Print Version|Feedback
Indian police begin to impose Supreme Court order on national anthem
தேசிய கீதம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவினை இந்திய பொலிஸ் நடைமுறைப்படுத்த தொடங்குகிறது
By Wasantha Rupasinghe
21 December 2016
இந்திய திரையரங்குகளில் எந்தவொரு கதையம்சத்தை சார்ந்த படமும் திரையிடப்படும்போது ஆரம்பத்தில் கண்டிப்பாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்றும், மேலும் பார்வையாளர்கள் அனைவரும் "கண்டிப்பாக எழுந்து நின்று மரியாதை" செலுத்தவேண்டுமென்றும் நவம்பர் 30ல் உச்ச நீதிமன்றம் விதித்த பிற்போக்குவாத உத்தரவினை இந்திய பொலிஸ் அமுல்படுத்த தொடங்கிவிட்டது.
சமீபத்திய நாட்களில், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாகாணங்களில், "தேசிய கீதத்தை அவமதித்ததாக" குற்றஞ்சாட்டி சுமார் 20 பேரை பொலிஸ் கைதுசெய்துள்ளது. இதில் கேரள தலைநகரமான திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற பதினொறு பேரும் அடங்குவர்.
பெரும்பாலும், இந்த கைது நடவடிக்கைகள் இந்தியாவின் இந்துமத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசின் ஆதரவாளர்களால் தூண்டிவிடப்பட்டு வருகின்றன. இந்த வார தொடக்கத்தில், ஒரு மலையாள நாவலாசிரியரும், "நாடக நடிகருமான" கமல் சி. சவாரா தனது முகநூல் பக்கத்தில் தேசிய கீதத்தினை அவமதித்து இடுகை இட்டுள்ளதாக பிஜேபி இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சா (Yuva Morcha) பொலிஸில் முறையீடு செய்ததற்கு பின்னரே அவர் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிர்ச்சியூட்டுகின்ற ஜனநாயகவிரோத தீர்ப்பினையும் தாண்டிச்சென்று பொலிஸ் தற்போது சவாரா மீது இராஜதுரோக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனைத்து திரையரங்குகளிலும் தேசியகீதம் இசைக்கப்படவேண்டும், மேலும் திரைப்பட ரசிகர்கள் அதனை பூஜிக்கவேண்டும் என்பது தனிமனித குடியுரிமைகள் மீதானதொரு அப்பட்டமான தாக்குதலாக உள்ளது. ஒரு போர்வெறிமிக்க இந்திய தேசியவாதத்திற்கு அரசின் அங்கீகாரத்தை வழங்குவதுடன் அதை தூண்டி விடுவதற்கான ஆளும் வர்க்கத்தின் சமீபத்திய முயற்சிகளில் ஒன்றாக இதுவும், இந்திய முதலாளித்துவத்தின் வல்லரசாகும் அபிலாஷைகளுக்கும், ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கைக்கும் முட்டுக்கொடுப்பதுடன், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு காட்டுவதை கீழ்ப்படிவற்றதும் சட்டவிரோதமானதும் என்கின்றது.
பரம வகுப்புவாத மற்றும் சுயபாணி கொண்ட "இந்துமத பலசாலியான" நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் இந்த உந்துதலை முன்னெடுத்துவருகிறது. இந்தியாவின் புதிய துணிச்சலுக்கு நிரூபணமாக மோடி அரசாங்கத்தின் உத்தரவின்படி கடந்த செப்டம்பரில் பாகிஸ்தான் உள்ளே இந்திய இராணுவம் நிகழ்த்திய சட்டவிரோதமான மற்றும் மிகுந்த ஆத்திரமூட்டக்கூடிய இராணுவ தாக்குல்கள் குறித்த மோடி அரசின் கொண்டாட்டத்திற்கு பெருநிறுவன ஊடகங்களிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.
