Print Version|Feedback
Trial of Jakarta governor signals wider political turmoil in Indonesia
இந்தோனேஷியாவில் பரந்த அரசியல் கொந்தளிப்பிற்கு ஜகார்த்தா கவர்னர் மீதான வழக்கு விசாரணை சமிக்ஞைகள் செய்கின்றன
By John Roberts and Peter Symonds
9 January 2016
வலதுசாரி இஸ்லாமிய அமைப்புக்களின் தலைமையிலான கடந்த ஆண்டின் வெகுஜன எதிர்ப்புக்கு பின்னர், ஜகார்த்தா கவர்னர் பாஸுகி த்ஹாஜா புர்நாமா (Basuki Tjahaja Purnama) மீது "மதத்தை இழிவுபடுத்தியதாக" புனையப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜகார்த்தா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது, அவரை சிறையில் அடைக்கவும் கோரப்பட்டது. முஸ்லீம் குர்ஆன் மற்றும் இஸ்லாமை பாஸுகி அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை இந்த வழக்கு அடிப்படையாக கொண்டுள்ளது. பிற்போக்கு மதகுருமார் சார்பு சட்டங்களின்கீழ் இந்தோனேஷியாவில் இது ஒரு குற்றமாக கருதப்படுவதுடன், ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைக்கும் உரியது.
பாஸுகி அவருடைய முன்னோடி ஜோகோ விடோடோ இந்தோனேஷிய ஜனாதிபதி ஆகிய பின்னர் அக்டோபர் 2014 இல் ஜகார்த்தா கவர்னராக பதவியேற்றதுடன், பெப்ரவரி 15ல் வரவிருக்கும் கவர்னருக்குரிய தேர்தலில் அவரது சொந்த வலதில் தேர்தலில் வெற்றி பெற முனைகிறார். ஒரு கிறிஸ்துவர் மற்றும் இனவழியில் சீனருமான பாஸுகி கடந்த செப்டம்பரில் இஸ்லாமிய குழுக்களை எதிர்க்கும் ஒரு முயற்சியில் குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டியதன் பேரில் இந்த குற்றம்சாட்டப்பட்டதுடன், ஒரு முஸ்லீம் அல்லாதவருக்கு வாக்களிக்க வேண்டாமென்று முஸ்லீம்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ஸ்திரமின்மை கூடியுள்ள நிலைமையில் மற்றும் ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் இடையிலான ஒரு பரவலான சமூக பிளவு விரிவடைந்து வரும் நிலைக்கு மத்தியில் இந்த விசாரணை இந்தோனேஷிய அரசியல் உயரடுக்கினர் மத்தியில் நிலவுகின்ற தீவிர போட்டியின் ஒரு அறிகுறியாக இருக்கிறது. பாஸுகிக்கு எதிரான பிரச்சாரங்கள் பெப்ரவரி தேர்தலில் அவருக்கு இருக்கும் வெற்றி வாய்ப்புக்களை குறைப்பதற்காகவே நிச்சயமாக முயன்றுவருகிறது, ஆனாலும் பாஸுகியை வளர்த்துவிட்டவரும், 2019 மறு தேர்தலில் வெற்றிபெறவிருக்கிறார் என்றே மிக பரந்தளவில் விடோடோ மீதே இலக்கினை கொண்டுள்ளது.
2014 இல் ஜகார்த்தா கவர்னராக பாஸுகி பதவியேற்ற பின்னர் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவரை எதிர்த்து இஸ்லாமிய பாதுகாவலர்கள் முன்னணி (Islamic Defenders Front-FPI) உட்பட பல்வேறு கடும்போக்காளர்களின் இஸ்லாமிய குழுக்கள் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர். கடந்த செப்டம்பரில் இந்த அமைப்புக்கள் பாஸுகியை பதவி விலகச்செய்வதற்கும், சிறைவைப்பதற்கும் கோரிக்கை விடுக்க அவரின் கருத்துக்களைப் பிடித்துக்கொண்டன. எதிர்ப்பானது நவம்பர் 4ல் ஜகார்த்தாவில் 100,000 க்கும் அதிகமானவையாக வளர்ச்சிகண்டு, டிசம்பர் 2ல் ஒரு பெரியளவிலான பேரணியில் ஒருவர் கொல்லப்பட்டது, 200க்கும் அதிகமானோர் காயமடைந்தது போன்ற கலவரங்களில் சென்று முடிவடைந்தது.
