற்கு வருகை தந்த கட்சிகள் அனைத்தும் பிரெக்ஸிட் மற்றும் ட்ரம்ப் தேர்வை ஒரு புதிய அரசியல் ஒழுங்கின் ஆரம்பம் என்றும் அதில் இன்னும் வலதுக்கு திரும்புவதுமட்டுமல்லாமல், மிக முக்கிய பங்காற்றவும் அவற்றை கைதட்டி வரவேற்றனர். இந்தப் பார்வை குறிப்பாக லூ பென்னால் முன்வைக்கப்பட்டது. அவ்வம்மையார் ஏப்ரலில் நடைபெறவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்றில் அதிக வாக்குகளை வெல்வதற்கு, எனவேதான் மேயில் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற அளவில், தற்போது அதற்கான முன்கணிப்பில் இருக்கிறார் மற்றும் விச்சி ஆட்சியின்பொழுதான மார்சல் பிலிப் பெத்தானுக்கு பின்னரான பிரான்சின் முதலாவது அதி-வலதுசாரி நிர்வாகியாக இவர் ஒருவேளை ஆகக்கூடும்.
“நாம் இந்த உலகின் முடிவிலும் இன்னொரு உலகின் பிறப்பிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என லூ பென் அறிவித்தார். “2016 ஆங்கிலோ-சாக்சனின் உலக உதயமாக இருந்தது. 2017 ஆனது ஐரோப்பிய கண்டத்து மக்களின் விழிப்பாக, நிச்சயமாக இருக்கும் என நான் உறுதியாகச் சொல்வேன். நாம் அடுத்த கட்டத்தைக் கடந்தாக வேண்டும், இந்தக் கட்டத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இனியும் நாம் சிறுபான்மையராக இருந்து போட்டியிடப்போவதில்லை, இந்த அடியெடுப்புடன் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப் பெட்டியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவோம்.”
எந்தவகையான அரசுகளுக்கு மேலான முன்மாதிரி உட்பட “அனைத்து எதேச்சாதிகார அல்லது சர்வாதிகார திட்டங்களை” பொதுவாக நிராகரிப்பதன்” அடிப்படையிலான, தேசிய அரசுகளின் “அடிப்படை உரிமை” ஆக ”குடிவரவை கட்டுப்படுத்த மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கு” ஒரு பாதுகாப்புக்கொள்கை பற்றியும் “ஒரு புதிய உடன்படிக்கைக்கான” மீள் பேச்சுவார்த்தைக்காகவும் அவர் அழைப்பு விடுத்தார்.
கூட்டமானது நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் மீது பெரிதும் குவிமையம் கொண்டிருந்தது மற்றும் வில்டர்ஸ், லூ பென் மற்றும் பெட்ரி மூவரும் இம் மூன்று நாடுகளிலும் ஆட்சிக்கு வருவர் என்று நம்பிக்கை தெரிவித்தது. அவர்கள் குறிப்பாக ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெலின் கொள்கையான மத்திய கிழக்கில் போர்களால் வெளியேறும் அகதிகளை ஜேர்மனிக்குள் குறுகியகாலத்திற்கு அனுமதிக்கும் கொள்கையை கண்டனம் செயதனர், இக்கொள்கை ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் இப்பொழுது பரந்த அளவில் கண்டனம் செய்யப்படுகிறது. அவர்கள் முஸ்லிம் எதிர்ப்பு இனவெறியை அரசியல்மயப்படுத்த வேண்டுகோள் விடுத்தனர்.
கூட்டத்திற்கு முன்னர், முன்னனி AfD உறுப்பினரான பியோர்ன் ஹொக்க பேர்லினில் உள்ள மனிதஇன அழிப்பு நினைவுச்சின்னத்தை (Holocaust Memorial), “அது அவமான சினைவுச் சின்னம்” என கண்டனம் செய்ததோடு, இரண்டாம் உலகப் போரில் நாஜி நினைவுச் சின்னம் தொடர்பானதில் 180 திருப்பத்திற்கு” திரும்பக் கோரினார். கோப்லென்ஸ் கூட்டத்திற்கு பின்னர் இந்தக் குறிப்புக்களுக்காக ஹொக்கவை AfD உறுப்பினர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த அழைப்புகளுக்கு பின்னரும் அவர் கட்சியில் உள் பணியாற்ற தொடர்ந்து அனுமதிக்கப்பட்டார்.
AfD இன் முன்னணி உறுப்பினரும், பெட்ரியின் கணவருமான பிரெட்செல், ஹொக்க இன் கருத்துக்களால் தூண்டிவிடப்பட்ட நெருக்கடிக்கு இஸ்ரேலை புகழ்வதன் மூலம் பதில்கொடுத்தார். முஸ்லிம் மக்கள் தொடர்பான ஐரோப்பிய உறவுகளுக்கான முன்மாதிரியாக பாலஸ்தீனியர்களுக்கு எதிராக கொலைகார தாக்குதல்களை திரும்பத்திரும்ப செய்வதை உயர்த்திப் பிடித்தார்.
