Print Version|Feedback
European Union and Turkey reach deal to seal borders and expel refugees
அகதிகளை வெளியேற்றவும் எல்லைகளை மூடவும் ஐரோப்பிய ஒன்றியமும் துருக்கியும் ஒப்பந்தம்
By Jordan Shilton
19 March 2016
28 ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்கள் மற்றும் துருக்கி பிரதமர் அஹ்மது டாவ்டோக்லு (Ahmet Davutoglu) க்கு இடையில் 18ம் தேதி பிரஸ்ஸெல்ஸில் நடந்த உச்சிமாநாடானது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க போர்ப் பகுதிகளிலிருந்து வெளியேறும் மில்லியன் கணக்கான அகதிகளுக்கு அவர்கள் யாருடனும் தொடர்புகொள்ளாதவாறு ஐரோப்பிய எல்லைகளை மூடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உடன்பாட்டை தயாரித்தது.
இரண்டுநாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடன்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்ட் டுஸ்க் மார்ச் 20க்குப் பின்னர் கிரீஸ்க்கு வருகைதரும் அகதிகளுக்கு இது பொருந்தும் என அறிவித்தார். ஏஜியன் கடலைக் கடந்து கிரீஸ் தீவுகளுக்கு வருகைதரும் அகதிகள் கிரீசில் அடைக்கலம் கோரும் கேலிக்கூத்தான நடைமுறைகளை முடித்த பின்னர் துருக்கி திரும்புவர். இதற்குப் பரிவர்த்தனையாக, ஐரோப்பிய ஒன்றியமானது கிரீசிலிருந்து துருக்கிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு சிரியனுக்கும் பதிலாக சட்டரீதியான முறைகளில் ஒரு சிரிய அகதியை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தது. இந்த நடைமுறை ஏப்பிரல் 4 முதல் அமலாகும்.
இதுவரை உச்சக்கட்டமாக துருக்கிக்கு 3 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியமானது 2018க்குள் அங்காராவிற்கு மேலும் 3 பில்லியன்கள் யூரோக்களை வழங்க உட்னபட்டுள்ளது. துருக்கிய குடிமக்களுக்கு 28 அரசு கூட்டுக்குள்ளேயும் விசா இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பும் அதற்கு வழங்கப்படும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பினராவது மீதான பேச்சுவார்த்தைகளில் ஒரு புதிய அத்தியாயத்தை திறப்பதாகவும் அது அமையும்.
இந்த உடன்பாடு சர்வதேச சட்டப்படி அகதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று கூறுவது ஒரு மோசடி ஆகும். கீழ் மட்டத்திற்கு ஒரு உள்நாட்டு யுத்தத்தால் பீடிக்கப்பட்டு இருக்கும் அரசான துருக்கி, ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு நசுக்கும் மற்றும் ஆட்சிக்கெதிரான அரசியல் எதிர்ப்பாளர்களை நசுக்கும் துருக்கி, ஐநா அகதிகள் உடன்படிக்கைகளை அது முழுமையாக நடைமுறைப்படுத்தாத பொழுதும் கூட, அது ”பாதுகாப்பான தேசம்” என்று அறிவிக்கப்பட இருக்கின்றது. முதலில் அவர்கள் துருக்கியில் தஞ்சம் கோர வேண்டும் என்ற அடிப்படையில், இது கிரீசில் சம்பிரதாயமாக அடைக்கலம் கோரும் நடைமுறையை ஒத்துவராததாக ஆக்குகிறது, அனைத்து அகதிகளும் நிராகரிக்கப்படுவர்.
மேலும், நேட்டோ போர்க்கப்பல்களால் கண்காணிக்கப்பட்டுவரும், மற்றும் இந்த ஆண்டு ஏற்கனவே 300 அகதிகளுக்கும் மேலானவர்கள் ஏற்கனவே மூழ்கியுள்ள நிலையில், ஏஜியன் கடலைக் கடந்து தங்களது வாழ்க்கையை ஆபத்தில் பணயம்வைக்கும் மட்டத்திற்கு சிரிய அகதிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவர்.
யுத்தத்தாலும் வறுமையாலும் வெளியேறும் மில்லியன் கணக்கான மக்களின் துயரத்திற்கு ஆளும் தட்டின் அலட்சிய மனோபாவத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெல் அகதிகளுக்கான ஒரு வெளிப்படையான செய்தியில், “ஆபத்தான வழியை வகுத்துக்கொள்பவர்கள் தங்களது வாழ்க்கையை மட்டும் பணயம் வைத்துக்கொள்ளவில்லை, அவர்கள் வெற்றிபெற வழியும் இல்லை” என்றார்.