ஜகார்த்தாவின் கவர்னர் பதவிக்கு போட்டியிடும் பாஸுகியின் எதிர்ப்பாளர்கள் இந்த எதிர்ப்புகளிலிருந்து தங்களை விலக்கியே வைத்துள்ளனர், ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி இஸ்லாமிய குழுக்களுக்கு மறைமுகமான ஆதரவையும் வழங்கிவருகின்றனர். நவம்பர் பேரணிக்கு பின்னர், ஜனாதிபதி விடோடோ இந்த எதிர்ப்புக்களை கையாளும் "அரசியல் நடிகர்கள்" மீது குற்றம்சாட்டினார், ஆனால் அவர்களது பெயர்களை வெளியிடவில்லை.
2014 ஜனாதிபதி தேர்தலில் விடோடோவின் எதிர்தரப்பு போட்டியாளரான ப்ரபோவோ சுபியன்டோ அவரது கட்சி ஜெரின்ட்ரா (Gerindra) மற்றும் அதன் கூட்டணியான இஸ்லாமிய வளமான நீதிக்கட்சியுடன் (Islamist Prosperous Justice Party-PKS) இணைந்து, கல்வி அமைச்சராக விடோடோவின் மூலம் அனிஸ் பாஸ்வேடன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளித்தது.
ஜனாதிபதியாக விடோடோவிற்கு முன்னோடியான சுசிலோ பாம்பாங் யுதோயோனோ மற்றும் அவரது ஜனநாயகக் கட்சியும், அவரது மகனான முன்னாள் இராணுவ மேஜர் அகஸ் ஹர்முர்டி யுதோயோனோவுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக, ஐக்கிய அபிவிருத்தி கட்சி (United Development Party-PPP), தேசிய ஆணை கட்சி (National Mandate Party-PAN), மற்றும் தேசிய விழிப்பு கட்சி (National Awakening Party-PKB) ஆகிய மூன்று முஸ்லீம் அடிப்படையிலான கட்சிகளுடன் ஒரு கூட்டணியை அமைத்தது.
நவம்பர் புரட்சிக்கு பின்னர் குற்றச்சாட்டுக்களை மறுக்க யுதோயோனோ ஒரு மூத்த பத்திரிக்கையாளர் மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து, அவர் பெரும் பேரணிக்கு திட்டமிட்டதாகவும், ஆனால் அதே சமயத்தில் அதன் ஆர்பாட்டத்திற்கு "300 சதவிகிதம்" அவர் ஆதரவளிப்பதாகவும் பிரகடனம் செய்தார். முன்னதாக, பிரச்சாரத்தின் பரந்த நோக்கங்களின் ஒரு அறிகுறியாக அவர் ஜகார்த்தா தேர்தலை இப்போது "ஒரு ஜனாதிபதி தேர்தல் போல உணர்கிறேன்" என்றார்.
கடந்த மார்ச் இல் பாஸுகி சுயேச்சையாக இயங்கபோவதாக சமிக்ஞை செய்த அவர் ஜுலையில் முந்தைய சுகார்ட்டோ சர்வாதிகாரத்தின் அரசியற் கருவியான கோல்கர், ஊடக சக்கரவர்த்தியாக விளங்கும் சூர்ய பாலோ மற்றும் சுகர்தோ காலத்து தளபதியான மற்றும் விடோடோவின் உயர் பாதுகாப்பு அமைச்சருமான விரன்டோ கட்சியான ஹனுரா போன்ற மூன்று கட்சிகளுடனான விடோடோவின் பாராளுமன்ற கூட்டணியின் நியமனத்தையும் ஏற்றுக்கொண்டார். அவர் முன்னாள் ஜனாதிபதி மேகவதி சுகர்னோபுத்திரி மற்றும் மற்றொரு வேட்பாளரை தேட முனைந்துகொண்டிருக்கும் அவரது போராட்டத்திற்கான இந்தோனேஷிய ஜனநாயக கட்சியின் (Indonesian Democratic Party of Struggle - PDI-P) ஆதரவினையும் பெற்றுள்ளார்.
பாஸுகி மீதான விசாரணையும், அநேமாக அவருக்கு இருக்கின்ற தண்டனை வாய்ப்பும் பெப்ரவரி தேர்தலை தற்போது தள்ளிவைத்துள்ளது, மேலும் 2019 ஜனாதிபதி தேர்தலில் விடோடோவின் வாய்ப்புக்கள் குறித்து கேள்விகுறியையும் இடம்பெற செய்துள்ளது. விடோடோ அவரது ஆதரவாளரிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் ஒரு முயற்சியில், ஆர்ப்பாட்டத்தின் பக்கம் நிற்கும் FPI தலைவர்களுடன் டிசம்பர் 2ல் நடைமேடையில் திடீரென அவர் தோன்றியது திறம்பட அவர்களது பிரச்சாரத்திற்கு அங்கீகாரத்தை வழங்கியது.
