Print Version|Feedback
Greek workers strike against Syriza’s austerity policies
சிரிசாவின் சமூக செலவின வெட்டுக்கொள்கைகளுக்கு எதிராக கிரேக்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
Christoph Vandreier
9 May 2016
கடந்த வாரயிறுதியில், கிரீஸ் எங்கிலும் பெருதிரளான தொழிலாளர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தில் இணைந்தனர் மற்றும் சிரிசா (தீவிர இடது கூட்டணி) அரசாங்கம் கொண்டு வந்த மற்றும் ஞாயிறன்று இரவு கிரேக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கடுமையான சமூக செலவின வெட்டு நடவடிக்கை பொதிக்கு எதிராக பத்தாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஏதென்சில், பல ஆயிரக்கணக்கானவர்கள் "இந்த அரசாங்கத்தையும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தையும் தூக்கியெறிய வாருங்கள்!” என்பது போன்ற மற்றும் “சமூக பாதுகாப்பைச் இல்லாதொழிக்க விடமாட்டோம்!” என்பது போன்ற கோஷங்களை எழுப்பியவாறு, வீதிகளில் இறங்கினார்கள்.
இந்த மூன்று நாள் வேலைநிறுத்தம் கிரேக்க பொருளாதாரத்தின் பெரும் பகுதிகளை முடக்கியது. சுரங்க வழி போக்குவரத்துத்துறை ஓட்டுனர்கள், பேருந்து மற்றும் இரயில் ஓட்டுனர்கள், ஆசிரியர்கள், அரசுத்துறை பணியாளர்கள், இதழாளர்கள், கப்பல் பணியாளர்கள், குப்பை சேகரிப்பாளர் மற்றும் தனியார்துறை தொழிலாளர்களும் இதில் பங்கு பற்றினர். சிறு கடைகள் மற்றும் சிறு விற்பனையகங்களும் கூட வேலையை நிறுத்தி இருந்தன.
ஆனால் இது, நாடாளுமன்றத்தில் 5.4 பில்லியன் யூரோ பின்தேதியிட்ட வரி உயர்வுகள் (regressive tax hikes) மற்றும் 1.8 பில்லியன் யூரோ ஓய்வூதிய வெட்டுக்களுக்கு வாக்கெடுப்பு நடத்துவதில் இருந்து சிரிசாவைத் தடுத்து விடவில்லை. மதிப்புக்கூட்டு வரியை (விற்பனை வரி) 23 சதவீதத்தில் இருந்து 24 சதவீதத்திற்கு உயர்த்துவது, குறைந்த கூலி பெறும் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான ஒரு வரி உயர்வு, மற்றும் தொழிலாளர் சக்தியில் பல்வேறு பிரிவுகளது தொழிலாளிகளின் ஓய்வூதிய பங்களிப்பில் 20 சதவீத உயர்வு ஆகியவையும் அந்த முறைமையில் உள்ளடங்கும்.
இந்த தாக்குதல்கள் எல்லாம் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸின் சிரிசா அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட ஒரு தொடர்ச்சியான பிற்போக்குத்தனமான சமூக முறைகளில் சமீபத்தியது மட்டுமே ஆகும். அது முன்னதாக ஓய்வூதிய பங்களிப்பை அதிகரித்ததுடன், சலுகைகளை வெட்டி மற்றும் ஓய்வூதிய வயதை 67 ஆக உயர்த்தியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக பாதுகாப்பு வளையம் சிதைக்கப்பட்டதால் தொழிலாளர்களின் வருமானம் 30 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ள மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மை கொண்டுள்ள மற்றும் ஒட்டுமொத்த குடும்பங்களும் சொற்ப ஓய்வூதியத்தில் உயிர்வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில், இத்தகைய வெட்டுக்கள் மக்களின் பரந்த அடுக்குகளைப் பாதிக்கிறது. இதற்கு கூடுதலாக, அரசசொத்துக்கள் தனியார்மயமாக்கப்பட்டு உள்ளதால், இது கூலி மற்றும் வேலை வெட்டுக்களுக்கு அதிகளவில் இட்டுச் சென்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்படும் சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக சூளுரைத்ததன் அடிப்படையில் ஜனவரி 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்ராஸ் அரசாங்கத்திற்கு எதிரான இந்த வேலைநிறுத்தத்திற்குக் கிடைத்திருக்கும் பலமான ஆதரவு, இந்த கசப்பான அனுபவத்தின் விளைபொருளாகும். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் சிரிசாவைக் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருகிறார்கள். அக்கட்சி எவ்வகையானது என்பது அதிகரித்தளவில் பார்க்கப்பட்டு வருகிறது: அதாவது, அது ஐரோப்பிய மற்றும் சர்வதேச மூலதனத்தின் நலன்களுக்குச் சேவையாற்றும் ஒரு பிற்போக்குத்தனமான முதலாளித்துவ அரசாங்கமாகும். “இடது" என்று கூறப்படும் சிரிசா கட்சி, தொழிலாள வர்க்கத்தைக் கொடிய வறுமை நிலைமைக்குக் தள்ளுவதன் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாக்கும் மற்றும் திவாலான கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தை மீட்டெடுக்கும் தீர்மானத்துடன், சிஐஏ மற்றும் வங்கிகளது ஒரு கருவியாக உள்ளது.