இந்த உடன்பாட்டின் பிற்போக்கு அம்சமானது, அதிவலது ஹங்கேரிய பிரதமர், விக்டர் ஓர்பன், இவரது நாடு எல்லை வேலிகளை கடந்த ஆண்டே மூடிவிட்டது, அகதிகளை ஏற்கவேண்டும் என்று தனி உறுப்பு நாடுகள் மீது எந்த கடமைப்பாடுகளையும் வைக்காமைக்காக அதனைப் புகழ்ந்ததில் வெளிப்படுத்தப்பட்டது.
துருக்கி பிரதமர் டாவ்டோகுலு கூட இந்த உடன்பாட்டை “வரலாற்று சிறப்புடையது” என்று புகழ்ந்தார்.
பரந்த ஊடகங்களில் அறிவிப்புக்கள் கூட இந்த உடன்பாடானது அடைக்கலம் கோருவதற்கு உள்ள உரிமைக்கு எந்த கடப்பாடு கொள்ளலையும் கைவிடுவதை பலமான வகையில் அர்த்தப்படுத்துகிறது என்று உறுதிப்படுத்தின. அசோசியேட்டட்-ன் ஒரு செய்தி ஐரோப்பிய ஒன்றிய-துருக்கி ஒப்பந்தம் அகதிகள் பாதுகாப்பை துருக்கிக்கு “அவுட்சோர்சிங்” (வெளியாளிடம் பணி ஒப்படைப்பு) செய்தலை அர்த்தப்படுத்துகிறது என்று குறிப்பிட்டது. ஆரம்ப வரைவானது, துருக்கி அகதிகளை சர்வதேச சட்டத்திற்கேற்ப நடத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில், இறுதி உடன்பாடானது வெறுமனே அங்காரா “பொருத்தமானது” என்று கருதும் சட்ட தரங்களை உறுதியாகப் பற்ற வேண்டும் என்ற விதிமுறையையே கொண்டுள்ளது.
கிரீசுக்கு வரும் அகதிகள் துருக்கிக்கு திரும்பும்பொழுது எல்லைக்கோட்டுக்கு பின்புறம் வைக்கப்படுவது, ஐரோப்பாவிற்கு அவர்களை சட்டரீதியாக வருவதை உண்மையில் இயலாததாக்குகிறது.
என்ன நடக்கவிருக்கிறது என்பதை குறிக்கும் வகையில், துருக்கியின் கடலோரக் காவற்படை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் 3000 அகதிகளை அவர்கள் கிரீசின் லெஸ்போஸ் தீவிற்கு செல்லும் வழியில் சிறைபிடித்ததாக வெள்ளிக்கிழமை அன்று செய்திகள் வெளியானதில் தெரிந்தது.
இந்த உடன்பாடானது, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதானது, தஞ்சம் கோருவதற்குரிய அடிப்படை ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மறுதலித்தலாகும். இரண்டாம் உலக போர்க் காலத்தின்பொழுது மற்றும் கொடூரமான நாஜிக் குற்றங்களின் பொழுது, முதலாளித்துவ அரசுகளானவை தஞ்சம் கோரும் உரிமையை சர்வதேச சட்டத்தின் அடிப்படை கூறாக ஏற்படுத்துதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதை உணர்ந்தன. ஐநா அகதிகள் உடன்படிக்கை 1951ல் நிறைவேற்றப்பட்டது, யுத்தத்திலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமையை, இன்னொரு நாட்டால் பாரபட்சமாக நடத்தப்படுவதிலிருந்து மற்றும் கொடுமைப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாத்தலை மட்டுமல்லாது, வேலை பெறுவதை, கல்வி பெறுவதை மற்றும் சமூக சேவைகள் பெறுவதையும் உத்தரவாதப்படுத்தியது.