சாதாரணமாக பல மாதங்கள் ஆகின்ற நடைமுறையில், நவம்பர் 16ல் பாஸுகி சந்தேகத்திற்குரிய ஒரு நபராக முத்திரையிடப்பட்டார், நவம்பர் 25ல் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் பொலிஸ் வழக்கினை சமர்ப்பித்தது, மேலும் அதிலிருந்து மூன்று நாட்களுக்குள் AGO பாஸுகியின் கடந்தகால விபரங்களுடனான 826 பக்கங்கள் கொண்ட முழுமையான கோப்பினை அறிவித்தது என்ற விதத்தில் பாஸுகிக்கு எதிரான வழக்கு பெரிதும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 13ல் இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டபோது, பாஸுகி குர்ஆனை அவமதிக்கும் நோக்கத்தினை தான் கொண்டிருக்கவில்லை என மறுத்தார். டிசம்பர் 27 அன்று, ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு பாதுகாப்பத்துறை சமர்ப்பிப்புக்களுக்கு எதிராக இந்த வழக்கை நிராகரிப்பதற்கான தீர்ப்பை வழங்கியது, ஏனெனில், இது பாஸுகியின் மனித உரிமைகளையும், நடைமுறைகளை மீறுவதாக உள்ளது. கடந்த வாரம் விசாரணை தொடங்கியபோது, நீதிபதிகள் நீதிமன்றத்திலிருந்து பத்திரிக்கையாளர்களுக்கு தடை விதித்தனர், மேலும் பாஸுகிக்கு ஆதரவான, மற்றும் எதிர்ப்புடனான ஆர்ப்பாட்டங்களுக்கு இடையில் நீதிமன்றம் 2500 பாதுகாப்பு படையினரால் சூழப்பட்டும் இருந்தது.
பாஸுகிக்கு எதிராகவும், விடோடோவுக்கு மறைமுகமாகவும் இந்த நடவடிக்கைகள் பொருளாதார கொள்கை பற்றி இந்தோனேஷிய ஆளும் உயரடுக்கினரிடையே பிளவுகளை பிரதிபலிக்கின்றன. 2014 தேர்தலில் விடோடோவின் போட்டியாளரான ப்ரபோவோ சுபியன்டோ பொருளாதார தேசியவாதம் மற்றும் பாதுகாப்புவாதம் குறித்த பிரச்சாரத்தில் இருந்த அதேசமயம், இந்த இருவரும், சந்தை சார்பு மறுசீரமைப்பினை முடுக்கிவிடுகின்ற முயற்சிகளுடன் இனங்காணப்பட்டனர்.
2014ல் எரிபொருள் மானியங்களை விடோடோ குறைத்ததனால் பெட்ரோல், டீசல் விலை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது மிகப்பரவலான ஆத்திரத்தினை தூண்டியது. அவரது திட்டங்களான, வருமானத்தை பயன்படுத்தி சமூக செலவினங்களை அதிகரிப்பது, உள்கட்டுமான திட்டங்களின் மூலமாக வேலை விரிவாக்கம் செய்வது என்பவை வாக்குறுதிகளாக இருந்தனவே தவிர உயிர்பெறவில்லை. உள்நாட்டு நுகர்வும், அரசாங்க செலவுகளும், ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தை ஏகமாக உள்ளடக்கி தேக்கநிலையிலுள்ளது.
அதன் விளைவாக, வாஷிங்டனில் வரவிருக்கும் ட்ரம்ப் இன் நிர்வாகம் வணிகப்போர் நடவடிக்கைகளை அமுல்படுத்துகிறது என்றால், இந்தோனேஷிய பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்ற கவலைகள் ஜகார்த்தாவில் நிலவுகின்றன. இந்தோனேஷியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 12 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கினை கொண்டு அதன் மிகப்பெரிய ஏற்றுமதி இலக்காக அமெரிக்கா உள்ளது. அரசாங்கம் 2017ம் ஆண்டிற்கான அதன் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டு இலக்கான 7 சதவிகிதத்தை மிகச்சுருக்கி 5.1 சதவிகிதத்திற்கு குறைத்துவிட்டது.
அதே நேரத்தில், இந்தோனேஷியா அதிகரித்தளவில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு பின்னால் மூன்றாவது பெரிய முதலீட்டாளராக இருக்கும் சீனாவிலிருந்து பெறுகின்ற அந்நிய நேரடி முதலீட்டினை (FDI) சார்ந்துள்ளது, அத்துடன் 2015 முழுவதிலும் அந்நிய நேரடி முதலீடு கிட்டத்தட்ட 600 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததிலிருந்து ஒன்பது மாத காலத்தில் செப்டம்பர் இறுதிக்குள் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்தது. விடோடோ சீன முதலீட்டினை எதிர்நோக்கி இருப்பதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ஐந்து முறைகள் சந்தித்தார்.