"தேசிய ஐக்கியம்" என்ற பெயரில் மற்றும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் சட்டத்திற்கு எதிரானதாக்குவதும் மற்றும் ஒடுக்கும் ஒரு தவறான அரசியல் சூழ்நிலையை ஊக்குவிப்பதையும் மற்றும் பாகிஸ்தான் மற்றும் பிற "வெளிநாட்டு எதிரிகளையும்" முறியடிப்பது என்பதில் பிஜேபி மற்றும் இந்துமத வலதுகளையும் தாண்டிச்செல்வதை ஆதரிப்பதை இந்த உச்ச நீதிமன்ற உத்தரவு சுட்டிக்காட்டுகிறது. அது ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் மற்றும் நீதித்துறை, பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட அதன் அரசு இயந்திரங்களின் ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. "இந்த நாட்டின் மதிப்பையும், கண்ணியத்தையும் மேம்படுத்துகின்ற எதனையும் நாங்கள் கொள்கையளவில் ஆதரிக்கிறோம்", "எனவே, இதனையும் கொள்கையளவில் ஆதரிக்கிறோம்." என்று காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி அறிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஜனநாயக விரோதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல இந்திய வர்ணனையாளர்கள் குறிப்பிட்டுள்ளவாறு அப்பட்டமாக அரசியலைமைப்பிற்கு முரணானது. ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தையோ அல்லது அரசியலமைப்பு உரிமையையோ நிலைநிறுத்துவதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு என்ற வகையில் இது வெளியிடப்படவில்லை. மாறாக, இந்தியாவின் உச்ச நீதிமன்றம், போபாலை சார்ந்த ஒரு வலதுசாரி அரசு சாரா நிறுவனத்தின் தலைவரும், தற்போது 78 வயதானவருமான நாராயண் சௌக்ஸே என்பவரால், ஒரு தசாப்த காலத்திற்கும் முன்பாக, நடைமுறையிலிருக்கும் நீதி பரிபாலனத்தை தலைகீழாக மாற்றி ஆளும் வர்க்க பிரச்சாரத்திற்கு நீதித்துறை மற்றும் சட்டபூர்வமான ஆதரவு வழங்கி ஆத்திரமூட்டும் தேசியவாதத்தை ஊக்குவிக்குப்பதற்கு ஏற்ற வகையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரு எழுத்துமூல மனுவினை கையில் எடுத்துக்கொண்டுள்ளது.
தேசிய கீதம் இசைக்கப்படும் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க செல்பவர்கள், அதற்கு "அவசியமான மற்றும் தேவையான மரியாதையை செலுத்துவதில்லை" என்று தனது மனுவில் சௌக்ஸே புகார் செய்துள்ளார். (சீனாவுடனான இந்தியாவின் 1962ம் வருட குறுகிய கால எல்லை போரைத் தொடர்ந்து, அப்போதிருந்த காங்கிரஸ் கட்சி அரசாங்கம் திரையரங்குகளில் தேசிய கீதத்தினை இசைப்பதற்கு வலியுறுத்தியது, ஆனால் 1970க்கு பிறகு இந்த நடைமுறை பரவலாக கைவிடப்பட்டது.)
பாகிஸ்தான் மீதான இராணுவ மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் தொடர்பாக மோடி அரசாங்கத்தின் தற்போதைய பிரச்சாரத்தின் ஒரு வெளிப்படையான குறிப்பாக, இவ்வகை பிரச்சாரம் தெற்கு ஆசியாவின் போட்டி அணுஆயுத நாடுகளை போரின் விளிம்பிற்கே கொண்டுவந்துள்ளது. உச்ச நீதிமன்றம் அதன் ஆணையில், "நேரம் வந்துவிட்டது, இந்நாட்டின் குடிமக்கள், அவர்கள் ஒரு நாட்டில் வாழ்கிறார்கள் என்பதையும், மேலும், அரசியலைமைப்பு, தேசப்பற்று மற்றும் உள்ளார்ந்த தேசிய தரத்திற்கு அடையாளமாக அந்நாட்டின் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவது அவர்களது கடமை என்பதையும் உணரவேண்டும்." என்று அறிவித்தது.
உச்ச நீதிமன்றம், அடிப்படை ஜனநாயக உரிமைகள் பற்றிய அதன் எதிர்ப்பினை வெளிப்படுத்தி, மேலும், "இது (இந்திய சட்டம்) எந்தவொரு மாற்று கருத்தினையும் அனுமதிக்காது, அல்லது தனிமனித உரிமைகள் என்ற கண்ணோட்டத்திலான தனிமனித கருத்துக்களுக்கு அதில் இடமில்லை." என்றும் தெரிவிக்கிறது.
தனிமனித உரிமைகள் இந்திய அரசின் நலன்களுக்குள் மட்டுப்படக்கூடியதாக இருக்கவேண்டும், அதிலும் குறிப்பாக, "தேசப்பற்றுக்கும், தேசியவாதத்திற்குமான உறுதிப்பாடான ஒரு உணர்வு" நீதிமன்ற விதிமுறைகளால் புகுத்தப்படும் இந்த சந்தர்ப்பத்தில் ஆங்கிலம் திரிக்கப்பட்டுள்ளபோதும், நீதிமன்றத்தின் பிற்போக்குவாத நோக்கம் மிகத்தெளிவாக உள்ளது.