கிட்டத்தட்ட 3 மில்லியன் சிரியர்கள் துருக்கியில் சிக்கிக்கொண்டுள்ள நிலைமையில், மற்றும் சிரிய மக்கள் தொகையினரில் பாதிப்பேர் ஒன்றில் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது வேறு நாடுகளுக்கு சென்றுவிட்ட நிலைமையின் கீழ், ஐரோப்பிய ஒன்றியமானது வெறும் 72,000 அகதிகளை மட்டுமே ஏற்க உறுதிகொண்டுள்ளது. இது 1930களில் ஐரோப்பாவின் மற்றும் வட அமெரிக்காவின் ஜனநாயக நாடுகள் என்று கூறிக்கொள்பவை நாஜி களைஎடுப்பில் தப்பி வந்த யூத அகதிகளில் பெயரளவிலான எண்ணிக்கையினரை ஏற்ற கொகைகளுக்கு திரும்புவதாக உள்ளது.
கிரேக்க உள்துறை அமைச்சர் Panagiotis Kouroumblis, மாசிடோனிய எல்லையில் இருக்கும் Idomeni camp ஐ நேரடியாகவே நாஜி கடூழியச்சிறை முகாமுடன் ஒப்பிட்டார். ஏதென்சில் உள்ள சிரிய தலைமையிலான அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் “இது மூடப்பட்ட எல்லைகள் என்ற தர்க்கத்தின் விளைவான ஒரு நவீன Dachau” என்றார். இது அகதிகளை தடுத்து சிறைபிடிக்க துருப்புக்களை அனுப்பியுள்ளதுடன் ஐரோப்பாவின் வாயில் காவலராகவும் செயல்படுகிறது.
முக்கியமாக, இறுதி உடன்பாடானது 72,000 அகதிகள் எண்ணிக்கை எட்டப்பட்டதும், “ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே” என்னும் இயங்குமுறை நீக்கப்படும், மற்றும் துருக்கியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இனி அகதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்ற ஷரத்தைக் கொண்டுள்ளது.
2008ல், உலக நிதிய அமைப்புமுறை பொறிவின் விளிம்பில் இருந்தபொழுது, உலகப் பொருளாதாரத்தை அழிவின் விளிம்பில் கொண்டு வந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட வங்கிகளையும் முதலீட்டாளர்களையும் காப்பாற்றுவதற்கு ஒரு செலவு கூட அவர்களிடம் எடுக்கப்படவில்லை. ஆனால் ஆற்றொணா நிலையிலிருக்கும் மில்லியன் கணக்கான அகதிகளுக்கான அடிப்படை வாழ்க்கைத் தேவையை அளித்தல் என்று வரும்பொழுது, எந்த வளமும் முன்கொண்டுவரப்படவில்லை.
ஐரோப்பிய எல்லைகளில் பெருமளவிலான அகதிகள் இப்பொழுது அடைபட்டிருப்பதை உருவாக்கிய அழிவுகரமான நிலைமைகள் தாமே ஏகாதிபத்திய அரசுகளின் நடவடிக்கைகளின் விளைவாகும். 1999ல் யூகோஸ்லாவியாவில் நேட்டோ குண்டுமழை பொழிந்தது, 9/11 ன் பொழுது ஆப்கானிஸ்தானில் படையெடுப்பு, 2003ல் ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்பு யுத்தம், 2011ல் லிபியாவில் கடாஃபி ஆட்சியை கவிழ்ப்பதற்கு நேட்டோ தலைமையிலான யுத்தம், மற்றும் டமாஸ்கசில் ஆசாத் ஆட்சியைத் தூக்கி வீச நடந்துகொண்டிருக்கும் ஆட்சிமாற்ற நடவடிக்கை –மிகவும் எளிதாக காணத்தக்க எடுத்துக்காட்டுகளை குறிப்பிட வேண்டுமானால்– முழு சமூகங்களையும் அழிப்பதில் முடிந்திருக்கிறது. நூறாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மில்லியன் கண்க்கானோர் தங்களின் வீட்டைவிட்டு பறந்தோடும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த அகதிகளை ஐரோப்பாவை அடையவிடாமல் தடுப்பதற்கு துருக்கியை சார்ந்திருத்தல் என்பதன் அர்த்தம் எந்த யுத்த மண்டலத்தில் இருந்து பறந்து செல்ல வேண்டும் என்று விரும்பினார்களோ அந்த யுத்த மண்ண்டலத்துக்கே அவர்கள் திரும்புவர் என்பதாகும். அங்காரா நாட்டின் தென்கிழக்கில் குர்திஷ் பிரிவினைவாதிகளுடனான ஒரு மோதலில் உள்ள நிலையில், துருக்கிய இராணுவம் வரிசையாய் இராணுவ நடவடிக்கைகளை தொடுத்து, நூற்றுக் கணக்கில் சேதங்களை விளைவித்தது. இஸ்லாமியவாத அரசாங்கமும் பத்திரிகையாளர்களையும் ஊடகங்களையும் ஒடுக்குதலை முன்னெடுப்பது, அரசாங்கத்தை விமர்சிக்கும் வெளியீடான, Zaman செய்தித்தாளை நசுக்குவது ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது.