சிரிசா காட்டிக்கொடுப்பால் உண்டான அதிர்ச்சி மற்றும் நாசங்களுக்குப் பின்னர் கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட போராட்டத்தை இந்த வாரயிறுதி பொது வேலை நிறுத்தம் சமிக்ஞை செய்கிறது. இப்போராட்டம், 2015 இல் சிரிசா உடனான கசப்பான அனுபவத்தின் படிப்பினைகளை அதன் தொடக்கப்புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நான்காண்டு காலம் பேரழிவுகரமான சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் வங்கிகள் மீதிருந்த பாரிய எதிர்ப்பைக் கைப்பற்றியதன் மூலமாக சிரிசா அதிகாரத்திற்கு வந்தது. இந்த அமைப்பு நீண்ட காலமாக சமூக ஜனநாயக PASOK கட்சியின் வட்டத்தில் செயல்பட்டு வந்ததாகும். PASOK கட்சி தான் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக செலவின குறைப்பு கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தியது. சிப்ராஸ் பதவியேற்பதற்கும் முன்னதாக, வாஷிங்டன் மற்றும் பிரதான ஐரோப்பிய தலைநகரங்களுக்கான அவரது விஜயங்களின் போது முழுமையாக பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் சிரிசா அணிசேர்ந்ததன் தாக்கங்கள் அக்கட்சி பதவியேற்றதுமே உடனடியாக வெளிப்பட தொடங்கியது, அப்போது சிப்ராஸ் தீவிர-வலது சுதந்திர கிரேக்கர்கள் கட்சியை அதன் கூட்டணி பங்காளியாக பெயரிட்டார். பொருளாதார நெருக்கடியின் போக்கில் கட்டமைந்து வந்த சமூக செலவின குறைப்பு திட்டங்களுக்கான பரந்த எதிர்ப்பை, கிரீஸில் மட்டுமல்ல, மாறாக ஐரோப்பா எங்கிலும் இருந்த எதிர்ப்பை, ஒன்றுதிரட்டுவதற்கு சிரிசா ஒன்றுமே செய்யவில்லை. அதற்கு மாறாக, பதவிக்கு வந்து ஒருசில வாரங்களில், சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள்விரோத செலவு குறைப்பு திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் அதன் தேர்தல் வாக்குறுதியைக் கைத்துறந்ததுடன் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி கோரிய நிபந்தனைகளின் கீழ் பிணையெடுப்பு என்றழைக்கப்பட்டதைத் தொடரவும் ஒப்புக் கொண்டது.
கிரேக்க மக்கள்தொகையில் ஒரு பெரும் பெரும்பான்மை ஐரோப்பிய ஒன்றிய செலவு குறைப்பு திட்டத்தின் மீதான ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களித்த போது, சிரிசா அந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்து, அதற்கு முன்னர் இருந்த சமூக ஜனநாயக மற்றும் பழமைவாத அமைப்புகள் ஏற்றுக்கொண்ட முறைமைகளை விட மிக அதிகமான புதிய வெட்டுக்களுக்கு உடன்பட்டது. உத்தியோகப்பூர்வ வேலைவாய்ப்பின்மை தற்போது 25 சதவீதத்தில் இருக்கின்ற நிலையில் மற்றும் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் வறுமையில் வாழ்கின்ற நிலைமையில், சிரிசாவின் கீழ், சமூக நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு "முற்போக்கான" மாற்றீடாக அதை ஊக்குவித்த, சிரிசா மற்றும் சகல குட்டி-முதலாளித்துவ போலி-இடது அமைப்புகளின் வர்க்க குணாம்சம் கூர்மையாக அம்பலப்பட்டுள்ளது. முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைகையில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பதட்டங்கள் கூர்மையடைகையில், சிரிசா முதலாளித்துவ வர்க்க மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தில் உள்ள அதன் சமூக அடித்தளங்களது தனிச்சலுகைகளைப் பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நிதியியல் அமைப்புகளுடன் இணைந்து இயங்கி, கிரேக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஒரு பாதுகாவலனாக செயல்பட்டு வருகிறது.