தேசிய கீதத்திற்கு "மரியாதை" செலுத்த தவறியவர்களை துன்புறுத்தவும், தாக்கவும் வலதுசாரி தேசியவாதிகளை உச்ச நீதிமன்ற உத்தரவு திறம்பட ஊக்குவிக்கிறது. இதுபோன்ற பல சம்பவங்கள் பற்றி ஏற்கனவே அறிக்கைகள் வந்துள்ளன. உடல் ஊனமுற்ற நபர்களுக்கு இந்த உத்தரவு விலக்கு அளிக்கின்றபோதும், கடந்தகாலங்களில், தேசிய கீதம் இசைக்கப்படும்போது அவர்கள் எழுந்து நிற்கவில்லை என்று அவர்களையும் இலக்குவைத்து வற்புறுத்திவருவது இன்னும் நிறுத்தப்படவில்லை.
தேசிய கீதத்திற்கு எந்தவித "அவமதிப்பும்" இல்லை என்று பெயரளவில் உறுதி செய்வதாக, தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையரங்குகளின் நுழைவு மற்றும் வெளியேற்ற வாயில்கள் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய "தேசப்பற்றை" ஊக்குவிக்கும் அதன் ஆர்வத்தில், நீதிமன்றம் செருக்குடன் பாதுகாப்பு குறித்த கவலைகளை நிராகரிப்பதுடன், 1997ல் ஒரு தில்லி திரையரங்கில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 59 பேர் கொல்லப்பட்ட பின்னர் திரையரங்குகளின் வாயில்கள் தடையற்ற நுழைவுக்கு ஏற்றவாறு எல்லா நேரங்களிலும் திறந்தநிலையில் வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று வெளியிடப்பட்ட தனது கடந்தகால உத்தரவினையும் வெளிப்படையாக புறந்தள்ளி உள்ளது.
இந்தியாவின் அநேக பிரதான செய்தித்தாள்களில் உச்ச நீதமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு "நீதித்துறையின் வரம்புமீறல்" வழக்காக விமர்சிக்கப்பட்டுள்ளது, ஆனால் இதற்கு இருக்கும் அரசியல் பின்னணி பற்றி மிகக்குறைந்தளவேனும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பிஜேபி அரசாங்கம், அதன் கடும் சிக்கன மற்றும் முதலீட்டாளர் சார்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் இடையே அதிகரித்துவரும் அதிருப்தியை எதிர்கொள்கின்ற நிலையில், அதிகரித்தளவில் இன்னும் பிற்போக்குவாத தேசியவாதத்தையும், அப்பட்டமான வகுப்புவாத முறையீடுகளையுமே நம்பியுள்ளது.
தெற்கு ஆசியாவிற்குள்ளும், உலக அரங்கிலும் இந்திய முதலாளித்துவ வர்க்கம் கூடுதலான நன்மைகள் பெறுவதற்கு வழிசெய்வதை முன்னிட்டு, பாகிஸ்தானுக்கு எதிரான மோடி அரசாங்கத்தின் இந்த கடுமையான நிலைப்பாடு பிராந்திய மேலாதிக்க சக்தியாக இந்தியா உருவெடுக்கவேண்டும் என்ற அதன் கூற்றை உறுதிப்படுத்துவதையே இலக்காக கொண்டுள்ளது.
ஆனால் பிஜேபியும், அதன் கூட்டணி கட்சிகளும், அரசு இயந்திரத்தின் பரந்த பிரிவுகள் மற்றும் ஆளும் உயரடுக்கின் ஆதரவுடன், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக அவர்களது கைகளை வலுப்படுத்துவதை முன்னிட்டு தேசிய பேரினவாதத்தையும், இராணுவவாதத்தையும் வளர்த்துவிடுவதற்கு இந்த போர் நெருக்கடியையும் பயன்படுத்துகின்றனர்.
செப்டம்பர் மத்தியிலிருந்து, இந்திய இராணுவ தளம் ஊரி மீதான காஷ்மீர் பிரிவினைவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என்று பிஜேபி அறிவித்தபோது, மோடி மற்றும் பிஜேபி தலைவர்களின் உரைகள் ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்களால் நிறைந்திருந்ததுடன், இந்தியாவின் "வீரம் மிக்க" ஆயுதப்படைகள் மீதான துதிபாடலாகவும் இருந்தது. Indian Express இன் ஒரு சமீபத்திய கருத்து பத்தியில், அரசியல் அறிவியல் பேராசிரியர் சுஹாஸ் பால்ஷிக்கர், "ஒவ்வொரு நாளும், நமது தேசப்பற்று குறித்த ஒரு கோரிக்கை இருக்கிறது. ஏடிஎம் வாசல்களில் வரிசையில் காத்திருக்கவேண்டியுள்ளது பற்றி நீங்கள் புகார் செய்தால், (இந்தியாவின் நாணயங்கள் மீதான அரசின் செல்லாததாக்கும் நடவடிக்கையினால் விளைவிக்கப்பட்ட குழப்பம் பற்றிய ஒரு குறிப்பு) உங்களுக்கு சிப்பாய்கள் பற்றி நினைவூட்டப்படுவதுடன், வரிசையில் காத்திருப்பது என்பது நாட்டிற்கு உங்களது விசுவாசத்தைக் காட்டும் செயலே ஆகும்" என்று கருத்து தெரிவித்தார்.
