Print Version|Feedback
Bernie Sanders and Elizabeth Warren support General “Mad Dog” Mattis as head of Pentagon
பென்டகன் தலைவராக ஜெனரல் "Mad Dog“ மாட்டிஸுக்கு பேர்னி சாண்டர்ஸும், எலிசபெத் வாரனும் ஆதரவளிக்கின்றனர்
By Niles Niemuth
23 January 2017
ஜெனரல் ஜேம்ஸ் "Mad Dog" மாட்டிஸ் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு செயலராக பணியாற்றுவதற்கு, ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்கள் மத்தியில் தங்களது குடியரசு கட்சியின் சமதரப்பினராக சேர்ந்த அவருக்கு மிகப்பெரியளவில் அங்கீகாரம் அளிப்பவர்களுள் வெர்மான்ட் ஜனநாயக கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், தன்னைத்தானே ஜனநாயக சோசலிசவாதியென பிரகனபடுத்தியவருமான செனட்டர் பேர்னி சாண்டர்ஸும், மசாசூசெட்ஸ் செனட்டர் எலிசபெத் வாரனும் இருந்தனர்.
ஜனநாயகக் கட்சியின் "முற்போக்கு" பிரிவு தலைவர்களாக இருப்பதாக கூறப்படுகின்ற சாண்டர்ஸும், வாரனும் ஈராக்கில் எண்ணற்ற போர் குற்றங்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாளியாக இருக்கின்ற ஒரு ஜெனரலுக்கு ஆதரவினை வழங்க இணைந்துள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு ஜனநாயகக் கட்சி செனட்டர்களுடன் ஒன்று சேர்ந்துள்ளனர்.
முதலாவது கடற்படை பிரிவு தளபதியான, மாட்டிஸ் 2004ல் பல்லூஜா மீது இரத்தவெறி தாக்குதல்களை முடுக்கிவிட்டு அந்த நகரத்தினை இடிபாடுகளாக மாற்றியதுடன், கணக்கிலடங்காத வகையில் ஆயிரக்கணக்கான குடிமக்களின் இழப்பினையும் விளைவித்தது.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் ஆகஸ்ட் 2010 இல், மத்திய கிழக்கு, வடகிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியா ஆகிய பகுதிகள் சார்ந்த அனைத்து அமெரிக்க போர்களையும், இராணுவ செயல்பாடுகளையும் கண்காணிப்பதற்கு மாட்டிஸ் பொறுப்பாளியாக்கப்பட்டு மத்திய கட்டளை மையத்தினை மேற்பார்வையிடுவதற்கு அவர் நியமிக்கப்பட்டார். 2013ல் இராணுவத்திலிருந்து அவர் ஓய்வுபெறும்வரையிலும் அதே நிலையில் பணியாற்றினார்.
சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுபோல, மாட்டிஸ் பாதுகாப்பு செயலராக பணியாற்றுவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னராக அவர் இராணுவ சேவையாற்றியிருந்தார் என்ற அடிப்படையில், ஒரே ஒரு செனட்டர், நியூயோர்க் ஜனநாயகக் கட்சிவாதி கிரிஸ்டன் கில்லிபிரான்ட் மட்டும் மாட்டிஸுக்கு எதிராக வாக்களித்தார். காங்கிரஸ் கட்சியால் விலக்கு அளிக்கப்பட்ட மாட்டிஸ், மிகப்பெரியளவில் ஜனநாயகக் கட்சி ஆதரவுடன் இருந்ததனால், 1950ல் ஜெனரல் ஜோர்ஜ் மார்ஷல், அவரது பாதுகாப்பு செயலர் பதவி காலத்திற்கு முன்பு வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றியிருந்த நிலையிலும் அவர் பாதுகாப்பு செயலர் பதவியில் நியமிக்கப்பட்டதற்கு பின்னர், சமீபகாலத்தில் இராண்டாவது ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினராக மாட்டிஸ் பென்டகன் தலைமைக்கு பொறுப்பாளியாக்கப்படுகிறார்.
உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு தலைமை வகிப்பதற்கு ஓய்வுபெற்ற ஜெனரல் ஜோன் கெல்லியின் நியமனத்தை உறுதிசெய்வதற்கு வாக்களிப்பதில் சாண்டர்ஸ் குடியரசு கட்சி சார்ந்த அவரது சக உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டார். செப்டம்பர் 2012 முதல் கடந்த வருடம் ஜனவரி மாதம் வரையிலும், கியூபாவின் குவாண்டநாமோ வளைகுடா பகுதியில் உள்ள இழிவுற்ற இராணுவ சிறை உட்பட மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் அமெரிக்க இராணுவ செயல்பாடுகளுக்கு பொறுப்பாளியாக, கெல்லி தெற்கு கட்டளை மையத்தின் தளபதியாக இருந்தார். கெல்லிக்கு எதிராக வாக்களிப்பதில் வாரன் 10 மற்ற ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்துகொண்டார்.
கெல்லி உள்நாட்டு பாதுகாப்புதுறை தலைவர் என்ற முறையில், அமெரிக்காவில் இருக்கின்ற புலம்பெயர்ந்தோரை நோக்கிய ஒரு மூர்க்கமான நிலைப்பாடிற்காகவும் அவர்களை நாடுகடத்தவும், மெக்ஸிக்கோ எல்லையில் ஒரு சுவர் எழுப்புவது குறித்த ட்ரம்பின் அழைப்பிற்கு ஆதரவளிப்பதுடன் பாதுகாப்பு படையினர் எல்லைப்பகுதி கண்காணிப்பதையும் அகதிகளை நாடுகடத்துவதற்கும் உத்தரவிடுவதற்கும் அவர் ஆதரவாக இருக்கின்றார்.
சாண்டர்ஸும் வாரனும் உட்பட ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப் தனது அமைச்சரவையினை தீவிர வலதுசாரி கருத்தியலாளர்கள், மற்றும் அதீத செல்வம் படைத்த தன்னலக்குழுக்களாக இருக்கின்ற ஜெனரல்களை கொண்டு நிரப்புவது குறித்த அவரது திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வகையிலான எந்தவொரு தடையையும் அவர்கள் போடவில்லை. அதற்கு மாறாக, ரஷ்யாவிற்கு எதிரான போர் ஆதரவு நிலைப்பாட்டிற்கு தண்டனையாக ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டவர்களை நியமிக்க ட்ரம்ப் இன் நலனுக்காக, 2016 தேர்தலை மாஸ்கோ "கைப்பற்றியது" போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஊக்கமளித்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு வலதுசாரி பக்கமிருந்து அழுத்தம் கொடுக்க அவர்கள் முனைந்து வருகின்றனர்.
கடந்த வாரம் மாட்டிஸ் காங்கிரசிற்கு கொடுத்த அவரது அறிக்கையில் மாஸ்கோ தொடர்பாக ட்ரம்பின் சமரச நிலைப்பாடுகளிலிருந்து தன்னை ஒதுக்கிவைத்துக்கொண்டதுடன், அமெரிக்காவின் முன்னணி அச்சுறுத்தல்களில் ஒன்றாக ரஷ்யா உள்ளது என்றும் சமிக்ஞை செய்தார். உறுதி செய்வதற்கான விசாரணைகளில் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு அதிதீவிர நிலைப்பாட்டினையும் கெல்லி எடுத்துக்கொண்டார்.
சாண்டர்ஸ் தனது வெள்ளிக்கிழமை வாக்களிப்பு பற்றி விளக்கமளிக்கின்ற ஒரு அறிக்கையை வெளியிடாதபோதும், கடந்த வருடம் அவரது ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு பிரச்சாரத்தினை பின்பற்றியவர்கள், மாட்டிஸ் மற்றும் கெல்லி ஆகிய ஜெனரல்களுக்கு அவர் அளிக்கும் ஆதரவு குறித்து ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.