இஸ்லாமிய தலைவர்கள் பாஸுகியை ஒரு அவிசுவாசி என்று முத்திரைகுத்தியது மட்டுமல்ல, கூடுதலாக சீன எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டிவிடவும் முனைந்தனர், மேலும் சுதந்திரம் பெற்றதிலிருந்து பிற்போக்குத்தன திசைகளில் சமூக அழுத்தங்களை திருப்பிவிடுவதற்கு இந்தோனேஷிய அரசியல் பிரமுகர்களால் இது திரும்ப திரும்ப சுரண்டப்படுகிறது.
1999ல் இந்தோனேஷிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 163.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருந்தது மிகப்பெரிய அளவில் விரிவடைந்து 2014ல் 888.5 பில்லியன் டாலருக்கு உயர்ந்தபோதும், இந்த பொருளாதார நன்மைகளால் ஒப்பீட்டளவில் மக்கள் தொகையில் ஒரு சிறிய அடுக்கினர் மட்டுமே செறிவூட்டப்படுவதனால் சமூக சமத்துவமின்மை விரிவடைந்துள்ளது.
டிசம்பர் 2015ன் உலக வங்கி அறிக்கை ஒன்று, 10 சதவிகித உயர்மட்ட குடும்பங்களின் நுகர்வு விகிதம் 2002ல் வறியவர்களை காட்டிலும் 42 சதவிகிதம் அதிகமாக இருந்தது, ஆனால் 2014ம் ஆண்டிற்குள் வறியவர்களை காட்டிலும் பணக்கார குடும்பங்களின் நுகர்வு 54 சதவிகிதம் கூடுதலாக இருந்தது என்று கண்டது. இந்த வளர்ந்து வருகின்ற தேசிய செல்வத்தில் மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதத்தினர் மட்டுமே பயன்பெறுகின்ற நிலையில் மீதமுள்ள 80 சதவிகிதமான 205 மில்லியன் மக்கள் மோசமான நிலையில் உள்ளனர்.
G20 நாடுகள் மத்தியில், இந்தோனேஷியா தற்போது வருமான சமத்துவமின்மையில் ரஷ்யாவிற்கு மட்டும் இரண்டாம் நிலையில் உள்ளது. ஒரு சதவிகித மக்கள் மொத்த சொத்துக்கள் மற்றும் நிதி சொத்துக்களில் பாதியையும், மேலும் 10 சதவிகிதத்தினர் 77 சதவிகித தேசிய சொத்தினையும் சொந்தமாக கொண்டுள்ளனர். உத்தியோகப்பூர்வ வறுமை மட்டம் 11 சதவிகிதம் அல்லது 20 மில்லியன் மக்கள் என்பது ஒரு போலித்தனமானது. இன்னுமொரு 68 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு சற்று மேலான நிலையில் வாழ்வதுடன், எந்தவொரு நிதி அதிர்ச்சியிலும் அது எளிதாக கீழே சரிந்துவிடக்கூடும் என்று உலக வங்கி தெரிவிக்கிறது.
அதேபோல, முதலாளித்துவ மத்தியதரவர்க்க தட்டினரிடம் முறையிடுவது, ஒரு வர்த்தக அடுக்கினை செல்வ செழிப்படைய செய்வது போன்ற வகையில் ஜகார்த்தாவை "நவீனப்படுத்தும்" பாஸுகியின் முயற்சிகள் நகரத்தின் மிக வறிய அடுக்கினரிடையே ஆத்திரத்தை தூண்டியுள்ளது. அவருடைய நில சீர்திருத்த திட்டங்கள் கடலோர தளங்களின் அபிவிருத்தியாளர்களுக்கும், அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமே பயனுள்ளதாக இருந்தபோது, 2015ல் மட்டும், 8,145 குடும்பங்களின் வெளியேற்றத்தை பார்வையிட்டார்.
பாஸுகி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு பின்னால் இஸ்லாமிய அமைப்புக்கள், பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் பிரிவுகளுடன் இணைந்து தங்களது சொந்த பிற்போக்கத்தன திட்ட நிரலுக்காகவும், அனைத்திற்கும் மேலாக தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் இலாப அமைப்புமுறையினுள்ளிருக்கும் எந்தவொரு சவாலையும் தடுக்கவும் வளர்ந்துவரும் சமூக அதிருப்தியை சுரண்டுவதற்கு முனைந்துவருகின்றனர்.