Print Version|Feedback
South Asian ruling elites rattled by Brexit campaign
பிரெக்ஸிட் பிரச்சாரத்தால் தெற்காசிய ஆளும் செல்வந்த தட்டுக்கள் கலக்கம்
By Wasantha Rupasinghe
23 June 2016
தெற்காசியாவில் உள்ள அரசாங்கம் மற்றும் ஆளும் செலவந்த தட்டுக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் அதன் உறுப்பாண்மை தொடர்பாக பிரிட்டனில் நடக்கவிருக்கும் இன்றைய பொது வாக்கெடுப்பு பற்றி கணிசமான அளவு எதிர்காலம் பற்றிய கவலையை வெளிப்படுத்தின. அமைச்சர்கள், விமர்சகர்கள் மற்றும் அதிகாரிகள் “தொடரவேண்டும்” பிரச்சராத்திற்கு பொதுவாக ஆதரவளிக்கின்றனர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் அல்லது பிரெக்ஸிட்டின் சாத்தியமான பாதிப்பூட்டும் பொருளாதார விளைவுகள் பற்றி கவலையை வெளிப்படுத்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி பிரிட்டீஷ் வாக்கெடுப்பு பற்றி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழிடம் மே 26 அன்று பேசுகையில், தமது அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நீடித்து இருக்கவே ஆதரிக்கிறது என்றார். “எம்மைப் பொறுத்தவரை ஐரோப்பாவிற்கு இங்கிலாந்துதான் ஒரு வாயில், உலகே அதில் இருக்கையில், ஐக்கிய ஐரோப்பாவே விரும்பத்தக்கது.”
முன்னணி இந்திய நாளிதழான தி இந்து, இந்தமாத ஆரம்பத்தில் “இந்தியாவும் பிரெக்ஸிட் முன் அறிவிப்பும்” என்று தலைப்பிடப்பட்ட கருத்துரையில் “விலக வேண்டும்” பிரச்சாரம் தொடர்பாக ஆளும் வட்டங்களில் உள்ள கவலைகள் பற்றி அதிகம் விவரங்களுடன் கூறின. அங்கு கிட்டத்தட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மில்லியன் பிரிட்டீஷ் குடிமக்கள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனுக்கு சுற்றுலாப் பயணிகளாக, வர்த்தகர்களாக, தொழிற்தேச்சி பெற்றவர்களாக, மாணவர்களாக, வாழ்க்கைத் துணைவர்களாக மற்றும் உறவினர்களாக பெரும் எண்ணிக்கையில் இந்தியர்கள் வருகைதருகின்றனர், அவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்று அது குறிப்பிட்டது.
எவ்வாறாயினும் இந்து வின் பிரதான கவலை பிரிட்டனில் இயங்கிவரும் 800 இந்திய நிறுவனங்களின் கார்ப்பொரேட் நலனுக்கானதாக இருந்தது. அது இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பினால் (CII) ஏற்பாடு செய்யப்பட்ட “இந்தியா டிராக்கர் 2016” பற்றி குறிப்பிட்டது, அது பிரிட்டனில் இந்திய நிறுவனங்கள் 110,000 வேலைகளை உருவாக்கியதாக கண்டறிந்தது. மேலும் பிரிட்டனில் வளர்ந்துவரும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது, அதுவே கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது கிட்டத்தட்ட இந்த ஆண்டு இருமடங்கு ஆகும்.
2015ல் இந்திய நிறுவனங்களின் மொத்த நிகர உற்பத்தி 22 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் மற்றும் அது இந்த ஆண்டில் 26 பில்லியன் பவுண்ட்ஸ் உயரும் என கணிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் உயர் தொழில் நுட்பம், தொலை தொடர்பு, மருந்துத்துறை மற்றும் நிதி சேவைகள் உட்பட வேகமாய் வளரும் துறைகளுள் சம்பந்தப்பட்டுள்ளன மற்றும் பார்த்தி ஏர்ட்டெல், HCL டெக்னாலஜிஸ் மற்றும் டாட்டா குழுமம் போன்ற பெரிய நிறுவனங்களும் உள்ளன.
“தி இண்டியன் டிராக்கர்” எச்சரித்தது: “வரவிருக்கும் பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பை சுற்றி நிலவும் நிச்சயமின்மை மற்றும் “பிரெக்ஸிட்” சாத்தியம், பிரிட்டன் பொருளாதாரம் மற்றும் பிரிட்டனில் முதலீட்டுக்காக வேட்கை கொண்ட இந்திய நிறுவனங்கள், குறிப்பாக ஐரோப்பிய சந்தையைப் பெற விழைவன ஆகிய இரண்டின் மீதும் பாதிப்பைக் கொண்டுவரும்.”
CII பொது இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி விவரித்தார்: “இந்தியா இங்கிலாந்தில் (மற்றும்) ஏனைய ஐரோப்பாவையும் சேர்த்தே முதலீடு செய்கிறது, மேலும் பிரிட்டனின் மூன்றாவது பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக (FDI) உருவெடுத்துள்ளது. ஆகையால் ஐரோப்பிய சந்தைகளை எட்டுவதே இங்கிலாந்துக்கு இந்திய நிறுவனங்கள் வருவதற்கான முக்கிய உந்துதல் ஆகும்.”