தற்போது ட்ரம்ப் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் ஜெனரல்கள், ஒரு ஜனாதிபதி சாண்டர்ஸ் கீழ் ஒரு "முற்போக்கு" ஜனநாயக கட்சி நிர்வாகத்தின் கீழ் அவர்களது நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை எளிதாக அறிந்துகொள்ளமுடியும். செனட்டர் சாண்டர்ஸ், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான இடது ஜனரஞ்சக வாய்சவடால்களையும், பராக் ஒபாமாவின் போர்களுக்கும், வெளிநாட்டு கொள்கைகளுக்கும், அதேபோல் தேசியவாத மற்றும் குடியேற்ற விரோத நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தடுமாற்றம் இல்லாததொரு ஆதரவினை கொண்டுள்ள "பில்லியனர் வர்க்கத்தையும்" நிலையாக இணைக்கிறார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வின் போது, யுத்த வெறியரும், முன்னாள் வெளியுறவுத்துறை செயலருமான ஹிலாரி கிளின்டனை சாண்டர்ஸ் எதிர்கொண்டபோது, ஒபாமா நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ ஏகாதிபத்திய செயல்பாடுகளை அவர் தொடரவிருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தினார். சிரியா வரையிலும் நூற்றுக்கணக்கான அமெரிக்க சிறப்பு படைகளை நிலைநிறுத்துவதற்கு அவர் பகிரங்கமாக ஆதரவளித்ததுடன், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மூலமாக தூண்டிவிடப்பட்டுள்ள உள்நாட்டு போர்களில் சவூதி மற்றும் பிற அரபு நாடுகளின் தலையீடு பற்றியும் வாதிட்டார்.
அமெரிக்க குடிமக்கள் உட்பட, அத்துடன் கடந்த எட்டு ஆண்டுகளாக மத்திய கிழக்கு பகுதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பொது மக்களும் உட்பட, பயங்கரவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உரிய வழக்கு விசாரணையின்றி கொல்வதற்கு ஒபாமா பயன்படுத்திய "கொலைப்பட்டியல்" மற்றும் டிரோன் படுகொலை திட்டத்திற்கு பெரும் மதிப்பிற்குரிய செனட்டர் ஒப்புதல் வழங்கினார். 2015 இறுதியில் NBC நிகழ்ச்சியான “Meet the Press” இல் தொகுப்பாளரான சக் டாட் வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கையின் போது ஆளற்ற விமானங்களையும் சிறப்பு படைகளையும் பயன்படுத்துவாரா என அவர் கேட்கப்பட்டபோது, அவரது வெளியுறவு கொள்கை "இவை அனைத்தும் மற்றும் அதற்கு மேலானதையும்" கொண்டிருக்கும் என்று சாண்டர்ஸ் வலியுறுத்தினார்.
நடக்கின்ற ஏகாதிபத்திய போருக்கு அவரது பொருளாதார தேசியவாதத்துடன் கைகோர்த்துகொண்டு சாண்டர்ஸ் ஆதரவளிக்கிறார். அமெரிக்க தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு மெக்சிகன், சீன தொழிலாளர்களையும் பலிகடாக்களாக்குவதற்கு ஆரம்பகால தேர்தல்களின்போதும் அவர் தனது தாக்குதல் உரைகளை பயன்படுத்தினார். அவர் ஒரு வலதுசாரி "கோச் சகோதரர்கள் திட்டம்" என்ற ஒரு எல்லையற்ற குடியேற்ற கொள்கை "அமெரிக்காவில் அனைவரையும் வறிய நிலைக்கு இட்டுச்செல்லும்" என்று கண்டனம் செய்தபோது அவரது தேசியவாதமும், முதலாளித்துவ சார்பு அரசியலும், ஜுலை 2015ல் ஒரு Vox நிகழ்ச்சியின் பேட்டியில் தெளிவுபடுத்தப்பட்டது.