Print Version|Feedback
US and India sharing intelligence on Chinese submarine and ship movements
அமெரிக்காவும் இந்தியாவும் சீன நீர்மூழ்கி கப்பல் மற்றும் கப்பல் நடமாட்டம் குறித்த உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்கின்றன
By Keith Jones
26 January 2017
இந்தியாவும் அமெரிக்காவும், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி கப்பல் மற்றும் கப்பல் நடமாட்டம் குறித்த உளவுத் தகவல்களை பரிமாறி வருகின்றன என்று அமெரிக்க பசிபிக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவரான அட்மிரல் ஹாரி ஹாரிஸ் கடந்த வாரம் புது தில்லியில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனான ஒரு பாதுகாப்பு மாநாட்டினை தொடர்ந்து ஒரு உரையில், ஹாரிஸ் "இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை இயக்கம் தொடர்பான தகவல்கள் இந்தியாவுடன் பரிமாறப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.
அட்மிரல் தொடர்ந்து பேசும்போது, பென்டகன் "இந்தியாவுடன் நெருக்கமாகவும் மேலும் இந்த வகையான கண்காணிப்பு நடவடிக்கையினை இந்தியா மேற்கொள்வதற்கு ஏற்றவாறு அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பணியாற்றுகிறது" என்றார்.
அமெரிக்க பசிபிக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் பின்னர், ஒரு வருடாந்திர இந்திய அமெரிக்க கடற்படை பயிற்சியான மலபார் பயிற்சி பற்றி குறிப்பிட்டார், அதில் சமீபத்தில் அதில் ஒரு நிரந்தர மூன்றாவது பங்காளராக ஜப்பானையும் உட்படுத்தும் வகையில் அது விரிவுபடுத்தப்பட்டது. "இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா என்ன செய்துகொண்டிருக்கிறது என்று கண்காணிப்பதற்கு ஏற்றவகையில் எங்கள் திறனை மேம்படுத்துகின்ற சாணைக்கல் போன்று மலபார் பயிற்சி எங்களுக்கு உதவுகிறது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தெளிவாக ஒரு பிரச்சனையாக இருக்கிறது, மேலும் இந்த பிராந்தியம் ஊடாக அவை செயல்பட்டு வருகின்றன என்பதை நாங்கள் அறிகிறோம்." என்றும் தெரிவித்தார்.
நரேந்திர மோடி மற்றும் அவரது இந்துமத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் கீழ், இந்தியா சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராஜதந்திர மற்றும் இராணுவ மூலோபாய கடும் தாக்குதலுடன் இன்னும் நெருக்கமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஒரு "ஆக்கிரமிப்பாளராக" உள்ளது என்ற அமெரிக்காவின் கூற்றுக்களை இது திரும்ப திரும்ப கூறிவருகிறது; அமெரிக்காவின் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மூலோபாய உறவுகளை மேம்படுத்தியுள்ளது; மேலும் அமெரிக்க போர் விமானங்களும், போர் கப்பல்களும் வழக்கமாக பயன்படுத்தும் விதமாக இந்திய இராணுவ தளங்களை திறந்துவைத்துள்ளது.
எனினும், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன குவிப்புகள் குறித்து உளவுத் தகவல்களை இரு நாடுகளின் கடற்படையினரும் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது அமெரிக்கா அல்லது இந்தியாவின் முதலாவது பகிரங்க ஒப்புதலாகவே இருக்கும் என்பது போன்றே ஹாரிஸின் கருத்துக்கள் தோன்றும்.
இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு முன்னணி பாத்திரத்திற்கான தனது உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்வதற்காக வாஷிங்டன் ஆதரவுடன் இந்தியா அதிவேகமாக ஒரு நீலக்கடல் கடற்படையை கட்டியெழுப்பி வருகிறது, அது சீனாவிற்கு மத்திய கிழக்கு பகுதியின் எண்ணெய் மற்றும் பிற வளங்களை கொண்டுசேர்ப்பதும், மற்றும் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் பெரும்பாலான சந்தைகளுக்கு சீனாவின் பொருட்களை எடுத்துசெல்வதும் உட்பட உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளின் மையமாக உள்ளது.