ஒத்தகருத்து கொண்டிருப்பதாக பொதுவில் காட்டிக்கொள்ளலுக்கு ஆதரவு இல்லாவகையில், யுத்தத்திலிருந்து மில்லியன் கணக்கானோர் பறந்துசெல்வதை அச்சமூட்டி தயக்கம் உண்டு பண்ணி தடுப்பதில் உள்ள உடன்பாடானது, ஐரோப்பிய ஒன்றியம் தன்னிலேயே ஆழமான வேறுபாடுகள் உள்ளன என்ற உண்மையை மறைத்துவிட முடியவில்லை. அகதிகளை வெளியே வைத்திருப்பதற்கு எல்லைகளை மூடுதல் என்பது ஆஸ்திரியா மற்றும் அதன் பால்கன் அண்டைஅயலார்களை, மிக அண்மையில் தன்னிச்சையாக எல்லைகளை கட்டுப்படுத்தலை அமல்படுத்தச்செய்தது, ஐரோப்பிய ஒன்றியம் துண்டாக உடைவதை அச்சுறுத்துகிறது.
Die Welt இன் படி, ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெலை பொறுத்தவரை உடன்பாடனது ஒரு “மாபெரும் வெற்றி. மேர்க்கெல் உடன்பாட்டை வெளிப்படையாகவே புகழ்ந்தார், ஏனெனில் அவரது கோரிக்கையான நெருக்கடிக்கு ஐரோப்பிய தீர்வு என்பது அதில் பொதிந்துள்ளது. இந்த அழைப்பு அகதிகளுக்கு எவ்விதத்திலும் உதவ அல்ல, மாறாக ஷெங்கென் மண்டலத்திற்குள்ளே சுதந்திரமாய் உலாவி, கடந்த இரு தசாப்தங்களாக இதிலிருந்து பிரதான இலாபம் அடைந்துவரும் ஜேர்மன் பெரு முதலாளிகளின் நலன்களோடு தொடர்புடையதாகும்.
பிரான்ஸ் அதன் பங்கிற்கு துருக்கிக்கு சலுகை அளிப்பதில் குறைந்த ஆதரவே அளித்தது. ராய்ட்டரின் படி, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட், துருக்கி குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகளை அகற்றுவதை அமல்படுத்துமுன், அங்காரா அனைத்து 72 கோரிக்கைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை அன்று வலியுறுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளை மூடுவதற்கும் சுற்றியுள்ள நீர்நிலைகளில் நேட்டோ போர்க்கப்பல்கள் ரோந்து செய்வதற்கும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்குள்ளே ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. முக்கியமாக, ஊடகம் மற்றும் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இவற்றாலான இடைவிடாத வலதுசாரி பிரச்சாரம் இருந்தபோதிலும், ஜேர்மன் நாளிதழ் Die Welt நடத்திய வாக்கெடுப்பு பற்றி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி, Idomeni இல் எல்லையை திறப்பதற்கு 51 சதவீதத்தினர் ஆதரவு என காட்டியது.
ஆயினும், உழைக்கும் மக்கள் மத்தியிலே அகதிகளுக்கு பரந்த ஆதரவு இருக்கிறது என்பது பற்றி, அரசியல் ஸ்தாபகத்தில் பிரதிபலிப்பு எதுவும் இல்லை. “இடது” என்று அழைக்கப்படுவது, அகதி எதிர்ப்பு கொள்கையுடன் முழுமையாய் களத்தில் உள்ளது. ஜேர்மனியில், இடது கட்சி மேர்க்கெலின் கொள்கையை ஆதரிப்பது, துருக்கியுடனான பேரத்தில் பொதிந்துள்ளது. கிரீசில், அலெக்சிஸ் சிப்ராஸ் இன் சிரிசா அரசாங்கம் ஐரோப்பிய கோட்டையை நிலை நிறுத்தும் டாவ்டோகுலு உடன் கரங்கோர்த்துள்ளது.