பாலிவுட் மற்றும் இந்தியாவின் மும்பையை தளமாக்கொண்ட திரைப்படத் துறையையும் கட்டாயப்படுத்தி, பாகிஸ்தான் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை கூலிக்கு அழைப்பதை நிறுத்துவதற்கு ஒரு பிஜேபி கூட்டணி பங்காளியான, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் (SS), சிவ சேனாவும் அதன் பங்கிற்கு வழிசெய்தது தொடர்பாக நடத்திய ஒரு வெற்றி பிரச்சாரத்தினை தொடர்ந்து இந்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தேசிய கீதம் தொடர்பான உத்தரவு வந்துள்ளது.
பாலிவுட் மீது இந்த பேரினவாத தடையை சுமத்துவதற்கு இந்தியாவின் தாராளவாத ஊடகங்களின் சில பிரிவுகள் தங்களது கைகளை முறுக்கியபோதும், விரைவில் அவர்கள் இந்த பிரச்சனையை கைவிடவும் செய்தனர். இதற்கிடையில், வலுவுள்ள ஆளும் வர்க்க கூறுகள் அதனை ஆதரிப்பதற்கு முன்வந்தனர். 23 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்கு அதிபதியும், இந்தியாவின் செல்வ செழிப்புள்ள கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி, பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்கள் மீதான தடைக்கு சமீபத்தில் பகிரங்கமான ஆதரவு கொண்டிருந்ததுடன், "எனக்கு, எப்போதும் நாடு தான் முதலாவது" என்று அறிவிக்கிறார். அம்பானி, தற்செயலாக இல்லை, 2014 தேர்தலில் பிஜேபி இன் பிரதம மந்திரி வேட்பாளராக மோடி மேற்கொண்ட முயற்சிக்கு முக்கியமான ஆரம்பகட்ட ஆதரவினை வழங்கினார்.
பாகிஸ்தான் உள்ளே இந்திய இராணுவத்தின் "நுட்பமான தாக்குதல்" நடவடிக்கையை மோடி அரசாங்கம் "அரசியலாக்குகிறது" என்ற முறையீட்டினை முன்வைத்து எதிர் கட்சிகள் தற்போது மெல்லிய குரலை எழுப்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றபோதும், பிஜேபி பிரச்சாரம் வலதுசாரி தேசியவாதத்தை தூண்டிவிடுவதற்கான ஆதரவை அவர்கள் அனைவரும் வழங்கியுள்ளனர். ஊரி தாக்குதலில் இருந்து மீண்டபோது, அனைத்து எதிர் கட்சியினரும் பாகிஸ்தான் குறித்த அவற்றின் கண்டனங்களை தெரிவித்து அரசாங்கத்திற்கு பின்னால் அணிதிரண்டதுடன், பாகிஸ்தான் மீதான செப்டம்பர் 28-29 தேதிகளில் நடத்தப்பட்ட எல்லை தாண்டிய தாக்குதல்கள் குறித்த கொண்டாட்டத்தில் அவர்கள் அனைவரும் பிஜேபி உடன் இணைந்தனர்.
இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் அதன் இடது முன்னணியும் தான் இதில் இருந்தனர். அரசாங்கம் நடத்திய அனைத்து கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பிற எதிர்கட்சித் தலைவர்களுடன் இணைந்துகொண்டார். மேலும், CPM தலைமையிலான ஆட்சி நடைபெறும் கேரளாவில், மாநில சட்டமன்றம் CPM இன் முயற்சியால், தாக்குதல்கள் மற்றும் இராணுவம் குறித்து பாராட்டுதல்கள் தெரிவித்து தீர்மானம் இயற்றியுள்ளது. மிக சமீபத்தில், CPM இன் அரசியற்குழு உறுப்பினரும் கேரளாவின் முதல் மந்திரியுமான பினராயி விஜயன், இரண்டு மாவோயிஸ்டுகளின் கூட்டு கொலையை தங்களை பாதுகாக்க சடுதியாக மேற்கொண்ட ஒரு போலி எதிர்பாரா கொலையாக காட்டி மாநில பொலிஸை பாராட்டினார்.