இரண்டாம் ஆண்டு Raisina உரையாடலில் ஒரு வலிய சண்டைக்கழைக்கும் பேச்சை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதி உளவுத்துறை தகவல் பரிமாற்றங்கள் பற்றி ஹாரிஸ் குறிப்பிட்டார், அதில் அவர் வளர்ந்து வருகின்ற இந்திய அமெரிக்க இராணுவ பாதுகாப்பு பங்காண்மை குறித்து கொண்டாடியதுடன், இது எப்போதும் இன்னும் விரிவடையவேண்டுமென்ற பென்டகனின் விருப்பத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அட்மிரல் ஹாரிஸ், மார்ச் 2016ல் நடைபெற்ற Raisana மாநாடு துவக்க விழாவின்போது, தென் சீனக்கடல் பகுதி உட்பட இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இந்திய மற்றும் அமெரிக்க போர் கப்பல்கள் கூட்டாக ரோந்து சுற்றி கண்காணிக்கவிருக்கும் அந்த நாளை அவர் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
கடந்த வார மாநாட்டில், அவர் "இந்திய-ஆசிய-பசிபிக்" பிராந்தியத்தை ஒரு "புதிய இயல்பான" பகுதியாக "வடிவமைக்க" இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும், ஏனெனில் "ஒரு பழியுணர்வுமிக்க ரஷ்யா மற்றும் அதிகரித்தளவில் ஒரு வலுப்பெற்றுள்ள சீனா போன்ற நாடுகள் மூலமாக" இந்த பகுதி வடிவமைக்கப்பட்டு வருவதை தடுக்கவேண்டும் என்று கூறினார்.
பின்னர் அவர், இந்திய அமெரிக்க இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பை ஒரு போர் ஆயுதத்தை கூர்மைப்படுத்துவது போன்ற செயலுடன் ஒப்பிட்டார்.
ஆபிரகாம் லிங்கனின் பழமொழியான "ஒரு மரத்தை வெட்டுவதற்கு எனக்கு ஆறு மணி நேரம் கொடுங்கள், அதில் முதல் நான்கு மணி நேரத்தை நான் கோடாரியை கூர்மையாக்குவதற்கு செலவிடுவேன்" என்பதற்கு ஒத்ததாக இந்திய அமெரிக்க பங்காண்மையின் தோற்றமைவையும், அதன் தற்போதைய நோக்கத்தையும் இது உள்ளடக்கியது போல் உள்ளது என்று ஹாரிஸ் கூறினார்.
அவர், "புதிய இயல்பான நிலையை வடிவமைப்பது, சட்டங்களை அடிப்படையாகக்கொண்ட சர்வதேச ஒழுங்கை காப்பது (அதாவது இந்தோ பசிபிக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தினை குறிப்பதாகும்)... போன்ற பணிகள் எங்களுக்கு முன்னர் உள்ளன. இவை பிரம்மாண்டமான பணிகள் தான் ஆனால் செயல்படுத்தமுடியாதவை அல்ல. இதில் நமது அணுகுமுறை என்பது, ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு நேரம் எடுத்துக்கொள்வதன் மூலமாக, நமது கருவிகளை கூர்மைப்படுத்துவது தான், எனது கருத்தின்படி, சரியான அணுகுமுறையாக உள்ளது." என்று அறிவித்தார்.
அவரது பார்வையாளர்களிடமிருந்து அவரது கருத்தாக்கம் மறைந்துவிடவில்லை என்பதை உறுதிபடுத்துவதற்கு, ஹாரிஸ், அமெரிக்க இராணுவம் அதன் விரோதிகளை எதிர்கொள்ள "எங்கே நாம் வேண்டும்," என்பதற்கு தயாரான நிலையில் உள்ளது என்று கூறினார், அத்துடன், "நமது பழமொழி போன்று கோடாரியை விரைவாக கூர்மைப்படுத்த" அவர் விரும்புவதாகவும் அதனால் அதை "கத்தி போன்று கூர்மையாக்க வேண்டும்", "ஏனென்றால் அவற்றை பயன்படுத்துவதற்கு நிகழ்வுகள் எப்போது நம்மை கட்டாயப்படுத்தும் என்பது நமக்கு ஒருபோதும் தெரியாது." என்றும் கூறினார்.