இந்த அரசியல் குற்றத்தில் சிரிசா நிறைய உடந்தையாய் இருந்துள்ளது. கிரீஸின் பிரதான தொழிற்சங்கங்கள் சிரிசாவுடன் மிக நெருக்கமான அணி சேர்ந்துள்ளன என்பதுடன், வேலைநிறுத்தங்களை மட்டுப்படுத்தவும் மற்றும் அவற்றை பல்பிடுங்கிய போராட்டங்களாக மாற்றவும் அவற்றின் சக்திக்கு உட்பட்டு அனைத்தும் செய்கின்றன. அமெரிக்காவின் சர்வதேச சோசலிச அமைப்பு முதற்கொண்டு ஜேர்மனியின் இடது கட்சி மற்றும் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி வரையில், உலகெங்கிலும் உள்ள போலி-இடது குழுக்கள் சிரிசா அரசாங்கத்தைப் பாராட்டியதுடன், அதன் துரோகத்தை மூடிமறைத்தன. அவை தொழிலாள வர்க்கத்தை ஒன்று நேரடியாக சிரிசாவிடம் மண்டியிட செய்ய வேலை செய்தன அல்லது ஒரு புதிய முற்போக்கான போக்கை ஏற்குமாறு சிரிசா அரசாங்கத்தை கீழிருந்து அழுத்தமளிக்க முடியும் என்ற பிரமைகளை ஊக்குவிக்க வேலை செய்தன.
இந்த அரசாங்கத்தின் ஓராண்டுக்கும் அதிகமான ஆட்சிகாலம், அதை உழைக்கும் மக்களது நலன்களின் ஒரு பாதுகாவலராக திருப்ப முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது ஏனென்றால் அதுவும் அதன் தலைமை கட்சியுமான சிரிசா முதலாளித்துவ வர்க்கத்தின் கருவிகளாக உள்ளன.
கிரேக்க தொழிலாள வர்க்கம் அதன் போராட்டத்தைப் புதுப்பித்துள்ள நிலையில், சிரிசா அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்குவதையும், ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலான சமூகத்தின் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சகல ஒடுக்குப்பட்ட பிரிவினரை புரட்சிகரமாக அணிதிரட்டுவதையும் நனவுபூர்வமாக அதன் கடமையாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது சிரிசாவிற்கு எதிராக மற்றும் ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) உட்பட போலி-இடது அமைப்புகளின் ஒட்டுமொத்த சகோதரத்துவத்திற்கு எதிராக சளைக்காத போராட்டத்தை நடத்த வேண்டும். ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, KKE, தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்க மற்றும் மூச்சுத் திணறடிக்க தொழிற்சங்கங்களுடன் கூடி இயங்கி கொண்டே, கிரேக்க தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து சிரிசாவை விமர்சிக்கிறது.
தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அரசிடமிருந்து முற்றிலும் சுயாதீனமான வேலைநிறுத்த கமிட்டிகளை, தனது சொந்த போராட்ட அமைப்புகளாக நிறுவி, தொழிலாள வர்க்கம், போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து கைப்பற்ற வேண்டும். இத்தகைய உண்மையான ஜனநாயக போராட்ட அமைப்புகள் தொழிலாளர்களின் சக்தி மைய அங்கங்களாக உருவாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, கடந்த நவம்பரில், கிரேக்கத்தில் சிரிசா காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பிHYPERLINK "http://www.wsws.org/tamil/articles/2016/jan/160126_poli.shtml"னைHYPERLINK "http://www.wsws.org/tamil/articles/2016/jan/160126_poli.shtml"கள் என்ற அறிக்கையில் பின்வருமாறு விளங்கப்படுத்தியது: "தீவிர இடது" கட்சிகள் என அழைக்கப்படும் கட்சிகள் பதவிகளில் அமர்ந்திருக்கிற முதலாளித்துவ அரசாங்கங்களை நம்பியிருப்பதன் மூலமோ, அல்லது சாதகமான கொள்கைகளை முன்னெடுக்க இத்தகைய அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள் மூலமோ தொழிலாள வர்க்கத்தால் தனது மிகக் குறைந்தபட்ச நலன்களைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதையே நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. புரட்சிகரப் பாதையை எடுப்பதைத் தவிர தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதையே சிரிசாவின் கொள்கைகள் காட்டியுள்ளன.”