“ஜேர்மனியில், ஐரோப்பாவில் அனைத்திற்கும் மேலாக மேற்கு ஐரோப்பாவில் அரசியல் இஸ்லாம் தொடர்பாக எமக்கு பிரச்சினை இருக்கிறது. இந்த விஷயத்தில் பலபத்தாண்டுகள் அனுபவம் கொண்டதொரு நாடு ஒன்று இருக்கிறது” என பிரெட்செல், இஸ்ரேல் பற்றிக் குறிப்பிட்டார். ”இதைப்போல் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை எதிர்நோக்கையில் மிகவும் குரோதமாக ஒரு நாடும் இருக்கமுடியாது. …...சீமாட்டிகளே, கனவான்களே! இஸ்ரேல்தான் நமது எதிர்காலம் ”
பெட்ரி ஐரோப்பாவில் “ஆனமீக-ஒழுங்கு மாற்றம்” ஒன்றுக்காக ஆதரித்து கம்யூனிச எதிர்ப்பு அர்த்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை தாக்கினார். “இன்றைய மூளைச்சலவையானது முந்தைய சோசலிசப் பிரச்சாரத்தை விடவும் மிக புத்திசாதுர்யமானது” என்று அவ்வம்மையார் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட “சமூகப் பொறியியலாளர்கள்” முக்கிய வரலாற்று மரபுகளை அல்லது குறைந்தபட்சம் வெள்ளை ஐரோப்பியரின் வரலாற்று மரபுகளை தாக்கியிருந்தனர் என்று கண்டனம் செய்தார்.
மற்ற அலுவலர்கள் மேர்க்கெல் மற்றும் ஐரோப்பாவின் திவால் நிலைச்சான்று மீது அதேபோன்ற தாக்குதல்களை முன்வைத்தனர். வில்டர்ஸ் அறிவித்தார்: “AfD ம் எனது நண்பர் ஃவ்வுக்க பெட்றி உம் இன்று நம்மை அச்சுறுத்தும் புதிய சர்வாதிகாரத்திற்கு எதிராக நிற்கிறார்கள்” என்றதுடன், 2017ம் ஆண்டு “விடுதலை” ஆண்டாக இருக்கும் என்று மேலும் குறிப்பிட்டதுடன், அதேவேளை “போய்வா அங்கேலா, அதிர்ஷ்டம் உம்பக்கம் இருக்கட்டும் Frauke” என்று கூறி, சால்வினி மேர்க்கெலை தோற்கடிக்குமாறு பெட்ரியை கேட்டுக்கொண்டார்.
அதிகாரத்திற்கு வரவிருக்கும் அமெரிக்க நிர்வாகம், ஐரோப்பிய நவ-பாசிஸ்டுகளை அதன் வெளிவிவகாரக் கொள்கையின் கருவிகளாக பயன்படுத்துவதற்கும், ஐரோப்பிய அரசியலில் அதிகரித்த பங்காற்றுவதற்கும் பகிரங்கமாகவே நோக்கங் கொண்டுள்ளமையானது, சர்வதேச முதலாளித்துவ அரசியல் பரந்த அளவில் பொறிந்து போனதற்கு சாறன்றாக உள்ளது. இரண்டாம் உலகப் போரை அடுத்து உடனடியாக, வாஷிங்டன் ஐரோப்பாவிற்குள் பாரியளவு பொருளாதார வளங்களைக் கொட்டியது. அது ஐரோப்பிய ஒருங்கிணைவு திட்டங்களுக்கு ஆதரவாக இருந்தது மற்றும் ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான முன்னாள் நாஜிக்கள் மற்றும் நாஜிஒத்துழைப்பாளர்கள் ஒழித்துக்கொள்ள அது உதவியது. இது போருக்குப் பிந்தைய ஐரோப்பிய முதலாளித்துவத்தின் குற்றகரமான வேர்களுக்கான ஒரு சாட்சியமாக இருந்தது.
இருப்பினும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அரசியல் நிறுவனங்களின் பொறிவானது, சூழலை மாற்றிவிட்டது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மற்றும் 2008 வோல் ஸ்ட்ரீட் இன் உக்கிரமான பொரளாதார நெருக்கடி ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுக்குப் பின்னர், ஐரோப்பிய அரசியல் வாழ்வில் நவபாசிஸ்டுகள் ஒரு முக்கிய பொதுப் பங்கு வகிக்க விடப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் வளர்ந்து வரும் சமூக துன்பங்களுக்கு எந்த அமைப்புக்களும் பேசாதிருக்கும் நிலையை சுரண்டிக்கொண்டு, ஐரோப்பிய ஊடகங்கள் நவ-பாசிஸ்டுகளுக்கு இடத்தை ஒதுக்கிகொடுத்த பின்னர், அவையும் அமெரிக்க வெளிவிகாரக் கொள்கையுடன் மிக நெருக்கமான கூட்டுவைத்து வெளிப்படுகின்றன.
இது, ட்ரம்ப்பினதும் அவரின் கூட்டினரதும் பிற்போக்குத்னமான ”முதலில் அமெரிக்கா” கொள்கைக்கு மட்டுமல்லாது, ட்ரம்ப்புடன் இப்போது ஒரு மோதலுக்கு சென்றுகொண்டிருக்கும் ஐரோப்பிய முதலாளித்துவ பிரிவுகளுக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். அவை மக்கள் ஆதரவற்ற சிக்கன பொருளாதாரக் கொள்கைகளை பேரளவில் திணித்தல், புலம்பெயர்ந்தோரையும் முஸ்லிம்களையும் தாக்குவதன் மூலம் நவ-பாசிஸ்டுகள் எழுவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துகின்றனர் மற்றும் அதி வலதுகளை முறைமையானவர்களாக ஆக்குகின்றனர்.
ட்ரம்ப் மற்றும் அவரது ஐரோப்பிய கூட்டாளிகளின் தேசியவாத மற்றும் ஜனநாயகவிரோத கொள்கைகளை எதிர்ப்பதற்கு முன்னேயுள்ள ஒரேவழி, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டினதும் பிற்போக்கு திட்டங்களின் நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒன்றிணைப்பதாகும்.