“தொடரவேண்டும்” பிரச்சாரத்திற்கு ஆதரவாக தங்களது ஊழியர்களை ஊக்குவிக்கும்முகமாக வெளியிட்ட குறிப்பில், டாட்டா ஸ்டீல் நிர்வாகம், ஐரோப்பிய சந்தைகளை அடையக்கூடியதாய் இருப்பது “எமது வர்த்தகத்திற்கு அடிப்படை” என்று அறிவித்ததுடன் பொது வாக்கெடுப்புக்கு “கவனமாய் சிந்தனை” கொடுக்க அழைப்பு விடுத்தது, ஏனெனில் ஜூன் 23 அன்று நீங்கள் செய்யும் தேர்வு உங்களது உழைக்கும் வாழ்வில் வேறுபாட்டைக் கொண்டுவரலாம்” என்றது.
சர்வதேச நிதிய கொந்தளிப்புகளுக்கான வாய்ப்பு பற்றி தெளிவாகவே கவலையுற்று, இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் திங்கட்கிழமை அன்று, “பிரெக்ஸிட் நிறைவேறினால் நிறைய பாதிப்பைக் கொடுக்கக்கூடும்” என்றார். “இந்தியா எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள போதுமான வகையில் தயார்நிலையில் உள்ளது“ என்று சந்தைகளை அமைதிப்படுத்துவதற்கு உடனடியாக அவர் முயற்சி செய்தார்.
இலங்கையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் “தொடரவேண்டும்” பிரச்சாரத்திற்கான தெற்காசிய குழுவில் சேர்ந்து கொண்டது. தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் ஃபெர்னான்டோ சண்டே டைம்ஸ்-இடம், சிறிசேனா மற்றும் விக்கிரமசிங்க இருவரும் “பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிக்குமேயானால், அது வலுவான பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதால் இலங்கைக்கு இலாபகரமானது என்ற கண்ணோட்டத்தைக்” கொண்டுள்ளனர் என்று கூறினார்.
பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்றில் வெளியிடப்பட்ட பத்தியில், விக்கிரமசிங்க பிரிட்டிஷ் வாக்காளர்களை ஐரோப்பிய ஒன்றியத்தினுள்ளே தொடருமாறு வலியுறுத்தினார். “கடந்த 2000 வது வருடங்களில் இலங்கையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு முன்னுரிமை வர்த்தக பேரத்தில் GSP+ ஐ இழந்தோம் எமது அனுபவத்தைக் கணக்கில் கொள்கையில் பிரிட்டன் வெளியேறுவதன் பாதக விளைவானது பேரளவினதானதாக இருக்கும்” என்று அவர் அறிவித்தார்.
இலங்கை வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட மக்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீட்டிக்க வாக்களிப்பதற்கு வலியுறுத்தி பல இலங்கை அமைச்சர்கள் லண்டனுக்கு விஜயம் செய்ததாக சண்டே டைம்ஸ் செய்தி அறிவித்தது.
2014 புள்ளிவிவரப்படி, ஐரோப்பிய ஒன்றியமானது இலங்கையின் (ஏற்றுமதி இறக்குமதி) ஒட்டுமொத்த வணிகத்தில் பெரிய வர்த்தகப் பங்காளராக உள்ளது. சிறீலங்கா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 2.5 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை ஏற்றமதி செய்தது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 32 சதவீதம் ஆகும். சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுள் உயர் 10 இடங்களில் பிரிட்டனும் உள்ளது. அது அமெரிக்காவுக்கு அடுத்த படியாக சிறிலங்காவின் இரண்டாவது பெரிய ஏற்றமதி சந்தையாகும்.
பங்களாதேஷில், பொருளாதார வல்லுநர்களுக்கும் பங்களாதேஷ் ஏற்றுமதிகளில் பிரெக்ஸிட்டின் பாதிப்பைப் பற்றிய கவலைகளை வெளிப்படுத்தினர். இலங்கையை போலவே, பங்களாதேஷுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாவது பெரிய ஏற்றுமதி செய்யும் இடமாகும். பங்களாதேஷின் உற்பத்திப் பொருட்களுக்கு பிரிட்டன் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாகும் இடம் ஆகும், 2015-16-நிதியாண்டில் மொத்தம் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதில் 2.9 பில்லியன் டாலர்கள் ஆயத்த ஆடைகளாகும்.
பிரிட்டிஷ் பொதுவாக்கெடுப்பு மீதான தெற்காசிய ஆளும் வட்டங்களின் அச்சங்கள் உலகப் பொருளாதார கீழறக்கம் மற்றும் நெருக்கடி, அதேபோல உலகம் முழுவதிலும் எழுந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் பற்றிய பரந்த கவலையுடன் பிணைந்திருக்கிறது. பிரெக்ஸிட் நிதிய குழப்பத்தை தட்டிவிடக் கூடும், அது துணைக் கண்டத்தை ஏற்கனவே சேதப்படுத்திவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை மேலும் மோசமாக்கவே செய்யும்.
பிரிட்டனில், சோசலிச சமத்துவக் கட்சியானது (SEP), பிரிட்டனிலும் சர்வதேச ரீதியிலும் தொழிலாளர்களின் நலன்கள், பிற்போக்கு தேசியவாதம் மற்றும் புலம்பெயர் எதிர்ப்பு வெறியைத் தட்டி எழுப்பும் ஆளும் வர்க்கத்தின் எந்த பிரிவையும் ஆதரிப்பதன் மூலம் பாதுகாக்கப்பட முடியாது என்று தொடர்ந்து விளக்கி வருகிறது. பொதுவாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்க சோசலிச சமத்துவக் கட்சியானது பிரச்சாரம் செய்கிறது. அது, தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வர்க்கப் பதாகைகளை கலந்துவிட வேண்டாம் என்றும், அவர்களின் அரசியல் சுயாதீனத்துக்கும் சர்வதேச சோசலிசத்தின் பாகமாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக போராடுமாறு வலியுறுத்துகிறது.