ஹாரிஸ் அவரது செய்தியாளர் கூட்டத்தில், பேசுகையில் ட்ரம்பின் பாதுகாப்பு குழுவை அவர் சந்தித்து இருப்பதாகவும், கிளின்டன் நிர்வாகத்தின் இறுதி ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க அரசியல் உயரடுக்கு இந்தியாவை நோக்கி கடைபிடித்துவருகின்ற ஒருமித்த இரு கட்சி கொள்கையை புதிய நிர்வாகமும் தொடருமென்று நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த தசாப்தத்தில், சீனாவின் "எழுச்சியை" தேவைப்பட்டால் போரின் மூலமாக தடைசெய்வற்கான அமெரிக்காவின் முயற்சியில் இந்தியாவை ஒரு முன்னணி அரசாக உருமாற்றுவதற்கான உந்துதலில் இந்த கொள்கை சீனாவிற்கு ஒரு மூலோபாய எதிர்பலமாக இந்தியாவை கட்டமைக்கும் நோக்கம் கொண்டுள்ளதுடன் திண்மைப்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்த முடிவை நோக்கி, வாஷிங்டன் இந்திய முதலாளித்துவத்தின் பெரும் சக்தியாக மாறுவதற்கான அபிலாஷைகளை அதிகப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியான அமெரிக்க நிர்வாகங்கள், இந்தியாவை ஒரு "பூகோள மூலோபாய பங்குதாரர்" என்று அறிவித்து வருதுடன், புது தில்லி மீது மூலோபாய உதவிகளையும் பொழிந்து வருகிறது. கடந்த வருடம் வாஷிங்டன், அதன் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புக்களை இந்தியா பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கும் பொருட்டு இந்தியாவை ஒரு "பெரும் பாதுகாப்பு பங்குதாரர்" என்று முத்திரைகுத்தியது. அமெரிக்கா தனது மிக நெருங்கிய நட்பு நாடுகளாக உடன்பாடு ஏற்படுத்தியுள்ள நாடுகளுக்கு மட்டும் தான் அவற்றை விற்கும்.
பென்டகன் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் ஹாரிஸ் இன் அதிகார வரம்பிற்குள் பாகிஸ்தான் உட்படாது என்றாலும், அவர் தனது செய்தியாளர் கூட்டத்தின்போது, பாகிஸ்தானுடன் வலுப்படுத்தப்பட்டுவருகின்ற சீனாவின் நீண்டகால இராணுவ பாதுகாப்பு கூட்டுகள் பற்றிய அவரது கவலையை வெளிப்படுத்தினார். இந்திய அமெரிக்க கூட்டிற்கு இந்த மேம்படுத்தப்பட்ட உறவுகள் மிகுந்த ஒரு பதிலிறுப்பாகும் என்று அவர் குறிப்பிடவில்லை என்பதை சொல்லவேண்டியதில்லை.
"சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு கவலையளிப்பதாக உள்ளது," என்று ஹாரிஸ் கூறினார். உண்மையில், தெற்கு ஆசியா முழுவதும் "அதிகரித்துவருகின்ற சீன செல்வாக்கு குறித்து" இந்தியா கவலைப்படவேண்டுமென அவர் வலியுறுத்தினார். "வரையறுக்கப்பட்ட செல்வாக்கு மட்டும் தான் அங்கு உள்ளது என்று நீங்கள் நம்புகின்ற பட்சத்தில், சீனா எந்தமாதிரியான செல்வாக்கை கொண்டிருந்தாலும், அந்த செல்வாக்கை இந்தியா கொண்டிருக்கமுடியாது என்பது தான் அதன் அர்த்தமாகும்."
தெற்கு ஆசியா முழுவதும், நேபால் மற்றும் வங்காளத்திலிருந்து இலங்கை வரையிலும், மொரிஷியஸ் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய இந்தியப் பெருங்கடல் தீவுகளின் அரசுகளுக்கு மத்தியிலும் சீனாவுடன் உரசலுடனான மூலோபாய போட்டியில் புது தில்லி ஏற்கனவே மூழ்கி உள்ளது.
இருந்தபோதிலும், பாகிஸ்தினில் சீனாவின் செல்வாக்கு குறித்து எச்சரிக்கையாக இருப்பதற்கு இந்தியாவிற்கு ஹாரிஸ் விடுக்கின்ற உத்தரவுகள் மோடி அரசாங்கத்தின் காதுகளுக்கு இசை போன்று இருக்கும். அது பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு கடும்போக்கு கொள்கையையே அது கடைபிடித்து வந்துள்ளது, அது அக்டோபர்-நவம்பர் 2016ல் தெற்கு ஆசிய அணுஆயுத போட்டியாளர்களை முழு ஆளவிலான போரின் விளிம்புக்கு இட்டுச்சென்றது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி ஊடாக இந்தியாவும், பாகிஸ்தானும் நீண்ட காலமாக சரமாரியான பீரங்கி குண்டுவீச்சு தாக்குதல்கள் தினசரி பரிமாறிக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அவர்களது 2003 போர் நிறுத்த உடன்பாடு வெளிப்படையாக சரிந்துவிட்டது, மேலும் பாகிஸ்தான் உள்ளே எல்லை தாண்டி திடீர் இராணுவ தாக்குதல்களை நடத்துவோம் என்ற மோடி அரசாங்கத்தின் அச்சுறுத்தல் இந்த பிராந்தியத்தை நிலைகுலைய செய்துள்ளது.
காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சிக்கு பாகிஸ்தான் வழங்கிவரும் அனைத்து இராணுவ தளவாட உதவிகளையும் அது நிறுத்தவேண்டுமென இந்தியா விடுத்திருந்த கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்று நடந்து கொள்ளும் வரையில் இஸ்லாமாபாத் உடன் எந்த வடிவிலான பேச்சுவார்த்தைகளையும் அவர்கள் தொடரமாட்டார்கள் என்பதை பிரதம மந்திரி மோடி மற்றும் அவரது அமைச்சர்களும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.
மோடி Raisina உரையாடலின்போது தனது உரையில் இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அப்போது சீனா என்று வரும்போது, எனினும், அவரது தொனி அமெரிக்க அட்மிரல் ஹாரிஸ் இன் தொனியிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது. "இந்தியா மற்றும் சீனாவின் அபிவிருத்தியானது" "எங்களது இரு நாடுகளுக்கும் மற்றும் முழு உலகத்திற்கும் ஒரு முன்கண்டிராத வாய்ப்பை" பிரதிநிதித்துவம் என்று இந்திய பிரதம மந்திரி கூறினார். இரு "நாடுகளும் ஒருவருக்கொருவர் மீதான மைய அக்கறைகள் மற்றும் நலன்கள் குறித்த உணர்திறனையும், மரியாதையையும் காட்டவேண்டும்" என்றும் பிறகு அவர் எச்சரித்தார்.
மோடி, சீனாவுடனான நேருக்கு நேரான சமரச வாய் வீச்சு வார்த்தையாடல்களுடன் அடிக்கடி ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் இணைத்து வருகிறார்.
சமீபத்திய வாரங்களில், இந்தியா ஒரு இடைநிலை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அவை முறையே அக்னி IV மற்றும் அக்னி V என்பவற்றை சோதனை செய்தது. அது, ஒரு சீன இந்திய போர் ஏற்பட்டால் சீனாவின் அதிகம் மக்கள் வாழும் மையங்களை இலக்குவைத்து அணுஆயுதங்களால் அழித்தொழிப்பதற்கு வெளிப்படையான நோக்கங்கொண்டு தான் இந்த ஆயுதங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
இந்தியாவின் புதிய இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது தலைமை பொறுப்பேற்று சில நாட்களிலேயே, ஒரே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக "இரு முனை" போர் நடத்துவதற்கு இந்திய இராணுவம் தயாராக இருப்பது பற்றி தம்பமடித்துக்கொண்டார்.